Thottal Thodarum

Oct 29, 2012

கொத்து பரோட்டா - 29/10/12

புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு  முன் அந்த கட்டிடங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய என்ன வசதிகள் செய்திருக்கிறார்கள் என்பதை பற்றி நமது மாநகராட்சி கவலைப் படுகிறதா இல்லையா? என்றே தெரியவில்லை. முக்கியமாய் திநகர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் டிராபிக், மற்றும் பார்க்கிங் ப்ரச்சனைகளை சொல்லி மாளாது. சரி ஒரு காலத்தில் கட்டிங் வாங்கிக் கொண்டு ஏழு மாடி எட்டு மாடியெல்லாம் கட்ட இடம் கொடுத்துவிட்டார்கள்.  ஆனால் பார்க்கிங் பிரச்சனைகள் தலைவிரித்தாடும் காலத்தில் சென்னையில் அதுவும் ஜி.என்.செட்டி சாலையில் வாணிமஹாலுக்கு அருகில் புதியதாய் திறக்கப்பட்டிருக்கும் போத்தீஸின் பன்னிரெண்டு மாடி பொத்தீக்குக்கு பார்க்கிங் பிரிட்ஜுக்கு கீழேயும், இடது பக்க ராமகிருஷ்ணா ஸ்கூல் க்ரவுண்டை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே.. ஏதோ ஒரு சின்ன பார்க்கிங் இடத்தை மட்டும் பேருக்கு வைத்துவிட்டு, ரோட்டில்தான் பார்க் செய்ய விடுகிறார்கள். அடித்தளத்தைக் கூட இவர்களின் கடை வியாபாரத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசு இதை உடனடியாய் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேம் தி.நகர் என்றில்லாமல் இனி எல்லா இடங்களிலும் சாலையிதான் பார்க்கிங் என்றால் எத்தனை ஓவர் பிர்ட்ஜுகள், சப்வேக்கள் கட்டினாலும் ட்ராபிக் ஜாம் ஓயாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@



லைவ் ரிலே என்பதே ஒருவிதமான டகால்டிதான். ஏனென்றால் ஒரு இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஓ.பி வேன் மூலமாகவோ.. அல்லது அங்கிருக்கும் ப்ராட்பேண்ட் வழியாகவோ அப்லிங் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்து சாட்டிலைட்டுக்கு சுமார் 36ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சேட்டிலைட்டை அடைந்து, அங்கிருந்து பூமிக்கு மீண்டும் அதே கிலோமீட்டர்களை கடந்து நம்முடைய ஒளிபரப்பு கருவகளின் வழியாய் நம் டிவியை அடையும் போது ஒரு நிமிடமாவது தாமதப்பட்டிருக்கும். ஒரே வீட்டில் டிஜிட்டல் பாக்ஸ் மூலமாய் பார்க்கும் போதும், அனலாக் மூலமாய் ரெண்டு டிவிக்கள் வழியே பார்க்கும் போதும் இருபது செகண்டாவது டிலே இருக்கும் அதை கவனித்தீர்கள் என்றால். சரி கேபிளின் கதையில் எழுத வேண்டியதை இங்கே ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பீர்களானால் சமீபத்தில் ஒலகிலேயே மிகத் தாமதமான லைவ் ஒளிப்பரப்பிய புகழ்  சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியை ஒளிப்பரப்பின விஜய்டிவியையே சாரும். 11.30 மணிக்கெல்லாம் நேரடி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் யார் யார் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியை பேஸ்புக், ட்வீட்டர்லில் அறிவித்துவிட, இவர்கள் மக்களிடையே ஓட்டு போடுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டே விளம்பரங்களாய் போட்டுத் தள்ளி எல்லா பக்கங்களிலும் காசு பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு தனியாய் ஒரு கேஸ் போட வேண்டும். பத்து மணிக்கு மேல் எஸ்.எம்.எஸ் ஓட்டு போட்டவர்களுக்கு அவர்களுடய பணத்தை வாபஸ் கொடுக்க வேண்டும். இணையதளத்தில் ஓட்டு போடுங்கள் என்ற அறிவிப்பு கொடுத்துக் கொண்டிருதார்களே தவிர அவர்களது சர்வர் டவுனாகி போய் மணிக்கணக்காகிவிட்டது. எல்லாம் பணம் செய்யும் விளையாட்டு. என்னை பொறுத்தவரை பாடியதை வைத்து முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பிரகதிக்குதான் கொடுத்திருக்க வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று மாலை 3 மணிக்கு பிரசாத் லேப்பில் நான் வசனமெழுதியிருக்கும் “ஈ.கோ” படத்தின் ட்ரைலர் வெளியீடும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடக்கவிருக்கிறது. இதற்கு முன் வேறு சில ப்ரொபைலுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்திருந்தாலும், வசனகர்த்தாவாக நான் சந்திக்கப் போகும் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு. இதற்கு அடிகோளிட்டு என்னை உதவி வசனகர்த்தாவாக எழுதப் பணித்து ஆதரவு அளித்த இயக்குனர் பத்ரி, இயக்குனர் சுந்தர்.சி.முழு படத்திற்கு வசனமெழுத ஆதரவும், அன்பும், வாய்ப்பும் அளித்த நண்பர் இயக்குனர் சக்திவேலுக்கு என் நன்றிகள் பல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விஜயகாந்தை பார்த்தால் பாவமாய் இருக்கிறது. அரசியல்வாதியாய் இருப்பதில் இருக்கும் கஷ்டங்களில் ஒன்று இக்கட்டான நேரங்களில் கோபப்படாமல் சமாளிப்பது ஒரு பெரும் கலை. அது எனக்கு தெரிந்து தாத்தாவுக்கும், சமீப காலங்களில் ஸ்டாலினுக்கு மட்டுமே கைவந்திருக்கிறது. தாத்தா இதில் டாக்டரேட் வாங்கியவர். சமயங்களில் அவரது பதில் “என்ன நீ கையப் பிடிச்சு  இழுத்தியா” ரேஞ்சுக்கு இருந்தாலும் பதிலுக்கு கேள்வி கேட்க முடியாது என்று தெரிந்ததால் கம்மென போய்விடுவார்கள். ஜெவிடம் அந்த ஆட்டமே கிடையாது. பல சமயங்களில் பதிலே கிடைக்காது. வெகு பல சமயங்களில் அப்பாயிண்ட்மெண்டே கிடைக்காது.  என்ன தான் அந்த டிவிக்காரர் ஜெயா டிவி ஆள் என்று தெரிந்து காண்டாகித்தான் கத்தினார் என்ற செய்தி மறைக்கப்பட்டிருந்தாலும், ஆட்சிக்கு வர ஆசைப்படும் விஜயகாந்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். பொறுமையாய் பதில் சொல்வது எப்படி என்று கலைஞரிடம் ஒரு வாரம் இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஜெவை சென்று பார்த்தது எப்படி ஒரு நாடகம் என்று அறிவித்தீர்களோ அதே போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியாவது கற்று கொள்வது உங்களது எதிர்காலத்திற்கு நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
கேட்டால் கிடைக்கும் பகுதியையும், நம் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர் சமீபத்தில் ஒரு டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் 100 ருபாய் சரக்குக்கு 20 ரூபாய் மேல் வாங்கியதற்காக போராட்டமே நடத்தியிருக்கிறார். கடைக்காரன் என்ன பேசியும் உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் நூறுக்கு போன் அடித்து போலீசை வரவழைத்திருக்கிறார். வந்த போலீஸ் உள்ளே சென்று கடையில் சம்பந்தப்பட்ட ஆளிடம் பேசிவிட்டு வெளியே வந்து “என்னப்பா குடிச்சிட்டு கலாட்டா பண்றியா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப கடைக்காரன் ஆமா சார் உள்ள வந்து அடிக்கிறாரு என்பது போல சொல்லியிருக்கிறார். இவருடன் உடன் இருந்த மூன்று நண்பர்களில் இரண்டு பேர் எஸ்ஸாகிவிட, அதிக விலை கொடுப்பதைப் பற்றி புகார் செய்ய வேண்டுமென்றால் உடனடியாய் ஸ்டேஷனில் வந்து புகார் கொடுக்க வேண்டும் அப்போதுதான் ந்டவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். அது வரை தைரியமாய் போராடியவர் ஸ்டேஷனில் கூட்டிக் கொண்டு போய் அப்பாவிகளை நொறுக்கும் காட்சிகள் எல்லாம் தொடராய் நினைவில் ஓட, வேறு வழியில்லாமல் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்காமல் வந்துவிட்டார். இது பற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்து பேசினார். நீங்கள் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அடுத்த நாளாவது போய் புகார் கொடுத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று சொன்னேன். உடன் அந்த நடவடிக்கையை எடுப்பதாய் உறுதி அளித்தார். நம் பதிவுகளைப் பார்த்து அதனால் இம்மாதிரியான கேட்கும் உறுதி எடுப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. நிச்சயம் நம் ஒருவனால் இந்த சமூதாயம் மாறுமா? என்று யோசிக்காமல் ஒவ்வொருவரும் இம்மாதிரி நமக்கெதிராக நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் கேட்டால் கிடைக்கும் என்பது உறுதியாகிவிடும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சின்னப் பையன் என்பதை மீறி பாடலுக்கான பரிசு என்று கொடுத்தால் பிரகதிதான் டைட்டில் வின்னராக இருக்க வேண்டும். ம்ஹும்

கடந்த மூன்று நாட்களாய் ஜலதோஷம், தொண்டை வலி, இருமல்.. ஜுரம் வந்த ஸ்பீடுலேயே போக இதுங்க மட்டும் இம்சை தாங்கலை.

ஸ்டேடியத்துல எல்லாரும் பெருக்கி முடிச்சி, பசங்க எல்லாம் வின்னிங் டைம்லைனை டிவில பார்த்துட்டிருக்காங்களாம். விஜய் டிவி லைவ்

என்னதான் நாம் ராஜாவை கொண்டாடினாலும், இளைய தலைமுறையினருக்கு ரஹ்மான் தான் ஐகானாய் இருக்கிறார் என்பது உ.கை. நெ.கனியாய் தெரிகிறது.

இந்த காம்பியரிங் அறுவையை யாராச்சும் நிறுத்த சொல்லுங்களேன் முடியலை.. விஜய் டிவி சூப்பர்சிங்கர் ஜூனியர் 3

எனக்கென்னவோ இம்முறை எல்லா பாடல்களும் ரஹ்மானின் பாடல்களாகவும், அதிலும் டப்பிங் பட பாடல்களாய் இருந்ததால் எடுபடவில்லையோ என்று தோன்றுகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல். சன் டிவியின் டி.ஆர்.பியில் பெரும் ஓட்டை நிச்சயம்.

எல்லோரும் அவரவர் ஜாதியை பெருமையாய் போட்டுக் கொள்ளும் போது ஐயர், ஐயங்கார் என்று போட்டுக் கொள்வதில் என்ன தவறு? டவுட்டு.

கரண்டு கட்டுக்கு காரணம் அம்மா ஆட்சியில்லையாம் கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சிதான் காரணமாம். ஜெயாடிவியில் அம்மா

சினிமா விமர்சனம் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்தினாங்கன்னு கேஸ் போட முடியுமா வக்கீல்ஸ்..

வவ்வால் பசங்க படம் பிட்ஸாவின் ஓட்டத்திற்கு மேலும் மெருகூட்ட வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.:))

துப்பாக்கி பாதி இந்தி பாதி இங்கிலீஷ் படம் போலருக்கே

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சில பல கொலைகள், கிலோ கணக்கில் நகை திருட்டுக்கள் அதுவும் பட்டபகலில். ஆந்திரா போன்வங்க திரும்ப வந்திட்டாங்களோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்த ஒரு பாடலுக்காகவே பெரிய ஹிட்டான படம். நம்ம ரஜினி கூட நடித்திருப்பார். ஸ்ரீதேவி டபுள் ஆக்‌ஷனில் பழைய சீதா அவுர் கீதாவை உல்டா செய்திருப்பார்கள். இயக்குனர் பங்கஜ் பராஷார். இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.இந்த பாடல் முழுவதிலும்  ஸ்ரீதேவியின் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், குறுகுறுப்பும், அந்த ஸ்டைலான ஆட்டத்தையும் பாருங்கள் . ம்ஹும்.. இந்த பாடல் ஹிட்டானதற்கான காரணம் புரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Boobs are proof that men can focus on two things at once.


Post a Comment

16 comments:

unmaiyalan said...

ஈகோ ...இதற்க்கு தமிழ் அர்த்தத்தில் வேறு வார்த்தை கிடைக்கவில்லையா ?....எப்படியோ ...படம் வரட்டும் பார்ப்போம் .....காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ...உங்கள் விமர்ச்சனம் பார்ப்போம் ...

moe said...

Why do you guys pay money to vote?

சுரேகா said...

// ஒவ்வொருவரும் இம்மாதிரி நமக்கெதிராக நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் கேட்டால் கிடைக்கும் என்பது உறுதியாகிவிடும்.//

மிகச்சரி!
கேட்டால் கிடைக்கும் என்று எல்லோரும் நினைத்தால் போதும்...!!

இந்தவாரம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரு கலாட்டா நடந்தது.

அதையும் எழுதுகிறேன்..!!

IlayaDhasan said...

கேட்டால் கிடைக்கும் நல்ல விஷயம் தான் ...ஆனா 'தண்ணிக்' கெல்லாமா? அந்த நூத்தி இருபது ரூபா மிச்சமின்னு எல்லோரும் மாதிரி கடைங்கள
புறக்கணிகலாமே! அப்படி செஞ்சா கேக்காமலே கிடைக்குமே!

Cable சங்கர் said...

unmaiyalan

ஈ.கோவிற்கு பின் தமிழ் பெயர் இருக்கிறது. இந்த மாதிரியான கேள்விகள் தான் படத்தின் மீதான கவனிப்புகளை ஏற்படுத்தும். அப்புறம் நான் பங்கு பெறும் படங்களைப் பற்றி நான் விமர்சிப்பது இல்லை. அது உங்கள் பணி.:)

Cable சங்கர் said...

தண்ணிக் கெல்லாமாவா? அதில் மக்களிடம் அடிக்கப்படும் கொள்ளை எத்தனை கோடிகள் தெரியுமா? எதில் அடித்தாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் அதிகம் கேட்டால் கொடுக்க மாட்டேன். போலீஸ் வந்தாலும். பயப்பட மாட்டேன்.

புதுகை.அப்துல்லா said...

யய அது எனக்கு தெரிந்து தாத்தாவுக்கும், சமீப காலங்களில் ஸ்டாலினுக்கு மட்டுமே கைவந்திருக்கிறது.

//

அண்ணே, உங்களுக்கு இன்னொருத்தரையும் தெரியுமே :)

Arun Kumar said...

//ஒரே வீட்டில் டிஜிட்டல் பாக்ஸ் மூலமாய் பார்க்கும் போதும், அனலாக் மூலமாய் ரெண்டு டிவிக்கள் வழியே பார்க்கும் போதும் இருபது செகண்டாவது டிலே இருக்கும் அதை கவனித்தீர்கள் என்றால்//

இரண்டு செகண்டுக்கு மேல் டிலே கிடையாது.

டாடா ஸகையின் அப் லிங் செண்டர் சென்னை மற்றும் புது தில்லியில் இருக்கிறது. எல்லா சேனல்களையும் பெற்று அப்லிங் செய்ய ஒரு செகண்ட் மட்டுமே ஆகும். நமது செட்டாப் பாக்ஸ் சிக்னலை பெற ஒரு செகண்ட். HD சேனல்கள் 3 செகண்ட் ஆகலாம்.

Unknown said...

தொலைபேசியில் தங்களிடம் தெரிவித்ததை இவ்வளவு அழகாக கட்டுரையாக மாற்றியதற்கு மிக்க நன்றி.

Cable சங்கர் said...

arunkumar டிஜிட்டல் என்றால் டாடா ஸ்கை மட்டுமேவா? கேபிள் டிவியில் கூட டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இருக்கிறது. இரண்டு செகண்ட் மூன்று செகண்ட் எல்லாம் கிடையாது.. சமயங்களில் அது அதிகமாகக்கூட இருக்கிறது.. நான் ஒரு கேபிள் ஆப்பரேட்டர் என்கிற முறையில் எனக்கு தெரிந்த அளவிற்கு செக் செய்து சொல்லியிருக்கிறேன். விநாடிகள் துல்லியமாய் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

உங்கள் பார்வைக்கு...

This happened at the restaurant. Let me explain.

We had been to several restaurants recently. I observed that "service tax" has been mis-used and charged to the customers like you and me.

Let me give an example.

Food and Beverage = Rs. 1000.00
Service Charges @ 10% = Rs. 100.00 (10% on the Food and beverage amount)
Service Tax @ 4.94% = Rs. 54.34 (4.94% on F&B + Service Charges)
VAT @14.5% = Rs. 145.00
Total = Rs. 1299.34

As per the definition - "Service Tax can be charged only for the services provided to the customer".

Now, see what is happening here in the abovesaid example.

Service Tax should be charged only on the Service Charges amount i.e Rs.100 and not on the entire amount (1000+100).

In this example, the customer should be charged only Rs 4.94, whereas he has been charged
Rs. 49.00 extra.

Where does this money go? Only the restaurant owner and the chartered accountants who work for them know.

· So, I have started asking them the questions - and surprised to see the reactions from the famous restaurants. Either they say: Sir we cannot change the format of the bill - so , we will recalculate and tell you the revised amount. You may pay only that.

· Sir, you do not need to pay the Service Tax amount itself.

I now have 3 to 4 restaurant bills, for which I have paid only the service tax - on the service charges and not on the total amount.

Every bill must carry the TIN number and Service Tax Number, if they charge it. So, I ask for the Service tax number if it is not available in the receipt that they provide.

We cannot go to any government official and ask them to get this right - because of our system.

Please remember - we cannot change any political leader - but we can change ourselves. If we change ourselves - things will change.

Please do share this with every one of your friends and known people.

Ask for the right tax calculation and pay only the tax which is supposed to be paid. Verify every bills and receipts that you make payment on.

துருவன் said...

adult corner lines are already poted in your blog. .

Unknown said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி

முத்து குமரன் said...

என் பார்வையில் முதலிடம் பெற தகுதியானவர் சுகன்யா, பின்பு யாழினி மற்றும் ஆஜித் இவர்கள் குரலில் ஒரிஜினாலிட்டி மற்றும் பாவம் இருந்தது. ஆனால் பிரகதி ஒவ்வொரு பாடலையும் அந்தந்த பாடகர் குரலில் இமிட்டேட் செய்தாரே ஒழிய வேறெந்த தனித்தன்மையும் காட்டவில்லை. நிகழ்ச்சிக்கு தேவைப்பட்ட கவர்ச்சி அவரிடம் இருந்தது தான் அவரது அதிகப்படியான தகுதி என்று நினைக்கிறேன். அது மட்டுமல்லாமல் திரைமறைவில் சில பேரங்கள் கூட நடந்ததாக என் நண்பர்(ஒரு நிருபர்) மூலமாக அறிந்தேன். உங்கள் தொடர்புகளை பயன் படுத்தி அதை கண்டறிந்து ஒரு கட்டுரை எழுத முடியுமா...?

Unknown said...

கேட்டால் கிடைக்கும் ஆம்..........
நான் கேட்டதால் திருப்பூர் டாஸ்மாக் கடை எண் 1910 ஊழியருக்கு சிறை கிடைத்தது.... 375 மிலி அளவுள்ள 200 MRP போட்டிருக்கும் JDF வகை மதுக்கு 210 எடுத்துவிட்டான் அறிவழகன் என்ற விற்பனையாளன்..... நான் வெளியே வந்து பிச்சை எடு 10 என்ன 20 போடறேன் என்றதுக்கு அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தினான்.... அடுத்த நாள் காலையில் திருப்பூர் ரூரல் போலிஸில் புகார் கொடுத்தேன் விசாரித்த எஸ் ஐ தென்னரசு FIR போட்டு ரிமாண்ட் செய்தார் 6 நாள் உள்ளே இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்தான்...

உடனே புகார் தெரிவிப்பது என்பது
நமக்குதான் ஆபத்து...

Ganpat said...

போத்திஸ் பிரச்சினையை எழுதியதிற்கு மிகவும் நன்றி.இதை பற்றி யாரும் எழுதவில்லை.
அதே சமயம் டாஸ்மாக் ஊழியர் ஒரு பத்து ரூபா அதிகம் வாங்கினார் என்பதற்கு காவல் நிலையம் செல்ல தயாராக இருக்கும் நாம்(சந்தேகமில்லாமல் இது ஒரு பாராட்ட படவேண்டிய செயல்தான்) ,அதை விட பலமடங்கு அதிக குற்றமான போத்திஸ் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.
:(