கப்பர்சிங்கின் சூப்பர்ஹிட்டும், இந்தப் படத்தின் பெயர், பவன் கல்யாண், பூரி ஜெகந்நாத் காம்பினேஷன் என்று எல்லாமே பாசிட்டிவாக இருக்க, எதிர்பார்ப்புக்கு சொல்ல வேண்டுமா? தியேட்டர் வாசலில் இருபது மிக இளைஞர்கள் வெள்ளைக் கலரில் டீசர்ட் அணிந்து அதன் பின்னால் Pawanism is More than Religion என்ற வாசகத்தோடு அலைந்து கொண்டிருந்தார்கள்.
ராம்பாபு ஒரு மெக்கானிக், அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்பவன், அநாத ரட்சகன், ஆபத்பாந்தவன், பெண்கள் எல்லோரும் விழுந்து விழுந்து காதலிக்கப்படுபவன், ஒன்மேனாக இருநூறு பேர் வந்தாலும் எதிர்க்கக்கூடியவன். நியூஸ் சேனல் கங்காவினால் டிவி சேனல் ரிப்போர்டர் ஆக மாற, எதிர்கட்சிக்காரர் கோட்டாவும், அவர் மகன் பிரகாஷ்ராஜும், செய்யும் அநியாயங்களை தட்டிக் கேட்டு மீடியாவில் வெளிப்படுத்த, அதே மீடியாவை பயன்படுத்தி தங்கள் அரசியல் ஆட்டம் ஆடி ஆட்சியைக் கலைக்க முயல, ராம்பாபு எப்படி அதை முறியடிக்கிறான் என்பதுதான் கதை.
பவன் கல்யாண் மாதிரியான ஆட்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரக்கூடிய கதை. கதைக்கு தேவையான இடத்தில் கொஞ்சம் அண்டர்ப்ளே செய்து சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாய் டயலாக் டெலிவரியில் செம. தன்னுடய அரஸ்டை நடைபயணமாக்கி அரசியல் செய்யும் பிரகாஷ்ராஜை கேள்விகேட்டு மொத்த பயணத்தையும் தூள் தூளாக்குமிடம் அட்டகாசம். சண்டைக் காட்சிகளில் ஆகட்டும், தமன்னாவுடன் கண்களில் குறும்புடன் காதல் செய்வதிலாகட்டும், பவன் தன் பவரை காட்டத் தவறவில்லை ஏனோ வழக்கமாய் காட்டும் நளின நடனங்கள் இதில் மிஸ்சிங்.
கேமரா உமன் கங்காவாக தமன்னா. கொஞ்சம் டாம் பாய் போன்ற கேரக்டர். பாடி லேங்குவேஜில் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் கொஞ்சம் ஓவர் போர்டாக போனாலும் எரிச்சலடைய வைக்காமல் இருக்குமளவுக்கு நடித்திருக்கிறார். தன்னை ஒரு எக்ஸ்ட்ராடினரி பெண் என்று சொல்லிக் கொண்டு தன் காதலை பவனிடம் வெளிப்படுத்தாமல், சரக்க்டடித்தபடி எம்.எஸ்.நாராயணாவிடம் புலம்பும் இடம் க்யூட். மற்றபடி இரண்டாம் பாதியில் அம்போவென விட்டு விடுகிறார்கள் இவரை.
கலைஞர் கருணாநிதியின் முகச்சாயலையும், தலைமுடி, கருப்பு கண்ணாடி என்று அப்படியே கோட்டா சீனிவாசராவை வைத்து இமிட்டேட் செய்திருக்கிறார்கள். தன் வாரிசு சி.எம் ஆக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமனாலும் செய்யும் பழம் பெருச்சாளி கேரக்டர் அவருக்கும் ஈசியாக செய்துவிட்டு போகிறார். வழக்கம் போல் ப்ரகாஷ் ராஜ். அதே பதட்டம், அதே நக்கல், பாடிலேங்குவேஜ் என்று பழக்கப்பட்ட நடிப்பு.
சாம்.கே.நாயுடுவின் ஒளிப்பதிவு இம்மாதிரியான படங்களில் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கமான பவனின் ஸ்டைலும், அதை விட ஸ்டைலான எடிட்டிங்கும் காப்பாற்றுகிறது. மணிசர்மாவின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதை கவரவில்லை.
படத்திற்கு பலமே பூரி ஜெகந்நாத்தின் வசனங்கள் தான். சும்மா அதிரடியாய் பல இடங்களில் சரவெடி வெடித்திருக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் பவன் டிவியில் கொடுக்கும் பேட்டி. பார்க்கும் ஒவ்வொருவனையும் குறித்து சொல்வதாய் மிக புத்திசாலித்தனமாய், ஆனாலும் பாமரனுக்கும் ஏறும் படியான டயலாக். அதே போல தெலுங்கருக்கு மட்டுமே ஆந்திரா என்று மஹாராஷ்ட்ராவில் சிவசேனா செய்த வேலையை ப்ரகாஷ் ராஜ் இதில் செய்ய, இம்மாதிரி விஷயங்களை மீடியா எப்படி தூபம் போட்டு ப்ரச்சனையை கிளப்பிவிடுகிறது என்பதையும், சாதாரண செய்திகளைக் கூட எப்படி செய்தி ஊடகங்கள் ப்ரச்ச்னையாக்கி தங்கள் டி.ஆர்.பியை ஏற்றிக் கொள்ள போராடுகிறது என்பதை ப்ரம்மானந்தம், ஆலி கேரக்டரை வைத்து செம கலாய் கலாய்த்திருக்கிறார்.
முதல் பாதியில் ஹீரோயிசமாய் ஆரம்பித்த படம், இடைவேளையின் போது ப்ரகாஷ்ராஜுக்கும், பவனுக்குமான சண்டையாய் மாறும் போது இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் அநியாய ஹீரோ ஒர்ஷிப்பாய் மாறி, கிட்டத்தட்ட ஆந்திராவை காப்பாற்ற பவன் மட்டுமே இருப்பதைப் போன்ற ஒரு பில்டப்பு கொஞ்சம் ஓவராகவே இருப்பதாலும், ப்ரகாஷ்ராஜ் பெரிதாய் ஏதும் செய்யாததால் போரடிக்கவே செய்கிறது. ப்ரகாஷுக்கும், பவனுக்குமான கன்ப்ரண்டேஷன் இன்னும் பெட்டராக இருந்திருந்தால் இவ்வளவு ஹீரோ ஒர்ஷிப் செய்ததற்கு ஒப்பேற்றியிருக்கும்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
neenga kolutiyaa?tamil padam ellam mattam thatti vimarsanam .but all telugu movies are good for u.
is it worth watching ?
யாழிபாபா.. எதையும் ஒழுங்கா படிக்கறதேயில்லை.. செகண்ட் ஹாப் மொக்கைன்னு சொல்லியிருக்கேன்.
என்ன imitation தான என்று சொன்னாலும் . .
கலைஞர் performance முன்னாடி நிக்க முடியுமா . . .
கேபிள்ஜி,
உங்களுக்கு எதிரா ஒரு குருப்பே ஓவர்டைம் வாங்கிகிட்டு வேலை செய்து போலிருக்கிறது, எது எழுதினாலும் தப்பு கண்டுபிடிக்கிறதுன்னு.உடனே பதில் கொடுத்து மூக்கறுத்து விட்டிங்க.
1970 la vanthirukka vendiya marana mokkai. Telugu baktharna etha vanumna paratti "Jalli Adikkanuma?"
வணக்கம் சார்.
life is beautiful தான் நான் படித்த முதல் தெலுங்கு படம் திரை விமர்சனம்!
ரொம்ப நல்லா எழுதி இருந்தீங்க...
அதன் பிரகு தவராமல் தெலுங்கு படம் விமர்சனம் எழுதினால் வந்து படிப்பேன்.
நீங்க்அ
Endukante Premanta
படத்துக்கு விமர்சனம் எழுதல நினைக்குரேன்!
ராம் தமண்ணா ஹீரோ ஹீரோயினாக்அ நடிச்சு இருப்பாங்க...
படம் ரொம்ப நல்லா இருந்திச்சு!
டைரக்ட்ட கருனாக்கரன்
மூஸிக்டைரக்ட்டர்
g v ப்ரகாஷ்...
--
mahesh
tirupati
maatran movie is so good but u told mokka movie
nw this telugu movie is a mokka movie but u told v good
wat a review
maatran movie is so good but u told mokka movie
nw this telugu movie is a mokka movie but u told v good
wat a review
//மாற்றான் சோ குட்// குமட்டிகிட்டு வருது..நல்லா சொல்றிங்க நியாத்தை..சூர்யா காஜல் க்காக மட்டும் படத்த பார்க்கமுடியுமா..
மாற்றான் சோ குட்..திராபை சூர்யா காஜல் க்காக மட்டும் படத்தை பார்க்கமுடியுமா..
mr.ramesh
at first may be maatran movie's second half going slow. but watch the movie after trimming. it was so nice and crispy. slighty different in the story line also. then u give ur comments
Post a Comment