தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாரை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். அதற்கு காரணம் அவரின் முந்தைய சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என்ற மூன்று வெவ்வேறு விதமான ஜெனரில், நல்ல படங்களை தொடர்ந்து கொடுத்ததால் கிடைத்த மரியாதையான சாப்ட்கார்னர். அதற்கு அடுத்த படங்களான ஈசன், போராளி போன்ற படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். சென்ற படங்களின் தோல்வியால் தானோ என்னவோ இந்தப்படத்திற்கு மிக லோஃப்ரோபைலான விளம்பரங்களை முன் வைத்து படம் பேசட்டும் என்று நினைத்து விட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. சரி இப்போது படத்துக்கு வருவோம்.
ரொம்ப சிம்பிளான கதை. கிராமத்தில் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் என்னன்ன பிரச்சனைகளை ஒருவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் , எதிர் கொள்கிறார்கள் என்பதை, ஜாதி, குலம், கோத்திரம், தகுதி, கெளரவக் கொலை, நட்பு என்று கலந்தடித்திருக்கிறார்கள்.
முதல் பாதி முழுவதும், சசிகுமாரை ஒரு ஹீரோவாக காட்ட என்னன்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறார்கள். ஓப்பனிங் சாங்கில் கருத்து சொல்கிறார். அதற்கு முன் அவர் எங்கேயிருக்கிறார் என்ற பில்டப் கொடுக்கிறார்கள். என்ன வழக்கமாய் இளம் பெண்களுடன் ஆடுவதற்கு பதிலாய் கிழவிகளுடன் ஆடுகிறார். ஊரில் உள்ள அத்தனை பெண்களை கிண்டல் செய்கிறார். வழக்கம் போல டீக்கடையில் நண்பர்களுடன் உட்கார்ந்து டாப்படிக்கிறார். நண்பனின் காதலுக்காக தினமும் பஸ்ஸில் பயணிக்கிறார். கடைசியில் அது அவரின் காதலாய் மாறியவுடன் சீரியசாகிறார். ஆரம்பக் காட்சிகளில் வந்த பாடல் வகையறாக்களைத் தவிர, மற்ற காட்சிகளில் எல்லாம் படு இயல்பாக நடிக்கிறார். சசியின் மிக பெரிய ப்ளஸ் பாயிண்ட் அவரது குரல்.
சசியின் நண்பர்களாக வரும் சூரி, இனிகோ, ஆகியோருடன் பஸ்ஸில் வரும் லஷ்மிமேனனை இனிகோவுக்காக கரெக்ட் செய்ய அலையும் காட்சிகள், சுவாரஸ்யம். அக்காட்சிகள் கலகலப்பாய் அமைவதற்கு காரணம் சூரியின் டைமிங் பஞ்சுகளும், அவரது பாடி லேங்குவேஜும் என்றே சொல்ல வேண்டும். வழக்கமாய் இவர் காமெடி செய்கிறேன் என்று பெரும்பாலும் பேசியேக் கொல்வார். ஆனால் இப்படத்தில் இவரை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.டிபிக்கல் கிராமத்து பெண் கேரக்டருக்கு லஷ்மிமேனன் பொருத்தமாய் இருக்கிறார். வழக்கமாய் காமெடி கலந்த அல்லது பரிதாபத்துக்குரிய கேரக்டரில் பார்த்து பழகிய அப்புக்குட்டிக்கு நிஜமாகவே வித்யாசமான கேரக்டர். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும் முக்கியமான கேரக்டர் உணர்ந்து செய்திருக்கிறார். சசியின் அப்பா நரேன், அவரின் மனைவிகள், பாட்டி, லஷ்மியின் அப்பா, கூடவே இருக்கும் மீசைக்காரர், சித்தி, என சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யமாய் அமைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுநந்தனின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. ஹீரோயின் சந்தோஷமாய் ஆடிப்பாடும் காட்சியில் குரு படத்தில் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சோரே மேஹாமேஹா பாடலின் அப்பட்டம் தெரிகிறது. பின்னணி இசை ஓகே. ப்ரேம் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை சரியாக கொடுத்திருக்கிறது.
எழுதி இயக்கியவர் சசியின் உதவியாளர் பிரபாகரன். முதல் பாதி முழுவதும் காமெடியையும், பின் பாதி முழுவதும் ட்விஸ்ட் அண்ட் டர்னாக வைத்து பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார். என்ன.. அந்த ட்விஸ்ட் அண்ட் டர்ன்களை எல்லாவற்றையும் நேற்றைக்கு படம் பார்க்க அரம்பித்த குழந்தைக்கூட முன்கூட்டியே கணித்து விடக்கூடிய விஷயமாய் அமைந்திருப்பதும், முதல் பாதி முழுவதும் ராட்டினம் படத்தையும், இரண்டாவது பாதி கொஞ்சம் நாடோடிகள், இன்னும் கொஞ்சம் சுப்ரமணியபுரம், இன்னும் கொஞ்சம் அதிகமாய் தூங்கா நகரம் போன்ற படங்களை ஒரு கலக்கு கலக்கி அடித்திருப்பது, எல்லா படங்களையும் திரும்பப் பார்த்தார் போல இருப்பதும், மண்டையில் அடித்ததும், கத்தியால் குத்தப்பட்டு, ராஜேந்தர் மைதிலி என்னைக் காதலி படத்தில் வருவது போல, குத்துபட்டு டயலாக் பேசுவது எல்லாம் மைஸோ மைனஸ்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாய் இருக்கும் ஒரு விஷயம் வசனங்கள். பளிச் பளிச்சென மிக இயல்பாய் பலதும், நாடகத்தனமாய் சிலதும் வருகிறது. “மனசுல பட்டிருக்கிறது கரையா? அழிக்கிறதுக்கு?” “எதிரியை அழிக்க நினைக்ககூடாது, ஜெயிக்க நினைக்கணும். எதிரியே இல்லைனா வாழலாம் வளரமுடியாது" போன்ற வசனங்கள். மற்றபடி பஸ்ஸுக்குள் நடக்கும் காட்சிகள், டீக்கடையில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் கேரக்டர், சசி ஜெயிலில் இருந்து வந்ததும் கூட்டமாய் கிழவிகள் சேர்ந்து ஒப்பாரி வைக்குமிடம், சூரியை ஓவராய் பேசவிடாமல் வைத்தது, சின்னச் சின்னக் கேரக்டர்கள் மூலம், கதை நகர்வை சுவாரஸ்யப்படுத்திய விதத்தில் நிறைய மைனஸுகளை சமாளித்திருக்கிறார். ஆனால் இவையனைத்து சசிகுமார் என்பதனால் சமாளிப்பு ஆகியிருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.
கேபிள் சங்கர்
Post a Comment
13 comments:
சசிகுமார் ஒரே மாதிர் ஜானரில் நடிக்கிறார் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள் ("நட்பு + காதல்" இவற்றை பெரிதாய் பேசும் கதைகள் )
உங்கள் விமர்சனமும் மற்ற விமர்சனங்களும் படிக்கும்போது படம் ஒரு முறை பார்க்கலாம் போல் தெரிகிறது; பெயிலியர் என்று சொல்ல முடியாமல் ஓரளவு லாபம் தரக்கூடும் என நினைக்கிறேன்
முதல் பாதி முழுவதும் ராட்டினம் படத்தையும், இரண்டாவது பாதி கொஞ்சம் நாடோடிகள், இன்னும் கொஞ்சம் சுப்ரமணியபுரம், இன்னும் கொஞ்சம் அதிகமாய் தூங்கா நகரம் போன்ற படங்களை ஒரு கலக்கு கலக்கி அடித்திருப்பது, எல்லா படங்களையும் திரும்பப் பார்த்தார் போல இருப்பது மைனஸோ மைனஸ். / exactly. .
good review! parkalamnu nenaikiren
ரொம்பவே சசிகுமார் போரடிக்க ஆரம்பிக்கிறார்..
Nice Movie to watch once . Suri comedy is nice .
But we can feel repeatation of all old sasi kumar movie in this also
சசிக்குமாருக்காக படம் பார்ப்பேன் என்பதாலும் உங்களது விமர்சனமும் 70% நல்லா வந்திருக்கிறது என்பதை சொல்வதாலும் சுந்தரபாண்டியனை பார்க்க வேண்டும்...
நல்ல விமர்சனம் அண்ணா.
சுப்ரமணியபுரம் ஒன்று போதும்... சசிகுமாருக்கு வாழ்நாள் முழுக்க நான் கடமைபட்டிருக்கிறேன்.. நினைத்தாலே சிலிர்க்கிறது!
வழக்கமான சசிக்குமார் படம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!
இன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
சரியான விமர்சனம்
We enjyoed the movie. Really Worth to see in theatre...
100% WORTH WATCHING THESE MOVIE, SUNDRA PANDIAN.A COMPLETE ENTERTAINMENT MOVIE. COMDEDY+LOVE+THRILL, YESTERDAY I WATCHED MOVIE, AT THE END ALL SEEMS TO BE SMILE IN THEIR FACES WHEN COMEOUT OF THEATRE THIS SHOWS SUCESS OF THESE FILM. .
ஏ.ஆர்.ரகுநந்தனின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. ஹீரோயின் சந்தோஷமாய் ஆடிப்பாடும் காட்சியில் குரு படத்தில் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சோரே மேஹாமேஹா பாடலின் அப்பட்டம் தெரிகிறது.
இதுமட்டுமில்லை சங்கர், ரெக்கை முளைத்தேன் என்கிற மதன் கார்க்கியின் பாடல், அவரது அப்பா எழுதிய தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் எனத்தொடங்கும் பாரதிராஜா படத்தின் பாடல் மெட்டில் இருப்பதை நீங்கள் கேட்டிருக்கலாமே. வித்யாசாகரின் ட்யூன் அது. ஏ.ஆர்.ரஹ்நந்தன் வைரமுத்துவிற்கு ஆறாவது தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர் - அதை மறந்திடாதிங்க...
Nice review..
Post a Comment