சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு பின்னால் ஒரு மாடி வீட்டில் மெஸ்ஸாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அருளானந்தா மெஸ். நண்பர் ஒருவர் இங்கு பரோட்டா நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கூட்டிப் போனார். பஞ்சு போன்ற பரோட்டாவும், கூடவே காரமில்லாத அருமையான கிரேவியும் நம்மை மீண்டும் மீண்டும் அழைத்தது. இதெல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். பின்பு இவர்கள் தங்கள் உணவகத்தை ஹோட்டலாய் உருமாற்ற, உஸ்மான் ரோட்டில் இருக்கும் சரவணபவனுக்கு நேர் எதிரே உள்ள விவேகானந்தா காபி ஹவுஸுக்கு ஒரு இடத்தைப் பிடித்து ஹோட்டலாய் அமைத்தார்கள்.
இவர்களின் ஸ்பெஷாலிட்டி பரோட்டா என்று எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், நிஜத்தில் இவர்களது மதிய சாப்பாட்டுக்கு நான் அடிமை. நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், கோலா உருண்டை, சிக்கன் மசாலா, ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் குழம்பு, என்று எதை எடுத்தாலும் ஒவ்வொரு அயிட்டத்திலும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். இவர்களது எந்த மசாலாவிலும் அதிக காரமோ, அல்லது மசாலா அயிட்டங்களோ தூக்கலாக இருக்காது. நன்றாக வெந்த மட்டனை சின்னச் சின்ன துண்டுகளாய் போட்டு, நல்ல திக்கான கிரேவியோடு, கையடக்க தட்டில் வைத்து தருவார்கள். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டுப் பாருங்கள் சுமமா அட்டகாசமாய் இருக்கும். நிச்சயம் வழக்கமாய் சாப்பிடும் அளவைவிட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவீர்கள். அதே போல் தான் நாட்டுக்கோழி மசாலாவும். வேக வைத்த கோழியை கிரேவியில் போட்டுத் தரும் தில்லாலங்கடியெல்லாம் கிடையாது. கிரேவியின் டேஸ்ட் சிக்கனில் ஊறியிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு இவர்களின் மீன் குழம்பு பிடிக்காது.
மேற்ச் சொன்னவைகளில் எல்லாவற்றையும் மீறி ஒரு அயிட்டத்தை நீங்கள் மிஸ் செய்யவே கூடாது என்று சொன்னால் அது அவர்களுடய ரசம் தான். அட.. அட..அட.. என்னா ரசம்டா.. அப்படி ஒரு ரசம். கேட்டால் ஒரு பாத்திரத்தில் நம் இலைக்கு பக்கத்திலேயே வைத்துவிடுவார்கள். நீங்கள் ஒரு ரசப் பிரியராக இல்லாவிட்டாலும் இவர்களின் சுவைக்காகவே ஒரு கரண்டு எக்ஸ்ட்ரா விட்டுக் கொள்வீர்கள். மாலை நேரங்களில் இவர்கள் போடும் பரோட்டாவில் முன் மாதிரியான டேஸ்ட் இப்போது இருப்பதில்லை. என்றாலும் உடன் கிடைக்கும் கிரேவி அயிட்டத்தினால் தப்பித்துவிடுகிறது. குறை என்று சொன்னால் எல்லா அயிட்டங்களிலும் கொஞ்சம் எண்ணெய் அதிகமாய் இருக்கும்.
ரங்கநாதன் தெரு ஷாப்பிங் போகிறவர்கள் நிச்சயம் இந்த உணவகத்தை மிஸ் செய்யாதீர்கள். அதை மீறி சாப்பிடுவதற்காக போகிறவர்களுக்கான பெரிய பிரச்சனை வண்டிகளுக்கான பார்க்கிங். பைக் என்றால் நடேசன் தெருவில் இடம் கிடைத்தால் பார்க் செய்துவிட்டு நடந்து போக வேண்டும் கார் என்றால் வீட்டிலேயே பார்க் செய்துவிட்டுப் போவதே உசிதம். டிநகரில் மதிய நேரத்தில் பார்க்கிங்க்கு எங்கு போவது?. அருமையான ஒரு ஹோம்லி அசைவ உணவிற்கு அருளானந்தா உணவகம். மதுரையில் இவர்களது உணவகம் ஃபேமஸ்.
ஓட்டல் அருளானந்தா
உஸ்மான் ரோடு,
சரவணபவன் எதிரில், விவேகானந்தா காபி ஹவுஸ்க்குள்
Post a Comment
12 comments:
அருளானந்தா அப்படின்னு பேரு வச்சிட்டு ஒரு அசைவ ஹோட்டல்...
ஒருநாள் பிடி பிடிக்கலாம்
Now this hotel became a VEGETARIAN ONLY.
//Now this hotel became a VEGETARIAN ONLY.//
நானும் அதான் நினைக்கிறேன், வள்ளலார் படமெல்லாம் மாட்டியிருக்கு.
விவேகானந்த காபி, காதிபவன் இருக்கும் காம்ப்ளக்ஸ் இல் உள்ள ஹோட்டல் தானே?
தலைவர் பழைய கதைய சொல்லுகிறார் போல? இல்லை நான் வேற ஹோட்டல் சொல்லுறனா? தெரியலை.
வெஜிடேரியன் தான் அங்கு சாப்பிட்டேன்.
ஈகோ பட விளம்பரத்தில் தங்களது பெயர் பார்த்ததில் மகிழ்ச்சி
" ஒரு கரண்டு எக்ஸ்ட்ரா விட்டுக் கொள்வீர்கள். "
தமிழ் நாட்டுல கரண்ட்டா . . .
அவ்வ்வ்வ் . . .
pure non veg still
'இவர்களின் ஸ்பெஷாலிட்டி பரோட்டா என்று எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், நிஜத்தில் இவர்களது மதிய சாப்பாட்டுக்கு நான் அடிமை. நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், கோலா உருண்டை, சிக்கன் மசாலா, ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் குழம்பு, என்று எதை எடுத்தாலும் ஒவ்வொரு அயிட்டத்திலும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். இவர்களது எந்த மசாலாவிலும் அதிக காரமோ, அல்லது மசாலா அயிட்டங்களோ தூக்கலாக இருக்காது. நன்றாக வெந்த மட்டனை சின்னச் சின்ன துண்டுகளாய் போட்டு, நல்ல திக்கான கிரேவியோடு, கையடக்க தட்டில் வைத்து தருவார்கள். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டுப் பாருங்கள் சுமமா அட்டகாசமாய் இருக்கும்'
ஆமா ,இதெல்லாம் சாப்டதுக்கப்புரம், நல்ல டாக்டர் எங்கே இருப்பார்னு சொல்லுவாங்களா.
((((((((((((
// இல்லை நான் வேற ஹோட்டல் சொல்லுறனா? தெரியலை.
//
நீங்க வேற எதையோ நெனச்சு வழக்கம்போல கன்பீசன் ஆயிட்டீங்க. அது இந்த நொடிவரை அசைவ உணவகம்தான். :)
அசைவ ஹோட்டல் தான்.....நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம். சுமாராக தான் இருந்தது.அடுத்த நாள் ஜீனியர் குப்பண்ணாவில் சாப்பிட்டோம்.ம்......டிவைன்.
மதுரை அருளானந்தா இவர்களுடையதா? அங்கு 25 30 வருடமாக இந்த கடை ஃபேமஸ் மதியம் 2 மணிக்கு மேலே போனால் எல்லம் தீர்ந்து போயிருக்கும் 1 ம்ணிக்குமேலேபோனால் சாப்பிடுபவர் இலைக்கு பின்னால் நின்னுதான் இடம் பிடிக்கனும் மத்தியான லன்ச் மட்டும்தான் கிடைக்கும் காலை மாலை இல்லை
மதுரை அருளானந்தம் ஹோட்டலில் அயிரை மீன் குழம்பு
சூப்பர்
Yesterday night I went t.nagar arulanandham hotel with my friend we order kari dosai parotta and briyani. Everything waste. Kari dosai 170 rs very very worst. I am upset Mr.Shankar.
Post a Comment