Thottal Thodarum

Sep 8, 2012

பாகன்.


 நண்பனுக்கு பிறகு ஹீரோவாய் ஸ்ரீகாந்த் வலம் வந்திருக்கும் படம்.  அமீரின் உதவியாளர் அஸ்லாமின் இயக்கத்தில், வேந்தர் மூவீஸின் அடுத்த வெளியீடு. போன வாரம் ஆடியோவை வெளியிட்டு, இந்த வாரம் படத்தை வெளியீடும் அளவிற்கு என்ன அவசரம் என்றே தெரியவில்லை. படங்களை வாங்கினால் மட்டுமே போதாது. அது மக்களிடம் ரீச்சாக வைக்க வேண்டியது ஒரு விநியோகஸ்தரின் கடமை. நல்ல படம் தானாய் ஓடும் என்பதெல்லாம் பழம் பேச்சு.சரி.. படத்துக்கு வருவோம்.


வாழ்க்கையில் மிகச் சுலபமாய் பணக்காரன் ஆக முயற்சி செய்யும் ஆர்வக்குட்டி இளைஞனான சுப்ரமணியின் கதை தான் இந்த பாகன். வழக்கம் போல உடன் ரெண்டு நண்பர்கள். ஒருத்தர் குண்டாய் இருப்பதும், இன்னொருவர் ஒல்லியாய் இருப்பதும் அவசியம். பணத்திற்காக ஒரு பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகலாம் என்று நினைத்து ஜனனி ஐயரை காதலிக்க, அவரோ சொத்தெல்லாம் வேண்டாம் என்று எல்லாத்தையும் கழட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். தனக்கு பணம் தான் முக்கியம் என்று காதலை மதிக்காத சுப்ரமணிக்கு பின்னால் தான் தெரிகிறது. அவள் தன்னை எவ்வளவு காதலித்திருக்கிறாள் என்று. பின்பென்ன.. அவர்கள் எப்படி சேருகிறார்கள் என்பதை ஒரு சைக்கிளின் பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்.
சுப்ரமணியாய் ஸ்ரீகாந்த். என்னைப் பொறுத்தவரை இவர் இந்தப் படத்திற்கு மிஸ் காஸ்டிங். கிராமத்து இளைஞனாய் முதலில் மனதி ஒட்டவேயில்லை. ஆனாலும் தன்னாலும் இம்மாதிரியான காமெடி மாதிரியான படத்தில் நடிக்க முடியும் என்பதை நிருபிக்க மிகுந்த முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ஜனனி ஐயர் பார்க்க க்யூட்டாக இருக்கிறார். அவ்வப்போது நல்ல டீசெண்டான உடையணித்து நடை பழகுகிறார். ஏ. வெங்கடேஷ் படத்தில் ரெண்டொரு இடத்தில் வருகிறார். ஹீரோயின் அப்பாவாம். கதைக்கு வில்லனாம். வழக்கம் போல அம்மா கோவை சரளா ஆங்காங்கே ஓவர் டோஸில் கத்தி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
 ஸ்ரீகாந்தின் நண்பர்களாய் சூரியும் பாண்டியும் வருகிறார்கள். பல இடங்களில் இவர்கள் காமெடி செய்கிறேன் என்று பேசிக் கொண்டேயிருப்பது எரிச்சலாய் இருக்கிறது. பல இடங்களில் பாவம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று  வருத்தமாகவும் இருக்கிறது.    தக்காளி எக்ஸ்போர்ட் செய்கிறார்கள், கோழிப் பண்ணை வியாபாரம் செய்கிறார்கள் அதில் எல்லாம் எப்படி தோற்கிறார்கள் என்று காமெடியாய் சொல்கிறேன் என்று இம்சை படுத்துகிறார்கள்.பாண்டியாவது பரவாயில்லை, சூரி இவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது கொஞ்சம் எரிச்சலாகவேயிருக்கிறது.

லஷ்மணின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவு நெருடாமல் இருக்கிறது. இசை ஜேம்ஸ் வசந்தனாம். எப்போதாவது  ஒரு முறை தான் கண்கள் இரண்டால் போன்ற பாடல்கள் வரும் போலிருக்கிறது. பின்னணியிசை பற்றிச் சொல்ல ஏதுமில்லை.
பாகன் என்கிற தலைப்பிற்கோ, யானைக்கோ இந்த படத்தில் சம்பந்தம் ஏதுமில்லை. யார் எதை ஓட்டுகிறார்களோ அவர்களை பாகன் என்று அழைக்கலாம் என்று இயக்குனர் சொல்லியிருப்பதிலிருந்து படத்தின் காமெடி ஆரம்பிக்கிறது. கதை திருப்பூர், பொள்ளாச்சி, என்று சுற்றிக் கொண்டிருக்க, ஸ்ரீகாந்த, ஒரு ஸ்லாங்கிலும், அப்பா ஒரு ஸ்லாங்கிலும், நண்பர்கள் இருவரும் மதுரை ஸ்லாங்கிலும், ஹீரோயின் சிட்டி கேர்ள் ஸ்லாங்கிலும் பேசுகிறார். படத்தில் கோவை சரளாவும், ஆங்காங்கே வரும் லோக்கல் ஆட்கள் மட்டுமே கோவை ஸ்லாங்கில் பேசுகிறார்கள்.  படத்தின் மைனஸ் என்னவென்றால் படத்தின் திரைக்கதை. சுப்ரமணி எப்படி இலக்கில்லாமல் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று திரிகிறானோ அதைப் போலவே திரைக்கதையும் இருக்கிறது. ஸ்ரீகாந்திற்கும் ஜனனிக்கும் காதல் வந்து பாட்டு ஒன்று முடிந்த உடனேயே ஹீரோயின் அப்பாவுக்கு தெரிந்துவிடுகிறது. ஆட்கள் துரத்த ஓடுகிறார்கள். ஒரே நாளில் பொள்ளாச்சியிலிருந்து திருப்பூருக்கு சைக்கிளில் ஓடிப் போனவர் அடுத்த நாளே ஹீரோயினின் டைரியைப் படித்து திரும்பி வர, ஒரே நாளில் ஜனனி வெளிநாட்டில் படிக்கப் போய்விட்டதாய் அவரின் தோழி சொல்கிறார். கடைசியில் அவர் பெங்களூரில் படிக்கிறார். ஸ்ரீகாந்த் எப்படி வசதியானவர் ஆனார்?. திருப்பூருக்க்கு வந்து பேப்பர் போட்டு, பழைய பேப்பரில் கவர் செய்து விற்று தன் முதல் சம்பாதிப்பை சம்பாதித்துவிட்டு, ஒரு பரோட்டா கடையில் சாப்பிட வரும் போது அங்கே சூரியை பார்க்கிறார். ஒரு நாளுக்குள் எப்படி நண்பர்கள் பிரிந்தார்கள்? சேர்ந்தார்கள்?. அதற்குள் நிறைய நாட்கள் கழிந்துவிட்டன என்றால் அதற்கான காட்சிகள் எங்கே?. திடீரென பாண்டியும் சூரியும் ஒரே வீட்டில் வசிப்பதாய் சொல்கிறார்கள்?. தன்னுடன் வளர்ந்த சைக்கிளை பிரிய முடியாமல் ஹைஃபை காரில் தேடும் ஹீரோவிற்கும், சைக்கிளுக்குமான கதையில் ஒரு எமோஷனேயில்லை. இதில் அந்த சைக்கிளை தீவிரவாதி ஒருவன் சீட்டுக்கடியில் பாம் வைக்க பயன் படுத்திவிட்டு இறந்துபோய்விடுவதாய் காட்டுகிறார்கள்.இதற்கு கதைக்கும் என்ன சம்பந்தம்?. இப்படி கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். சரி காமெடி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்ற விதி இருப்பது உண்மைதான் என்றாலும் காமெடி என்பதே இல்லை என்பதால் இவ்வளவு யோசிக்க வைக்கிறது.

படத்தின் ஹைலைட் காட்சி என்றால் க்ளைமாக்ஸில் கோவை சரளாவின் செயினைத் திருடிக் கொண்டு ஓடும் முத்துக்காளை போகிற வழியில் சுப்ரமணியின் சைக்கிளைத் திருடிக் கொண்டு ஓட,  சுப்ரமணி சைக்கிள் திருடனைத் துரத்த, செயின் திருடனை பிடிக்க போலீஸ்காரர் டிவிஎஸ் பிப்டியில் துரத்த,  சைக்கிளை பிடிக்கத் துரத்தும் நண்பனை பிடிக்க, சூரியும், பாண்டியும் துரத்த, முன்னால் போகிறவன் தன் நண்பன் என்றதும், திருடனின் நண்பர்கள் என்று புரிந்து கொண்டு, இவர்களை கஸ்டடியில் வைத்துக் கொண்டே போலீஸ் துரத்த, நகையை திருடியவனை ஆட்டோவில் கோவை சரளாவும், அவரின் கணவரும் துரத்த, ஆட்டோவில் பெட்ரோல் இல்லாமல் ஆட்டோவை தள்ளிக் கொண்டு வரும் வழியில், ஜனனியின் அப்பா, தன் பெண்ணுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அந்த நேரத்தில் பழசை நினைச்சு உங்களுக்கு உதவி பண்ணாம போக மாட்டேன் என்று இவர்கள் எல்லோரையும் துரத்தும் காட்சி மட்டும். ஓகே.

டிஸ்கி: நேற்று தியேட்டரில் ஒரு பெரிய காமெடி. சூரி, பாண்டி வரும் காட்சிகளில் மட்டும் அரங்கில் ஒரு பக்கத்தில் மட்டும் ஒரு பத்து பேர் வரிசையாய் உட்கார்ந்து கொண்டு, எல்லாக் காட்சிகளுக்கும் ஓவர் ரியாக்‌ஷனோடு சிரித்து கொண்டேயிருந்தார்கள். படம் பார்த்த பலர் அவர்களைப் பார்த்து சிரித்தபடி “கொடுத்த காசுக்கு மேலே கூவுறானுங்க” என்றனர்.
கேபிள் சங்கர்


Post a Comment

15 comments:

Philosophy Prabhakaran said...

டிஸ்கியில் உள்ள ஊமைக்குத்து யாருக்கு ???

Ravikumar Tirupur said...

திருப்பூர கதைக்களமா வெச்சு எடுக்கற படங்கள் பெருசா பிரகாசிக்க மாட்டேங்குதே.

Anonymous said...

கேபிள் சங்கர். விமர்சனம் செய்யுங்கள் ஆனால் கிண்டல் செய்ய உங்களுக்கு என்ன இருக்கிறது? இசை ஜேம்ஸ் வசந்தனாம் என்கிறீர்கள். இதில் கிண்டல் தொனி தெரிகிறது. இசை ஜேம்ஸ் வசந்தன் என்று சொன்னால் போதாதா? நீங்கள் எழுதும் விமர்சனத்தில் விகடன் விமர்சன பாணி நிறைய இருக்கின்றது . உங்கள் விமர்சன பாணியில் கூட கிண்டல் செய்யும் இடங்கள் நிறைய உண்டு. படு இயழ்பு, படு சுவாரஸ்யம், என்று படு என்கிற வார்த்தையை அதிகமாக உபயோகிக்கிறீர்கள். ஏதோ ப்ளாக்கில் விமர்சனம் எழுதுவதை பெரிய விஷயமாக நினைத்து சகட்டுமேனிக்கு கிண்டல் செய்ய கூடாது. முதலில் நீங்கள் படம் எடுங்கள் பார்க்கலாம். நீங்கள் பனி செய்த கலகலப்பு படத்திற்கே விமர்சனம் எழுதாமல் தப்பியவர் தான் நீங்கள். என்பது நினைவு இருக்கட்டும்.

aa said...

periya lord labukku dossu

Cable சங்கர் said...

தம்பி ஹரி.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.. நான் வேலை “பனி” செய்த படத்தை நீங்கள் தான் விமர்சிக்க வேண்டும். நான் படமெடுக்காமல் எங்கே போகப் போகிறேன். அப்போது வாங்க.

shreyas said...

Hari

நீங்கள் வேண்டுமானால் எல்லா படத்தையும் ஆஹா ஓஹோ என்று பாராட்டி ஒரு பதிவு போட்டு கொள்ளுங்களேன்.

Anonymous said...

Shreyas. oru padam nanraga illai enral vimarsanam seiyyalam. Aanal adhu matravargal manadhu kavalai padum padi sollavendam enru dhan sonnen.

Anonymous said...

Mr. கேபிள் சங்கர். கலகலப்பு படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நீங்கள் அந்த படத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன். பலபேரால் பார்க்கப்படும் ப்ளாக்களில் உங்கள் ப்ளாக்கும் ஒன்று. எந்த படம் வந்தாலும் முதலில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தான் நாங்கள் பார்போம். உங்கள் விமர்சனம் 99% சரியாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால் அதில் சில வார்த்தைகள் சரியாக இல்லை என்று எனக்கு பட்டது அதனால் சொன்னேன். மற்றபடி உங்களை கயாபடுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

shameer said...

Cd la pakkalamnu ninachu irundhen , umga vimarsanam padichathukku appuram andha aasayum pochu...thx 4 saving us.

Btw what u said about james vasanthan is true.he failed to compose good songs.

Romba sumarana MANAM KOTHI PARAVAI ya kaapathunadhu IMAAN thaan

shameer said...

Yaaru saar indha pasanga? Vendhar movies

சஹஜமொழி said...

கேபிள் சார், நான் உங்கள் blog- வாசகன் , வர வர உங்கள் விமர்சனம் மற்றவர்களை
காயபடுத்துவது போல் அமைகிறது

please avoid this type of words,

Unknown said...

பாஸீ, படம் எப்டியோ தெரியல. ஆனா, உங்க ரிவ்யூ ரெம்ப மொக்கையா இருக்கு. நீங்களே ஒரு முறை படிச்சி பாருங்க.
நானும் ரெம்ப நாளா உங்க கிட்ட கேட்கணும்-னு நெனச்சேன், அதெப்படி, மனசாட்சியே இல்லாம, படத்த சீன் பை சீன் சொல்லுறீங்க.
படம் சூப்பரா இருந்தாலும், சுமாரா இருந்தாலும், இத படிச்சிட்டு படம் பாக்க போறவனுக்கு எப்படி படம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்
You better concentrate on words than revealing the whole movie.
நீங்கள் ஒரு எழுத்தாளர் என்பதை, நீங்கள் உபயோகிக்கும் வார்த்தையில் காண்பியுங்கள். இப்படி வல வல-ன்னு ஏதோ சின்ன பையன் எழுதின மாதிரி வேண்டாம். எப்போதாவது மட்டுமே எழுதும் சிலர் கூட இதை விட பெட்டரா, இன்ட்ரஸ்டிங்கா எழுதும் போது, எப்போதும் கீ போர்டும் கையுமா இருக்கிற நீங்க இன்னும் சூப்பரா எழுதலாம்.
https://www.facebook.com/s.murugesh.k/notes
முடிஞ்சா, மத்தவங்க எப்படி விமர்சனம் எழுதுறாங்க-ன்னு பாருங்க, கதைய ஒரே லைன்-ல சொல்லிட்டு, மத்த விஷயத்த எப்டி வார்த்தையாக்குறாங்கன்னு பாருங்க

Cable சங்கர் said...

nandri dinesh raj

Unknown said...

Boss ungalaku enathan prechana. Nalla iruka padathkum kevalama ereview ezhuthuringa?
Indha padam oru mura tharalama paakalm. One doubt? Podhuva padatha pathi mala ezhudha producers panam kodupanaganu kelvi patoruken. Ela padatnayum kevalama yezudha soli eadavadhu oru 11 per konda kuzhu ungaluku panam kodukutha ena?



Unknown said...

Thiru. Cable sankar,
Hope you did not mistake me. Nejamave indha review remba kadiya irundhitchi. Remba edhir pakura oru ezhuthalar ippadi eludhalama? adhan konjam kadupahitean.

Sorry, ungala ennoda friend-oda friend kooda compare pannadhukku. I know, we should not compare ppl. But, somehow i felt his way of reviewing and composing is good. Neenga adha vida better-a ezhudhanum. He seem to have stopped writing reviews. So, i am highly dependent on your reviews :) and i want it to be entertaining and fair.
Dont take me wrong.
Keep writing.