சாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்
இந்தக் கடையைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிறு குறிப்பாய் கொத்து பரோட்டாவில் எழுதியிருந்தேன். சென்னை மேற்கு மாம்பலத்தில் லேக் வியூ ரோடுக்கு நேர் பின்புறம் இருக்கிறது இந்தக் கடை. சைவ டிபன் மற்றும் சாப்பாட்டுப் பிரியர்களின் வேடந்தாங்கல் என்று சொன்னால் சாப்பிட்டவர்கள் அதை ஆமோதிப்பார்கள்.
வழக்கமாய் மாம்பலம், மேற்கு மாம்பலத்தில் பாச்சுலர் இளைஞர்களுக்கான மேன்ஷன் அதிகம். அதனால் அந்த ஏரியாவில் பாஸ்ட்புட்களும், மெஸ்களும் அதிகமாய் இருக்கும். திருவல்லிக்கேணியில் இருப்பதைப் போல. ஒவ்வொரு மெஸ்சும் ஒவ்வொரு அயிட்டத்திற்கு புகழ் பெற்றது. இந்த தஞ்சாவூர் மெஸ்ஸில் கடப்பா என்றொரு அயிட்டம் படு பேமஸ். டிபிக்கல் தஞ்சாவூர் அயிட்டம். பாசிப்பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் எல்லாம் போட்டு தோசைக்கும், இட்லிக்கு தொட்டுக் கொள்ள கொடுக்கப்படும் கிரேவி. வாரத்தில் ரெண்டு நாள் அதுவும் காலையில்தான் போடுவார்கள். இவர்களின் கடப்பாவைப் பற்றி பத்தி பத்தியாய் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரசில் எல்லாம் ஆர்டிக்கள் எழுதியிருக்கிறார்கள்.
சரி இது மட்டும்தானா ஸ்பெஷல் என்றால் இல்லை. தோசை, பூரி, பொங்கல், ரவா உப்புமா, அடை அவியல், வெங்காய அடை அவியல், ரவாதோசை, மினி ரவா, ராகி தோசை, நெய் தோசை, இட்லி, என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் இருக்கிறது. பெரும்பாலான கடைகளில் தோசையை வெறும் கல்லில் போட்டு சூட்டில் தீய்ந்த தோசையைத்தான் தருவார்கள். ஆனால் இவர்களின் தோசையில் எண்ணைய் பசையும், பதமான முறுகலும், அதற்கு தோதாய் கார சட்னி, தேங்காய் சட்னி, மற்றும் அரைத்துவிட்ட சாம்பாரும் அட அட அட.. சும்மா ஒரு கட்டு கட்டலாம். பரோட்டாவும் சப்பாத்தியும் கூட இருக்கிறது. ஆனால் மற்ற அயிட்டங்கள் போலில்லை.
இரவு நேரங்களில் அரிசி உப்புமாவோ, அல்லது ரவா கிச்சடியோ சுடச்சுட சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் தேவாம்ரிதமாய் இருக்கும். அதுவும் எண்ணைய் ஒட்டாத உதிரி, உதிரியான அரிசி உப்புமாவும் தேங்காய் சட்டினியும் அருமையான காம்பினேஷன். புளிக்காத தயிர்சாதமும், தொட்டுக் கொள்ள வத்தக்குழம்பும் கிடைத்தால் உலகில் அதைவிட சந்தோஷம் என்ன இருக்க முடியும்?. மதிய நேரங்களில் ஐம்பது ரூபாய்க்கு சாப்பாடு. நல்ல வீட்டுச் சாப்பாடு போல இருக்கும் வத்தக்குழம்பும், ரசமும் எக்ஸ்சப்ஷனலி சூப்பர்பாக இருக்கும். கொஞ்சம் கீக்கிடமான, உணவகம் தான் என்றாலும் நல்ல சர்வீஸை நீங்கள் உணர்வீர்கள். கொஞ்சம் வழக்கமாய் போக அரம்பித்தால் உறவு முறையில் கூப்பிட ஆரம்பித்து விடுகிற அன்பு நம் உணவின் சுவையை மேலும் மெருகேற்றிவிடும். நிச்சயம் மிஸ் செய்யக்கூடாத மெஸ் இந்த தஞ்சாவூர் மெஸ்.
Comments
என்னமோ லேக் வியு ரோட் 10 அடி நீளம் இருப்பது போல அதுக்கு பின்னாடினு சொல்றிங்க , அந்த ரோட் போகுது போஸ்டல் காலனில இருந்து கோடம்ப்பாக்கம் வரைக்கும்.
தஞ்சாவூர் மெஸ் பேரு நியாபகம் இல்லை ,போயிருக்கலாம், அந்த ஏரியாவில் நிறைய மெஸ்கள் இருப்பதால் நினைவில் இல்லை.
35 ரூக்கு எல்லாம் ஃபுல் மீல்ஸ் கிடைக்கும் ஏரியா , இப்போ 50ரூ ஃபுல் மீல்ஸ் ஆஹ்? லிமிட்டட்.
கடப்பா என்ற ஆந்திரா கல்லுக்கும் இதுக்கும் எதாச்சும் தொடர்புண்டா?
ஆனா இப்ப சாப்பிட தான் முடியாது
சென்னை வந்தால் தான்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
// இலை கரிமீன் ரொம்ப டேஸ்டாம்.//
அந்த மீன் டிஷ் பேரு "பொலிச்ச மீன்" ரி போடாமல் "லி"போட்டேன்னு நினைக்க வேண்டம் அப்படித்தான் கேரளாக்காரங்க சொல்றாங்க.
ஹோட்டல் பேரு மறந்து போச்சு, நுங்கம்ப்பாக்கத்தில ,கோடம்பாக்கம் ஹை ரோட்ல அருணாச்சலா ஹோட்டல் எதிர்ப்புறம் அந்த கேரளா ஹோட்டல் இருக்கு, ஆனால் விலைலாம் ரொம்ப கூட அந்த மீன் மட்டும் 400 ரூ வரும் நினைக்கிறேன்.
ஹி..ஹி நான் ஓசில சாப்பிடும் போது விலையைப்பத்திலாம் கவலைப்பட மாட்டேன் :-))
இதுக்காக அந்த மீன் கேரளாவில இருந்து டெய்லி இங்கே பார்சல் வருது.
கோவையிலே கிடைக்குமே.
//சென்னைல கேரளா பாரம்பரிய ஹோட்டல் ஒண்ணு இருக்காமே..குடும்பம் என்கிற பெயரில்...நுங்கம்பாக்கம் பக்கதுல..// நீங்க சொல்றது குமரகம் தான், அங்க பொய் "கரிமீன் பொலிச்சாத்து" சாப்டா பர்சு பழுத்துடும் பாஸ். 2008 வாக்கில் அது சாப்டேன் ஒரு மீன் 400 ருபீஸ் ஒன்லி!!!!! நீங்க சொல்ற அயிட்டம் கேரளாவில் கம்மி விலைல இன்னும் சுவைய கிடைக்கும்.
//வவ்வால்ஜி..அது கடம்பா..தஞ்சையில் அப்படித்தான் சொல்வார்கள்.. தஞ்சாவூர் காஃபி பேலஸில் பூரி ,கடம்பா ரொம்ப ஃபேமஸ்..//
கடம்பா வா? இன்னும் சாப்பிட்டது போல தெரியவில்லை,பேரே தெரியாம நிறைய சாப்பிட்டு இருக்கேன் ,சில சமயம் வம்பாவும் ஆகி இருக்கு.
நீங்க கடம்பான்னு சொல்றிங்க,ஆனாளிது சைவம், இதே போல கடம்பா/கணவாய் னு கடல் உணவும் இருக்கு.
squid னு சொல்வாங்க. இலங்கையில் ரொம்ப ஃபேமசாம், முட்டை கணவாய்ன்னு.
அது என்னனு தெரியாம ஏதோ மீன் என சாப்பிட்டேன், ட்டி.வில முழுசா காட்டும் போது தான் பேதியாகிடுச்சு :-))
ஹி..ஹி அப்புறம் சில இலங்கைப்பதிவர்கள் தான் அது நல்ல உணவு தான் ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு ஆறுதல் சொன்னது :-))
தலைவரே... இது குருவி படம் பார்த்துட்டு இந்த பேரை வெச்சிருப்பாங்களோ...
மாம்பலம் ஏரியா போகும் போது ட்ரை பண்ணிப் பார்க்கிறோம்... அட்ரஸ் போன் நம்பரை கடைசியில குடுத்தீங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...
'Vivek Now in Blog' - Am in Toronto too..Please connect if you can by clicking my blogger id..
NHM down, hence commenting in English..
The people are very friendly and we used to have food with monthly credit account.
The taste and preparation of Dosai and Sambar was like typical tanjore style.
Thanks for blog.
Srinivasan.V