Follow Up - சென்னை மாநகராட்சி
இம்மாதத்தின் இரண்டாம் தேதியன்று தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும் என்கிற தலைப்பில் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு கொடுக்கும் உதவிப் பணம் மறுக்கப்படுகிறது என்றும், அதற்கு காரணம் எந்த ஏரியாவில் மருத்துவ உதவி பெற்றார்களோ அந்த ஏரியாவில் இருக்கும் பேங்கில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும் என்றும் கூறி அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். பேங்குகளோ, ப்ரூப் எல்லாம் கொடுத்தும், அவர்களின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பேங்குகளில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியும் என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தததை பற்றி எழுதியிருந்தேன்.
இதைப் பற்றி எழுதியதோடு இல்லாமல் பேங்கில் போய் எதனால் புதுக் கணக்குகளை அந்தந்த ஏரியாவில் உள்ள பேங்குகளில் மட்டுமே தொடங்கச் சொல்கிறீர்கள்? என்றும், அப்படி புதுக்கணக்கு துவங்கக்கூடாது என்று ஏதாவது ஆர்.பி.ஐ. சட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை. அந்தக் கட்டுரையை சென்னை மாநகராட்சிக்கும், சென்னை மேயரின் இணைய தளத்திலும் பகிர்ந்துவிட்டு, நேரடியாய் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மீண்டும் ஆள் அனுப்பி எப்போது தருவீர்கள் என்று கேட்டோம். ஒரு குறிப்பிட்ட நர்ஸ் லீவில் இருப்பதால் ரெண்டு நாள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் அடுத்த நாளே வேறொரு நபர் குழந்தைப் பெற்ற தாயை தொலைபேசியில் அணுகி, அவர்களே கூப்பிட்டு, பணம் பெற்றுக் கொள்ள டாக்குமெண்டுகளில் கையெழுத்து வாங்கி அப்பெண்ணின் ஏரியாவில் உள்ள வங்கிக்கு மாற்றம் செய்திடுவதாய் உறுதியிட்டு சொல்லி, அதற்கான வேலைகளை செய்தும் கொடுத்துவிட்டார். அப்பெண்ணுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். போன வாரம் வரை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் எப்படி இப்படி நல்லவர்களாய் மாறிப் போனார்கள் என்று. கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு. பதிவையும், மின்னஞ்சலையும் படித்துவிட்டு உடனடியாய் நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு எங்கள் நன்றிகள். இப்படி ஒவ்வொன்றுக்கும் போராடாமல் எல்லோருக்கும் உடனடியாய் உதவித் தொகை கிடைக்கப் பெற்றால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும். ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன்....
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள். இன்று சென்னையில் இரவு வேலை முடித்து வருபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது, தெரு நாய்கள். எங்கள் பகுதியில் ஒரு சிறுவனை நாய் கடித்து, அது மீடியாவில் பெரிய அளவில் வந்ததும், மாநகராட்சி நாய் பிடிப்பதற்கு வண்டி அனுப்பியது. ஆனால் அதில் பெரிய பலன் ஒன்றும் இல்லை. நான் வசிக்கும் பகுதியில் சிறிய சந்துகளிலே மட்டும் 56 நாய்கள் உள்ளன.
ஐ.டி.யில் வேலை செய்பவர்கள் கூட்டமாக வந்து என்னிடம் இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்றார்கள். நான் பத்திரிக்கை துறையில் இருப்பதால், மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு,(சுமார் நான்கு மாதங்கள்) பேசிய பிறகு மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டி வந்து ஆறு நாய்களை பிடித்து சென்றனர்.
விசாரித்ததில் போதிய அளவு நாய் பிடிக்கும் வண்டிகள் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.இவ்வளவு பெரிய மெட்ரோ சிடிக்கு 2 வண்டிகள்தான் உள்ளனவாம். ப்ளு க்ராஸ் தெரு நாய்களை பிடிப்பதில்லை.
1 .. தேவையான அளவு வண்டிகள் வாங்க வேண்டும்.. 2 ..நாய் பிடிக்கும் ஆட்கள் வேலைக்கு எடுக்கவேண்டும்.
இதை மேயர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியுமா?
பாராட்டுகளும் ..நன்றிகளும் சார்
10:33 AM
நாளிதழ்களிலும் இதே கதைதான்... “தனியார் நிறுவனம்” என்று பொதுவாக கூறுகின்றனர். ஏன் ??? விளக்க முடியுமா ? ப்ளீஸ்....
'ஒரே நாளில் பூமியை புரட்டி போடலாம் வா' என்று சொல்லும் அட்ட கத்திகளுக்கு மத்தியில் இது போன்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து தீர்வு காணும் கேபிள்,சுரேகா போன்ற அசல் வாள்களுக்கு வாழ்த்துகள்.
இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
இணையத்தில் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் நன்மை விளைவதை காண்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
Secondly, she can apply for the "Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme (MRMBS)" during the seventh month of pregnancy and avail the monetary benefit(which will be done by ECS only).
Kindly check this below link for the details regarding the scheme.
http://kpmbphc.blogspot.in/2012/01/new-dr-muthulakshmi-reddy-maternity.html