சேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள். இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின் முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண...