தமிழ் சினிமாவில் சமீபத்திய சென்ஷேஷன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய படமெடுப்பது. ஒரு சின்ன பட்ஜெட் படம், அடுத்து மீடியம் பட்ஜெட் படமான இந்த சாருலதா. மற்றொன்று பெரிய பட்ஜெட்டில் வரப் போகும் மாற்றான். சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸானது போல ரிலீஸாக்கி காலியாக்கிவிட்டார்கள் என்று கேள்வி. ஆனால் அதே போல இப்படத்தை பண்ண முடியவில்லை. ஏனென்றால் சன்னிலிருந்து வெளியேறிய பிறகு சக்ஸேனா தனியா கம்பெனி ஆரம்பித்து வெளியிட்டிருக்கும் முதல் படம் அதனால் மீடியாவின் கவனம் பெற்றது ஒரு தனி விஷயம் என்றாலும், ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள், அதுவும் பெண்கள் எனும் போது ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கத்தான் செய்தது.
கொரியன் படமான “அலோன்” என்கிற படத்தின் உரிமையை வாங்கி ரீமேக்கியிருக்கிறார்கள் என்று அவர்களே சொன்னார்கள். ஒட்டிப் பிறந்த சாருவும் லதாவும் ஒருவரை ஒருவர் அன்யோன்யமாய் பார்த்துக் கொண்டு, லதாவுக்கு உடம்புக்கு சரியில்லையென்றால் சாரு ஊசி போட்டுக் கொள்ளும் அளவிற்கு பாசமாய் இருந்தவர்களின் வாழ்க்கையில் லதாவின் காதலால் புயல் உண்டாகிறது. அதனால் ஒட்டிப் பிறந்து 19 வயது வரை ஒன்றாய் இருந்தவர்கள் பிரிகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பேய், பூதம், சைக்காலஜி, என்று கலந்து கட்டி ஆடியிருக்கிறார்கள்.
பருத்தி வீரனுக்கு பிறகு பர்பாமென்ஸைக் காட்டக்கூடிய ஒரு வேடமாய் வந்து அமைதிருக்கிறது பிரியாமணிக்கு. அதை உணர்ந்து செய்திருக்கிறார் ப்ரியாமணி. சாருவின் கேரக்டருக்கு முகத்தில் தெரியும் கடுப்பு, மற்றும் ராவான ஒரு பார்வை, கொஞ்சம் கட்டையான குரலும், லதாவின் கேரக்டருக்கு மென்மையான, வெட்கப்படும், மெல்லிய குரலுடன் இரண்டு கேரக்டருக்கும் வித்யாசம் காட்டி நடித்திருக்கிறார். ஆனால் இவை இரண்டுமில்லாமல் படம் நெடுக அல்ட்ரா மார்டர்ன் ட்ரெஸில் சாருவும் இல்லாமல் லதாவுமில்லாமல் அலைவது தான் ஏன் என்று தெரியவில்லை?. க்ளைமாக்ஸ் இருபது நிமிடம் பேயாட்டம் ஆடுகிறார். கொஞ்சம் யோசித்தால் அசத்தலான பர்பாமென்ஸ் புஸ்ஸென ஆகிவிடும்.
அந்த ஹீரோ யாரு பெத்த புள்ளையோ? சொல்லிக்கிறதுக்கு ஏதுமில்லாத மாதிரி அலையுது. அம்மா சரண்யா வழக்கம் போல. சீதா சைக்காட்ரிஸ்டா வர்றாங்க. நேத்து பொறந்த குழந்தை கூட அவங்க சொல்ற ட்ரீட்மெண்டை சொல்லும் அவ்வளவு ஈஸியா அருமையா சொல்றாங்க.
எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. வீட்டின் வெளிப்புறத்துக்கு உட்புறத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லாத செட். பின்னால் வரும் காட்சிகளில் அதை அழிக்கப் போகிறார்கள் என்பதை மொக்கை செட்டை பார்த்தாலே கண்டுபிடித்து விட முடியும். சுந்தர் சி பாபுவின் இசையமைப்பில் பாடல்கள் ஏதும் பெரிதாய் கவரவில்லை. பட் ஆங்காங்கே வயலினில் வரும் ட்ராக்குள் நன்றாக இருந்தாலும் எங்கே அழுத்தமாய் கேட்ட மாதிரியே இருப்பது மைனஸ்.
எழுதி இயக்கியவர் பொன்.குமரன். கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் இவர். இவருக்கு தமிழில் முதல் படம். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு ஹிட் படம் கொடுத்தவர். சரியான படத்தைத்தான் ரீமேக்க எடுத்துக் கொண்டிருந்தாலும், அதை எக்ஸிக்யூட் செய்யும் போது திரைக்கதையில் நெளியவைத்திருக்கிறார். நெளியவைப்பதற்கு முக்கியமான் காரணம் காமெடி என்கிற பெயரில் ஒரு குண்டு பையனையும், ஆர்த்தியையும் வைத்து நடக்கும் தொடர் வசன இம்சைகளை தாங்க முடியவில்லை. ஜனங்களுக்கு ரிலீப் கொடுப்பதாய் நினைத்துக் கொண்டு இம்சையை கொடுத்திருக்கிறார். இவை இல்லாமலேயே படம் சுவாரஸ்யமாய் போகும். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனும் போது அதை எப்படி காட்டுவார்கள் என்று யோசித்ததை படு அபத்தமாய் சி.ஜியில் இடுப்புப் பகுதியில் மொழுகியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வயிற்றோடு ஒட்டிப் பிறந்ததாய் காட்டப்படுகிறாவர்கள் ஆபரேஷன் செய்த தழும்பை நடு வயிற்றில் காட்ட, ஆனால் அவர்கள் படமெடுப்பதற்கு வசதியாய் பக்கம் பக்கமாய் நிற்க வைக்க, இடுப்பில் சிஜி செய்திருப்பது, என்பது போன்ற பல அபத்த காமெடிகளில் படத்தின் பட்ஜெட் தெரிகிறது. ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள்,அதில் ஒருத்திக்கு காதல். அந்த காதலால் பொறாமைப்படும் இன்னொருத்தி இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய கதைகளனில் பந்தேயில்லாமல் டிபென்ஸ் ஆடியிருப்பது வருத்தமாய் இருக்கிறது.
முதல் பாதியில் இருந்த தொய்வை இரண்டாம் பாதியில் சாமியார், சரண்யா, பேய், என்று தட்டி ஒட்டி பரபரப்பாக்கியிருக்கிறார். அந்த பரபரப்புக்கு காரணம் கதையில் வரும் சுவாரஸ்யமான ட்விஸ்ட். ஒரு பக்கம் ஹாரர் படமாகவும் இல்லாமல், பேய் படமாகவும் இல்லாமல் க்ளைமாக்ஸ் கொடுத்த விறுவிறுப்பில் வெளியே வரும் போது “எப்படி இருக்கு?” என்று யாராவது கேட்டால், நான்கு மொழிகளில் நல்ல வியாபாரம் செய்ய முடிகிற இம்மாதிரி கதைகளை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நன்றாகவே செய்திருக்கலாம் என்கிற ஆதங்கத்தோடு, “ஓ......க்க்க்க்க்க்க்கே” என்று சொல்லுமளவுக்கே இருக்கிறது சாருலதா.
Post a Comment
6 comments:
படம் மொக்கயா
படம் மொக்கயா
படம் “ ஓ...க்க்க்க்க்கே”- யா....
மாற்றான் படம் இப்ப்டத்தால் பாதிக்கும் என்றெல்லாம் ந்யூஸ் வந்ததே ! !
கிட்டத்தட்ட நல்லாருக்கும்ன்னு சொல்றீங்க..
Review Okk...k! - R. J.
Sundara Pandian oru mokka padam.
http://www.funtamilvideos.com
Post a Comment