வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள்
தமிழகத்தில் பல இடங்களில் மால் கலாச்சாரம் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்னும் சில வருடங்களில் சுமார் இருபது மால்கள் திறக்கப்பட இருக்கிறது. சிற்றூர்களிலும், மேலும் பல முக்கிய நகரங்களிலும் சிறு சிறு மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்படவிருக்க, பார்க்கிங் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளையைப் போல புது புதுசாய் யோசித்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். கவர்ச்சிகரமான ஸ்டைலில். முக்கியமாய் புட்கோர்ட்டில், கேம்ஸ் செக்ஷனில்.
ஒவ்வொரு மாலிலும் ஒரு ப்ளோர் முழுவதும், புட்கோர்ட்டும், ஒரு கேம் கோர்ட்டும் இருக்கும். இந்த புட்கோர்ட்டுகளில் பத்திலிருந்து ஐம்பது கடைகள் வரை ஒவ்வொரு மாலின் சைசுக்கு ஏற்றார்ப் போல இருக்கும். முக்கியமாய் சென்னையில் ஆங்காங்கே நீங்கள் பார்க்கும் சிறு ரெஸ்டாரண்டுகள், புதிய வகை உணவுகள் என்று வெஜ், நான்வெஜ், இந்தியன், தந்தூரி, சைனீஸ், என்று உலக அளவிலான சாப்பாட்டு வகைகள் தருவதாய் சொல்லி முழுக்க முழுக்க இந்திய சாப்பாட்டை தந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் விலைப் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் போட்டு விடுவீர்கள். சரி அதை விடுங்கள். மால்கள் இவர்களிடம் அடிக்கும் கொள்ளையை அவர்கள் நம்மிடம் தானே அடிப்பார்கள். ப்ரச்சனைக்கு வருவோம்.
இம்மாதிரியான புட்கோர்ட்டுகளில் நாம் சாப்பிட வேண்டுமென்றால் அந்தந்தக்கடைக்கு நேரடியாய் போய் நாம் பணம் கொடுத்து சாப்பிட முடியாது. அதற்கு ஒரு கவுண்டர் இருக்கும் அங்கு போய் குறைந்தபட்சம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட் கார்ட் வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் பத்திலிருந்து இருபது ரூபாய் அந்த கார்டுக்கு எடுத்துக் கொள்வார்கள். நாம் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் அதில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். அப்படி சார்ஜ் ஏற்றிய கார்டை எடுத்துக் கொண்டு தண்ணீர் கூட கொடுக்காத கடைகளில் அவர்களிடம் நாம் ஆர்டர் செய்யும் அயிட்டங்களுக்கான பணத்தை அந்த கார்டில் தேய்த்து கழித்துக் கொள்வார்கள். சரி.. ஆயிரம் ரூபாய்க்கு சார்ஜ் செய்த கார்டில் சுமார் எட்டு நூறு ரூபாய்க்கு சாப்பிட்டாகிவிட்டது. மீதமிருக்கும் இருநூறு ரூபாயில் இருபது ரூபாய் கார்டுக்கான கட்டணம் கழிக்கப்பட்டிருக்கும். இருபது போக மிச்சமிருக்கும் காசை திரும்பக் கேட்டால் அவர்கள் தர மாட்டேன் என்பார்கள். கேட்டால் லைப் டைம் கார்டு நீங்கள் எப்போது வந்தாலும் மீதமிருக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். நான் வெளியூரிலிருந்து வருகிறேன் திரும்ப வருவது சந்தேகம் தான் அதனால் எனக்கு காசைக் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது எங்கள் சட்டப்படி என்பார்கள். நாம் கடைக்காரரிடம் நேரடியாய் கொடுக்காமல் இப்படி கவுண்டரில் பணம் கட்டி சார்ஜ் ஏற்றி சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன்?. கார்டினால் ஏதாவது டிஸ்கவுண்ட் கிடைக்கிறதா? லைப் டைம் என்பது யாருடய லைப் டைம் வரைக்கும். மீதமிருக்கும் காசை ஏன் தர மாட்டேன் என்கிறார்கள்? அந்த காசுக்கு ஏதாவது வட்டி தருவார்களா? என்பது போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அதிலும் ஐடி ஆட்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் வரும் இடத்தில் இப்படி பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் சண்டையிடுவது கெளரவக் குறைச்சலாய் நினைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் வேத வாக்காய் கேட்டுக் கொண்டு செல்கிறார்கள். எங்களைப் போன்ற சில பேரைத் தவிர. இதே முறை தான் அங்கிருக்கும் கேம் செண்டர்களிலும்.
இந்த கார்டு முறையில் பிரபல உணவகங்களான, கே.எப்.சி, மெக்டொனால்ட், பிட்ஸச கார்னர், மற்றும் வட இந்திய செயின் உணவங்கள் வரவே வராது. அவர்களுக்கு என்று அவரவர் கவுண்டர். இந்த கார்டினால் எந்த விதமான உபயோகமும் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. இது முழுக்க, முழுக்க, மாலில் புட்கோர்ட் நடத்துபவர்களுக்கும், கடைக்காரர்களுக்குமானது. அதாவது அங்கிருக்கும் ஒவ்வொரு கடையில் நடக்கும் வியாபாரத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை புட் கோர்ட் நடத்துபவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் எப்படி அதை கண்டுபிடிப்பது. அதனால் இவர்களுக்குள் ஒரு கார்ட் நெட்வொர்க் சிஸ்டத்தை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிம் காசை மால் நிர்வாகம் வாங்கிக் கொண்டு விடும். ஒரு மாதம் கழித்து ஒவ்வொருவருடய அக்கவுண்டில் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று கணக்குப் பார்த்து அதில் அவர்களுக்கு வரவேண்டிய சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை கடைக்காரர்களுக்கு தருவார்கள். இவர்களிடம் வாடகை மற்றும் மெயிண்டெனெஸ் என்று தனியாய் வாங்கும் மால்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக, கணக்கு வழக்குகளை சரி பார்க்க உதவும் இந்த டெக்னாலஜிக்கு நம்மிடம் இவர்கள் இருபது ரூபாய் வாங்குகிறார்கள். இதை தட்டிக் கேட்ட நானும் சுரேகாவும் EAவில் ப்ரச்சனை செய்து, இருபது ரூபாயை திரும்பி வாங்கியிருக்கிறோம் தொடர்ந்து போராடி அந்த இருபது ரூபாயை வாங்குவதை கடந்த ஜனவரியிலிருந்து அவர்கள் வாங்குவதில்லை. ஆனால் அதை வேறு விதமாய் கொள்ளையடிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 4000 பேர் புட்கோர்ட்டில் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு வரும் குறைந்த பட்சம் 10 ரூபாய் மீதம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்தால் கூட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ருபாய். ஒரு மாதத்திற்கு 12 லட்சம். ஒரு வருடத்திற்கு 14 கோடியே 40 லட்சம் வரும். இதில் லைப் டைம் மெம்பர்ஷிப் என்ற வகையில் திரும்ப வந்து சார்ஜ் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் சுமார் பத்து சதவிகிதம் இருந்தாலும் கூட மீத மிருக்கும் பணம் முழுவதும் மால்களின் கையில். இதில் பல மீண்டும் அங்கே வந்திருக்கக்கூட மாட்டார்கள். இப்படி இவர்களிடம் சேரும் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது வட்டியோ அல்லது சலுகையோ தருகிறார்களா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. நம்மிடம் பத்து ரூபாய் குறைந்தால் அவர்களின் மாலில் பார்க்கிங் செய்யக்கூட அனுமதிக்காதவர்களிடம் நம் பணத்தை விட்டு வைத்திருக்கிறோம். அதிலும் ச்ட்டமாய் தர முடியாது என்று போர்டு போட்டு வைத்திருக்கிறார்கள். நம் காசை நம்மிடம் கொடுப்பதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு?. அதை தரமாட்டேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள் போர்டு போட்டுத்தான் வாங்குகிறோம் என்று சொன்னாலும், குடும்பங்களோடு வரும் மக்கள் சரி ஒரு நாள் கூத்து என்று நினைத்தும், குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும் கேம் கோர்ட்டிலும், புட்கோர்டிலும் இப்படி பணத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இதற்கு அரசும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறது. மால்களில் நடத்தப்படும் தியேட்டர்களில் இவ்வளவுதான் உட்சபட்சமாய் தொகை வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் போது மால்களில் பார்க்கிங் மற்றும் இம்மாதிரியான கொள்ளைகளை தடுக்கும் படியாய் ஏன் சட்டம் வரையறுக்கப்படவில்லை.
போன வாரம் ஈ.ஏவில் பணத்தை ஏன் கொடுக்க மாட்டீர்கள்? என்று கேட்ட போது அங்கே இருந்த புட்கோர்ட் மேனேஜர் வேறு வழியில்லை சார். எங்கள் சட்டதிட்டம் இது. நானாக இருந்தால் இங்கே அடிக்கும் கொள்ளைக்கு உடன் பட மாட்டேன். நீங்கள் இதை அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் ஹெட்டிடம் கேட்டுக் கொள்ளூங்கள் என்று சொன்னார். பாலாஜி என்கிற அவருக்கு போன் செய்தால் நாங்கள் அப்படித்தான் வாங்குவோம் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளூங்கள் என்று சொல்கிறார். மக்களின் பணத்தை வைத்துக் கொள்ள எந்த விதி, எந்த அரசு இவர்களூக்கு அதிகாரம் கொடுத்தது?. எந்த அதிகாரம் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று சொல்லும் அளவிற்கான தைரியத்தைக் கொடுத்தது? என்று கேட்டால் நாம் தான் என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்வேன். ஏனென்றால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியது வாடிக்கையாளரான நம் வேலை. நம்மில் பெரும்பாலோர் உயர்தர இடம், தோழி நண்பிகள், குடும்பத்தாரின் முன்னிலையில் பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் எதற்காக சண்டைப் போட வேண்டும் என்ற வீண் ஜம்பம். மேலும் இப்படி நம்மிடம் கொள்ளையடிப்பது பற்றி உணராமை. அதைவிட நம்மிடம் காசு இருக்கிறதே எதற்காக இதற்கு சண்டைப்போட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டும் என்கிற அலட்சியம் இது எல்லாம் சேர்ந்து அவர்கள் கொள்ளையடிப்பதை லீகலாக்குகிறார்கள். ரெண்டு பேர் ஒரு நாள் சண்டைப் போட்டதற்கே கார்டுக்கான இருபது ரூபாயை வாங்காமல் நிறுத்தியவர்கள் ஒரு நாளைக்கு நூறு பேர் ஒவ்வொரு புட்கோர்ட்டிலும் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு ப்ரச்சனை செய்தால் எப்படி தராமல் போவார்கள்.
சத்யமில் ஒரு காலத்தில் பாப்கார்னுக்கு விதவிதமான் மசாலா டேஸ்ட் பொடிகளை தருவார்கள். பின்பு அதையே ஒவ்வொரு டேஸ்டுக்கு ஐந்து ரூபாய் என்று தனியாய் வசூலிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மக்களிடம் அதற்கான வரவேற்ப்பில்லை அது மட்டுமில்லாமல் மக்களிடம் ஏன் அதற்கு தனி விலை என்ற கேள்வி வேறு எழ, வேறு வழியில்லாமல் இப்போது மீண்டும் அந்த பொடிகள் இலவசமாய் அங்கே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி நாம் கேட்டால் கிடைக்கக்கூடிய பல விஷயங்களை நமக்கெதற்கு என்றும் அலட்சிய மனப்பான்மையில்லாமல் அணுகினால் நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும். என்னைப் போன்ற ஒத்த கருத்துள்ள சுரேகாவும் ஒருநாள் போராடியதால் தினந்தோறும் 4000 வாடிக்கையாளர்களிடமிருந்து 20 ரூபாய் காப்பாற்றப் பட்டிருக்கிறது. இது யாருக்கும் தெரியாது. தெரியவும் வேண்டாம். ஆனால் பலன் மக்களுக்கு. எதிர்கால சந்ததியருக்கு. விரைவில் இதனை எதிர்த்து கேட்டால் கிடைக்கும் மூலமாய் சட்ட ரீதியான வழக்கு ஒன்றை தொடுக்கவிருக்கிறோம். அதற்கு உதவும் சட்ட ஆலோசகர்கள், மற்றும் வக்கீல்கள் யாராவது இருந்தால் அவர்களின் உதவியைக் கோருகிறோம்.
அஞ்சு பைசா திருடினா தப்பா?
இல்லீங்க.
அஞ்சஞ்சு தடவையா அஞ்சு பைசா திருடினா?
ஏதோ தப்பு மாதிரி தெரியுதுங்க
அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா வீதம் திருடினா?
தப்புதானுங்க
கேபிள் சங்கர்
Comments
தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!
it's our money don't feel shy to ask refund.
மால்களின் கொள்ளை தெரிந்திருந்தாலும், எதற்கென்றாலும் சரியென்று போகத் தயாராக இருக்கும் மக்களை வைத்துக் கொண்டு ஒன்றூம் செய்ய முடியாது!
இவர்களின் இன்னொரு கொள்ளை பார்க்கிங். படம் பார்க்க ஈஏ போன்ற மால்களுக்கு சென்றால் பார்க்கிங்கிற்கே டூ வீலருக்கு இன்னொரு டிக்கட் அளவிற்கும், 4 வீலருக்கு இன்னும் ரெண்டு டிக்கட் அளவிற்கும் செலவு செய்ய வேண்டும்! ஒரு டிக்கட் 120 கும் மேல் ஆகும் நிலையில், ஆட்டோ, பெட்ரோல், உணவுப் பொருட்கள் என அனைத்தும் விலை உயரும் நிலையில், மக்கள் குவாலிட்டி குறைவு என்றாலும் திருட்டு விசிடி நோக்கிச் செல்லும் காரணம் புரியக் கூடியதே!
அதுவும் இது போன்ற மால்களில் சுற்றிலும் போக்குவரத்தே இல்லாவிட்டாலும், ரோட்டில் ஓரமாக வண்டியை நிறுத்த முடியாத படி டிராஃபிக் ஃபோலீஸ் சுற்றிலும் ரவுண்டு அடித்துக் கொண்டே இருக்கும்! அந்த இடங்களில் பார்க்கிங்கில் போட்டால் மட்டும் எப்போதும் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!
கொள்ளையடிப்பதையே பிசினஸ் மாடலாக வைத்திருக்கும் ஆட்கள் இருக்கும் நிலையில், முழுதும் தனியாருக்கு விட்டு விட்டால் என்னாவது என்ற குழப்பம் எப்போதும் உறைந்தே இருக்கிறது!
This is day robbing with notice board display stating how they are going to ROB.
One of the main reasons for the sudden rise of card system is lack of accountability by the staff who work in the small cafes & restaurants. Their dishonesty is costing us all. It is all a cycle. One of my relatives runs a small cafe where he mostly sells Puffs,Samosas,Cutlets,Soft drinks & confectioneries. Once I went there with my family and spent Rs500 on food. I had to pay the cash in a separate counter and had to give a receipt in another counter to collect my order. But that guy didnt give me any receipt instead signalled his colleauge on the other counter. When I demanded the receipt he told that the other guy would give me. But he also never gave me one. I was holding a tray full of food and there was a rush . I didnt want to creat a scene at that moment. But later complained to my relative who runs the cafe. He was already running his business on a loan and he pays high interest. Even though his business is doing good, the dishonest staff dont really help him, they steal the money . If they sell 1000 samosas 200 will be accounted as wastage .100 would have been eaten by them. If they can hid 500rs in one transaction they will easily make atleast 5000rs in a day. Both of the employees were sacked. They were being paid 6000rs a month but yet their greed engulfed them.Another reason is that once you install a credit card/ debit card payment system , the money will hit the owner’s bank account straight away and when it comes to paying tax it has to be accounted. There is no hiding. I think mostly to avoid these hassles ,they have come up with their own card system.
There is absolutely nothing wrong in maintaining card system.
But they must refund the remaining amount after paying for food (and give back the refund amount for card if they have collected).
As mentioned in delhi and bangalore, this system is in place and they refund the money back.
முதலில் இது போன்ற மாலுக்கு எல்லாம் மனுஷன் போவானா? ஒரு சாண்ட்விட்ச் 150 ஓவாய்க்கு வாங்கி தின்ன என்ன கட்டாயமா,அப்போ தான் பசி அடங்குமா?
மிடில் கிளாஸ் எல்லாம் அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை, மற்றவர்களும் புறக்கணிக்கணும், அப்படியே அங்கே போறவன் எல்லாம் காச எப்படி செலவு செய்றதுன்னு வழி தெரியாத "அருணாச்சல" பரம்பரையாக இருக்கும் :-))
ஒரு கிலோ வெங்காயம் 50 ரூ சொன்னா நாடே கெட்டுப்போச்சுன்னு பொலம்பிக்கிட்டு மாலுக்கு போய் 150 ரூ சாண்ட்விச் தின்னுறவனுக்கு 10-20 போனால் என்ன ,போகட்டும்.
அவர்கள் பெரிய முதலைகள்... பல காரணங்களுக்காக தனி ஆளாய் ஒன்றும் செய்ய முடியாது..
கேட்டால்கிடைக்கும் என்ற குடையின் கீழ் அனைவரும் ஒன்று திரளவேண்டும்.
இப்படி அவனுக்கென்ன, பணக்காரன் என்று கேட்காமல் விட்டால் வெங்காயம் விலை ஏறும் போதும் எவனும் கேட்க மாட்டான். அப்படி எப்போதாவது ஒரு முறை போய் மாட்டிக் கொள்கிற்வனின் பணத்திற்காகத்தான் இந்த கட்டுரையே..
///ஒரு கிலோ வெங்காயம் 50 ரூ சொன்னா நாடே கெட்டுப்போச்சுன்னு பொலம்பிக்கிட்டு மாலுக்கு போய் 150 ரூ சாண்ட்விச் தின்னுறவனுக்கு 10-20 போனால் என்ன ,போகட்டும்.///
I agree with you ..
It is better to avoid these kind of மால்கள்
Friend,
There are two ways to find solution:
1. "Everybody" avoid these kind of malls.
2. Let them(EA) know what they are doing is illegal by means of dragging them to court.
option (1) difficult to do. Only people reading this blog will come to know about these facts and even for them it is difficult to avoid at all times.
option (2) - very much feasible.
Let us move towards the solution.
@வவ்வால் ராஜன் baskaran
Instead of looking at a issue whether related to rich / poor / middle class/ upper middle class..let us fight for the issue.
Please let us look at the real issue here.
பணக்காரன் விலை ஏறினாலும் போராட எல்லாம் முன் வர மாட்டாங்க,அவங்களை பொறுத்த வரை விலையை வேண்டுமானால் உயர்த்திக்கொள்ளுங்கள்,எனக்கு பொருள் தடையில்லாமல் கிடைக்கணும் என்றே சொல்வார்கள், எனவே வெங்காயம் விலை ஏறினால் போராட வருவது மிடில் கிளாஸ் மற்றும் கடை நிலை மக்களே.
அவர்கள் செய்வது தவறு தான் ஆனால் அதனை புறக்கணித்து அவர்களுக்கு உணர்த்த வேண்டும், மேலும் அட்டைக்கு பணம் இல்லை, மீதப்பணம் திரும்ப தருவேன் என்றாலும் அம்மால்களின் விலை கொள்ளை விலைத்தானே அப்புறம் ஏன் அங்கே போகவேண்டும்?
வெள்ளைக்காரன் காலத்திலேயே காந்திக் கையாண்டது அன்னிய பொருள் பகிஷ்கரிப்பு என்ற புறக்கணிப்பு தான்.
---------
ஜோ,
இதில் வர்க்கம் பார்க்கவில்லை என்றாலும் அநியாய விலை விற்கும் இடத்திற்கு ஏன் போக வேண்டும், மக்கள் புறக்கணித்தால் விலையும் குறைப்பார்கள், இல்லை மூடிவிட்டு போவார்கள். எனவே அப்படிப்போராடி அங்கு போய் உணவுண்ண தேவையே இல்லை.
இந்தியாவில் ஆண்டுக்கு 40,00,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவினால் இறக்கிறார்கள், அவர்களை எல்லாம் கண்டுக்கொள்ள யாரும் இல்லை, பணக்காரர்கள் உணவுண்ன செல்லும் இடத்தில் 10 ரூ கூட பிடுங்குறான் சமூகமே படையாய் திரண்டு போறாடணும் ?
150 ரூ சாண்ட் விட்ச் விலை அளவு கூட தின வருமானம் இல்லாத மக்கள் இந்தியாவில் சுமார் 40 கோடி இருக்கிறார்கள், அவர்களின் தினசரி வருமானம் 32.50 காசு என திட்டக்கமிஷன் சொல்லுது ,அத்தொகை அம்மால்களின் பார்க்கிங் கட்டணம் அளவுக்கு கூட இல்லை.
சென்னையில் மொத்தம் ஒரு 4 மால் இருக்குமா? சென்னைக்கு வெளியில் எத்தனை மால் இருக்கும்? எனவே புறக்கணித்தால் இது போல் மால் பிசினெஸ் மேலும் வளராது.அதை விட்டுவிட்டு 150 ரூக்கு சாண்ட்விட்ச் தின்ன கூட்டம் ஓடினால் ,தமிழகம் எங்கும் கடை விரிப்பார்கள்.
( கேட்டால் கிடைக்கும்) கண்டிப்பாக .....ஒன்றினைவோம்..
இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
ஷாப்பிங் மால் பற்றிய உங்களது பதிவில் குறிப்பிட்டிருந்த பிரச்சினைகளில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு உள்ளது எனினும் அங்கு வெளியே கிடைக்காத சில விஷயங்களுக்காகவே செல்கிறோம்.குறிப்பாக சுத்தமாக பராமரிப்பது,முற்றிலும் குளிருட்டபட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு,அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கிறது,சிறப்பான கட்டணமில்லா கழிவறை வசதி,மொபைல் & லேப்டாப் கடைகளில் உபயோகித்து பார்க்கும் வசதி,கே.எப்.சி. கடையில் பெப்சி போன்ற குளிர்பானத்தின் சுவை வேறு இடங்களில் நான் உணர்ந்தது இல்லை கடைசியாக முன்பு ஹாலிவுட் திரை படங்களில் பார்த்து நாம் ஏங்கிய ஒன்றை அடைந்து விட்ட உணர்வை கொடுப்பது.குறை என்று பார்த்தால் தேவையில்லாமல் பல கார்டுகளை நம் தலையில் கட்டுவது.நான் செல்லும் ஷாப்பிங் மாலில் நீங்கள் சொன்னது போல் ஒருங்கிணைத்த உணவகங்களில் (food court ) நேரடியாக பணம் கொடுத்து வாங்க முடியாதது ஒரு குறையே அப்படியே இவர்கள் ப்ரீபெய்ட் கார்டு முறையை அமல் படுத்தினாலும் ஷாப்பிங் மால் முழுவதும் (திரையரங்கு உட்பட) செல்ல தக்க ஒன்றை நடைமுறைபடுத்துவது ஓரளவு ஏற்று கொள்ள தக்கது.நான் செல்லும் ஷாப்பிங் மாலில் உள்ள சத்தியம் தியேட்டரிலும் கார்டு நடைமுறை இருந்தாலும் அதை கட்டாயமாக்கவில்லை நீங்கள் திரை அரங்குக்கு வராமலேயே முன்பதிவு செய்ய இவ்வசதி பயன்படும்.நாம் பயன்படுத்தும் ATM அட்டையிலும் குறைந்தது நூறு ரூபாய்களாகத்தான் எடுக்க முடியும் அதாவது உங்கள் வங்கி கணக்கில் கடைசியாக உள்ளது நூறுக்கு குறைவாக 99 ருபாய்களாக இருந்தால் நீங்கள் ATM எந்திரம் வழியாக எடுக்க முடியாது.மேலும் ஏறத்தாள அனைத்து தனியார் வங்கிகளிலும் சராசரி மூன்று மாத குறைந்த பட்ச சேமிப்பு கணக்கு தொகை 10,000 ரூபாய் இருக்க வேண்டும்(இதற்கு பெரும்பாலான வங்கிகளில் 4 % வட்டியே வழங்கப்படுகிறது) இல்லை எனில் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க படுகிறது.என்னை பொறுத்தவரை நான் வெகு சில திரைப்படங்களுக்கு தான் திரை அரங்குகளுக்கு செல்வேன்.ஆகவே சத்தியம் மாதிரியான திரை அரங்குகளுக்கு 120 ரூபாய் செலவழிப்பது பெரிதாக தெரிவது இல்லை.பார்க்கிங்கிற்கு அதிக பட்ச தொகை நிர்ணயித்தால் (உதாரணமாக ரூபாய் 50 ) அல்லது ப்ரீபெய்ட் கார்டு முறை அமலில் இருப்பதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவழிதவர்கள் பார்க்கிங்கிற்கு பணம் கொடுக்க தேவை இல்லை என்றால் வருபவர்களுக்கு பெரிதாக தெரியாது.பார்க்கிங் இலவசமாக இருந்தால் சும்மா சுற்றி பார்ப்பவர்கள் வாகனங்களை நாள் முழுதும் நிறுத்தி கொண்டு ஷாப்பிங் மாலுக்கு வருவாய் தரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகனம் நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்படும்.இதே போன்ற பிரச்சினை பேருந்தில் வருபவர்கள் பெரும்பாலோர் ஒன்றும் செலவழிக்காமல் இலவசமாய் கிடைக்கும் வசதிகளையும் பிற வசதிகளையும் பொறுப்பற்ற வகையில் பயன்படுத்துவதை தடுக்க சரியான நடைமுறை இல்லாத போது பார்க்கிங் இலவசமாய் இருந்தால் வருவாய் அளிக்கும் வடிக்கையாளர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டு ஷாப்பிங் மால் திட்டமே இந்தியாவில் தோல்வியில் முடியும்.
வவ்வால் கேபிளின் இன்னொரு பதிவின் பின்னுட்டத்தில் என்னுடைய கருத்தை பற்றி //நம்மக்கட்சி தான் அப்போ// என்று சொல்லி இருந்தார்.எனக்கும் அவருடைய பெரும்பாலான பதிவும் & பின்னுட்டமும் அதே போன்ற எண்ணத்தையே ஏற்படுத்தினாலும் (உலகில் 7 பேர் ஒரே உருவத்தில் இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு,அதே போல் ஒரு மாதிரி யோசிப்பவர்கள் உலகில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று எதாவது நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை ).இந்த பதிவை பற்றி வவ்வால் கண்ணோட்டம் வேறு என்பது அவரது பின்னுடத்திலிருந்து தெரிகிறது.இருந்தாலும் அவர் எப்படி யோசிப்பார் என்று அவருடைய கோணத்தில் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். " போய்யா நீயும் உன் சங்கமும் அன்றாடம் காய்ச்சிகள் தினசரி செல்லும் டாஸ்மாக்கில் "குவாட்டருக்கு" MRPஐ விட ஐந்து ரூபாயும் மிக்ஸ்சிங்கிற்கு இலவசமாய் கிடைக்க வேண்டிய "வாட்டருக்கு" இரண்டு ரூபாயும் அழுது கொண்டுள்ளோம் நீ 5 ஸ்டார் ஓட்டலில் வாட்டர் இலவசமாய் சண்டையிட்டு வாங்கினேன் மக்களே ஒன்று திரளுங்க என்று கூவிக்கிட்டு கிடக்க"
வவ்வாலும் & கேபிளும் கடைசி கருத்தை நகைச்சுவையாக எடுத்து கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.
மாலுக்கு செல்வது ஒரு மாயை போன்று. ஒன்றுமில்லாதவன் கூட தன் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து ரூ.1000 செலவழித்ததை கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்கு ஒரு திருப்தி. பெரிய மனுஷங்க வர இடத்தில் தானும் தன் குழந்தைகளும் வந்தோம் என்பது.
நீங்கள் சொன்னது போல் குடும்பம், தோழர்கள், தோழியரோடு வருபவர்களின் இயலாமை
அதாவது மாயை
இந்த மாயை நிச்சயம் போக்க வேண்டும். அதற்கு உங்கள் முயற்சிகள் முன்னுதாரணம்
மால்கள் நான்கைந்து வந்துவிட்டால் நாடு முன்னேறியதாக ஆகிவிடுமா? ஹாலிவுட் படத்தில் இருப்பது போலன்னு சொல்லுறிங்க, அப்போ படத்துல வருவது போல ரோட்டோரமா காரை நிறுத்தி செக்ஸ் வச்சுக்கிட்டா கலாச்சாரம் கெட்டுப்போச்சுன்னுல சொல்லுறாங்க :-))
//" போய்யா நீயும் உன் சங்கமும் அன்றாடம் காய்ச்சிகள் தினசரி செல்லும் டாஸ்மாக்கில் "குவாட்டருக்கு" MRPஐ விட ஐந்து ரூபாயும் மிக்ஸ்சிங்கிற்கு இலவசமாய் கிடைக்க வேண்டிய "வாட்டருக்கு" இரண்டு ரூபாயும் அழுது கொண்டுள்ளோம் நீ 5 ஸ்டார் ஓட்டலில் வாட்டர் இலவசமாய் சண்டையிட்டு வாங்கினேன் மக்களே ஒன்று திரளுங்க என்று கூவிக்கிட்டு கிடக்க"//
இதை ஏற்கனவே சொல்லியாச்சு,நீங்க பழையப்பதிவுகளை படிக்கவில்லை என நம்புவோம் :-))
ஏன் மால்களை புறக்கணிப்போம்னு சொல்லக்கூட மனசு வரவில்லை அது என்ன அவ்வளவு எசெண்ஷியல் செர்வீசா?
ரோட்டில அடிப்பட்டா போலீஸ் கேசுன்னு எந்த மருத்துவமனையும் அவ்வளவு சீக்கிரம் சேர்ப்பதில்லை, ஜி.எச்க்கு தான் ஓடணும் , டிராபிக்ல சிக்கி போறதுக்குள்ள மண்டைய போட வேண்டியது தான். அதுக்கு ஒரு கேட்டால் கிடைக்கும் போடலாம்.
நான் அது மாதிரி எதுவும் சொல்லவே இல்லையே திரும்ப ஒரு முறை படிக்கவும்,சிறு வயதில் ஹாலிவுட் படத்தில் 5 ஸ்டார் உணவகம் & ஷாப்பிங் மால் போன்றவற்றை பார்த்து ஆச்சர்ய பட்டதை பற்றி எழுதி இருந்தேன்.
// இதை ஏற்கனவே சொல்லியாச்சு,நீங்க பழையப்பதிவுகளை படிக்கவில்லை என நம்புவோம் :-)) //
உங்கள் வாயால் ஒப்புதல் அளித்துள்ளீர்கள் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்கள் கண்ணோட்டத்தில் எப்படி யோசிப்பீர்கள் என்பதே அது என்னுடைய சொந்த கருத்தல்ல.மேலும் ஏற்கனவே நீங்கள் இதே சாயலில் பின்னுட்டம் இட்டு இருக்கலாம் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.
//ஏன் மால்களை புறக்கணிப்போம்னு சொல்லக்கூட மனசு வரவில்லை அது என்ன அவ்வளவு எசெண்ஷியல் செர்வீசா?//
போக்குவரத்துகாக நடை,சைக்கிள்,பஸ்,கார், ரயில்,கப்பல், விமானம் போன்ற பல வசதிகள் இருக்கின்றன ஒவ்வொன்றையும் பயன்படுத்துவது அவரவர் விருபத்தையும் வசதியையும் பொருத்தது கொண்டை உள்ளவள் பூ முடித்துக் கொள்கிறாள் மொட்டை தலை ... என்ற சொட்றொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நீங்கள் குறிப்பிட்ட மூவரில் பெரும்பாலோர் கூட திருமணமானவர்கள்.
…
…//ஷாப்பிங் மால் திட்டமே இந்தியாவில் தோல்வியில் முடியும்//
…
…திட்டமா? இந்தத் திட்டம் தோல்வியடைந்தால், என்ன ஆகும்.
…
…//ஒவ்வொன்றையும் பயன்படுத்துவது அவரவர் விருபத்தையும் வசதியையும் பொருத்தது கொண்டை உள்ளவள் பூ முடித்துக் கொள்கிறாள் மொட்டை தலை ... என்ற சொட்றொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.//
…
…நீங்கள் முதலில் சொன்ன வார்த்தைகளுக்கே போவோம்.....
…
…**மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் இது தொடருமா வெகு சிலரை தவிர தனி மனிதனுக்கு பொது பிரச்சினைக்காக தொடர்ச்சியாக நேரம்,பணம் & பிற பாதிப்புகளை தாண்டி சுய நலம் இல்லாமல் செயல்படுவதை காண்பது அரிதாகவே உள்ளது**
…
…இப்போது உங்கள் ஞாபகத்திற்கு வந்த சொற்றொடரைப் படித்துப் பார்க்கவும்.
…
…உங்களுடைய அன்றாட பொதுப் பிரச்சனைகளையும் , மக்கள் விழிப்புணர்வு முயற்சியும் கேட்கும்போது புல்லரிக்குதுபா!
உங்களுக்கு ஆங்கில படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது.பார்ப்பீர்கள் என்றால் "Die Hard 4 .௦ என்ற திரை படத்தில் ஒரு காட்சியில் பல்வேறு அமெரிக்க அதிபர்கள் பேசிய பேச்சுக்களின் ஒளிபதிவை வெட்டி ஒட்டி தீவிர வாதிகளின் கருத்தை அனைத்து சேனல்களிலும் சொல்வது போல் செய்திருப்பார்கள்.அது போல என்னுடைய கருத்தை பல இடங்களில் அந்த சூழ் நிலையை ஒட்டி எழுதியதை எடிட் செய்து புது அனர்த்தம் மன்னிக்கவும் அர்த்தம் கற்பிக்கிரீர்களே இது நீயாயமா.என்னுடைய பின்னுடத்தில் முதலில் கேபிளின் "கேட்டால் கிடைக்கும்" செயல் பாட்டை பொதுவாக எழுதி இருந்தேன்.அவர் இதற்கு முன்பு எழுதிய சில பதிவுகளை படித்ததிலிருந்து அவருடைய இது தொடர்பான செயல்பாட்டுக்கு anonymous ஆக பின்னுட்டமிட விருப்பம் இல்லாததால் பதில் சொன்னதில்லை ஆனால் வவ்வாலின் ஒரு பதிவில் anonymous ஆக பின்னுட்டம் போட்டதால் எழுந்த பஞ்சாயத்தால் ஒரு பெயருடன் களத்தில் குதிக்க வேண்டியதாகிவிட்டது. கேபிளின் முந்தய "கேட்டால் கிடைக்கும்" செயல்பாட்டுக்கு பொதுவான பதில் சொல்லும் விதமாகவே ஆரம்பத்தில் என்னுடைய கருத்தை எழுதி இருந்தேன்.
//நீங்கள் குறிப்பிட்ட மூவரில் பெரும்பாலோர் கூட திருமணமானவர்கள். //
நான் குறிப்பிட்டது பொதுவாக தியாக சிந்தனை உள்ளவர்கள் பற்றி குறிப்பிட்ட முவரில் காந்திக்கு திருமணமாகி வாரிசுகள் உள்ளன,அண்ணாவிற்கு திருமணமாகி ரத்த சம்மந்தமான வாரிசுகள் இல்லை,காமராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லை.
//திட்டமா? இந்தத் திட்டம் தோல்வியடைந்தால், என்ன ஆகும்.//
ஆதி கால மனிதனுக்கு உயிர்வாழ உணவே அடிப்படை தேவையாய் இருந்தது பிறகு உடையும்,இருப்பிடமும் அடிப்படை பட்டியலில் சேர்ந்து கொண்டன தற்பொழுது மனிதனின் தேவைகளும் ஆசைகளும் பலவிதம் அவற்றில் செல் போன் இல்ல விட்டால் என்ன ஆகும்,இன்டர்நெட் இல்லா விட்டால் என்ன ஆகும்,பெட்ரோல் இல்லா விட்டால் என்ன ஆகும்,மின்சாரம் இல்லாவிட்டால் என்ன ஆகும்,சினிமா இல்லா விட்டால் என்ன ஆகும்,தொலை காட்சி இல்லா விட்டால் என்ன ஆகும்,கிரிக்கெட் இல்லா விட்டால் என்ன ஆகும் , படிப்பு இல்லா விட்டால் என்ன ஆகும் போன்ற இன்ன பிற இல்லா விட்டால் என்ன ஆகும்களுக்கு என்னிடம் ஒரே பதில் ஒவ்வொன்றையும் பயன்படுத்துவது அவரவர் தேவையையும் ,விருபத்தையும், வசதியையும் பொருத்தது.
//…உங்களுடைய அன்றாட பொதுப் பிரச்சனைகளையும் , மக்கள் விழிப்புணர்வு முயற்சியும் கேட்கும்போது புல்லரிக்குதுபா!//
நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்ல வருகுறீர்கள் என்று எனக்கு புரிய வில்லை.
1. Accommodate
2. Avoid
3. Attack
it varies from person to person.
இல்லீங்க.
அஞ்சஞ்சு தடவையா அஞ்சு பைசா திருடினா?
ஏதோ தப்பு மாதிரி தெரியுதுங்க
அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா வீதம் திருடினா?
தப்புதானுங்க "
இதை எழுதுன உங்க வாத்தியார்தான் . .
மாயாஜால் அறிமுகத்திற்கு
பெரிதும் துணை நின்று பத்திரிகை வாயிலாக
மறைமுக விளம்பரம் செய்தவர் . . .
Well Done Shankar ji... Keep the good work going..
But why you say that we cannot do anything.. When there is a will, there is a way...
In future, try to do something on this issue too...
Ihave not said that cannot be done anything. we are trying to take legal action. towards this. before that i would like to make the people to aware about this problem. and how they cheat us.
we need to find a solution for this.
//இதை எழுதுன உங்க வாத்தியார்தான் . .
மாயாஜால் அறிமுகத்திற்கு
பெரிதும் துணை நின்று பத்திரிகை வாயிலாக
மறைமுக விளம்பரம் செய்தவர் . . .
//
அப்போ சுஜாதா மீடியா டிரீம்ஸ் நிர்வாக இயக்குனராக இருந்தார், மாயாஜால் உருவாக்கப்பணியிலும் ஆலோசனைகள் வழங்கினார்.
அதன் பின்னர் மாயாஜால் இந்தியா சிமெண்ட்ஸ் வசம் போயிடுச்சு, கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்த் இப்போ நிர்வாக இயக்குனர், இன்னும் அப்பதவியில் இருக்காரான்னு தெரியலை.
பெரிய மால்களின் பின்னால் இருப்பதெல்லாம் பெரும் பண முதலைகளே, மேலும் அங்கு செல்பவர்களும் பணம் படைத்தவர்களே.
சென்னை மக்கள் தொகையில்1% கூட அம்மால்களுக்கு போவதில்லை, அவர்களும் புறக்கணித்தால் வியாபாரம் படுத்து , குறைவான விலைக்கு விற்கவும், இப்படிக்கொள்ளை அடிப்பதை நிறுத்தவும் செய்வார்கள்.
ஒரு படம் பார்த்துக்கிட்டே இருக்கும் போதே மொக்கைனா ,படம் மொக்கைன்னு மெசேஜ் அனுப்பி ,அதை ஃபார்வர்ட் செய்து படத்தையே படுக்க வைக்கும் மக்கள், பாய்காட் _______மால் என மெசேஜ் அனுப்பி பரப்பினாலே நல்ல பலன் கிடைக்கும்.
வதந்தி மேசேஜ் எல்லாம் ஃபார்வர்ட் செய்யும் மக்கள் இதை செய்யக்கூடாதா என்ன?
as you did for " தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்".
Lets see what action mayor or chennai corporation takes on this issue.,.
like "4chan mpaa attack" phenomena we can do something, with all our friends from "கேட்டால் கிடைக்கும்"
வணக்கம் கேபிளின் சமீபத்திய கொத்து பரோட்டா பதிவில் என்னுடைய பின்னுடத்துக்கு நீங்கள் பதில் சொல்லாததை வைத்து நான் நீங்கள் பதில் சொல்லும் அளவுக்கு தகுதி வாய்ந்தவன் அல்ல என்று நினைத்தேன் தற்பொழுது வேறொருவர் சம்பந்த பட்ட கருத்துக்கு நீங்கள் பதில் சொல்லி இருப்பதை வைத்து பார்த்தால் எனக்கு நீங்கள் பதில் சொல்லும் அளவுக்கு தகுதி வந்து விட்டதாக நெனைக்கிறேன்.//
கொத்துபரோட்டா பதிவில் நான் கேபிள் அவர்களைக் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னீர்கள். நீங்கள் கேள்வி எதுவும் எழுப்பவில்லை. உங்கள் பதிலில் எனக்கு எந்தவித அட்சேபமும் இல்லை. அதனால் அதனை அப்படியே விடுவிட்டேன்.
…
…இந்த பதிவில் கேபிள் மால் போகிறவர்கள் பற்றிய பிரச்சனையாகத் தான் சொன்னார். அதனால் நான் பதிவைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால் நீங்கள் மக்கள் விழிப்புணர்வு, பொதுப்பிரச்சனை, காந்தி, காமராஜ், அண்ணா... சொல்லிக்கொண்டு போனதால், அதப்பற்றிக் கூறினேன். உங்கள் அறிவுக்கு நான் தகுதியற்றவனாக இருந்தாலும், இந்த பதிலைப் பதிவு செய்கிறேன்.
Ashwin R
பாய்காட் ------ டாஸ்மாக் என மெசேஜ் அனுபினால் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம் தாய்மார்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள் (வவ்வால்,கேபிள் வீடு உட்பட),ஏற்கனவே கிங் பிஷேர் விமான நிறுவனத்தின் கடனால் விழி பிதுங்கி கொண்டிருக்கும் விஜய் மல்லையா போன்ற பெரும் பண முதலைகள் உடனே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டு மூலையில் உட்கார வேண்டியதுதான்,தமிழக அரசும் டாஸ்மாக் வருமானத்தில் விலை இல்லா பண்டங்களை அள்ளி விட்டு ஒட்டு வாங்கும் குறுக்கு வழியை விட்டு.அனைவருக்கும் சீரான தடையில்லா மின் வினியோகம்,தொழில் வளர்ச்சி,மக்களின் வாழ்கை தர மேம்பாடு போன்ற உண்மையான மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்துவர்,குடித்து விட்டு ரோட்டில் திரை அரங்குகளில் பேருந்தில் இன்ன பிற மக்கள் பயன் படுத்தும் இடங்களில் வாந்தி எடுத்தி நாசம் செய்வது,அபாசமாய் வீதியில் பெருங் குரலில் உளறுவது ,கண்ணாடி பாட்டிலை கடற்கரை,பூங்கா போன்ற குழந்தைகள் விளையாடும் இடங்களில் கூட உடைத்து வீசி மற்றவர்கள் காலை ரத்த காய படுத்துவது போன்ற சமூக சேவைகள் குறையும்.
மேற் சொன்ன முறையில் வேண்டுமளவுக்கு புரட்சிகர மெசேஜ் அனுப்பி நாட்டில் உள்ள பெரும் பலான பண முதலைகளை ஒழித்து கட்டி விட்டு கடைசியாக பாய்காட் ------ செல் போன் என்று இறுதி மெசேஜ் அனுப்பிவிட்டு செல் போன்ஐ தலையை சுற்றி மூன்று முறை சுற்றவும்.பின்னர் டாட்டா,பிர்லா,அம்பானி,வேணுகோபால் தூத் போன்ற உள்நாட்டு பண முதலைகளையும்,அனந்த கிருஷ்ணன்,லீ குன்-ஹீ ,டிம் குக்,ரிஸ்டோ சீலச்மா போன்ற வெளி நாட்டு பண முதலைகளும் ஒழிக என்று சத்தமாக கத்தியபடி செல் போன்ஐ உடைத்து விட்டால் அனைத்து பண முதலைகளையும் கூண்டோடு கைலாசம் அனுப்பி விடலாம் மேலும் எதிர்கால 2G உழலில் இருந்து நாட்டை காப்பாற்றிய திருப்தி கிடைக்கும்.
I am in Bangalore and here I ask for my Re.1 and NP.50 from super markets, where they themselves round it off! Twice I asked in a little bit high pitch voice and I got the 50 np back.
I strongly tell my friends too to ask. It is my money why I should leave!
Ananda Rajkumar, bangalore.
நல்ல ஆலோசனை இதை 1000 பதிவுகளில் அப்படியே காப்பி&பேஸ்ட் செய்து ஒரு மாற்றம் கொண்டுவாருங்கள், வாழ்த்துக்கள்!
கூடவே பெப்சி,கோக், பீட்சா, கே.எஃப்.சி,மெக்டொனால்ட்,ஆப்பிள் ஐ போன், சாம்சங்,நோக்கியா,ஃபோர்ட்,ஹோண்டா,மைக்ரோசாப்ட் என இன்னும் பலவும் சேர்த்து பாய்காட் என மெசேஜ் போட்டால் நாடு வளம் பெரும்!
மேரா பாரத் மஹான்,ஜெய் ஜவான்,ஜெய் கிசான்,ஜாரே ஜஹான்சே அச்சா!
கேபிள் சங்கர் அண்ணாச்சிக்கு சிறப்பு ஜே.
by
TamilNenjam
http://rajaavinpaarvayil.blogspot.com/