55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
ஒரு மாதத்திற்கு முன் புதியதாய் ஹெச்.பி பிரிண்டர் கம் ஸ்கேனர் ஒன்றை வாங்கினேன். வாங்கிய சில நாட்களிலேயே ப்ரிண்ட் செய்ய கமாண்ட் கொடுத்தவுடன் ப்ரிண்ட் சரசரவென வர வேண்டிய ப்ரிண்டர் திக்கித் திணறி ப்ரிண்ட் செய்தது. நாளாக.. நாளாக பிரிண்ட் கொடுத்தால் அது பிரிண்டாகி வருவதற்கு குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.
ஒரு வேளை சாப்ட்வேர் சரியாக இன்ஸ்டால் ஆகவில்லையோ என்று பிரிண்டரின் சாப்ட்வேரை ரீ இன்ஸ்டால் செய்தாகிவிட்டது. அப்போதும் சரியாகவில்லை. எனக்கு பிரிண்டரை சப்ளை செய்த கம்பெனிக்கு போன் செய்த போது அதன் இன்ஜினியரை அனுப்பவுவதாக சொன்னார். எதற்கும் ஒரு முறை கஸ்டமர் கேருக்கு போன் செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து ஹெச்.பியின் கஸ்டமர் கேருக்கு போன் செய்தேன். மிகப் பொறுமையாய் எனது பெயர், பில் யார் பெயரில் செய்யப்பட்டிருக்கிறது, ப்ராடெக்ட் மாடல் நம்பர், பில் நம்பர், பிரிண்டரின் பின்னால் உள்ள நம்பர் எல்லாவற்றையும் சொன்னேன். அதன் பிறகு பிரச்சனையை கேட்டார். சொன்னேன். சாப்ட்வேர் ரீ இன்ஸ்டால் செய்ததைப் பற்றிச் சொன்னேன். சரி ஆன் லைனிலேயே ரிப்பேர் செய்ய முடியும் என்றும் அவர் சொல்வதை ஒவ்வொன்றாய் செய்யச் சொன்னார்.
பிரிண்டர் சாப்ட்வேரில் இருந்த கமாண்டுகளை சொல்லி அதை க்ளிக் செய்யச் சொன்னார். அலைன் என்று ஒரு பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்யச் சொன்னார். க்ளிக்கினேன் செய்தது. பின்பு ஒரு டெஸ்ட் பேஜ் பிரிண்ட் எடுக்கச் சொன்னார். அதை ஸ்கேன்ரில் வைத்து ஸ்கேன் செக் செய்துவிட்டு, அதில் வந்த டெஸ்ட் ரிப்போர்டுகளை அவர் குறிப்பிட்ட நம்பர்களுக்கு என்ன வந்திருக்கிறது என்று பார்த்து சொல்லச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு விட்டு, உங்கள் பிரிண்டரின் கருப்பு இங்க் அளவு குறைந்திருக்கிறது அதைத்தான் ரிப்போர்ட் சொல்கிறது. எனவே கருப்பு இங்க் கேட்ரிஜ்ஜை உடன் வாங்கிப் போட்டு அலைன் செய்து உபயோகிக்கவும் என்றார். எனக்கு ஒரு பொறி தட்டியது. இங்க் குறைவாய் இருந்தால் அதை எனக்கு காட்டுமே அப்படி ஏதும் காட்ட்வில்லை. அது மட்டுமில்லாமல் இங்கின் அளவு பாதி இருக்கிறது. ப்ரச்சனை இங்கில் இல்லை என்று எனக்கு தெரிகிறது என்றேன்.
அதற்கு அவர் இல்லை இங்கில் தான் பிரச்சனை உடன் புதியது ஆர்டர் செய்து வாங்கி உபயோகப்படுத்துங்கள் என்றார் மீண்டும். எனக்கு நிச்சயம் அந்த பிரச்சனையில்லை என்று புரிந்தது. எதிர்முனையில் மிகச் சாதாரணமாய் என்னை ஏமாற்றுகிறார் என்று தோன்றியது. “சார்.. இங்க் தீர்ந்ததாகவே இருக்கட்டும். ஒரு வேலை இங்க் இல்லையென்றால் பிரிண்ட் வராது. மற்றபடி கலர் இங்கில் இருக்கும் இங்கை வைத்து கருப்பை உருவாக்கிக் கொண்டு பிரிண்ட் செய்ய முடியும். இப்போது என் பிரிண்டரிலிருக்கும் பிரச்சனை ஒரு பக்கத்தை அடிக்க அரை மணி நேரம் ஆகிறது. அதற்கு காரணம் கேட்ரிஜின் ஹெட்லிருந்து கமாண்டை பெற்று இங்க் ஸ்பிரே செய்யாததுதான் அதனால் தான் யோசித்து யோசித்து இங்கை ஸ்ப்ரே செய்யாமல நின்று நின்று பிரிண்ட் செய்கிறது. எனவே கருப்பு காட்ரிஜ்ஜை எடுத்துவிட்டு ஒரு ப்ரிண்ட் எடுத்துப் பார்த்துவிட்டேன். பிரிண்ட் வருகிறது எந்த்விதமான தடையும் இல்லாமல் . ப்ரசனை கருப்பு காட்ரிஜில்தான் அதுவும் அதன் ஹெட்டில் ஏதோ ப்ராப்ளம் இருக்கிறது இதை மாற்றித் தருவீர்களா/ இல்லை மாட்டீர்களா? என்று கேட்ட நிமிடம் ஒரு செகண்ட் என்று ஒரு நிமிடம் போனை ஹேங்கில் போட்டுவிட்டு திரும்ப வந்தவர் உடன் சென்னையில் இருக்கும் ஒரு அட்ரஸைக் கொடுத்துவிட்டு, அங்கே பில், பிரிண்ட் எடுத்த ரிப்போர்ட், காட்ரிஜ் மற்றும் கம்ப்ளெயிண்ட் நம்பரை கொண்டு கொடுத்தால் அவர்கள் டெஸ்ட் செய்து சரியில்லை என்றால் வேறு ஒரு காட்ரிஜ்ஜை கொடுத்துவிடுவார்கள் என்றார்.
உடன் எனக்கு பிரிண்டரை சப்ளை செய்த கம்பெனிக்கு போன் செய்தேன். ப்ரிண்டரை இன்ஸ்டால் செய்யும் போதே எல்லாவற்றையும் செக் செய்யாமல் விட்டதால்தான் இவ்வளவு ப்ரச்சனை என்றும் அதனால் இந்த கேட்ரிஜ்ஜை கொடுத்து செக் செய்து மீண்டும் புதிய காட்ரிஜ்ஜை வாங்கி வருவது அவர்கள் பொறுப்பு என்று சொல்லி கேட்ரிஜ்ஜையும் மற்ற டாக்குமெண்டுகளையும் கொடுத்து அனுப்பினேன். அவர்கள் மீண்டும் மீண்டும் அவர்கள் வேறு தருகிறேன் என்று சொன்னார்களா? சொன்னார்களா? என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மறுநாள் கேட்ரிஜ் செக் செய்து வேறு ஒரு புதிய கேட்ரிஜ்ஜை வாங்கிக் கொள்ளூம் படி சொல்லி போன் வந்தது. சப்ளையரே வாங்கி வந்துவிட்டார். இப்போது பிரிண்டர் அருமையாய் வேலை செய்கிறது. சப்ளையர் எனக்கு தெரிந்து முதல் முறையாய் ஒரு கஸ்டமர் போன் மூலமே கம்ப்ளெயிண்ட் செய்து புதிய காட்ரிஜ் வாங்கியது நான் தானென்றும் எப்படிங்க? என்று ஆச்சர்யத்தோடு கேட்டவரிடம் சொன்னேன், கேட்டால் கிடைக்குமென்று..
கேபிள் சங்கர்
Post a Comment
19 comments:
வணக்கம் தல..கேட்டால் கிடைக்கும்....நல்ல பதிவு..
புதிதாக வாங்குற பிரிண்டர் அது இன்க் ஜெட் ஆக இருந்தால் எப்பவும் கருப்பு காட்ரிட்ஜ் இல் இன்க் குறைவாக தான் இருக்கும்.காரணம் பிரிண்டர் விலை குறைவாக இருக்கும்.அதனால் இன்க் குறைவாக இருக்கிற காட்ரிஜ் தான் தருவார்கள்.பத்து இருவது பிரிண்ட் எடுத்த வுடன் தீந்து போகும்.மீண்டும் நாம் ரி பில் பண்ணனும் இல்லை எனில் புதிதாக வாங்கணும்.அதனால் தான் ஆனால் மெய்ன்டேனன்ஸ் சார்ஜ் அதிகமா இருக்கிறது இந்த வகை பிரிண்டர் களில்..ஒரு பேஜ் எடுக்க விலை அதிகமாக ஆகும்.இதுவே லேசர் பிரிண்டர் எனில் விலை அதிகம்.மெய்ன்டேனன்ஸ் சார்ஜ் குறைவு..கிட்ட தட்ட 1000 கும் மேல் பிரிண்ட் எடுக்கலாம்.இன்க் உலர்ந்தும் போகாது...
என்ன...கலர் பிரிண்ட் எடுக்க முடியாது லேசர் பிரிண்டர் களில்...
பிரிண்டரை விட ரீபிளுக்கு அதிகம் செலவு செய்யனும். அப்புரம் ஏதாவது பார்ட்ஸ் போனா பிரிண்டரை ரிப்பேர் எல்லாம் செய்யமுடியாது தூக்கி போட்டுர வேண்டியதுதான். இந்தியன் டெக்னாலஜி கிடையாது.
பேனா விலைகுறைவு இங்க் விலை ஜாஸ்தி என்கிற கதைதான்.
கேபிள்ஜி,
நல்ல முயற்சி,பெரும்பாலும் விற்பனையாளர்கள் தான் இதனை சரி செய்து தரவேண்டும் ஆனால் அவர்கள் நம்மை நேரடியாக கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்கு அனுப்பிவிடுவார்கள். நீங்கள் விற்பனையாளர் மூலமே முடித்தது நல்ல காரியம்.
இதில் நீங்கள் கவனிக்க தவறிய ஒன்றினைக்கூற விரும்புகிறேன்.
HP பிரிண்டர் இங்க் கேட்ரிஜ்ஜில் பிரிண்டர் ஹெட் அல்லது ஹெட் என்ற சமாச்சாரமே இருக்காது, அதில் ஒரு நாசில் மட்டுமே இருக்கும்.
சில பிராண்ட் இங்க் கேட்ரிஜ்ஜில் மட்டுமே ஹெட்டும் இருக்கும்.உ.ம்: லெக்ஸ்மார்க் இங்க் ஜெட் கேட்ரிஜ்ஜில் ஹெட் இணைந்து இருக்கும்டெனக்கு தெரிந்து ஹெச்பியில் அப்படி இல்லை.
கருப்பு இங்க் கேட்ரிஜ் பிரச்சினை என்பதை விட அதன் பிரிண்டர் ஹெட் ,மெசினில் இருக்கும் அதில் தான் பிரச்சினை இருக்கலாம்.
அதாவது பாதி இங்க் இருக்கும் சூழலில் ஹெட் வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்(அல்லது கேட்ரிஜ் கட்டித்தட்டி போயிருக்கலாம்), எனவே புதிய கேட்ரிஜ்ஜிலும் பாதி இங்க் இருக்கும் போது மீண்டும் பிரச்சினை வரலாம்.
எனவே நீங்கள் முழு பிரிண்டரும் கொடுத்து சரி செய்ய சொல்லி இருக்கவேண்டும், பிரிண்டர் ஹெட்டினை செக் செய்து பார்த்திருப்பார்கள்.அடுத்த முறை மீண்டும் பிரச்சினை வந்தால் முழுவதும் கொடுத்து சரிப்பார்க்க சொல்லுங்கள்.
பிரிண்ட் கியூவில் முன்னர் பிரிண்ட் கொடுத்து எடுக்காமல் நிறைய கேன்சல் ஆனவை வரிசையாக நிற்கிறதா என்பதையும் அவ்வப்போது பார்க்கவும், அப்படி நின்றாலும் பிரிண்ட் எடுக்க நேரமாகும்.
ஒரு கேட்ரிஜ்ஜில் 250-300 பக்கங்கள் தான் எடுக்க வரும், எக்கனாமி மோட்டில் வைத்து லைட்டாக எடுத்தால் 500 பக்கங்கள் வரலாம்.
ஒரு இங்க்ஜெட் பிரிண்டரின் லைப்சைக்கிள் 2000 பக்கங்கள் அளவில் இருந்து ஆரம்பிக்கும் இது வாங்கிய மாடலை பொறுத்து ,விலையைப்பொறுத்து மாறும்.
மீண்டும் பாதி இங்கில் பிரிண்டர் வேலை செய்யவில்லை எனில் வாரண்டி இருக்கும் போதே பிரிண்டர் ஹெட்டினையும் சேர்த்து சரி பார்த்துவிடுங்கள்.
மேலும் பாண்ட் பேப்பர், சொரசொரப்பான ஆர்ட் காகிதங்கள் என அடிக்கடி கொடுத்து பிரிண்ட் செய்தால் பிரிண்ட் ஹெட் சீக்கிரம் வீணாகிவிடும்.
----------
லேசர்ஜெட் கலர் பிரிண்டர் இருக்கிறது விலைக்கூட வரும், குறைந்தது 15-20 ஆயிரம் வரும் என நினைக்கிறேன்.
ஜெர்மன் இங்க் ரெஃபில் என மூலைக்கு மூலை இருக்கும் கடையில் கேட்ரிட்ஜ் ரிஃபில் செய்தால் மொத்த வாரண்டியும் போய்விடும் :-))
அனுபவத்தில் ஒரு தத்துவம்
"கேட்டால் கிடைக்கும் "
அருமை
Sorry to type in English. I don't know how to type in Tamil. I bought a Samsung laser printer model no ML 1666 last year for Rs 8800/= sri lankan currency. It is good for home use.
unmaiyil ithu pol marupadiyum nam poraddathinal kidaikkum pothu nam manathukku kidaikkum sugame thani..i accept ur thought thalaivare.
அனுபவப் பதிவு! அவசியமான பதிவு! நன்றி!
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
Am sharing this as i got inspired through KETAAL KIDAIKUM ..and get a nice exp from Mahindra Navistar
Last month my uncle bought a 1 unit Load King from Mahindra , Dealer SJB motors coimbatore , SJB motors just do a temp registartion over there in coimbatore , and send the vehicle for use , they promised to under take the registration , But after a period of one month there was no sign of action regarding registration , After a several calls from SJB , they came registered the vehicle any how since 1 month has passed my uncle paid sum of 2500 as penalty fee,
After 10 day he doesn't received registration book , Also we noticed we are missing tool kits too . Then we go to SJB motors Coimbatore , There was no proper answer from them , they said tool kit was delivered along with the vehicle , Finally they said registration book will be delivered in 2 days but no chance for refunding 2500 and tool kit . Also they said you can go ahead and do what ever you can ...
At last I just a send a mail to Mahindra Navister customer support along with a CC SJB motors. The very next day i got a cal from Mahindra , and Members from SJB along with a guy from mahindra came to my native village near dharapuram deliver the registration book, toolkit, penalty fee 2500 .. and they ask me to send a mail again to mahindra says ISSUE resolved so and so
Thanks for KETAAL KIDAIKUM
பிளாக்பியர்ல்,
நீங்கள் சொல்வது உண்மையான சம்பவமா?
#வாகனம் டெலிவரி எடுக்கும் போதே என்னென்ன கொடுத்தார்கள் என செக் லிஸ்ட் போட்டு அதில் கொடுத்த அக்சசரியினை பட்டியலிட்டு டிக் செய்து கையொப்பம் பெற்றுவிடுவார்கள்.அப்போதே பட்டியலில் உள்ளது இருக்கிறதா என சரிப்பாத்துக்கொள்ல சொல்வார்கள்.
நாங்கள் கார் வாங்கியபோது இரண்டு ஸ்பேர்பல்புகள் உட்பட காட்டி கையொப்பம் வாங்கிக்கொண்டார்கள்.
# தற்காலிக ரெஜிஸ்ட்ரேஷன் என்பது ஒரு மாதம் வரைக்கும் செல்லும் எனவே பெனால்டி எல்லாம் தேவை இல்லை.
மேலும் ரெஜிஸ்டர் செய்ய வண்டியை ஆர்டிஓ ஆபிசுக்கு எடுத்து செல்லவேண்டும் வீட்டில் எல்லாம் வந்து ரெஜிஸ்டர் செய்து தரமாட்டார்கள்.
#ரெஜிஸ்டர் செய்த பின் ஆர்.சி புக் வீட்டிற்கே கொரியரில் வந்துவிடும், அதன் பின்னர் இன்சுரன்ஸ் வரும்.
நீங்கள் சொல்லி இருப்பது போல வாகன விற்பனையாளர்கள் செய்யத்தேவையில்லை,முடியாது. எப்படி ஆர்.டீ.ஓ அலுவலகத்தினர் வீட்டிற்கு வந்து ரெஜிஸ்டர் செய்தார் என சொல்கிறீர்கள்?
அந்த ஒரு மாதம் என்பது அதற்குள் நிரந்த எண் போட்டு ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்.டி,ஓ,அலுவலகம் வர சொல்வார்கள், சில இடத்தில் இரண்டு நாளில் நிரந்த எண் போட்டு தரவும் செய்வார்கள்.
ஹீண்டாய் கார் வாங்கினால் 2-3 நாளில் நிரந்தர எண் போட்டுத்தருவார்கள், இது டீலர் மற்றும் பிராண்ட் பொறுத்து மாறும்.
yes its true incident ,
They got the delivery slip signature , but my uncle haven't noticed the missing toolkit.
Since we had no Mahindra dealer in our town , they made a temp registration in cbe and send the vehicle, and as it needs permit endorsement for blue metal dealer should do the both Temp and permanent registration. They promised to do the permanent registration in a week but they haven't contacted us for 20 days after we called several times they finally registered the vehicle after 35 days from date of temp registration .
Here am pasting the mail conversations..
---------- Forwarded message ----------
From: Maheshwaran Deveraj
Date: Fri, Aug 17, 2012 at 1:01 PM
Subject: Re: Bad Customer support -SJB motors Coimbatore
To: mis@sjbmotors.com, icresales.cbe@sjbmotors.com, manager.cbe@sjbmotors.com
Hi,
Thanks for the fast and great support, Am really much satisfied about the action taken by Mahindra and SJB ,
I received my Tool Kits yesterday , MR. Narayanan from Mahindra and SJB peoples come over here to my place and deliver me the tool kits , Penalty fine amount which paid for late registration.
Now am much satisfied about the Mahindra & SJB service.
Thanks for Mahindra Navistar & SJB motors
On Mon, Aug 13, 2012 at 12:32 PM, Maheshwaran Deveraj wrote:
---------- Forwarded message ----------
From: Maheshwaran Deveraj
Date: Mon, Aug 13, 2012 at 12:28 PM
Subject: RE: Bad Customer support -SJB motors Coimbatore
To: contactmnal@mahindranavistar.com
Hi ,
I had a very bad experience with Mahindra Navister , Load king vehicle , Which I bought through "SJB Motors, Malumichampatti , Coimbatore".
They said they will take care of the registration , and gave me the TEMP registered vehicle for one month and at last I paid around 2500 as penalty due to late registration , Where SJB motors delayed me for registration , I called several times and then they registered my vehicle.
I received the registration book 45 days after registration , That too after a big fight with them,
I haven't received the tool kit, that come with the vehicle, Now they are asking money for the tools
My vehicle Chasis No: Ma1gd2btdc3c13006
--
Regards,
Mahesh
--
Regards,
Mahesh
--
Regards,
Mahesh
--
Regards,
Mahesh
பிளாக் பியர்ல்,
விளக்கத்திற்கு நன்றி1!
நீங்கள் கொடுத்த மெயில்ப்படிப்பார்த்தால் எல்லாம் சரியாகவே போய் இருக்கிறது.
டூல் கிட் மட்டுமே பிரச்சினை ஆகி இருக்கிறது, அதனை நாம் வாங்கும் போது செக் லிஸ்ட்டில் கையெழுத்து போடும் முன் கேட்டு இருந்தால் சரி ஆகி இருக்கும். மேலும் அவர்கள் பணம் கேட்டது டூல் கிட்டிற்கு என மெயிலில் உள்ளது.
வீட்டுக்கு வந்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்தார்களா? இல்லையா என கூறவில்லை.
நீங்கள் சொன்னதை வைத்துப்பார்த்தால்,
டெம்ப் ரெஜிஸ்ட்ரேஷன் போட்ட அன்றே உங்கள் வாகனத்திற்கு ஆர்டீஓ ஆபிசில் பெர்மனன்ட் ரெஜிஸ்ட்ரேஷனுக்கும் வேலை செய்து இருக்கலாம்.இல்லை எனில் ஆர்.டீ.ஓ அலுவலகத்திற்கு வாகனம் எடுத்து சென்று சேசிஸ் எண்ணை பென்சிலால் தேய்த்து எடுத்து எண் எல்லாம் பதிவு செய்யாமல் ரெஜிஸ்டர் செய்யமாட்டார்கள்.
35 நாட்கள் என்பது பொதுவாக மெதுவாக பேப்பர் மூவ் செய்தால் ஆக கூடிய கால தாமதமே. நீங்கள் கமெர்சியல் பயன்ப்பாட்டிற்கு வாகனம் வாங்கியிருப்பதால் காலதாமதம் பொறுக்க முடியாமல் போயிருக்கலாம்.
ஆனால் ஆர்.சி புக் வருவதற்கு முன்னரே பெர்மனன்ட் நம்பர் கொடுத்து விடுவார்கள், அதை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கலாம்.
நீங்கள் சொன்ன இதே கால அளவு டாடா வாகனம் வாங்கும் போது நடக்கிறது, ஆனால் எல்லாம் தானாகவே முடிந்துவிடும்.
எந்த டீலரிடம் வாங்கினாலும் நன்றாக அடித்துப்பேச வேண்டும், நான் விலையே குறைத்தேன் வெறும் 2500 ரூ தான் என்றாலும் பேசியபின் தானே குறைக்கிறான், 20 லிட்டர் டீசல், (ஃபோர்டு கார் வாஙினால் அவனாக டீசல் போட்டுத்தருகிறான்)ஃப்ளோர் மேட் எல்லாம் பேசித்தான் வாங்கினேன்.கார் சீட் கவரும் ஓசியில் கேட்டுப்பார்த்தேன் கொடுக்கவில்லை :-))
வீட்டுக்கு வந்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவில்லை ,நான் அப்படி செய்து தர கேக்கவும் இல்லை, தாராபுரம் RTO ஆபீசில் வந்து அவர்களே செய்து கொடுக்க வேண்டிய வேலை இது, மேலும் நாங்களே registartion செய்து தருவோம் என்று அதற்கான ரோடு டாக்ஸ் fee மற்றும் பெர்மிட் fee இரண்டையும் வாங்கிவிட்டார்கள் . பின் நாங்கள் எப்படி register செய்ய முடியும் .
மேலும் registeration புக் கிடைக்க அதிக பட்சம் ஒரு வாரம் ஆகலாம் , இவர்கள் அதையும் மிக பெரிய சண்டை போட்டு தான் இரண்டு வாரத்திற்கு பிறகு தந்தார்கள் , [Later I came to know some middle man in SJB delayed the payment for the broker,Since broker put his own money around 35k, so he delayed the whole things]
வவ்வால் ஐயா, ஏன்? (பதிவரை விட நீங்க அதிகமாக எழுதறீங்க :-)) எதற்கு? (எதுக்கு இந்தக் கொலைவெறி?) எப்படி? (எப்படி இது முடியுது?)
பிளாக் பியர்ல்,
நீங்க ஃபைனான்ஸ்சில் வாங்கி இருப்பீங்க போல ,அப்போ இப்படி டிலே ஆவது சகஜம் தான், நீங்க எதையும் முழுசா சொல்லாமல் ஒன்னு ஒன்னா சொல்லுங்க, சரி விடுங்க, வண்டி பிரச்சினை முடிஞ்சுதா ஓ.கே.
---------
தமிழ் பையன்,
அப்போ நாங்க எல்லாம் மலையாள பையனாங்க?
பின்னூட்டம் தான் படிச்சமா போட்டோமானு இருக்கும், பதிவே அதனால் தான் கொஞ்சமா எழுதுறேன் :-))
நான் நினைச்சா அதை சொல்லாமல் போவது இல்லை, சண்டையா இருந்தாலும் சரி சமாதானமா இருந்தாலும் சரி... பேசிடுறது :-))
இந்த ஃப்ராடு ரொம்ப வருஷமாய் நடக்கிறது. ப்ரிண்டரை விட கார்ட்ரிட்ஜில் லாபம் அதிகம்.
Post a Comment