Thottal Thodarum

Oct 8, 2012

English Vinglish


சில படங்களின் விளம்பரம் பார்க்கும் போதே பார்க்க வேண்டுமென்று தோன்றும். இன்னும் சில படங்களின் கதைக் களனை கேள்விப்படும் போது இதை வைத்து ஒரு சுவாரஸ்ய இந்திய சினிமா செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கும். அக்கேள்விகளுக்கு முடியும் என்று ஆணித்தரமாய் பதிலளித்திருக்கிறார்கள் இந்த இங்கிலீஷ் விங்லீஷ் மூலம்


ரொம்பவும் சிம்பிளான கதை. ஆங்கிலம் பேசத் தெரியாத்தால் தன் குடும்பத்தினராலேயே தள்ளி வைக்கப்படும், கிண்டலடிக்கப்படும் குடும்பத்தலைவி ஸ்ரீதேவி. தன் குறையை அக்கா பெண் திருமணத்திற்காக அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைக்க, கிடைத்த கேப்பில் யாருக்கும் தெரியாமல் ஆங்கிலம் பேச நாலு வார க்ராஷ் கோர்ஸில் சேருகிறாள். அதனால் அவள் ஆங்கிலம் கற்றுக் கொண்டாளா? இல்லையா என்பதை படு சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள்.
ரொம்ப வருஷம் கழித்து ஸ்ரீதேவியை திரையில் பார்க்கும் போது ஒரு விதமான ஆர்வம் மேலிட்த்தான் செய்கிறது. பார்த்த மாத்திரத்தில் எப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆகிவிட்டாரே என்று ஒரு கணம் தோன்றினாலும், அன்பான கணவன், அவனுக்கு பரொட்டா செய்வதில் காட்டும் ஆர்வம், வீட்டில் பெரியவர்களின் பால் காட்டும் அன்பு, குழந்தைகளிடம் காட்டும் பரிவு,பாசம். அவர்களால் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை குத்திக் காட்டப்படும் போது முகத்தில் காட்டும் ஒர் இயலாமை கலந்த தவிப்பு. அமெரிக்கா போகப் போகிறோம் என்றதும், சந்தோஷம் அடையாமல் தனியாய் ஆங்கிலம் தெரியாமல் போய் மாட்டப் போகிறோமே என்ற பரிதவிப்புடன் ஆங்கிலம் கற்கும் காட்சிகளில் தெரியும் பதட்டம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் இட்த்தில் புத்திசாலித்தனமாய் கேள்விகள் கேட்டு, அதனால் கிடைக்கும் அங்கீகாரத்தை சந்தோஷமாய் ஏற்குமிடம், ப்ரெஞ்ச் மாணவன் மெல்ல தன்னிடம் நெருங்குவதையும், ஒரு சின்ன சலன நேரத்தில் நெகிழ்ந்ததை, குற்ற உணர்ச்சியாய் முகத்திலேயே வெளிப்படுத்தியவிதம். தனியாய் வெளியே போகிற அளவிற்கு வந்துவிட்டாயே என்ரு கணவன் ஆச்சர்யப்பட்டு பாராட்டும் இட்த்தில் முகத்தில் தெரியும் ஒரு விதமான அயர்ச்சி.க்ளைமாக்சில் மிக அழகாய் வாழ்க்கையைப் பற்றி பேசும் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்ரீதேவி ஸ்ரீதேவித்தான்யா என்று கை தட்டி ஆர்பரிக்க வைக்கிறார். வாவ்..

மனைவியின் திறமைகளை பொது மனப்பான்மையுடனே பார்க்கும் கணவனாக வரும் அதுல் ஹுசேனின் நடிப்பு மிக கேஷுவல். அமெரிக்காவில் ஆங்கிலம் கற்கும் இடத்தில் நெருக்கமாகும் அந்த ப்ரெஞ்சுக்காரனாகட்டும், பக்கத்தில் இருக்கும் சைனாக்காரியை நூல் விட்டுக் கொண்டே ஆங்கிலம் கற்கும் பாகிஸ்தானிய கேப் ட்ரைவர் கேரக்டர், அக்காவின் இரண்டாவது பெண் ப்ரியா ஆனந்த், கணவனை இழந்தும் அவர் கொடுத்த தைரியம் தன்னை எவ்வளவு தூரம் கூட்டி வந்திருக்கிறது என்று சந்தோஷப்படும் அக்கா, என்று சின்னச் சின்ன கேரக்டர்களாக இருந்தாலும் எல்லோரையுமே நாம் எங்கோ பார்த்த ஒரு உணர்வு வருவதால் இயல்பாய் நம்முள் ஒட்டிக் கொள்கிறார்கள்.
லஷ்மண் ஷிண்டேவின் ஒளிப்பதிவு க்ளாஸ். கதையை விட்டு வெளியே போகாமல் நம்மை கதை மாந்தர்களூடே பயணிக்க வைத்திருக்கிறார். சும்மா அமெரிக்காவைக் காட்டுகிறேன் பேர்விழி என்று உயர்ந்த மாடிகளைக்காட்டி நம்மை பிரம்மிக்க வைக்காமல் நீட் அண்ட் ஸ்மூத். அமித் திரிவேதியின் இசையில் பாடல்களாய் பெரிதாக மனதில் ஒட்டாவிட்டாலும் உறுத்தாத வகையில் ஆங்காங்கே மாண்டேஜுகளாய் வரும் சின்னச் சின்ன பாடல்களும், அதிராத பின்னணியிசையும் மனதை வருடுகிறது.

எழுதி இயக்கியவர் கெளரிஷிண்டே.கதையாய் பார்த்தால் மிகச் சாதாரணக்கதைதான் ஆனால் அதை கொடுத்த விதத்தில் தான் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார். ஆங்கிலம் தெரியாத்தால் மகளாலும், கணவனாலும் சின்னச் சின்ன அவமான்ங்களை அடைந்து மனதுக்கு புழுங்கி வரும் ஒரு சாதாரணக் குடும்ப்ப் பெண், எப்படி அதிலிருந்து மீண்டெழுந்து தன்னையே மீட்டெடுக்கிறாள் என்பதை கொஞ்சம் கூட புரட்சியாகவோ, பெண்ணியம் பேசியோ காட்டாமல் மிக இயல்பாய் அவள் அடையும் உயரங்களை காட்டியிருப்பது அழகு. என் பெண்டாட்டி லட்டு செய்வதற்காகவே பிறந்தவள் என்று சொல்லும் போது ஸ்ரீதேவி பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும், அதை உணராத கணவன் அவளிடம் “நான் உன்னை பாராட்டுகிறேன்என்று ஆர்பாட்டமாய் சொல்ல, விரக்தியான ஒரு சிரிப்பு சிரிப்பார் ஸ்ரீதேவி அதே போல முதல் நாள் க்ளாஸ் விட்டு ப்ரெஞ்சுகாரனுடன் வருவதை ப்ரியா ஆனந்த் பார்த்துவிட்டு ஸ்ரீதேவியிடம் தனியாய் இருக்கும்போது அவன் ப்ரெஞ்சா இட்டாலியனா? என்று கேட்ட்தும் விளக்க முடியாத ஒரு பார்வை ஸ்ரீதேவி பார்க்க, ப்ரியா ஆனந்த “பரவாயில்லை அது அப்படித்தான் சகஜம்” என்று அவனுடனான ஏற்பட்ட நெருக்கத்திற்கான காரணத்தை உணர்த்து சகஜமாய் பேசும் காட்சி, ஒரு சின்ன உற்சாக தருணத்தில் நெகிழ்ந்த நிலையில் இருக்கும் அழகான ரொமான்ஸ் என்று படம் நெடுக இயக்குனர் மிக அழகாய் பெண்களுக்கே உண்டான சின்னச் சின்ன உணர்வுகளை நுணுக்கமாய் கையாண்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில் ரஜினிபடம் போல படபட இங்கிலீஷில் பொரிந்து கொட்டாமல் இயல்பான வார்தைகளில் பேசும் காட்சி டச்சிங். முக்கியமாய் தமிழில் அஜித்தும், ஹிந்தியில் அமிதாப்பும் வரும் ஐந்து நிமிடக் காட்சி வாவ்.. ஒரு சுவாரஸ்ய பொக்கே. பட்த்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடக்கும் என்று முடிவு செய்ய முடிந்தாலும் நம்மை கட்டிப் போடும் நடிப்பு, இயல்பான திரைக்கதை, ஷார்ப்பான வசனங்கள் எனக் குறைகளை மறக்கடிக்கும் விஷயங்கள் நிறைய இருப்பதால் நிச்சயம் ஒர் ஃபீல் குட் படம் பார்த்த திருப்தியை இப்படம் கொடுக்கிறது.

டைம்பனீஸில் உள்ள கோல்டன் வில்லேஜ் மல்ட்டிப்ளெக்ஸில் தான் இப்படத்தைப் பார்த்தேன். சிங்கையில் பார்க்கும் முதல் படம். நம்மூர் மல்ட்டிப்ளெக்ஸுகளில் என்ன இருக்கிறதோ அதே தரம், விலை எல்லாம். ட்ரைலர் கூட சப்டைட்டிலுடன் போடுகிறார்கள். முக்கியமாய் இடைவேளை விட்டு பர்சை பதம் பார்க்கவில்லை. கோவி.கண்ணன், பிரியமுடன் பிரபு, குழலி ஆகியோரை என் விருப்பத்தின் பொருட்டு ஹிந்தி படத்திற்கு வந்தார்கள். ஆனால்  அனைவருக்கும் படம் பிடித்திருந்ததும், குழலி என் பக்கத்து வீட்டுல நடக்குறா மாதிரியே இருக்குப்பா என்று சிலாகித்ததும் சந்தோஷத்தை அளித்தது.  மிக சுவாரஸ்யமான சந்திப்பையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர இப்படத்தின் மூலம் எல்லோரும் அமைந்தது மேலும் ஒரு ஃபீல் குட் உணர்வை தந்தது. ந்னறி நண்பர்களே.




Post a Comment

17 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

English Vinglish சூப்பர் படம். தியேட்டருக்கு வயதானவர்கள் கூட்டம்தான் அதிகம். பாட்டிங்க நிறைய வந்திருந்தாங்க. எல்லாம் ஸ்ரீதேவிக்காக வந்த கூட்டம். படமும் போரடிக்காமல் போச்சு. ஸ்ரீதேவியின் மகனாக வரும் சுட்டிப்பையன் செம க்யூட்.

இங்கிலீஷ் டீச்சர் டேவிட், கேயாக வரும் நீக்ரோ, ஒரு குண்டுப்பெண், சைனாக்காரி, ஹிந்திக்காரன், த்ரீ இடியட்சில் வருபவன் ஸ்ரீதேவியை லவ் பண்ணும் ஹோடேலில் வேலை செய்பவன் எல்லோரும் செமையா நடிச்சிருக்காங்க.

அஜித் ஒரு சீன்ல வந்து ஸ்ரீதேவிக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறார்.

ஒரே ஒரு குறை: ஒரு காட்சியில் ஸ்ரீதேவி US ல இருந்து இந்தியாவுக்கு போன் பண்றார். அப்போ US லையும் பகல். இந்தியாவுலயும் பகல். அது எப்படின்னுதான் தெரியலை .

நாஞ்சில் மைந்தன் said...
This comment has been removed by the author.
நாஞ்சில் மைந்தன் said...

//ஒரே ஒரு குறை: ஒரு காட்சியில் ஸ்ரீதேவி US ல இருந்து இந்தியாவுக்கு போன் பண்றார். அப்போ US லையும் பகல். இந்தியாவுலயும் பகல். அது எப்படின்னுதான் தெரியலை .//

There are four timezones in US. If it is 6 PM in New York, it will be 3 PM in San Francisco. Also, in summer, the day time will be longer and sun sets 9 PM.

In summer, the time difference between Chennai and San Francisco will be -12:30 hours. So, if someone calls around 7 PM from San Francisco, it will be 7:30 AM in India.

P.S.: I haven't seen the movie. So, I am not sure which place she came to.

சத்ரியன் said...

குழலிக்கு என் கண்டனங்கள். என்னை அவர் அழைக்கவில்லை.

குறையொன்றுமில்லை. said...

விமரிசனம் பாத்தா படம் பாக்கலாம்னு இருக்கு ம்ம்ம் பசங்க எப்ப கூட்டி போராங்கன்னு பாக்கனும்

Cable சங்கர் said...

sathriyan.. ப்ளீஸ் கால் மீ..

Anonymous said...

படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. நெட் ல டவுன்லோட் பன்னி பார்த்துடலாம்.

Anonymous said...

படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. நெட் ல டவுன்லோட் பன்னி பார்த்துடலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

P.S.: I haven't seen the movie. So, I am not sure which place she came to. //

Newyork

கோவி.கண்ணன் said...

என்னுடைய பின்னூட்டம் எங்கே ?

நான் போட்ட போது தெரிந்ததே

IlayaDhasan said...

அடடா , தெம்பனீஸ் வரைக்கும் வந்த்ருகீங்க , நான் அங்க இருந்தும் கூட மிஸ் பண்ணிட்டேனே!

தமிழ் வெர்சன் பார்த்தேன், படம் நச்!

ARAN said...

இந்த படம் தானே ரஜினியும், இளையராஜாவும் பாராட்டிய படம் என்று ட்விட்டரில் நீங்கள் ஓடாது என்று மறைமுகமாக குறிப்பிட்டதாக நினைவு . நன்றாக எழுதும் நீங்கள் அப்படி செண்டிமெண்டாக எழுதியதில் எனக்கு சிறிது வருத்தம் கேபிள்ஜி படம் பார்க்கும் முன் அப்படி கமெண்ட் போடாதீர்கள் .நீங்களும் திரைத்துறையில் முன்னேறி வருபவர் என்ற வகையில் கூறுகிறேன் . தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்.மற்றபடி உங்கள் விமர்சனம் மிகவும் நடுநிலமையாக இருக்கிறது .மீண்டும் மேலே குறிப்பிட்டதற்கு தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

அஜீம்பாஷா said...

கேபிள்ஜி நம்ம சென்னை பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி மறைந்த செய்தி உங்களுக்கு தெரியுமா
.

Cable சங்கர் said...

THERIYUM AJEEM. MIKUNDHA VARUTHAM ADAINTHEN.:((

kumar said...

தெம்பனீஸ்.எங்க சொல்லுங்க பார்ப்போம்?

Ravikumar Tirupur said...

முன்கூட்டியே யூகிக்கும் வகையிலான டெம்ளேட் காட்சிகள் தான் இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் விளக்கம் தெரியாமல் ஆங்கிலத்திலேயே ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியுமா?

துளசி கோபால் said...

முன்பொரு காலத்தில் (எழுபதின் கடைசிப்பகுதிகளில்) மைண்ட் யுவர் லேங்வேஜ் என்ற டிவி சீரியல் வந்துக்கிட்டு இருந்துச்சு. இங்லீஷ் சொல்லித்தரும் பள்ளிக்கூட கலாட்டாதான்.

அந்த நினைவு வருது.

போகட்டும். சிங்கை எப்படி இருக்கு உங்க பார்வையில்?