சமீபத்தில் கேபிள் சங்கர் எழுதி, மும்மொழிகளில் வெளியான சினிமா விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது. ஆங்கிலமும் உள்ளது. என் வாழ்வில் முதல் முறையாக புத்தகக் கடைக்குள் ஒரு புத்தகத்தை , ஒரு இயக்குநர் வெளியிட நான் அன்புடன் பெற்றுக் கொண்ட நிகழ்வில் பங்கேற்ரேன். தமிழ்ச்சூழலில் நான் கொஞ்சம் பழைய ஆள். அந்த வானலையின் வரிகள் என்ற புத்தகமும் பழையது.(இரு பதிப்பு கண்ட நூல்). இந்நிகழ்வு, பேச்சு, எல்லாம் புதுசு. ஏன் இந்தக் கதை எனில், சில வருடங்களாக நான் என் புத்தகங்களை வெளியிட்ட போது கிடைத்த நிம்மதியை விட இந்நிகழ்வு மட்டும் எனக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்தது. குடும்பத்தின் சுப நிகழ்வு மாதிரி இருந்ததும் காரணம்.
நிகழ்வில் முதன் முதலில் என்னிடம் விசிட்டிங் கார்டு கேட்டவர் கவிஞர் ஈழவாணி. விசிட்டிங் கார்டெல்லாம் இல்லீங்க என்றதும் முழுமையாய் சிரித்தார். எப்போதும் சிரிப்புத்தான். அது வேறு அழகாய் இருந்தது. அப்புறம் சுரேகா என்பவர் என்னிடம் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். திரும்பக் கார்டு தருவதுதான் பண்பாடு. ஆனால் அவரே என் பெயரை கேபிள் சங்கரின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன் என்றதும், எனக்கு எதுக்கு விசிட்டிங் கார்டு என்று என் மனம் குதித்தது. அன்றிரவே சினிமா என் சினிமா புத்தகத்திற்கு என் மனதில் முன்பே உருவான வரிகளை எழுதிவிட்டேன். கேபிள் சங்கர் மட்டும்தான் என் எழுத்துக்களை தமிழ் இணையத்தளத்தில் உடனே பதிவு செய்கிறவர். விமர்சனம் எழுதிவிட்டு அது வருமா வராதா என்று வருஷக்கணக்கிலே யவனிகா, தீராநதிகிட்டேகேட்கணும். அதுதான் சிற்றிதழ்களின் பாணி. கல்கி தவிர்த்து, நம் சாருவிற்கு அப்புறம் இப்படி ஒரு சுயபுராணம் நானும் எப்ப எழுதறது சங்கர் நாராயணன். அப்புறம் உங்க புத்தகம் சூப்பர். இதுவரிஅ எனக்கு ரூ.3500 மிச்சம் ஆயிருக்கும் தெரியுமா? இதை எழுதினா சில பேர் துரோகி என்பார்கள். நான் புது படம் பார்க்கணும்னா உடனே அடுத்து கேபிள் சங்கர் வலைத்தளத்தைப் பார்ப்பேன். யோசிப்பேன் அப்புறம்தான் போவேன். ஏன்னா மிடில்க்ளாஸ் பேமிலியில் ஒரு டிக்கெட் எப்படியும் ரூ.100-150னு பார்த்தாலும் செலவு என்பது ஒரு படத்திற்கு எங்களுக்கு ரூ.800 ஆகிவிடுகிறது. கார்பார்க்கிங் திருச்சியில் ரூ.30-50 வரைக் கேட்பார்கள். பெட்ரோல் விலையிலிருந்து நொறுக்ஸ் வரை அதற்கான செலவு தனி. இதே சென்னையில் என்றால் டிபன் சாப்பிடாமல் பிள்ளைகள் வருவதில்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஒரு படம் ஐநாக்சில் பார்க்க முடியாமல் திரும்பி வந்தது ராஜபாட்டை. இப்போது புரிகிறதா நான் சொல்வது. ஒரு நிமிஷன் அன்னைக்கு சங்கர் சொன்னதை படிச்சிருந்தா எனக்கு 900 ரூபாய் மிச்சமாயிருக்கும். இவர் ராஜ மொக்கைன்னு போட்டிருப்பார் பாருங்க, ரசிங்க, யோசிங்க.
இப்படித்தான் சினிமாவின் தீராக்காதலரான சங்கர் தனது கவலையாலும், அக்கறையாலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் என பன்மொழிப் படங்களின் தலையெழுத்தை தவறாமல் எழுதி சேவை செய்து வருகிறார். புத்தக அட்டை அவரைப் போலவே வசீகரிக்கிறது. தலை சிறந்த கட்டுரைகள் என் மனதின் ஊடாக பயணிக்கிறது. இருப்பினும் தமிழில் செனக்கு வாகை சூடவா பிடித்த படம். சில சமயம் சில படங்களை, சில ஆர்வங்களை, நாம் பாராட்ட வேண்டும் சங்கர். தரக்கட்டுப்பாடு போட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது. இருப்பினும், த்மிழ் சினிமா சூழலில் சிற்றிதழ்களின் பத்து பக்கங்கள் எழுத்தின் மாய ஜாலங்களுக்கு மத்தியில், அறிவு ஜீவித்தனங்கள் ஏதுமற்று டிக்கெட் வாங்கினது, தாண்டிப் போனது, மட்டமான ஸ்க்ரீனிங் என்ரு விளாசுவது. கேபிள் சங்கர் மீண்டும் இப்புத்தகத்தின் மூலம் எழுத்தும், ரசனையும், வாழ்வும் சினிமா தான் என்றிருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்தமானது, என்பதையும், நேர்மையும், திறமையும், உழைப்பும், மதிக்கபட வேண்டும் எனப்தையும் எதார்த்த மொழியில் சொல்லியிருக்கிறார் . இன்றும், என்றும் உங்களின் எழுத்தில் ஊடாடும் உண்மையை ரசிக்கும் வாசகியின் கடிதமிது. வணக்கம்.
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
ஈரோடு புத்தக கண்காட்சியில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கிறது ஸ்டால் நம்பர் 65ல் கிடைக்கிறது.
ஈரோடு புத்தக கண்காட்சியில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கிறது ஸ்டால் நம்பர் 65ல் கிடைக்கிறது.
Post a Comment
5 comments:
rightu !
lik tis me 2 saved money after reading ur cinema viyabaram book.....
புத்தக விமர்சனம் மகிழ்ச்சியை அளிக்க . .
வவ்வாலின் ஒரு சொல் பின்னூட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது
ஏன் வவ்வால் அண்ணே வீக் எண்டு மட்டையா . . ?
குரங்குபெடல் said...
வவ்வாலின் ஒரு சொல் பின்னூட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது
for me also
informative post
Post a Comment