கரண் ஜோஹரின் புதிய படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து இம்முறை அவுட்டிங் அடித்திருக்கிறார். அழகான ஹைஃப் பை பள்ளி, மினி ஸ்கர்ட் மாணவிகள். உடல் பிடிக்கும் டீ ஷர்ட் அணிந்து நினைத்த மாத்திரத்தில் ராம்ப் வாக் நடக்க தயாராக இருப்பது போன்ற சிக்ஸ் பேக் ஆணழகன்கள், என்று எல்லா க்ளிஷேக்களோடு ஒரு படம்.
வெகு இளைஞர், இளைஞிகளுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். சில பலருக்கு பிடிக்காமல் போகலாம். பட் அடிப்படையாய் அறிமுகமாகியிருக்கும் மூன்று புது முகங்களும் தங்கள் திறமையை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் பழைய கள் என்றாலும் புது மொந்தை சுவாரஸ்ய போதையாகவே இருக்கிறது.
ஆரம்பக் காட்சியிலேயே தில் சாத்தா ஹேவை ஞாபகப்படுத்த ஆரம்பித்து, ஜோ ஜீத்தா ஓஹி சிக்கந்தர், குச் குச் ஹோதாஹே, ஜானே து க்யா ஜானா, அப்புறம் கொஞ்சம் 3 இடியட்ஸ் என்று வரிசைக்கிரமமாய் எல்லா படங்களையும் ஞாபகப்படுத்தும் திரைக்கதை.
இந்த மாதிரி ஸ்கூல் எல்லாம் எங்கேயிருக்கிறது என்று கேள்வி கேட்காமல் படம் பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் படத்தை ரசிக்க முடியும். கிட்டத்தட்ட அமெரிக்க கலாச்சார பள்ளி, அதன் ப்ரின்ஸியான “கே” ரிஷிகபூர், அவரை வைத்துக் காமெடி. ஒரே பெண்ணை நண்பர்கள் இருவர் காதலிப்பது. ஒருவரை வெறுப்பேற்ற இன்னொருவர் நெருக்கமாய் நடிக்க ஆரம்பித்து, நிஜமாகவே காதலில் விழுவது , வழக்கம் போல நண்பர் குழாமில் ஒரு மகா குண்டு கேரக்டர். அவரை வைத்து க்ளைமாக்ஸில் செண்டியாய் ஒரு டயலாக் என்று நீங்கள் என்னன்ன எதிர்பார்ப்பீர்களோ அத்துனையும் இருக்கு. என்ன ஏற்கனவே பார்த்த ஆட்களுக்கு பதிலாய் புது ஆட்கள் எனும் போது காப்பாற்றப்படுகிறது. இரண்டாவது பாதியை எடுத்துச் செல்லும் ஸ்டூடண்ட் ஆப் த இயர் போட்டிகள் எல்லாம் எலிமெண்டரி ஸ்கூல் ஐடியாக்கள்.
கரனிடமிருந்து My Name Is Khan போன்ற சென்சிபில் படத்தை எதிர்பார்க்காமல சுத்தமாய் பொழுது போகவில்லை என்று இருந்தால் நிச்சயம் கலர்புல்லாய் பார்த்து டைம்பாஸ் செய்ய ஏற்ற படம்.
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
Hi Mr. Cable Sankar,
I don't know the meaning of க்ளிஷேக ? Is it tamil word or English word ?
Please clarify.
Last three of your movie reviews are worst. Please keep writing.........
Post a Comment