கேட்டால் கிடைக்கும்
வாகனங்கள் வெளியீடும் நச்சுப் புகை நம் சுற்றுப் புற சூழலை எப்படியெல்லாம் மாசுபடுத்துகிறது என்று கவலைப் பட்டு, மீண்டும் சைக்கிளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சைக்கிள் எடுத்துச் சென்றதால் கிட்டத்தட்ட அடிவாங்கி அவமானப்பட்டிருக்கிறார் நண்பர் ஒருவர். ஐடி துறையில் பணி புரியும் நண்பர் அரவிந்துக்கு எப்போது அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளைத்தான் பயன்படுத்துவார். நேற்று முன் தினம் “பீட்சா” படம் பார்க்க ஃபேம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு சைக்கிளில் சென்றிருக்கிறார். ஃபேம் மால் வளாகத்தில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம் சைக்கிள் பார்க் செய்ய அனுமதி கிடையாது என்பதால். இவர் ஏன் சைக்கிளை பார்க் செய்யக்கூடாது? வேண்டுமானால் பைக்குக்கு என்ன பணம் வாங்குகிறீர்களோ அதே தொகையை நான் தருகிறேன், படம் பார்க்க டிக்கெட் எடுத்துவிட்டிருக்கிறேன் நான் எப்படி சைக்கிளை வெளியே வைத்து விட்டு போவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த செக்யூரிட்டி “மாசம் எட்டாயிரம் சம்பளம் வாங்குறேன். உன் சைக்கிளை உள்ளே விட்டா என் வேலை போயிரும் நீ கொடுப்பியா?” என்று கேட்டிருக்கிறார். இதற்குள் அங்கே மூன்று குண்டர்கள் நிஜமாகவே குண்டர்கள் தான். அங்கே வந்து அவரது சைக்கிளை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, ஆபாசமாய் பேசி அடித்திருக்கிறார்கள். மூவரும் இங்கே வைக்க முடியாது. முடிஞ்சா எங்கே வேண்டுமானாலும் கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கோ.. என்று அலட்சிய பதிலும் கிடைத்திருக்க, அவமானப்பட்ட நண்பர் வேறு வழியில்லாமல் வேடிக்கைப் பார்த்த எவரும் அவருக்கு உதவிக்கு வராததால் சைக்கிளை வெளியே வைத்துவிட்டு படம் பார்க்கும் போது சைக்கிளுக்கு என்ன ஆயிருக்குமோ? என்று பதைப்பிலேயே பார்த்திவிட்டு வந்திருக்கிறார்.
உலகமே கோ க்ரீன் என்று சென்று கொண்டிருக்கும் போது சைக்கிளை பார்க் செய்ய கூடாது என்று சொல்வது எவ்வளவு அநியாயமோ அதைவிட அநியாயம் சைக்கிள் கொண்டு வந்தவரை ஆபாசமாய் பேசி குண்டர்களை வைத்து அடித்திருப்பதும், அவமானப்படுத்தியிருப்பதும். இந்த குண்டர்கள் பற்றிய செய்தி உண்மையே ஏனென்றால் நானே ஒரு முறை இந்த குண்டர்களிடம் போராடி நடு ரோட்டில் வாகனத்தை வைத்து போலீஸை வரவழைத்து ப்ரச்சனை செய்து அவர்களை அடக்கியிருக்கிறேன். இவர்க்ளுக்கு போலீஸாரும் உடந்தை என்பது உ.கை.நெ.கனி. மால்களில் சைக்கிள் ஏன் எடுத்து வரக்கூடாது? அப்படி அனுமதியில்லை என்றால் ஏன் அதை வாசலில் போர்ட்டு போட்டு தெரிவிக்க கூடாது?. தியேட்ட்ரில் டிக்கெட் எடுக்கும் போதே அதில் சைக்கிளில் வந்தால் எங்கள் மாலில் அனுமதி கிடையாது என்று ஏன் தெரிவிக்கவில்லை. குண்டர்களை வைத்து நிர்வாகம் நடத்துவதையும் எதிர்த்து கேட்டால் கிடைக்கும் குழுவின் சார்பாக ஃபேம் நிர்வாகத்திடம் போராட இருக்கிறோம். உங்கள் ஆதரவு எங்களூக்கு இருக்கும் என்று நம்பிக்கையோடு அடுத்த கட்ட நடவடிககையை நோக்கி.. மேலும் விபரங்களுக்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பொது மக்கள் குடிக்கும் பாலில் சுமார் 68 சதவிகிதம் கலப்படம் இருப்பதாய் மத்திய அரசு அறிவித்துள்ளது. என்னடா இது ஒரு அரசே இப்படி சொல்லியிருக்கிறதே என்று விசனப்பட்டாலும், அட்லீஸ்ட் இந்த விஷயத்துலயாவது நேர்மையா ஒத்துட்டிருக்கேன்னு சந்தோஷம் வரத்தான் செய்யுது. கண்டுபிடிச்ச ஸ்பீடுல கலப்படத்தை தடுக்கிறதுக்கு நடவடிக்கையை துரித கதியில எடுத்தா இன்னும் சந்தோஷமா இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஊத்திக் கொண்டிருக்க, மெரினா, அட்டகத்தி, பீட்ஸா, கலகலப்பு, ஓகே.ஓகே போன்ற சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் முதலீட்டு படங்கள் வெற்றியடைவது மகிழ்ச்சியாயிருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கும் அவர்கள் பின்னால் ஓடும் தயாரிப்பாளர்களுக்கு ரசிகர்கள் விடுத்திருக்கும் செய்தி நல்ல படத்தை கொடுங்க, பெரிய நடிகர்கள், பட்ஜெட் தேவையில்லை என்பதுதான்.அதிலும் சமீபத்திய முகமுடி, தாண்டவம், மாற்றானுக்கு கொடுத்த அடி செம்ம அடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@]
சாப்பாட்டுக்கடை ஃபேஸ்புக் குழுவிற்கு கிடைத்த ஆதரவைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதன் மூலம் இன்னொரு நல்லதும் இருக்கிறது. எந்த ஊரில் எந்த உணவகத்தில் சாப்பிடக்கூடாது என்று அங்கே தங்கள் அனுபவங்களைக் கூறும் நண்பர்கள் மூலமாய். மேலும் சில புதிய உணவகங்கள் பற்றியும் அறிய முடிகிறது.மேலும் பல புதிய சாப்பாட்டுக்கடை தகவல்களுக்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
அஞ்சு ரூபா குறைவா கொடுத்தா சரக்கு கொடுப்பியா?கொடுப்பேங்க.. அப்ப இப்ப கூட நான் அப்புறம் அடுத்த முறை நீ கேட்ட எக்ஸ்ட்ரா 5 ரூபா தர்றேன்.ங்கே
அஞ்சு ரூபாய்க்கு பாக்குறீங்க. அவனவன் கோடில ஊழல் பண்றான் அதை கேக்க மாட்டேன்குறீங்க?. நான் முதல் இங்கேர்ந்து கேட்க ஆரம்பிச்சிருக்கேன் ங்கே
எனக்கென்னவோ அதுதான் சரி என்று தோன்றியது அதான்..:))
சுற்றுப்புற சூழலை முக்கியமாய் கருதும் சிங்கை அரசு ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவில்லை ஏன் ?
சந்தடி சாக்கில் காதல் தோல்வியடைந்தவர்கள் ப்ளாக் ஆரம்பித்து கவிதை எழுதுவதை நக்கல் அடித்திருப்பது # க்யூட்
ப.கோ.பிரபாகரின் சிறுகதையில் மவுண்ட்ரோட் தேசிய துக்க தின தூர்தர்ஷன் போலன்னு எழுதியிருக்காரு. #க்யூட் நாஸ்டால்ஜியா
குமுதத்தில் கவுண்டர் மற்றவர்களை பற்றி அடித்த நக்கல்கள் பற்றிய கட்டுரை அட்டகாசம். நானே நேரில் சில சமயம் கேட்டிருக்கிறேன்.:))
இந்த வாட்டி கொலு டிசைன் பண்ணி அரேஞ்ச் பண்ணது என் பொண்ணுதான். அவளுக்கு பாத்திட்டிருக்கோம் - கொலு டிஸ்கஷன்ஸ்
செராங்கூன் ரோட்டில் மிளகாய், மசாலா அரைக்கும் நம்மூர் மாவு மிஷின் கடை ஒன்றை தும்பலோடு க்ராஸ் செய்தேன்.
புதிதாய் தாவணி கட்டி நிமிடத்திற்கொரு முறை மாராப்பை சரி செய்து கொண்டு யாரேனும் பார்கிறார்களா? என்றலைபாயும் குட்டிப் பெண்கள் க்யூட் #Golu
சுண்டலில் இத்தனை வகைகளா? - நவராத்திரி அவதானிப்பூ
கொலுவில் லேசான வெட்கத்துடன் ஏதாவதுஒரு குட்டிப் பாட்டை பாடிவிட்டு முகம் மலர பாராட்டை எதிர்பார்க்கும் பெண்களின் ரியாக்ஷனில் ஆயிரம் கதை.
துரை தயாநிதி நிஜமாவே காணாம போயிட்டாரா? அப்பா அம்மாவை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் நாலு தட்டு தட்டினா சொல்லப் போறாய்ங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
அஞ்சு ரூபா குறைவா கொடுத்தா சரக்கு கொடுப்பியா?கொடுப்பேங்க.. அப்ப இப்ப கூட நான் அப்புறம் அடுத்த முறை நீ கேட்ட எக்ஸ்ட்ரா 5 ரூபா தர்றேன்.ங்கே
அஞ்சு ரூபாய்க்கு பாக்குறீங்க. அவனவன் கோடில ஊழல் பண்றான் அதை கேக்க மாட்டேன்குறீங்க?. நான் முதல் இங்கேர்ந்து கேட்க ஆரம்பிச்சிருக்கேன் ங்கே
எனக்கென்னவோ அதுதான் சரி என்று தோன்றியது அதான்..:))
சுற்றுப்புற சூழலை முக்கியமாய் கருதும் சிங்கை அரசு ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவில்லை ஏன் ?
சந்தடி சாக்கில் காதல் தோல்வியடைந்தவர்கள் ப்ளாக் ஆரம்பித்து கவிதை எழுதுவதை நக்கல் அடித்திருப்பது # க்யூட்
ப.கோ.பிரபாகரின் சிறுகதையில் மவுண்ட்ரோட் தேசிய துக்க தின தூர்தர்ஷன் போலன்னு எழுதியிருக்காரு. #க்யூட் நாஸ்டால்ஜியா
குமுதத்தில் கவுண்டர் மற்றவர்களை பற்றி அடித்த நக்கல்கள் பற்றிய கட்டுரை அட்டகாசம். நானே நேரில் சில சமயம் கேட்டிருக்கிறேன்.:))
இந்த வாட்டி கொலு டிசைன் பண்ணி அரேஞ்ச் பண்ணது என் பொண்ணுதான். அவளுக்கு பாத்திட்டிருக்கோம் - கொலு டிஸ்கஷன்ஸ்
செராங்கூன் ரோட்டில் மிளகாய், மசாலா அரைக்கும் நம்மூர் மாவு மிஷின் கடை ஒன்றை தும்பலோடு க்ராஸ் செய்தேன்.
புதிதாய் தாவணி கட்டி நிமிடத்திற்கொரு முறை மாராப்பை சரி செய்து கொண்டு யாரேனும் பார்கிறார்களா? என்றலைபாயும் குட்டிப் பெண்கள் க்யூட் #Golu
சுண்டலில் இத்தனை வகைகளா? - நவராத்திரி அவதானிப்பூ
கொலுவில் லேசான வெட்கத்துடன் ஏதாவதுஒரு குட்டிப் பாட்டை பாடிவிட்டு முகம் மலர பாராட்டை எதிர்பார்க்கும் பெண்களின் ரியாக்ஷனில் ஆயிரம் கதை.
துரை தயாநிதி நிஜமாவே காணாம போயிட்டாரா? அப்பா அம்மாவை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் நாலு தட்டு தட்டினா சொல்லப் போறாய்ங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆவணப்படம்
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் நடக்கும் விபச்சார ராக்கெட்டைப் பற்றிய ஆவணப்படம். இது அங்கிருக்கும் ஜியோ டிவியில் ஒளிப்பரப்பானதாம்.
சமீபத்திய பவன் கல்யாண் தெலுங்கு படமான கேமராமேன் கங்காதோ ராம்பாபு படத்தில் தெலுங்கானா பற்றி வந்திருக்கும் வசனத்தை எதிர்த்து ஹைதராபாத்தில் பெரும் கலவரம் உருவாகியிருக்கிறது. தெலுங்கானா வேண்டாமென்றும் நாமெல்லாம் ஒரே ஊர், ஒரே மாநிலம்,எதற்கு பிரிவினை என்ற கோஷத்தை வலியுறுத்தி பவன் பேசிய வசனத்திற்குத்தான் இத்தனை களேபரங்கள். தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் படம் வெளிவந்து ரெண்டு நாட்களுக்கு பின் தான் ஆரம்பித்திருப்பது ஏதோ ஒரு வகையில் இடறுகிறது. தெலுங்கானாவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியில் அண்ணன் சிரஞ்சிவி இருக்க, இந்தப்படத்தின் மூலம் பவன் தன்னையும் ஒரு அரசியல் ஐகானாக காட்டிக் கொள்ளும் முயற்சி இருக்க, இம்மாதிரியான கருத்துக்கள் எந்தவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தேதான் வைத்துவிட்டு, பின்னால் பிரச்சனை வந்தபின் எடுத்துவிடுவது என்ற நாடகம் அரங்கேறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. படத்திற்கு விளம்பரமும் ஆச்சு, தன் மீதான மீடியா கவனத்தையும் திருப்பியதாய் அமையும் என்று கணக்கு எடுபட்டுவிட்டது என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்ரீரங்கத்தில் பிரமணாள் கஃபே என்ற பெயரில் நடத்தப்படும் ஓட்டலின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், அவர்கள் பிரமணாள் என்று போட்டத்தால் சூத்திரர்கள் என்ற ஓர் இனம் இருக்கிறது என்பது மக்களுக்கு சுட்டிக் காட்டும் படியாய் இருக்கிறது என்றும், அது தவிர அந்த ஓட்டல்காரர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இருப்பதாகவும் அதனால் தான் இப்படி சொல்லியும் பெயரை எடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் என்று சொல்லி போராட்டம் நடத்தியிருக்கிறார்களாம். இதில் ஏதோ இடப் பிரச்சனையோ, அல்லது தனிப்பட்ட பகையையோ வைத்து ஆடும் ஆட்டமாகவே தோன்றுகிறது. ஊர் உலகத்தில் அவனவன் நாயுடு, முதலியார், என்று அவரவர் ஜாதிப் பெயரை வைத்துக் கொண்டு ரோட்டுக்கு, கடைக்கு என்று வைத்திருக்கும் போது இது மட்டும் அவர்களை குத்துகிறதா?. கேட்டால் இது ஜாதியை குறிப்பிடவில்லை வர்ணத்தைக் குறிக்கிறாது என்று ஜல்லியடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் தன் கடைக்குள் மற்றவர்களை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னால் தான் தவறு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆடல்ட் கார்னர்
Post a Comment
12 comments:
கேட்டால் கிடைக்கும் போராட்டம் மிக நியாயமானது. இப்படி செய்தால் என்ன? மீண்டும் ஒரு நண்பரை சைக்கிளோடு அனுப்பி விட்டு சற்று மறைவாக இருந்து நடப்பவைகளை (அலை பேசி) கமிரா மூலம் பதிவு செய்து விட்டு அதையும் வைத்து கொண்டு போராடினால் வலு சேர்பதாக இருக்காதா? என் சிற்றறிவுக்கு எட்டியது.!
KalaKalappu Nalla Padamama????
http://www.youtube.com/watch?v=WSDvRkmTNA4
sankar sir,
you can see the video, and post your comments in your website
//பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் நடக்கும் விபச்சார ராக்கெட்டைப் பற்றிய ஆவணப்படம். இது அங்கிருக்கும் ஜியோ டிவியில் ஒளிப்பரப்பானதாம். // எல்லா நாட்டிலும் இப்படி ஒரு புறம் நடந்து கொண்டே இருக்கிறது. வறுமைக்காக பெண்களும், போகத்திற்காக அவர்களை உபயோகிக்கும் ஆண்களும்...! வயிறு பசியும் , உடற்பசியும் இருக்கும் வரை இதை முழுதுமாக நிறுத்துவது கஷ்டம்!
ஸ்ரீரங்கம் ஹோட்டல் குறித்து உங்களது கருத்து மிகவும் நியாமானது .
ஜாதி என்பது வேறு; வருணம் என்பது வேறு; இதே உணவு விடுதியில் அய்யர் உணவகம் என்று போட்டு இருந்தால்கூட திராவிடர் கழகம் எதிர்ப்பு வந்திருக்காது. பிராமணாள் என்பது ஜாதியல்ல - வருணத்தின் பெயர் - இந்து மத சாஸ்திரப்படி பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; சத்திரியன் பிர்மாவின் தோளில் பிறந்தவன்; வைசியன் பிர்மாவின் இடுப்பில் பிறந்தவன்; சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன்.
பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் மட்டுமல்ல; இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான்! சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர்; பிராமணர்களுக்கு ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 9).
//கேட்டால் இது ஜாதியை குறிப்பிடவில்லை வர்ணத்தைக் குறிக்கிறாது என்று ஜல்லியடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் தன் கடைக்குள் மற்றவர்களை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னால் தான் தவறு.
//
ரொம்ப சரி
என்னங்க நீங்களும் காமெண்ட் மாடரேஷன் ஆரம்பிச்சுட்டீங்க! என்னை மாரி ஆட்களுடைய பின்னூட்டத் தொல்லை தாங்கமுடியலையா? :=))))
" ஃபேம் நிர்வாகத்திடம் போராட இருக்கிறோம்"
என் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்
pizza ok when comparing to other films of big heros,second half sothappal
a resolution to boycot brahmin hotels was once introduced in a dravidar kazhagam conference.this resolution was defeated by the efforts of c.n.annadurai
ராஜன் லீக்ஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலை உலக Bloggers union சார்பாக அண்ணன் கேபிள் சங்கர் மற்றும் அண்ணன் ஜாக்கி சேகர் மற்றும் சின்ன அண்ணன் சிபி செந்தில் குமார் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டும். மேலும் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்த வேண்டும்.
Post a Comment