Thottal Thodarum

Sep 25, 2012

Heroine

மதுர் பண்டார்கரின் படம் என்றால் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பது இவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். பேஜ் 3 பிரபலங்களின் பின்னணியை உரித்துக் காட்டியது என்றால், ட்ராபிக் ஜாம் ப்ளாட்பாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொன்னது, ஃபாஷன் மாடல் உலகின் அவலங்களை, போட்டிகளை, வெற்றி தோல்விகளை அப்பட்டமாக காட்டியது. அதே அளவிற்கு இவரது கார்பரேட், ஜெயில் ஆகிய படங்கள் இல்லை என்றாலும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகவே அமைந்தது. இந்த வரிசையில் சினிமா கதாநாயகியைப் பற்றி ஒரு படம் என்றதும் இயல்பாகவே கொஞ்சம் ஆர்வம் எகிறத்தான் செய்தது.


மாஹி சூப்பர் ஸ்டாரிணி நடிகை. அவளின் திரை வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, வெற்றியை தக்க வைத்துக் கொள்ள செய்யும் போராட்டங்களைத்தான் இப்படம்.
மாஹியாய் கரீனா கபூர். தான் ஒரு திறமையான நடிகை என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். உணர்வுகளின் களஞ்சியமாய் வலைய வருகிறார். அழுகிறார். தொடர்ந்து புகை பிடிக்கிறார். வெற்றிக்காக காதலிக்கிறார். நான்கைந்து பேருடன் படுக்கிறார்.  நல்ல நடிப்பு என்று பாராட்டலாம் என்றால் ஏற்கனவே சமீபத்தில் டர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் நடித்தது ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு பர்பெக்ட். சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான நடிப்பு இம்ப்ரசிவ்.
டெக்னிக்கலாய் ஒளிப்பதிவில், பின்னணியிசையில், தயாரிப்பின் தரத்தில் எல்லாமே உயர்வாக இருக்க, சொதப்பியிருப்பது மதுர் பண்டார்கர் தான். ஏனேன்றால் திரும்பத் திரும்ப ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சிகள் ரிப்பீட்டாவதால் ஏற்படும் சலிப்பு. மஹி கேரக்டரை ஆரம்பம் முதலே சூப்பர் ஹீரோயினாய் காட்டியிருக்க, அவள் எப்படி இந்த நிலையை அடைந்தாள் என்பதை காட்டாததால் அவளது ஹிஸ்டரிக்கலான கேரக்டருக்கு ஜஸ்டிபிகேஷனை தேட வேண்டியிருக்கிறது. டர்ட்டி பிக்சரில் வித்யாபாலனின் கேரக்டர் எப்படி இந்த அளவிற்கு வளர்ந்தது என்பதை ஆரம்பத்திலிருந்து பார்த்ததினால் அக்கேரக்டர் இழந்ததன் விலை நமக்கு புரியும். அதனால் அவளின் போராட்டம் நம் போராட்டமாய் தெரியும். ஆனால் இப்படத்தில் ஹாஃப் வேயில் அவள் பெரிய ஹீரோயினாய் இருப்பதும், ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையிருப்பவனுடன் காதல் கொள்வதும், பின்பு கிரிக்கெட் ப்ளேயருடன் உறவு கொண்டு காதலிக்க ஆரம்பிப்பதும், திடீர் திடீரென டென்ஷனாவது, ப்ளேட்டுகளைப் போட்டு உடைப்பது, தன்னுடன் உறவு கொள்ளும் ஹீரோவை சேர்த்து வைத்து தங்களையே ப்ளூபிலிம் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்துக் கொள்வது, பின்னாளில் அதை அவளின் ட்ரம்ப் கார்ட்டாய் உபயோகப்படுத்தி வெல்வதும் என்று எல்லாமே ஏற்கனவே பார்த்த காட்சிகளாக வருவதால் டயர்டாகி விடுகிறது.
அவளின் ஹிஸ்டரிக்கலான மனநிலைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளும் நிலையில் டாக்டரிடமே தேவையில்லாத அட்வைஸ் எல்லாம் வேண்டாம் மாத்திரையை மட்டும் எழுதிக் கொடு என்று கேட்பதெல்லாம் ஓவர். அவள் எப்படி இவ்வளவு பெரிய நடிகையானாள்?. அவளின் அம்மாவிற்கும் அமைச்சருக்குமிடையே ஆனா  உறவு? நல்ல வசதியான குடும்ப பெண்ணாக காட்டப்படும் மஹிக்கு சூப்பர் ஸ்டாருடன் கல்யாணம் செய்து செட்டிலாகும் ஆசையுடன் இருப்பவர் எதற்காக திரையுலகில் தன் ஸ்டார் நிலையை உயர்த்திப் பிடிக்க போராட வேண்டும்?. பெங்காலி நடிகையுடனான லெஸ்பியன் செக்ஸ் எதற்கு?தன்னை ஒரு சிறந்த நடிகை என்று நிருபிப்பதற்காக ஆர்ட் பிலிமில் நடிப்பது. அந்த வங்காள இயக்குனர் ஏதோ அவர் ஒருவர்தான் நல்ல சினிமாவை கொடுப்பவர் என்பது போல பில்டப் செய்வது எல்லாமே மிகைப்படுத்தலின் உச்சமோ உச்சம்.  மொத்தத்தில் இந்த ஹீரோயின் Glam Doll
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

ராஜாதி ராஜ் said...

மதுர் ஏமாற்றி விட்டாரா?! மற்றும் ஒரு நல்ல விமர்சனத்திற்கு நன்றி.

Anonymous said...


//பெங்காலி நடிகையுடனான லெஸ்பியன் செக்ஸ் எதற்கு?//
அக்காட்சி வரும்போது லேசாக அசந்து(தூங்கி) இருப்பீர்கள் என நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் மறுபடியும் (உற்று) பார்க்க. கரீனாவுடன் இருக்கும் பெண்ணின் நிர்பந்தத்தால்தான் அந்த பரவச நிலை உண்டானது. ஏற்கனவே போதையில் இருக்கும் மஹிக்கு அப்போது ஆண் பெண் அனைவரும் ஞான திருஷ்டியில் சமமாக தோன்றி இருந்ததால் ஜோதியில் ஐக்கியமாகி இருப்பார் என்பது எனது கருத்து :)

Jackiesekar said...

சிவா கரெக்ட்டா சொல்லி இருக்கிங்க... மறு நாள் அவ கூட கரீனா பேசவே மாட்டா...

Cable சங்கர் said...

சிவா.. அது புரிந்தாலும் அந்த நிகழ்வு எதற்கு என்றுதான் கேட்கிறேன். ஜாக்கி.. இதைப் பற்றி ஒரு மணி நேரம் என்னிடம் சிவா பேசிவிட்டுத்தன் பின்னூட்டம் இட்டிருக்கிறான். அடுத்த நாள் காட்சிகளில் அவள் தான் லெஸ்பியன் இல்லை என்று சொல்லி பிரிவது எல்லாம் கொஞ்சம் டுபாக்கூர்தான். ஏனென்றால் அந்த ஆர்வம் இல்லாதவர்கள் என்னதான் போதையில் இருந்தாலும் செயலில் இறங்க மாட்டார்கள்.

Anonymous said...


போதையில் இல்லாதபோது கூட ஏதோ ஒரு கணத்தில் மனித மனம் இம்மாதிரி கிளர்ச்சிக்கு ஆளாகி விடுகிறது. அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம் என்பதென்னவோ நிஜம். தான் ஒரு லெஸ்பியன் என்று உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த மார்டினா நவ்ர த்திலோவா ஒரு முறை கூறியுள்ளார். நடிகைகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்யும் ஆர்வத்தில் இதையும் இடம்பெறச்செய்து இருக்கிறார் மது. அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

manjoorraja said...

இது போன்ற நடிகைகளின் கதையை படமெடுக்கும் போது ஏன் அவர்கள் ஹிஸ்டீரியா வந்தவர்களாகவே நடிக்கவைக்கப்படுகின்றனர். எல்லா நடிகைகளுமே அப்படிதான் என்பது போல அல்லவா இருக்கிறது