கொத்து பரோட்டா 27/08/12
தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் முதல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்கள், வாசகர்கள், வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அங்கேயே ஒரு சிறு புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காலையில் மூத்த பதிவர்களோடு ஆரம்பித்த நிகழ்வு, தொடர்ந்து இளைய பதிவர்கள் மூத்த பதிவர்களை பாராட்டி மகிழ, அதன் பிறகு வந்திருந்த அத்துனை பதிவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியை நானும், சி.பியும், சிராஜுதீனும், சங்கவியும் சேர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்தினோம். மதியம் அருமையான வெஜ் விருந்து. அடுத்த ஒரு மணி நேரத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் விழாவை சிறப்பிக்க வந்தார். கவியரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் நானும் ஒரு எண்டர் கவிதையை படித்தேன். நிறைய பேர் கைதட்டியது நான் சீக்கிரம் முடித்தேன் என்பதற்கா அல்லது நிஜமாகவே கவிதையாய் வந்துவிட்டதற்கா? என்று தெரியவில்லை.சென்னையில் உள்ள முக்கிய பதிவர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூரிலிருந்து எல்லாம் பதிவர்கள் வந்திருந்ததும், குறிப்பாய் இருபதுக்கும் மேற்பட்ட பெண் பதிவர்களும் கலந்து கொண்ட விழாவாக அமைந்தது இதுவே முதல் முறை என்று சொல்ல வேண்டும். விழாவையும், அதற்கான ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக கட்டமைத்து நடத்திய சக பதிவர்கள், விழாக் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் புதிய குறும்படம்
குறும்படம் எடுத்து ரொம்ப நாளாச்சேன்னு யோசிட்டு இருந்த போது நண்பர் மகேஷ் அன்பளித்த கேனான் 7டி கைக்கு வந்ததும், கை துறுதுறுக்க ஆரம்பித்துவிட்டது. உடனடியாய் ஒரு குட்டிப் படம் எடுக்கலாம்னு என் உதவியாளர்களுடன் கிளம்பிவிட்டேன். சும்மா ஜாலியா ஒரு குட்டிப் படம் பார்த்துட்டு சொல்லுங்க உங்க கருத்துக்களை
விழாவில் புதியதலைமுறை சேனலில் இருந்து வந்திருந்த நண்பர் ஒர் அறிவிப்பை செய்தார். அதாவது புதிய தலைமுறை சேனல் வலைப்பூ ஒன்றைத் தொடங்கப் போவதாகவும், அதில் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அரசியல் நீங்கலாய் எழுத வாய்ப்பு அளிக்கப் போவதாய் சொன்னார். அது தான் எல்லாரும் தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்களே பின்பு எதற்கு வேறு ஒரு பதிவில் எழுத வேண்டும் என்ற கேள்வியும் வருகிறது. அதற்கு பதிலாய் அவர்களுடய பதிவில் எழுதும் பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவர்களுக்கும் ஏன் ஒரு சிறு சன்மானத்தை அளிக்க முன் வரக்கூடாது?.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆப்பிளின் ஐபோன், ஐபேட் மார்கெட்டுக்கு பெரிய ஆட்டம் கொடுத்த சாம்சங்கின் ஸ்மார்ட் போன்களுக்கு வந்துவிட்டது ஆப்பு. ஆப்பிளின் பேடண்டட் ஐபோன் விஷயங்களை காப்பி அடித்திருக்கிறது சாம்சங் என்று அமெரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனால் சாம்சங்கின் மார்கெட்டும், கூகுளின் ஆண்ட்ராய்ட் மார்கெட்டும் பெரிய ஆட்டம் காணும் என்று தொழில் துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆண்ட்ராய்டை பயன்படுத்தும் பல பெரிய, சிறிய நிறுவனங்களிடமிருந்து இனி வரும் காலங்களில் வழக்கில் வெற்றிப் பெற்ற ஆப்பிள் நிறுவனம் ராயல்டி வாங்கலாம். அதை தர மறுக்கிற நிறுவனங்களின் போன்களை வெளிவர செய்ய முடியாமல் முடக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆப்பிளின் கண்டுபிடிப்புகளை வைத்து மேல் ஆராய்ச்சி செய்து புதியதாய் கண்டுபிடிக்கப்பட்ட டெக்னாலஜியை மக்களிடம் வரவேற்பு பெற்ற டெக்னாலஜியை முடக்குவது டீசண்ட் வியாபாரத்திற்கு அழகல்ல என்றும் இதனால் மீண்டும் ஆப்பிள் தன் ஐ போன் மார்கெட்டை நிலை நிறுத்தி கோலோச்சும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@@@@
திருமணம் செய்து கொள்வதாய் சொல்லி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தார் என்று பெண்கள் கேஸ் கொடுத்தால் ஆண்கள் அரஸ்ட் செய்யப் படுகிறார்கள். அதே போல காதலிக்கிறேன். கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று பழகிவிட்டு,ரூம் போட்டு, ஊர் சுற்றி, உல்லாசம் அனுபவித்து விட்டு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போகும் பெண்கள் மீது இதே கேஸ் கொடுத்தால் எடுப்பார்களா? சமீபத்தில் ஒரு கேஸ். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து ஒன்றாய் இருக்கிறார்களாம். அந்த காலத்திலிருந்தே பல முறை உல்லாசம் அனுபவித்திருக்கிறார்களாம். பல வருடங்களாய் நீண்ட அவர்களது உறவில் இப்போது ஏதோ ப்ரச்சனை. அதற்காக அவளை திருமணம் செய்ய முடியாது என்றதும் ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாய் சொல்லி அந்தப் பையனை கைது செய்திருக்கிறார்கள். அட்ராஸியஸ். ஆம்பளையா பொறந்தாலே தப்புத்தான் போலருக்கு. அது சரி இந்த உல்லாசம் என்பது ஆண்களூக்கு மட்டும்தானா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உடைந்த நம்பிக்கை என்பது உருகிய சாக்லெட்டைப் போல எவ்வளவு தான் ப்ரீசரில் வைத்தாலும் ஒரிஜினல் நிலைக்கு வரவே வராது.
காதல் என்ற ஒன்று வந்த பிறகு அதைச் சொல்லாமல் இருப்பதைப் போல முட்டாள்தனம் வேறேதுமில்லை.
சந்தர்ப்பதை பயன்படுத்து. இல்லாவிட்டால் அது என்ன கொடுக்கும் என்று தெரியாமலேயே போய்விடும்.
குடி என்பது என்னுடய பழக்கமல்ல என் முன்னாள் காதலி கொடுத்துப் போன பரிசு. # Translation
ஒருவனோ, ஒருத்தியோ ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடய முந்தைய வாழ்க்கையை அலசுவது முட்டாள்தனம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நினைவு தெரிந்த நாளாய் அங்கே ஆயா வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளுக்கு சொல்லி நம்பவைக்கப்பட்ட நிலாவில் நிஜமாகவே கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம் அடைந்தார். அவர் மறைந்தாலும் உலகிற்கு அவர் விட்டுப் போன செய்தி அழுத்தமானது. நிலவில் அவர் வைத்த காலடி போல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்தப்பாடலைக் கேட்டதும் பல பேர் இதன் இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று சத்தியம் செய்வார்கள். ஏன் என்றால் அவ்வளவு அழகான மெலடி. எஸ்.பி.பியின் மயக்கும் குரல் நம்மை எங்கோ இட்டுச் செல்லும். ஆனால் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சங்கர்-கணேஷ். இதயத் தாமரை படத்தில் இடம் பெற்ற இப்பாடல் பட்டித் தொட்டியெங்கும் பிரபலம். மிக சிம்பிளான ட்யூனில் அருமையான மெலடி.

அடல்ட் கார்னர்
54 வயது அக்கவுண்டண்ட் ஒருவர் தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த லெட்டரை நீ படிக்கும் போது என் 18 வயது செக்கரட்ட்டரியுடன் குஜாலாக இருப்பேன் என்று எழுதி வைத்திருந்தார். இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வந்த அக்கவுண்டண்ட் மனைவியை காணாமல் தேட, அங்கே அவருக்கு ஒரு கடிதம் வைத்திருந்தாள். இந்த லெட்டரை பார்க்கும் நேரம் என் 18 வயது பாய் ப்ரெண்டுடன் நான் சந்தோஷமாய் இருப்பேன். அது மட்டுமல்ல முக்கியமாய் ஒரு விஷயம் 18,54 போவதை விட, 54,18 ல் போவது மிக குறைவே என்றிருந்தாள்.
Comments
ஒரு பக்க சிறுகதையின் கடைசிப் பத்தியில் திருப்பம்/ஈர்ப்பு
வருவது போல அமைந்து இருப்பது.
உங்களின் நெடிய சினிமா அனுபவம் தெரிகிறது. குறிப்பாக தோழியின் அழைப்பு வந்ததும் அவர் கஈழ்மபிச் செல்லும்
பாதையில் நீல நிறச் சாலை பெயர்ப் பலகையை காட்டியும் காட்டாமலும்.
பாரதிராஜா, பாலச் சந்தர் படங்களில் இந்த உத்தி இருக்கும். ரசிகருக்கு அந்த இடம் குறித்த பாதி தகவலை தந்து விட்டு
மீதியை ரசிகரே கற்பனை செய்து கொள்ளட்டும், அல்லது கண்டு பிடிக்கட்டும் என்ற உத்தி
ஆரம்பக் காட்சியில் வெள்ளைச் சட்டை நடிகர் நன்கு நடித்து இருக்கிறார்.
சிகப்பு சட்டைக் காரரின் முக பாவனை, வசன வெளிப்பாடு இரண்டும் சுமாறே.
பின்னணி இசை ஓகே , எனக்குத் திருப்தி
சுமாரே
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வைத்தவர்களுக்கும், கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,வாழ்த்துக்கள்&பாராட்டுக்கள்.
-------------
நீங்கள் கேனான்- 7 டியில் எடுத்த படங்களையும் இணைத்திருக்கலாம்.
--------
அதிகமான படங்களில் உங்களைக்காணோம், படம் எடுத்தவர்களை எல்லாம் மிரட்டி அழிக்க சொல்லிட்டிங்களா? :-))
---------
// அதில் நானும் ஒரு எண்டர் கவிதையை படித்தேன். நிறைய பேர் கைதட்டியது நான் சீக்கிரம் முடித்தேன் என்பதற்கா அல்லது நிஜமாகவே கவிதையாய் வந்துவிட்டதற்கா?//
கைத்தட்டலைனா இன்னொரு கவிதையை தலைவரு படிப்பார்னு , ஓட்டல் கடைக்காரர் எல்லார்கிட்டேயும் ரகசியமா சொன்னாராம் :-))
இப்படி ஆதாரமான கேள்விகளையெல்லாம் கேட்டும் அல்லாருக்கும் நெல்லவரா - வலையுலக எம்.ஜி.ஆரா இருக்கிறிங்களே..
தாயத்து கீயத்து கட்டியிருப்பிங்களோ?
//அது தான் எல்லாரும் தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்களே பின்பு எதற்கு வேறு ஒரு பதிவில் எழுத வேண்டும் என்ற கேள்வியும் வருகிறது. //
ஆமாம் எல்லாரும் வலைப்பூ வச்சு இருக்காங்க ,ஆனால் திண்ணை, தமிழ்ப்பேப்பர், வல்லமை என இணையத்தளங்களிலும் கூப்பிட்டால் எழுத செய்வதில்லையா? எனவே வாய்ப்பு கிடைத்தால் எங்கேயும் எழுதுவார்கள் ,சன்மானம் இல்லைனாலும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?
புதியதலைமுறையிலும் எழுதிட்டு அதை அவங்க பிளாக்கிலும் மீண்டும் போட்டு புதிய தலைமுறை தளத்தில் எழுதியது என பெருமையும் அடைபவர்கள் தான் பதிவர்கள் :-))
குறும்படம் ரொம்ப இம்ரெஸ்ஸிவ்னு சொல்ல முடியாவிட்டாலும் கேமிராமேன் (மெய்யப்பன்) நல்லா செய்திருப்பதாக படுகிறது, ஏன் எனில் பைக்கில் செல்லும் சாலைக்காட்சிகளில் ஆட்டம் இல்லாமல் நிதானமாகவே இருக்கு. டிஜிட்டல் என்பதால் ஆட்டம் குறைவாக இருக்குமோ(ஸ்டெடி ஷாட்)
முன்னாடி காரின் டிக்கியில் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்தாரா?
ஹி..ஹி மசூதி தெரு ,அன்னை வேளாங்கன்னி கல்லூரி போர்டு எல்லாம் வருது ,அப்போ சைதாப்பேட்டையில் பஜார் ரோட் - கிண்டி எஸ்டேட் போகும் சாலையில் தான் படமாக்கப்பட்டதா?
தரைப்பாலத்துக்கு பதில் புதுசாக்கட்டின மேம்பாலத்தில் போகும் காட்சி நல்லா அடையாளம் காட்டுது :-))
ஹி..ஹி இதுலயும் கண்டுப்பிடிப்போம்ல,
மசூதி தெரு பலகை லெப்ட் சைட் தெரியுது அப்போ அப்படி ரைட் சைட் பைக்கில் திரும்பினால் பஜார் ரோட்டுக்கு தான் போக முடியும் ,ஆனால் ஹீரோ அந்த பாலத்துக்கு போகிறார்? பக்கை லெஃப்ட் சைட் திருப்ப வேண்டும்.
எப்பூடி :-))
உங்க வீட்டுல இருந்தே எட்டிப்பார்த்தீங்களோ? ஏரியா அதானா அப்போ.
வாவ்... சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்...
காதலியின் போன் வரும்போதே நாயகன் முகத்தில் சந்தோசம் இருந்திருக்க வேண்டும். அப்போது இல்லாத சந்தோசம், கிளம்பும்போது திடீரென வருவது சற்று செயற்கையாக உள்ளது..
இது என்ன அக்கப்போரா இருக்கு ,காதலி என்ன சொன்னானே ஒலிக்கூட காட்டப்படவில்லை, முதலில் ஏதேனும் கேள்விக்கேட்டு,ஆமாம் எப்போ பாரு என்ன பண்ற எங்கே இருக்கன்னு கேட்க வேண்டியது என ஒரு சலிப்பு , இங்கே காதலன் சொல்லும் பதில் மூலம் உணரலாம். , கடைசியில் வீட்டில் யாரும் இல்லை வாயேன் என முடித்து இருக்கலாம்,காதலனுக்கு உற்சாகம் தொற்ற அது போறாதா?
விரைவாக யோசித்து ஜாலியாக எடுத்ததற்கு ஓகே என்று சொல்லலாம்.
சூட்டை ஆற்றிக்கொள்ள
http://tamil.oneindia.in/news/2012/08/26/tamilnadu-police-are-after-sahana-160292.html#cmntTop
http://rajaavinpaarvayil.blogspot.com/
பொல்லாங்கு விமர்சனத்தில் நீங்கள் கூறிய
இந்த வார்த்தைகள் உங்கள்
குட்டி படத்திற்கும் பொருந்தும் . .
அப்புறம் அடல்ஸ் ஒன்லி பழைய கள்! விஸ்கி,பிரான்டி மாதிரி போடுங்கோ..!
அப்புறம் குறும்படம் நல்லாயிருந்தது..!காதலி வந்தவுடன் பைக்கில் போகும் போது ரொமாண்ஸ் மூடை கீபோர்டு கொடுக்கலை உறுத்துகின்றது.
நன்றி!
பதிவர் விழாவில்
நன்றி
ப்ளஸ் என்று பார்த்தால்: மேக்கிங் நல்லா இருக்கு. ஆனா ஸ்டைலான மேக்கிங் மட்டும் படத்தை காப்பாற்றும் என்று நம்பியிருக்கீங்க. நல்லா இல்லன்னு சொல்லல, ஆனா உங்க அனுபவத்துக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாமேன்னு சொல்றேன்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..