பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பெரியாரின் நேரடி புத்திரர்கள் போல வரிந்து கட்டிக் கொண்டு திட்டி எழுதி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை. எல்லா ஜாதிகளுக்கான வெறியையும் தான் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்றும், முற்போக்கு, மற்றும் இடைநிலை என்கிற பெயரில் உலாவரும் ஜாதி வெறியர்களை பற்றித்தான் அந்தக் கார்டூனில் கிண்டலடித்திருந்தார். அவர் ஏதும் தவறாய் சொல்லியிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்காக மீண்டும் அக்கார்ட்டூனை விளக்கமாக போட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு வந்துவிட்டது. கார்டூனுக்கெல்லாம் விளக்கவுரை போட்டு சொல்லணும் போலருக்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ட்ராபிக் ஜாம்
அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் போக்குவரத்தை தடை செய்திருக்கிறார்கள். அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். மேம்பாலத்தின் மேல் மூன்று போலீஸ் வேன்களை வரிசையாய் நிற்க வைத்து அண்ணாசாலையிலிருந்து தேனாம்பேட்டைக்கு போகும் வழியை ட்ராபிக்ஜாம் ஆக்கி வருகிற இந்த போலீஸாரை என்ன சொல்ல, இரண்டு பஸ்கள் மட்டுமே போகக்கூடிய வழியை ஒரு பஸ் போகும் வழியாய் இந்த வேன்கள் ஆக்க, பாட்டில் நெக் போல அகண்ட ரோட்டிலிருந்து பிரிட்ஜுக்கு கீழேயும் போக முடியாமல் மேலே ஒரு வண்டி மட்டுமே போகும் வழிக்கு நெருக்குவதால் போக்குவரத்து எப்போதுமே ஜாமாகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்தும் போலீஸார் அவ்வண்டிகளை எடுக்காமல் இருப்பது மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன? என்ற அலட்சியம் என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மின்வெட்டு
மீண்டும் மின்வெட்டில் இருண்டு கிடக்கிறது தமிழகம். நேற்று என் ஏரியாவில் கேபிள் எரிந்து போனதால் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரை மின்சாரம் இல்லை. எங்கள் தெருவே அல்லோலகல்லோலப் பட்டுவிட்டது. ஒரு நாளைக்கே இப்படி என்றால் மற்ற ஊர்களில் மின்சாரமே இல்லாமல் நொந்து போய்க் கொண்டிருப்பவர்களை பற்றி சிந்தித்துப் பார்த்தால் அழுகையே வருகிறது. இனி அரசை எதிர்பார்த்துக் கொண்டிராமல் அவரவர் வசதிக்கு இன்வெர்ட்டரோ, அல்லது சூரிய ஒளியை உபயோகித்தோ அவரவர் வீடுகளுக்கு வேண்டிய மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளத்தான் வேண்டும் போலிருக்கிறது. என் நண்பர் ஒருவர் அவரின் வீட்டின் மொட்டை மாடியில் மினி காற்றாலையை நிறுவி அவரின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார். நல்ல ஐடியா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பீட்ஸா
பீட்சா படத்தின் டீசரைப் பார்த்ததுமே எனக்கு பிடித்தது. படத்தின் பாடல் வெளியீட்டன்று புதிய ட்ரைலரைப் போட்டார்கள். பார்த்த மாத்திரத்தில் தியேட்டருக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய்விடக்கூடிய ஆகர்ஷண சக்தி இந்த ட்ரைலருக்கு இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசையும் ஆர்வத்தை தூண்டுகிறது. வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்பாராஜ்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தேவையில்லாமல் எதற்காக டிராபிக்கை நிறுத்தி வைக்கிறீர்கள்? என்று கேட்டதற்காக நட்ட நடு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சிக்காரர்கள் ஒரு தனிமனிதனை அடித்து உதைத்திருக்கிறார்கள். அதுவும் பத்திரிக்கையாளர்கள், போலீஸார் முன்பு. இவ்விஷயம் பத்திரிக்கைகளில் வந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் வி.சி.க்ட்சி தலைவர் திருமாவின் தனிச் செயலாளர் சேகுவாரா கைது செய்யப்பட்டு புழலில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவங்க கும்பல் எப்பவுமே இப்படித்தான். ரோட்டில் இறங்கிவிட்டால் எல்லாமே அவனுங்க இஷ்டம் போல ஆடுவானுங்க.. ஏற்கனவே ஒரு முறை இவர்கள் கட்சி மாநாடு நடத்திய அன்று ஏற்பட்ட அனுபவத்தை இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வர வர டைம்ஸ் ஆப் இண்டியாவின் விமர்சனம் படு மொக்கையாய் வர ஆரம்பித்துவிட்டது.
சுந்தரபாண்டியன் ஒரு தேவரீனியப் படம்
தமிழ்நாட்டில் பாரத் பந்த் பாதிப்பு ஏதுமில்லையாம். ஒரு வேளை இந்தியில் அழைப்பு விடுத்ததாலோ? இல்லை நமக்கு பாதிப்பே இல்லையா?
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கனமே. காதல் அதை பொறுக்கணுமே இல்லையென்றால் கட்டி வைத்து உதைக்கணுமே. நா.முத்துகுமார்.
சமயங்களில் அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையை வைத்துப் பார்க்கும் போது நாம் பொதுவாய் நினைப்பது சரிதான் என்று தோன்றுகிறது.
ஹீரோயின் படத்தில் ஆண்களை விட பெண்களே பெரும்பாலும் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள் - அவதானிப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புத்தகக் கண்காட்சி
மயிலாடுதுறையில் புத்தகக் கண்காட்சி வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. என்னுடய லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களுடன் மேலும் பல சிறந்த புத்தகங்கள் நமது டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் கிடைக்கிறது. ஸ்டால் நெ.1.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை

சாப்பாட்டுக்கடை பதிவுகளின் ரீச் எனக்கு எவ்வளவு என்று என்னுடன் வரும் நண்பர்களுக்கு தெரியும். ஏனென்றால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நான்கைந்து போனாவது இந்த ஏரியாவில இருக்கேன் இங்க நல்ல சாப்பாட்டுக்கடையைப் பத்தி சொல்லுங்க என்று கேட்கும் போன் வராமல் இருந்ததில்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்காகவே ஒரு குழுமத்தை ஃபேஸ்புக்கில் ஆரம்பித்திருக்கிறேன். சாப்பாடு, மற்றும் சாப்பாட்டிற்காகவே விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொண்டு மேலும் பல புதிய சாப்பாட்டுக்கடைகளை அறிமுகப்படுத்தவும், புதிய கடைகளை தெரிந்து கொள்ளவும், சாப்பாட்டைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பறிமாறிக் கொள்ள இக்குழு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
”ஒரு நாள்” என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்திருந்தார் அதன் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. கலைஞர் டிவியில் பணி புரிந்து கொண்டிருப்பவர், பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவரும் கூட. ஒளிப்பதிவாளர்கள் சக்தி சரவணன், வேல்ராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு நாள் சஞ்சலத்தின் காரணமாய் நடந்த தவறினால் எங்கே தன் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று பயந்து தன்னை டெஸ்டுக்கு உட்படுத்திக் கொள்ள பயப்படும் இளைஞனின் வாழ்க்கையை பத்து நிமிடத்தில் காட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸ் சுவாரஸ்யம். ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லும் இப்படத்தில் கூடவே இல்லாவிட்டால் அட்லீஸ்ட் பாதுகாப்பாகவாவது இருந்து கொள்ளுங்கள் என்பதை சேர்த்திருக்கலாம். ஒளிப்பதிவு லைட்டில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறது.பின்னணியிசை ஓகே. மற்றபடி நீட்டான படம்.வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி. என்னைக்கு இந்த ஏவிஎம் ப்ரிவியூ தியேட்டரில் ஒரே முறையில் ஒழுங்காக படத்தை ஒளிபரப்புவார்கள்?. பாவம் இந்த இளம் குறும்பட இயக்குனர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
சமீப காலமாய் என்னையும், சுரேகாவையும் சந்திப்பவர்களில் பலர் கேட்டால் கிடைக்கும் குழுவின் செயல்பாட்டையும், அச்செயல்பாட்டினால் தாங்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை கேட்டுப் பெற ஆரம்பித்துவிட்டோம் என்று சொல்லும் போது நானும், சுரேகாவும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இதை இதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை கேட்டுப் பெற முடியும் என்கிற நம்பிக்கையை விதைப்பதே எங்களது ஆசை. விரைவில் கேட்டால் கிடைக்கும் குழுமத்தின் உறுப்பினர்களைக் கூட்டி மேலும் சில ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய வேண்டி சந்திக்கலாம் என்றிருக்கிறோம். தொடரும் உங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ரட்சகன் படத்தில் வரும் ரஹ்மானின் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்ரீனிவாசின் அற்புதமான குரலில் காதலியை கையில் தாங்கி கொண்டு மாடிக்குப் போகும் சுகத்தை அருமையான வரிகளில் தந்திருப்பார் வைரமுத்து. இதே பாட்டை வழக்கம் போல் நம் ஹாரிஸ் ஜெயராஜும் தன் பங்கிற்கு மீண்டும் ரீமேக்கியிருப்பார் தாம்தூமில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
a woman is sitting at home when she suddenly hears a knock on the door,she goes to open the door only to find a man standing there..
கேபிள் சங்கர்
Post a Comment
21 comments:
அமெரிக்க தூதரகthai tiruchi or madurai or karaikudiku maathunga.. traffic jam,security can be handled easily. it will be convenient for rest of non-madras tamilnadu..:)
சரியாகச் சொன்னிர்கள் அண்ணா,
இந்த கவலை எனக்கும் உண்டு..
http://dohatalkies.blogspot.com/2012/09/the-usual-suspects.html
கேபிள்ஜி,
//பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பெரியாரின் நேரடி புத்திரர்கள் போல வரிந்து கட்டிக் கொண்டு திட்டி எழுதி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை.//
கார்ட்டுன் என்ன சொல்லுதுன்னு கூடவே போய் விளக்கிட்டு இருப்பாரா பாலா? உண்மையில் சொன்ன கருத்து அனைவருக்கும் புரிந்துவிட்டது இப்போ சமாளிக்க ஒரு விளக்கம் அதுவும் செம ஓத்தலாப்பு , அதோட பொருள் என்னனு ஊருக்கே தெரியுது, சங்கராசாரியார் வாரிசு போல நீங்க பேசிட்டு இருங்க :-))
---------
அண்ணாசாலையில் ஊர்வலம் போக உயர்நீதி மன்ற தடை இருக்கும் போதும் எப்படி அனுமதி கொடுத்து போராடவிட்டாங்கன்னு கேட்காதிங்க, இப்போ போலிஸ் பாதுகாப்புன்னு வேன் நிறுத்தினா மட்டும் கேளுங்க :-))
கேபிள்,
பாலா சொல்லவந்த கருத்து அப்பட்டமாக தெரிகிறது.
//தேவரீனியப் படம்//
அப்படியென்றால் என்ன?
சாப்பாட்டுக்கடை குழுமம்ன்னு ஒன்னு ஆரம்பிச்சி அதில் என்னை சேர்க்காம விட்டதற்காக என் கண்டனத்தை இங்கே பதிவு செய்யறேன்...
Ask Sen லிங்க் தான் கொடுத்திருக்கேன் இல்லை. அதில க்ளிக் பண்ணி ரெக்வெஸ்ட் கொடுங்க..
யோவ் உண்ணலாம் எவன் கார்டூன் வெளக்கம் கேட்டான்... போய் எதாவது தின்னுட்டு டிவைன் சுவென் எதாவது கிறுக்க வேண்டியதான... 40 வருஷத்துக்கு முன்னாடி செத்து போனவார பத்தி இப்போ எழுதிறியே நீயெல்லாம் >>>... ச்சே நீ ஒரு மானங்கெட்ட ___ உன்ன என்ன சொன்னால்லும் எருமாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி தான் ...
அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிடு தான் சொல்லி இருக்கார்.... " என்ன திட்ற்றவநெல்லாம் உண்மையான காரணத்துக்காக திட்டல ... பார்ப்பானுங்க கிட்ட பொருக்கி திங்கலாம்னு ஈன புத்தியோட தான் திட்ட்ரானுங்க "....
நீயும் ஒரு தீனி பண்டாரம், அடல்ட் கார்னர் மாதிரி உன்புத்திக்கு வர்றத எழுதிட்டு ... அவனுங்க எதாவது தூக்கி போடுவானுங்க பொருக்கி தின்னு
subramania lokesh போன்ற என் தொடர் வாசகர்களுக்கு புரியத்தான் இந்த மாதிரியான விளக்கமெல்லாம்.. :)
அருமையான காட்சிகள் நன்றி
ஷங்கர், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும், திருமாவளவனின் படம் வரையப்படாத சுவர்களே இல்லை. அவர் இதை பெருமையாக கொண்டிருந்தாலும், பார்க்கிறவர்களுக்கு ஒருவித எரிச்சலை ஊட்டுகிறது. போறாத குறைக்கு அவருக்கு தான் அடி வருடிகள் அதிகம் என்று கேள்வி. கட்டை பஞ்சாயத்தை முழு தொழிலாக கொண்டு இயங்கி வரும் அவரின் வி.சி கட்சி என்ன சாதித்தது என்று தன்னையே கேட்டு பார்த்துக்கொள்ளட்டும்
கேபிள்ஜி, அந்த மினி காற்றாலை பற்றி மேலும் தகவல்களைப் பகிரவும்.
இடைநிலை மற்றும் முற்போக்கு ஆதிக்கசாதி வெறியர்களின் நெருக்கடியால் தான் பெரியார் ஒன்றுமறியாத பார்ப்பனர்களை விரட்டியடிக்க துணிந்தார். மனுதர்மத்தை மிதித்தார். கார்ட்டூனை பாருங்க. பாவம் அப்பாவி பார்ப்பனர் தேவையில்லாமல் தலைதெறிக்க ஓடிஒளிய வேண்டியதாயிற்று. இந்த பாவமெல்லாம் சும்மா விடாது :-(
என் நண்பர் ஒருவர் அவரின் வீட்டின் மொட்டை மாடியில் மினி காற்றாலையை நிறுவி அவரின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார். நல்ல ஐடியா.
Pl.give me the friends cell no:
//இன்வெர்ட்டரோ, அல்லது சூரிய ஒளியை உபயோகித்தோ அவரவர் வீடுகளுக்கு வேண்டிய மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளத்தான் வேண்டும்//
சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிப்பது ஓகே .. இன்வெட்டரை வைத்து எப்படி மின்சாரம் தயாரிப்பது ? இன்வெட்டருக்குள் சேமிக்கவும் மின்சாரம் வேண்டுமல்ல்லவா ?
தலைவரே, கேட்டால் கிடைக்கும் இயக்கத்தின் மூலம் கிடைக்காத ஒரு பொருள் அநேகமாக கரண்டாகத்தான் இருக்கும்., கோவையில் பத்து மணி நேரம் கரண்டு கட்! சாகடிக்கிறார்கள். எனக்கென்னவோ பணம் நிறைய சம்பாதிக்காததால் இன்வேர்ட்டர் / ஜென் செட் வாங்க முடியாத நிலைமையில் இருக்கும் என்னைத்தான் எனக்கு பிடிக்கவில்லை.
எங்கள் ஊரில் 12 மணி நேரம் பவர் கட் ...
இன்று
V.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...
Sundara pandian oru mokka padam.
funtamilvideos.com
//இவங்க கும்பல் எப்பவுமே இப்படித்தான்//
இன்னும் யாருமே கவனிக்கலியா???????????
காலைலயே கமண்ட் கள கட்டும்னு நெனச்சேன் மக்களே ஏன் இப்படி என்னய ஏமாத்துறிங்க
கார்ட்டூனிஸ்ட் பாலா நான் பாத்தவரை ரொம்ப போல்ட் அண்ட் ஜென்யூன் சோ அவரு சப்பகட்டு கட்ட மாட்டாரு.. நீங்கள் சொல்வது சரி :)
//தேவரீனியப் படம்//
exactly correct words.I am not sure why no one condemned the first 4 minutes of the film.
is that true the only super stars in madhurai is Karthik and Prabhu (because they are thevars????)
Post a Comment