Thottal Thodarum

Oct 26, 2012

ஆரோகணம்.


சமீப காலமாய் சின்ன படங்களில் எல்லாம் ஆரோக்யமான விஷயங்களை விவாதிக்க தொடங்கியிருக்கும் காலமிது. வியாதிகள் எல்லாம் தமிழ் சினிமாவில் சிம்பதி கிரியேட் செய்ய மட்டுமே பயன்படுத்த உபயோகிக்கப்படும் காலங்களில் அதை பாஸிட்டிவாக எப்படி அப்ரோச் செய்வது என்று சொல்லியிருக்கும் படம் இந்த ஆரோகணம்.


பை போலர் டிஸாடர் வியாதியால் அவதிப்படும் விஜிக்கு ப்ரச்சனை என்னவென்று புரியாமல் அவளது கணவன் அவளை அநாதரவாய் விட்டுப் போக, தன் மனநிலை பிரச்சனையைப் பற்றி புரியாமல் தனியொருத்தியாய் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நிற்கையில ஒரு விபத்தில் சிக்குகிறாள். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
இனி சினிமாவில் ப்ளட் கேன்சர், ஸ்பிலிட் பர்சனாலிட்டிக்கு பிறகு அதிகமாய் பயன்படப் போகும் வியாதி இந்த பை போலர் டிஸாடராகத்தான் இருக்கும் போல. ஆனால் அதை கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் வியாதியாய் பிரஸ்தாபிக்காமல்,  சங்கீதத்தில் ஆரோகணமாய் சரிகமபதநி என்று எழும் வரிசைக்கு சொல்வதைப் போல  கொஞ்சம் கவனம் செலுத்தினால் எப்படி அதை பாஸிட்டிவாக மாற்றி மனநிலையை சரி செய்ய முடியும் என்பதை சொல்லியிருக்கும் வித்த்திற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கான திரைக்கதையை வைத்துக் கொண்டு 90 நிமிட திரைப்படமாய் ஆக்கும் போது அதன் வீர்யம் குறைந்து நீர்த்து போய்விடுகிறது என்பதை மறுக்க முடியாது.

விஜியின் அகண்ட பெரிய கண்கள் பட்த்தில் அவரது நடிப்புக்கு மிகவும் உதவியிருக்கிறது. மற்றபடி அவரது பெண்ணாய் வருகிறவருக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. ஜெயப்பிரகாஷின் கேரக்டர் ஏதோ ஒரு தெரிந்த அரசியல்வாதியை கிண்டலடிப்பது போல்  இருக்கிறது. ஆனால் அவரின் கேரக்டரினால் லேசான திரைக்கதை சுவாரஸ்யத்தை தவிர பெரிதாய் ஏதுமில்லை. அதே தான் சம்பத்தின் ப்ரெசென்சும்.

கேயின் இசையில் ப்ப்பில் பாடும் பாடலும், பின்ன்ணியிசையும் ஓகே. ஷண்முகசுந்திரத்தின் ஓளிப்பதிவு கேனான் 5டியில் தெளிவு. குறிப்பாய் விபத்துக் காட்சியிலும், ஹோட்டல் பப் பாடல் காட்சியிலும் அருமை. கிஷோரின் எடிட்டிங் ஆக்ஸிடெண்ட் சீனில் நச்.
எழுதி இயக்கியவர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன். இவரின் முதல் திரைப்படமிது. சுமார் 35 லட்ச ரூபாயில் எடுத்த படம் என்று சொன்னார்கள். நான்லீனியராய் ஆரம்பித்த திரைக்கதை அதிரடியாய் நம்மை திரைக்குள் இழுத்தது. முதல் ஐந்து நிமிடங்கள் கதை அரம்பித்த விதம் அட என்று எதிர்பார்க்க வைத்த்து. பையன் ஒருவன் பீச்சில் விளையடிக் கொண்டிருக்க, அவன் ஆட்டம்  முடித்து பள்ளிக்கு செல்ல, அங்கே முன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் காதல் தூதுவிட, இன்னொரு இட்த்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஜெராக்ஸ் எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவளுக்கு பதிலாய் வேறு ஒருத்தியை ட்ரெயின் செய்து கொண்டிருக்கிறாள் என்று சூசகமாய் சொன்னவித்த்திலும், அந்த மாத சம்பளத்தோடு, கல்யாண செலவுக்காக முதலாளி பணம் கொடுக்க, வேண்டாம் அம்மா திட்டுவாங்க என்று சொல்லுமிடத்தில் அவளின் அம்மாவைப் பற்றிய ஒரு பிம்பத்தை கொடுக்க, அட.. இவ்வளவு ஷார்ப்பாக காட்சிகள் வடிவமைக்கப் பட்டிருக்கிறதே என்று ஆச்சர்யப்படும் போது, காரில் இரண்டு உயர் வகுப்பு முதிர் பெண்கள் பயணித்தவாறு பேசும் டயலாக் மற்றும் அதன் பின்னணியில் உள்ள டீடெயிங் எல்லாம் சூப்பர்டா என்று சொல்ல வைக்க, அதன் பின்பு திரைக்கதையில் சுவாரஸ்யக் காட்சிகள் இல்லாமல் தள்ளாடி, மெல்ல ஒய்ந்து விட, அஹா என்று சொல்ல நினைத்து ம்ம் என்று சொல்லி முடிக்கும் படியாய் அமைந்துவிட்டது வருத்தமாகவே இருக்கிறது. ஒரு குறும்படத்திற்கான முயற்சியை திரைப்படமாக்கும் போது நடக்கும் விபத்துகளில் இந்தப் படமும் ஒன்றாகிவிட்டது. பை போலர் டிஸாடர்தான் கதையின் மையம் என்று ஆன பின்பு விஜிக்கு அவ்வியாதி வந்த காரணம் என்ன என்பதை இன்னும் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் திரைக்கதைக்காக மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பை போலர் டிஸாடரை குணப்படுத்த முடியும் என்று பாஸிட்டிவாக சொன்னதற்காக பாராட்டலாம்.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

CS. Mohan Kumar said...

//பையன் ஒருவன் பீச்சில் விளையடிக் கொண்டிருக்க, அவன் ஆட்டம் முடித்து பள்ளிக்கு செல்ல, அங்கே முன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் காதல் தூதுவிட, இன்னொரு இட்த்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஜெராக்ஸ் எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவளுக்கு பதிலாய் வேறு ஒருத்தியை ட்ரெயின் செய்து கொண்டிருக்கிறாள் என்று சூசகமாய் சொன்னவித்த்திலும், அந்த மாத சம்பளத்தோடு, கல்யாண செலவுக்காக முதலாளி பணம் கொடுக்க, வேண்டாம் அம்மா திட்டுவாங்க என்று சொல்லுமிடத்தில் அவளின் அம்மாவைப் பற்றிய ஒரு பிம்பத்தை கொடுக்க, அட.. இவ்வளவு ஷார்ப்பாக காட்சிகள் வடிவமைக்கப் பட்டிருக்கிறதே என்று ஆச்சர்யப்படும் போது, காரில் இரண்டு உயர் வகுப்பு முதிர் பெண்கள் பயணித்தவாறு பேசும் டயலாக் மற்றும் அதன் பின்னணியில் உள்ள டீடெயிங் எல்லாம் சூப்பர்டா என்று சொல்ல வைக்க, அதன் பின்பு திரைக்கதையில் சுவாரஸ்யக் காட்சிகள் இல்லாமல் தள்ளாடி, மெல்ல ஒய்ந்து விட, அஹா என்று சொல்ல நினைத்து ம்ம் என்று சொல்லி முடிக்கும் படியாய் அமைந்துவிட்டது வருத்தமாகவே இருக்கிறது. //

இம்மாம் பெரிய வாக்கியமா? கேபிள் மூச்சு விட்டுக்குங்க !

Cable சங்கர் said...

சில விஷயங்களை அப்படி எழுதுவது என் ஸ்டைல்.. மோகன் குமார் படிக்கிற நீங்க மூச்சு விட்டு படிங்க.. அத விட ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் என்பது போல.. நீங்கள் ஒவ்வொரு கமாவுக்கும் இடையே விஷுவலாய் நினைத்துப்பார்த்தால் பெரிய வாக்கியமாய் மூச்சு முட்டாது.

rajamelaiyur said...

இப்போது உள்ள நிலைமையில் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் தான் வெற்றி பெறுகிறது

தமிழ் பையன் said...

படத்தைப் போலவே உங்கள் விமர்சனமும் சுருக்கமாக இருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத்திலோ, தெலுங்கிலோ, அல்லது ஹிந்தியிலோ பார்த்திருந்தால் இன்னும் ஆதரவாக விமர்சிருத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.