நேற்று மாலை ஜோன்ஸ் ரோடில் உள்ள சப்வேயின் இடது பக்கம் உள்ள வழியில், மார்கெட் பக்கம் செல்வதற்காக போய்க் கொண்டிருதேன். அப்போது ஒரு இண்டர்நேஷனல் கால் வர வண்டியை சுவற்றோரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, போனை அட்டெண்ட் செய்து கொண்டிருந்தேன். திடீரென அந்த சிறு வழியில் ட்ராபிக் ஜாம் ஏற்பட, ஒரே ஹாரன் சத்தம். என்னவென்று பார்த்த போது எதிர் திசையில் ராங் ரூட்டில் நிறைய வண்டிகள் வழிமறித்திருந்ததுதான் காரணம். எல்லா வண்டிகளுக்கு முன்னால் இருந்தது ஒரு புல்லட். அதன் மீது ஆஜானுபாகுவாய் ஸ்மார்டாய் ஒரு கருத்த ஆள் அமர்ந்திருந்தார். என்னடா இது ட்ராபிக் ஜாமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து என்னைப் பார்த்து ‘அலோ.. வண்டிய எடுங்க” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த வழி பூராவுமே சுவற்றோரமாய் நிறைய வண்டிகள் பார்க் செய்யப்பட்டிருக்க, நான் வண்டியை வெகு ஓரமாய் நிறுத்தி போன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து வண்டிய எடு என்றால் எப்படி? என்று புரியாமல் நான் ஓரமாத்தானே இருக்கேன். நீங்க தான் ராங் ரூட்டுல வந்திருக்கீங்க? நீங்க வழிய விட்டாத்தானே போக முடியும் என்றதும். அவர் கடுப்பாகி ‘பப்ளிக் நியூசென்ஸ் பண்றியா? போலீஸை கூப்பிடட்டுமா?” என்று எகிறினார். எனக்கு சிரிப்புத்தான் வந்தது. “போலீஸைத்தானே கூப்பிடு இங்கே இருக்கேன். வா.” என்றதும் அவருக்கு கடுப்பாகிவிட்டது. “நீ அவ்வளவு பெரிய ஆளா?”
“தெரியலை முடிஞ்சா ஸ்டேஷன்ல போய் தெரிஞ்சுக்கலாம் வாங்க” என்றதும், அவர் கோபம் வெடிக்க “த்தா.. நானே போலீஸ் என்கிட்டேயேவா? பைக்கில உக்காந்து போன் பேசுறே? பப்ளிக் நியூசென்ஸ் பண்றே? உள்ளே போட்டுருவேன்” என்றார்.
“நீங்க ஐ.ஜியாவேணா இருங்க.. எனக்கு பிரச்சனை இல்லை. போலீஸா இருந்துட்டு ராங் ரூட்டுல வந்துட்டு கரெக்டா நின்னு போன் பேசுறவனை மிரட்டுவீங்கன்னா நானும் பாக்குறேன் எப்படி நீங்க என்னை உள்ள போடுவீங்கன்னு’ என்றதும், அவர் மேலும் கோபப்படலானார். திரும்பவும் ‘த்தா” என்று ஆரம்பிக்க, “தலைவரே தப்பா பேசுறீங்க அப்புறம் நீங்க வருத்தப்படுவீங்க” என்றேன். அதற்குள் சில பேர் என்னை மறித்திருந்த வண்டிகளை விலக்கி வழிவிட, வண்டிய தள்ளிக் கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்து என்னை அரஸ்ட் செய்வேன் என்று சொன்ன போலீஸ்காரருக்காக காத்திருந்தேன். வந்தவர் அவர் வண்டியை ஓரமாய் பார்க் செய்துவிட்டு வேகமாய் என்னை நோக்கி வந்தார்.
”என்ன நீங்க ப்ரச்சனை பண்றதுக்காகவே நிக்கிறீங்களா?”
“யாரு ப்ரச்சனை பண்றது. ராங் ரூட்டுல வந்திட்டு ஒரமா நின்னுட்டு இருந்தவனை கூப்டு ப்ரச்சனை பண்ணதுமில்லாம அரஸ்ட் பண்ணுவேன்னு வேற சொன்னீங்க. சரி அதான் எப்படி பண்றீங்கன்னு வெயிட் பண்றேன்” என்றவனை கோபமாய் பார்த்தார்.
“ஏங்க ட்ராபிக்ல பீக் அவர்ல ஜாம் ஆயிருக்கு அந்நேரத்துல சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க?”
“சார் முதல்ல தப்பு நான் பண்ணலை. ராங் ரூட்டுல வந்து ட்ராபிக்கை ஜாம் பண்ணினது நீங்க. அதுவுமில்லாம ஓரமா நின்னுட்டு போன் பேசினது தப்புன்னு வேற சொல்றீங்க.தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு சத்தமா பேசிட்டா பயந்திருவேன்னு மட்டும் நினைக்காதீங்க..”
“பப்ளிக் டிஸ்டர்பன்ஸ் பண்ண கேஸு என்னானு தெரியுமா”
“நானும் பப்ளிக் தான் ஒரமா நின்னு பேசிட்டிருந்தவனை டிஸ்டர்ப் பண்ணா என்ன அர்த்தம்?”
”நீங்க தேவையேயில்லாம பேசுறீங்க”
“சார்.. கொஞ்சம் நகர்துட்டு வழிய விடுங்கன்னு கேட்டிருந்தா நான் வழிய விட்டிருப்பேன். பதவிய வச்சிட்டு அசிங்கமா பேசுனா நான் ரூல்ஸ்தான் பேசுவேன்.”
“நான் நேர்மையான ஆளு தம்பி. காந்திய வழிய பின்பற்றுறவன். பத்து பைசா லஞ்சம் வாங்காதவன்”
“அது நிஜம்னா முதல்ல நீங்க ராங் ரூட்டுல வந்திருக்க கூடாது. ஒழுங்கா இருக்கிறவனை குத்தம் சாட்டியிருக்க கூடாது. ரோட்டோரம் கடை போட்டு காசு வாங்கிட்டு அலோவ் பண்ணியிருக்ககூடாது. இவ்வளவு வண்டிய சர்வீஸ் ரோட்டுல எப்படி ஓட்ட விடலாம்?. சர்வீஸ் ரோட்டுல எப்படி இவ்வளவு வண்டிய பார்க் பண்ண விடலாம்? இதையெல்லாம் கேள்வி கேட்காம ஓரமா நின்னுட்டு போன் பேசினவனை அரஸ்ட் பண்ணுவீங்கன்னு சொன்னீங்கன்னா பப்ளிக் ப்ரச்சனைத்தான் பண்ணுவோம். இதெல்லாம் நான் பண்ணலை என் டிபார்ட்மெண்டுல வேற ஆளூங்க பண்றாங்கன்னு சொன்னீங்கன்னா அதை சரி பண்ணிட்டு பப்ளிக்கை கேள்வி கேளுங்க” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன். அவர் ஏதும் சொல்லவேயில்லை.
கேபிள் சங்கர்
Post a Comment
25 comments:
thala..
raittu....
Shankar.. Hats off. Do we need terror face to talk like this? :)
I believe you were alone to raise your voice.. Most of the time I m with my family and when I started arguing like this, I will get a first hit from my family..
Singamle!!
super
ஃபர்ஸ்ட் கிளாஸ்....
இத காந்தி ஜெயந்தி இன்ஸ்பிரேஷன்னு கூட சொல்லலாம்....
ஆம்.....
1. அநீதிக்கு பயம் கொள்ளாமை....
2. சட்டப்படி நடந்து கொள்ளுதல்....
3. தன் கருத்தை அமைதியாக எதிராளிக்கு சொல்லுதல்......
4. தன் உரிமைகளை அறிந்திருத்தல்...
இப்படி தங்கள் அத்தனை செயல்களிலும் காந்தியிஸம்.......
சூப்பர் கேபிள்...... அப்புறம்.... ஒரு வேளை காந்தி ஜெயந்தி.... கடை லீவுன்னதால இவ்வளவு தெளிவா இருந்தீங்களோ....... பின்னியிருக்கீங்க....
Cable Sir,
Aduthathu paatu scene thane!!!!!
summa joke sir. Congrats,
Cheers
Christo
Cable Sankar VS CID Sankar
அது நிஜம்னா முதல்ல நீங்க ராங் ரூட்டுல வந்திருக்க கூடாது. ஒழுங்கா இருக்கிறவனை குத்தம் சாட்டியிருக்க கூடாது. ரோட்டோரம் கடை போட்டு காசு வாங்கிட்டு அலோவ் பண்ணியிருக்ககூடாது. இவ்வளவு வண்டிய சர்வீஸ் ரோட்டுல எப்படி ஓட்ட விடலாம்?. சர்வீஸ் ரோட்டுல எப்படி இவ்வளவு வண்டிய பார்க் பண்ண விடலாம்? இதையெல்லாம் கேள்வி கேட்காம ஓரமா நின்னுட்டு போன் பேசினவனை அரஸ்ட் பண்ணுவீங்கன்னு சொன்னீங்கன்னா பப்ளிக் ப்ரச்சனைத்தான் பண்ணுவோம். இதெல்லாம் நான் பண்ணலை என் டிபார்ட்மெண்டுல வேற ஆளூங்க பண்றாங்கன்னு சொன்னீங்கன்னா அதை சரி பண்ணிட்டு பப்ளிக்கை கேள்வி கேளுங்க”
எத்தனை கேள்வி . .
வெளிநாட்லேந்து திரும்புன
இந்தியன் தாத்தா இப்போ
சைதைலதான் இருக்காராம . . .
Salute Sankar
கேபிள் ஜி நடந்த சம்பவத்தை இங்கே பதிவாக போட்டு விட்டர்கள்.. நல்லது. இன்று எனது வலைப்பூவில் http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html
//இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),
மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள்? ?
//
உண்மைகள் , இவ்ளோ நியாயம் பேசுறவரு , அந்த பன்னாடைங்க காசு செலவழிச்சு டிக்கெட் எடுத்துட்டு ஏன் கடைசி நேரத்துல லூசு மாதிரி சொன்னானுங்கன்னு மட்டும் கேட்க்க அல்லது விளக்க மறந்துடீங்களே ஏனப்பா?
சங்கர் சார் அநீதியை கண்டு பொங்கியிருக்கீங்க
தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏங்க...நெசமாலுமே போலிஸ்கிட்ட “கேட்டால் கிடைக்கும்” தானே?
சங்கர்ஜீயா கொக்கா, போலிசுன்ன பயந்ததல்லாம் அந்த காலம். அதுவும் உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா.
சங்கர்ஜீக்கு ஜே.
ங்கோத்தா... காந்திய வழில நடக்குற என்கிட்டேயே ரூல்ஸ் பேசுறியான்னு கேக்கலையா அவரு...!;)
You are well known in a circle and probably will be able to mobilise support if the police (if he was real police) had taken you to the station. I wonder what will happen if an ordinary man with no contacts whatsoever - like me - rub the police on the wrong side. We hear a lot of stories where innocent people are arrested, tortured and even driven to death when the police cannot catch the real culprit. There may be one or two cases here and there which will attract public / media attention and some action may be taken against the police - like a transfer to another place for a few days before he returns to his territory. My feeling is that the man might not be a real police!
All the same, my congratulations to you for your courageous and righteous stand.
-R. J.
No one is above law!
Everyone must obey law.
ஆனா இந்த மாரி "அனானி"கள் திரியும் பதிவுலகில் அதை "எக்ஸக்யூட்" செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா நடுரோட்டில்? அது கேபிள் சங்கரிடமா?
ஆமா, கேபிள், இது எதுவும் நீங்க கண்ட கனவு, கினவு இல்லையே? :-)
போலீசாக இல்லாமலிருந்தால் ஒருவர் கெட்ட வார்த்தையை பிரயோகித்தும் இவ்வளவு அமைதியாக பதில் சொல்லி இருப்பீர்களா ? மென்னியைப் பிடித்திருக்க மாட்டீர்கள் ? சட்டப்படி நடப்பது பற்றியே அனைவரும் கருத்திடும் நேரத்தில், ஒருவருக்கு கூடவா அதிகாரத்திற்கு முன்பு சுய மரியாதை பலியாவது தோன்றவில்லை ? அல்லது இது சகஜம்தானே என எடுத்துக் கொள்ளப் பழகி விட்டோமா ? "கேட்டால் கிடைக்கும்" என்பதில் நுகர்வுப் பொருள், நியாயம் இவற்றோடு சுய மறியாதையை சேர்க்க முடியாதா என்ன?
Selvakumar’s questions are thought provoking. Even though the Policeman sweared at Cable so many times , he was helpless. Maybe he is more used to swearing. An innocent man would have been terrified . Cable should have sued that Policeman for swearing & got compensation. Getting water from hotels & restaurants are not a big deal. But confronting rogue policemen is the real deal .
One doubt:
//‘பப்ளிக் நியூசென்ஸ் பண்றியா? போலீஸை கூப்பிடட்டுமா?” என்று எகிறினா..//
//“த்தா.. நானே போலீஸ் என்கிட்டேயேவா? பைக்கில உக்காந்து போன் பேசுறே? பப்ளிக் நியூசென்ஸ் பண்றே? உள்ளே போட்டுருவேன்” என்றார்.//
Did he say both these lines?
-R. J.
I dont need to write a fiction over here R.J sir.
பாஸீ.. அவரே போலீஸ்-ஆ இருந்துகிட்டு, என்னாத்துக்கு, //‘பப்ளிக் நியூசென்ஸ் பண்றியா? போலீஸை கூப்பிடட்டுமா?” என்று எகிறினா..// -ன்னு சொல்லணும்.
ஒன்னு, அவரு பொய் போலீஸ்-ஆ இருக்கணும். இல்லே........ ;)
Dear Cable Sankar,
I didn't mean to doubt your version and just noted the anomaly in two statements by the man. Perhaps he was in mufti and didn't want to disclose that he was a police and later he would have been forced to say it when he was in a rage. Thanks for the understanding.
-R. J.
எனக்கு என்ன புரியலை-ன்னா, அந்த Music Director -அ, நீங்க ஒருமை-ல அவன் இவன்-ன்னு பேசினீங்க. இந்த post -ல, Police உங்கள ஒருமை-ல மற்றும் கெட்டவார்த்தைல பேசினாலும், நீங்க அவருக்கு மரியாதை குடுத்து பேசி இருக்கீங்க, எழுதி இருக்கீங்க.
//Selvakumar said:
போலீசாக இல்லாமலிருந்தால் ஒருவர் கெட்ட வார்த்தையை பிரயோகித்தும் இவ்வளவு அமைதியாக பதில் சொல்லி இருப்பீர்களா ? மென்னியைப் பிடித்திருக்க மாட்டீர்கள் ? சட்டப்படி நடப்பது பற்றியே அனைவரும் கருத்திடும் நேரத்தில், ஒருவருக்கு கூடவா அதிகாரத்திற்கு முன்பு சுய மரியாதை பலியாவது தோன்றவில்லை ? //
Same blood Selvakumar
சார் நன்றாகவே ஹான்டில் பண்ணி இருக்கிறீர்கள்..
ஆனால் உங்களை "..த்தா" என்று திட்டியதர்காகவாவது அவரை மன்னிப்பு கேட்கவைத்திருக்கவேண்டும்..
ஏனென்றால் உங்களுக்கு பெருந்தன்மை இருக்கலாம்..நாளை அவனால் மற்றவர்களை இந்தமாதிரி திட்டமாட்டன் அல்லவே..
இருந்தாலும் உங்களை அவன் அப்படி திட்டியது - எங்களுக்கு வருத்தமாகவே இருக்கிறது...
பதிவர் வவ்வாலை பற்றி ஒரு பதிவு ::: http://www.etakkumatakku.com/2012/08/blog-post.html
Post a Comment