Thottal Thodarum

Aug 10, 2012

Julayi

அல்லு அர்ஜுன், இலியானா, த்ரிவிக்ரம், தேவி ஸ்ரீ ப்ரசாத், என்று மெகா டீம். ஏற்கனவே ட்ரைலரும், பாடல்களும் ஹிட்டடித்திருக்க, அல்லு அர்ஜுனின் திருமணத்திற்கு பிறகு வரும் படம். இப்படி பல எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டிருந்த படம்.



அல்லு அர்ஜுன் ஒரு புத்திசாலியான மிடில் க்ளாஸ் இளைஞன். சீக்கிரம் பணம் சம்பாதிப்பதுதான் சிறந்தது என்று சொல்லிக் கொண்டிருப்பவன். பிட்டு என்பவன் ஒரு ஹைஃபை கொள்ளைக்காரன். பேங்கிலிருந்து 1500 கோடியை திருட ப்ளான் செய்துக் கொண்டிருப்பவன். மிகப்பெரிய கேங்ஸ்டர்.இவர்கள் இருவரும் ஒரு நாள் சந்திக்க நேருகிறது. அந்த சந்திப்பினால் பிட்டு பேங்கில் கொள்ளையடித்த 1500 கோடி ரூபாயை போலீஸிடம் சிக்கிக் கொள்ள அல்லு அர்ஜுன் காரணமாகிறார்.  அந்த களேபரத்தில் பிட்டு கைது செய்யப்பட, அவனது உயிருக்கு உயிரான தம்பி கொல்லப்படுகிறான். தன் தம்பியின் கொலைக்கும், கொள்ளையடித்த பணம் போலீஸிடம் மாட்டி அது எரிந்து போனதாலும்,  இவ்வளவு இழப்புக்கும் காரணமான அல்லு அர்ஜுனை போட்டு தள்ள துடிக்கிறான் பிட்டு. பிட்டுவை அல்லு அர்ஜுன் எப்படி எதிர் கொண்டார் என்பதுதான் கதை.
அல்லு அர்ஜுனுக்கு லாவகமான கதை. பரபரவென இளமை துள்ளும், சீக்கிரம் பணம் சம்பாதிக்க துடிக்கும் இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். முக்கியமாய் நடனமாடும் காட்சிகள் அவ்வளவு ஈஸியாய் ஆடுகிறார். கிரேஸுடன். ஆக்‌ஷன் காட்சிகளில் கேட்கவே வேண்டாம் படு சுறுசுறுப்பு. காதல் காட்சிகளில் இவரிடம் தெரியும் இளமை ஹீரோயினிடம் இல்லாதது இருப்பதால் கிடைக்க வேண்டிய சுவாரஸ்யம் குறைவே. ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் இளைஞன் மிக சாதாரணமாய் துப்பாக்கியை கையாளுகிறான்? போலீஸ் எப்படி இவர் சொல்வதை எல்லாம் கேட்கிறது? என்பது போன்ற லாஜிக்கல் கேள்விகளையெல்லாம் கேட்காமல் இருந்தால் நல்லது.

இலியானாவின் உடுக்கை இடுப்பு மேலும் மெலிந்திருக்கிறது. கார்டூனில் வரும் அணில் போலிருக்கிறார்.  படம் நெடுக அல்லு அர்ஜுன் அவரது உடலைப் பற்றி கிண்டலடித்திருக்கிறார். மற்றபடி இலியானாவின் நடிப்பு பற்றி சிலாகிக்க பெரிதாய் ஏதுமில்லை.
ராஜேந்திர பிரசாத், தணிகல பரணி, பிரகதி ஆகியோர் வழக்கம் போல சிறப்பாக செய்திருக்கிறார்கள். ராஜேந்திர பிரசாத் போலீஸ் ஆபீசரானாலும் காமெடி போலீஸாய் வலம் வரும் காட்சிகளும்,  களைமேக்ஸ் காட்சிகளிலும் சிரிப்பு மூட்டுகிறார். என்ன படத்தில் ஹீரோயினை விட அதிக மேக்கப்பில் வலம் வருபவர் இவர் ஒருத்தர் தான்.  ப்ரம்மானந்தம் வழக்கம் போல் நச். குறைவான காட்சிகளில் வந்தாலும், செயின் ராபரி செய்து மாட்டுமிடம் சிரிக்காமல் இருக்க முடியாது. வில்லன் பிட்டுவாக சோனு சூட். ஆரம்பக் காட்சிகளில் அட போட வைக்கிற வில்லனாய் காட்டபடுகிறவர் க்ளைமாக்ஸில் காமெடி பீசாய் காட்டி அவ்வளவு நேரம் கொடுத்த பில்டப்பை கெடுத்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் விதமாய் இருக்கிறது. முக்கியமாய் “ஓ மது” என்ற பாடலும் எடுத்தவிதமும் க்யூட். சோட்டா நாயுடு ப்ரதர்ஸின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் ப்ரவீன் புடியின் எடிட்டிங் பல இடங்களில் செம பாஸ்ட் அதுவும் அந்த பேங்க் கொள்ளைக் காட்சிகள் படு ஸ்லீக்.
எழுதி இயக்கியவர் த்ரிவிக்ரம். இவரின் முந்தைய படங்கள் போலவே ஸ்டைலிஷான மேக்கிங், பரபர திரைக்கதை என்று  படம் ஆரம்பித்தாலும், இரண்டாவது பாதியில் ஹீரோவுக்கும், வில்லனுக்குமான மோதல் சுவாரஸ்யமில்லாமல் போய்விடுவதால் ஆர்வம் குறைந்துவிடுகிறது.  ஹீரோ என்ன செய்வான் என்று வில்லனும், வில்லன் என்ன செய்வான் என்று ஹீரோவும் மாற்றி மாற்றி யோசிப்பது, அந்த ஓப்பனிங் பேங்க் கொள்ளை, போன்றவை இண்ட்ரஸ்டிங். ஆனால் ஹீரோ எப்படி இவ்வளவு புத்திசாலியாய் இருக்கிறார்? ஹிரோவுக்கும் வில்லனுக்குமான மைண்ட் கேம்  எப்படி சாத்தியம்? அந்த வாய் பேச முடியாத கேக்ஸ்டர் பெண் கேரக்டர் வைத்து ஏதோ செய்யப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றுக்குமில்லாமல்  போக வைத்து ஏன்? என்பது போன்ற பல கேள்விகள் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வழக்கம் போல வசனங்களில் பல இடங்களில் நச்சென அடித்திருக்கிறார். “க்ளாஸுல யார் வேணா பதில் சொல்லிடலாம் ஆனா எக்ஸாமில கரெக்டா எழுதுறவன் தான் டாப்பர்” என்று ஒரு வசனம் வருகிறது. இப்படத்தின் திரைக்கதை எக்ஸாமில் சுமாராய் எழுதியதால் டாப்பராக முடியாமல் ஜஸ்ட் பாஸாகியிருக்கிறார் த்ரிவிக்ரம்.


Post a Comment

7 comments:

Hemanth said...

நானும் படம் பாத்தேன் நல்ல இருன்தது

முட்டாப்பையன் said...

தொங்குரவனை கூப்பிட்டா வர மாட்டாராம்.
நீங்க கமெண்ட் மட்டருத்தலை எடுத்தால்தால் வருவாராம் .
கூட நீங்களும் வரணுமாம்.

வாங்களேன் எங்க தளத்துக்கு.

Unknown said...

enna sir yerum comment podalia kavalia vidunga athan naan irukkiran

Sivaraman said...

கார்டூனில் வரும் அணில் போலிருக்கிறார். --> Gud ONE ...

Sivaraman said...

Watched premiere Show in San Diego, OK entertainer ...

வவ்வால் said...

கேபிள்ஜி,

அருமையான விமர்சனம் , அச்சு அடித்தார் போன்ற எழுத்து , மேலும் இலியான இடுப்பு சின்னதாக இருப்பதை குறிப்பிட்டதை மிகவும் ரசித்தேன்.

ஜூலாயி என்றால் என்ன ? பொருள் கூறி இருக்கலாம் என்னை போன்ற முட்டாளுக்கு அது என்னவோ கெட்ட வார்த்தை போல தெரிகிறது.

Raj said...

Entha telunganum tamil padathai paratrathillai. Ingathan ellam kenaigal!!!!!