Thottal Thodarum

Aug 2, 2012

தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.

ஆமாம் இளம் தாய்மார்களை நாயாய் அலைய வைக்கிறது மாநகராட்சி மருத்துவமனைகள். அதற்கு  கொஞ்சமும் குறையாமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கபட்டு பிறக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12 ஆயிரம் அரசு உதவிப் பணமாய் தருகிறது. இது இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட தொகையாகும். ஆனால் இத்தொகையை வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களை அலைய வைக்கிறார்கள். 


சமீபத்தில் என் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒரு பெண் கர்பமானதிலிருந்தே அவர்கள் ஏரியாவில் இருந்த மாநகராட்சி மருத்துவமனையிலும், ஏழு மாதத்திற்கு பிறகு அவர்களுடய அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்கள். பிரசவ நேரமும் வந்தது.  மாநகராட்சி மருத்துவமனையிலிருந்து சைதை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரியும் கூட, சந்தோஷமாய் குழந்தையைக் கூட்டி வந்து செட்டிலாகிவிட்டவுடன் அந்த 12 ஆயிரம் ரூபாயை எங்கு பெற வேண்டும் என்று கேட்ட போது கடைசியாய் எங்கே சென்று மருத்துவமனை அனுமதிச்சீட்டு வாங்கினர்களோ அங்கே தான் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கே போய் கேட்ட போது இதோ தருகிறேன். நாளை வா என்று இழுத்தடித்தார்கள். அந்த பெண் தன் கணவன் வீட்டிற்கு வேறு சென்று விட்டாள். அவளின் வீடு வேளச்சேரியிலிருந்து நான்கைந்து முறை சைதை வந்துவிட்டாள். ஆனால் காரியம்தான் ஆன பாடு இல்லை. சரி கொஞ்சம் காட்டமாய் கேட்கப் போய், உனக்கு அக்கவுண்ட் எங்கே இருக்கிறது என்று கேட்க, அவள் தன் பெயரில் அக்கவுண்ட் ஏதுமில்லை என்று இதற்காகத்தான் ஓப்பன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள்.அவள் ஏரியவில் அக்கவுண்ட் ஒப்பன் செய்தால் பணம் தர மாட்டோம் என்று சொல்லி சைதாப்பேட்டையில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினால்தான் பணம் செக்காய் தருவேன் என்று சொல்லியிருக்கிறார். 

இங்கே தான் பேங்குகள் வருகிறது. சைதையில் அவளுக்கு அட்ரஸ் ப்ரூப் இல்லை. ஆனால் அறிமுகப்படுத்துவதற்கு ஆள் இருக்கிறது நோட்டரியின் ரெபரென்ச் லெட்டரும் தருகிறோம் என்ற போதும்  அந்தந்த ஏரியா ஆட்களுக்கு மட்டுமே அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியும் என்றும், வேறு ஏரியா ஆட்கள் எந்த பேப்பர் கொடுத்தாலும் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியாது என்று நிர்தாட்சண்யமாய் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏன் என்று கேட்டதற்கு அப்படித்தான் என்றிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து நான் மூன்று நான்கு பேங்குகளில் அந்த ஏரியாக்களில் குடியில்லாத போதே அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கிறேன். ஆனால் KYC விதிகளின் படி அப்படி எல்லா பேப்பர்களும் அந்தந்த ஏரியாக்களில் உள்ளவர்கள் தான் ஆரம்பிக்க முடியும் என்பது எப்போதிலிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. சரி அதை ரிட்டர்னில் எழுதிக் கொடுக்கள் என்று கேட்டால் அதற்கு சரியான் பதில் இல்லை. எனக்கு தெரிந்து அம்மாதிரியான சட்டம் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும். அதற்கேற்றார்ப் போல அப்பெண்ணைப் பேசச் சொல்லலாம்.

சரி இங்கேதான் அக்கவுண்ட் ஒப்பன் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் இருக்கும் வேளச்சேரி பகுதியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து வருகிறேன் என்று சொன்னால் அங்கே அக்கவுண்ட் இருந்தால் தர மாட்டோம் என்று ஆஸ்பத்திரியில் சொல்லியிருக்கிறார்கள். சரி இப்பிரச்சனையை எங்களிடம் சொல்லி என்ன என்று கேட்டபோது என்ன மிரட்டுகிறீர்களா? என்று கேட்கிறாள் செவிலிச்சி. கர்பவதிகளோ, அல்லது அரசு மருத்துமனைகளை யார் வேண்டுமானாலும், எந்த ஏரியாவில் உள்ளவர்களும் பழைய புத்தகத்தைக் காட்டி தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள் முடியும் எனும் போது எப்படி பிரசவித்த ஏரியாவில் தான் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியும். அப்படி ஏதாவது சட்டமிருந்தால் தெரிவிக்கவும். ஆனால் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த பின்பு சரி உங்கள் ஏரியா அக்கவுண்ட் ஆரம்பித்து சொல்லுங்கள் செக்கை கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த மரியாதைக் கூட எங்களுக்கு மட்டும்தான். புதிதாய் வரும் தாய்மார்களுக்கு உத்தேசமான பதில்தான். கொஞ்சம் நாட்களுக்கு முன் அந்தந்த ஏரியாவில் அக்கவுண்ட் இருந்தால் தான் ஆச்சு என்ற்வர் இப்போது வேளச்சேரியில் அக்கவுண்ட் ஆரம்பித்ததும் கொடுக்கிறேன் என்று சொல்வதன் பின்னணி ரகசியம் என்ன என்பதை அறிய வேண்டும். அது  வரை பாவம் இந்த இளம் தாய்மார்கள்.

Post a Comment

20 comments:

வவ்வால் said...

கேபிள்ஜி,

//புதிதாய் வரும் தாய்மார்களுக்கு உத்தேசமான பதில்தான். கொஞ்சம் நாட்களுக்கு முன் அந்தந்த ஏரியாவில் அக்கவுண்ட் இருந்தால் தான் ஆச்சு என்ற்வர் இப்போது வேளச்சேரியில் அக்கவுண்ட் ஆரம்பித்ததும் கொடுக்கிறேன் என்று சொல்வதன் பின்னணி ரகசியம் என்ன என்பதை அறிய வேண்டும். அது வரை பாவம் இந்த இளம் தாய்மார்கள்.//


நீங்க தமிழ்நாட்டில் தான் இத்தனை நாளா இருந்தீங்களா என்றே சந்தேகமா இருக்கு:-))

மருத்துவமனையில் அலையவிட்டக்காரணம் "கட்டிங்க்" கொடுக்கவில்லை என்பதால்.

1000 ரூக்கு குறையாமல் கொடுத்தால் தான் உதவி தொகை கொடுக்கிறார்கள், அதை கொடுக்கவில்லைனா இப்படித்தான் ஆட்டம் காட்டுவார்கள்.

வங்கியில் சொன்னதற்கு வேறு காரணம் இருக்கு, இவங்க உதவி தொகைசெக்கை மாற்ற மட்டுமே கணக்கு ஆரம்பிப்பாங்க அப்புறம் தெண்டமா கிடக்கும், 3 ஆண்டு செயல்ப்படலைனா தான் கணக்கை குளோஸ் செய்ய முடியும்னு என்னமோ ஒரு விதி இருக்கு எனவே செயல்ப்படாத ஒரு கணக்கை பராமறிக்கணுமே என தட்டிக்கழித்து இருப்பார்கள்.

இதை எப்படி சொல்கிறேன் என்றால் , ஒரு கிராமத்து நபர் அரசு உதவி செக்கை மாற்ற கணக்கு துவக்க வந்தார் அவருக்கு எல்லா ஆவணமும் இருக்கு ,ஆனால் அறிமுக கையெழுத்து இல்லை, வங்கியில் வந்தவங்களை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தார், என்னையும் கேட்டார் சரினு கை எழுத்துப்போட்டேன் , மேனஜர் என்னைக்கேட்டது "உங்களுக்கு ஏன் சார் இந்த வேலைனு" அப்போ தான் மேற் சொன்ன விளக்கம் சொன்னார்.

எனவே அவரவர் நிலை. எனக்கும் வங்கி செயல்ப்பாடுகள் செமக்கடுப்பாக இருக்கும். சில பல சண்டைகள் போட்டு இருக்கேன். அந்த நேரத்தோட அதெல்லாம் சரி.

இம்புட்டு சொல்லுறிங்களே வெளியூரில் போய் டிடி எடுக்க போனால் கூட கொடுக்க மாட்டேன்கிறார்கள், நம்ம காசை கொடுத்து கேட்கிறோம் என்னமோ அவன் காசை கொடுக்கிறாப்போல.நான் சண்டைப்போட்டு தான் டிடி எடுப்பேன்.

வவ்வால் said...

ஒரு சின்ன குறிப்பு:

பேங்கில் இங்லிப்பீசில் பீட்டர் விட்டால் காரியம் சித்தியாகும் ,அதுவும் ஸ்டேட் பேங்கில் செம மருவாதி கிடைக்கும் :-)))

இன்னும் வெள்ளைக்காரன் தான் நம்மை ஆள்கிறான் :-))

திருவாரூர் சரவணா said...

பத்து ரூபாய்க்கு கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் படி இந்த மனு அனுப்பப்படுகிறது. எனக்கு இந்த இந்த விபரங்கள் தேவை என்று ஒரு மனுவை போட்டுவிட வேண்டியதுதான். கண்டிப்பாக வீடு தேடி விபரம் வரும்.

அரசியல் வியாதிகள், காண்ட்ராக்டர்கள் மணல் கொள்ளை அடிப்பதையும், இன்னும் பிற கொள்ளை அடிப்பதை பற்றியும் கேள்வி கேட்டால்தான் வீட்டுக்கு ஆட்டோவில் ஆட்கள் அல்லது மணல் லாரிகள் மூலமே கொலை செய்வார்கள். இந்த பெண்ணின் பிரச்சனைக்கு அப்படி எல்லாம் இறங்க மாட்டார்கள். அதனால் உறுதியாக (RTI) மூலம் தீர்வு காணலாம்.

நான் சில வழக்கறிஞர்களுக்கு வழக்கு விபரங்கள் டைப் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன். மாதத்துக்கு குறைந்தது 5 மனுவாவது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 தயார் செய்து கொடுத்து வருகிறேன். இதுதான் பெஸ்ட் வழி. அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பெறவேண்டிய சில ஆவணங்களை 75 ரூபாய்க்குள் பெற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. (பதிவு அஞ்சல்-சுமாராக 40 ரூபாய், 10 ரூபாய் நீதிமன்றக்கட்டணம், அஞ்சல் உறை, ஜெராக்ஸ் உட்பட. கையால் எழுதாமல் டிடிபி செய்து அனுப்பினால் இன்னொரு 30 அல்லது 40 ரூபாய் செலவுக்கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

Itsdifferent said...

இவங்களுக்கு எல்லாம் எப்படி இரவில் தூக்கம் வரும்? இல்லை அந்த அளவுக்கு மரத்து போய் விட்டதா?
இந்த வங்கி ஊழியர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? அவர்களும் இப்படி அலைந்து தான் தன் வேலைகளை செய்து கொள்கிறார்களா? அதெப்படி, ஒரு சட்டத்தை, ஒவ்வொரு ஊழியரும் ஒரு மாதிரி அமல் படுத்திகிறார்கள்? பிறகு ஒரு வங்கி என்ற அமைப்பு எதற்கு? ஒரு சாதாரண மனிதனால் தன் தேவையை எளிமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு சட்டம் எதற்கு? எல்லாரையும் தீவிரவாதியாக நினைத்து சட்டங்கள் இயற்றபடுகிறதா? யாரோ ஒரு சிறிய கும்பல் செய்யும் பிழைகளுக்காக இப்படி அனைத்து சாதாரண மனிதர்களை நடத்தும் ஒரு அமைப்பு தேவை தானா?
ஒவ்வொருவரும் தான் நினைத்ததுதான் சட்டம் என்றால், அவரவர் செய்யும் செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்து கொண்டால் , சாதாரண மனிதனிக்கு சேவை என்பதெல்லாம் வெறும் கூச்சல் தானா?
நம் நாடு உருப்படுமா?

Bruno said...

கேபிள்

நீங்கள் எழுதியதில் ஏதோ ஒரு விஷயம் தவறு

சில அடிப்படை விஷயங்கள்

1. அந்த பெண்ணின் பெயர் எந்த குடும்ப பதிவேட்டில் உள்ளதோ, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தான் காசோலை தருவார்கள்

2. அடுத்ததாக, காசோலையை இந்த வங்கியில் தான் மாற்ற வேண்டும் என்று யாரும் கூற முடியாது

Easy (EZ) Editorial Calendar said...

உண்மையான பதிவு





நன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

Rajesh V Ravanappan said...

http://cash-india.info/personal-finance/cash-a-cashier%E2%80%99s-check-without-a-bank-account/

moe said...

Saniyankal

shortfilmindia.com said...

@ Bruno-Mascarenhas JMA
டாக்டர்.. அந்தப்பெண் வேளச்சேரியில் இருப்பவள். ஆனால் அவளுக்கு பிரசவம் ஆவதற்கு இங்கே சைதையில் உள்ள மருத்துவமனையில் இருந்துதான் சீட்டு கொடுத்து அனுப்பியுள்ளார்கள். அவர்களிடம்தான் பணம் கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் நேரில் சென்று கேட்ட போது அரகண்டாய் பதில் சொல்லி அலைய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மாநகராட்சியிடம் போய் முறையிடுவோம் என்று நான் போய் பேசியதும் எங்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்தாலும் தருவதாய் சொல்லியிருக்கிறாள்.

shortfilmindia.com said...

@Bruno-Mascarenhas JMA

காசோலையை மாற்ற சொல்ல முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாய் சொன்ன பிறகு தான் அதற்கான சட்டமேயில்லை என்று வாதிட்ட பிறகுதான் செக் தருவதாய் சொல்லியிருக்கிறார்கள்.

பிரபல பதிவர் said...

முதல் முறையாக ஒரு நியாயமான விஷயத்துக்காக போராடுகிறீர்கள்.... வாழ்த்துக்கள்....

sathish77 said...

இதில் வங்கிகளின் தவறு ஒன்றும் இல்லை, உங்க ஏரியாவுல இருக்குற வங்கில தான் நீங்க அக்கௌன்ட் ஓபன் பண்ணனும். சென்னை போன்ற பெருநகரங்களில் நூற்றுக்கணக்கான வங்கி கிளைகள் உள்ள போது அப்படிதான் செயல்பட முடியும். இந்த அலைச்சலுக்கு காரணம் அவங்க கட்டிங் குடுக்காதது தான்.

காவேரிகணேஷ் said...

கேபிள்ஜி,,

எந்த மாநகராச்சியின் மண்டலம், செக் கொடுப்பவரின் பெயர், அலுவலரின் பெயர், கொடுக்கவும்.

செக் வாங்கி தருகிறேன்

யுவகிருஷ்ணா said...

கேபிள், போன வருடம் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. யாருக்கும் எந்த கட்டிங்கும் கொடுக்காமல் உதவிப்பணம் சுலபமான முறையில் கிடைத்தது.

அம்மா ஆட்சியில் பெண்களை ரொம்ப அலையவிடுவதில்லை என்றே நினைக்கிறேன். முதல் மகள் பிறந்தபோது கலைஞர் ஆட்சி. 6000 ரூபாய் வாங்க 6000 செலவு செய்ய வேண்டும்போல தெரிந்ததால், அப்படியே விட்டுவிட்டோம்.

Anonymous said...

www.cablesankaronline.com எனும் தளத்தில் சங்கர நாராயணரின் கமண்டுக்கு வவ்வாலின் பதிவுகள்....கலகலப்பு!!

வவ்வால் said...

சிவகுமார்,

ஏன் ..ஏன் இந்த கொலவெறி...நாங்க என்ன ஜெர்மனிய மொழியிலா பேசிக்கிட்டு இருக்கோம் :-))

முற்போக்கும்,பிற்போக்கும் போகிட்டு இருக்குன்னு அஞ்சா ஸிங்கம் கமெண்டினார் ,சரியாச்சா?

Unknown said...

Cable sir, muthala thakaval ariyum urimai sattam patri oru pathivu poodunga.

Unknown said...

படிக்கும் போதே மனம் கொந்தளிக்கிறது..

பல இடங்களில் இப்படித் தான்!!

naren said...

சார்,
இந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இலஞ்சப் பணம் தராமல், அந்த உதவிப் பணத்தை கண்டிப்பாக தரமாட்டார்கள். அலைச்சல், இலஞ்சம், மற்றும் இதர செலவுகளை விட. உதவி தோகை கேட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும், பேங்க் அக்கவுண்ட் திறக்க சொல்லி சம்பந்தபட்ட வங்கிக்கு கடிதம் எழுதி, நல்ல ஒரு வக்கீலை பார்த்தால், குறைந்த செலவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இரண்டே மாதங்களில் வீட்டுக்கு பணம் வரும்படி செய்துவிடுவார்கள்.

kailash said...

Can some one clarify here about A/c opening process . I have joined an office @ Guindy , My Residence is @ Tambaram , Bank is @ Mount Road . How did they opened the account ?
So Everything is possible , Banks should not refuse a person to open the account if they have id proof , it doesnt need to be local . Even with a id proof in chennai I have opened an account in my native @ Sivagangai . So for corporate or salaried people bankers will do anything where as for labors they will speak 1000 rules