கேபிளின் கதை புத்தக வெளியிடு சிறப்பாக நடந்தேறியது. புத்தகத்தைப் படித்துவிட்டு யுடிவி தனஞ்செயன் அவர்கள் ஒரு சினிமா ஸ்கிரிப்டைப் போல இருக்கிறது என்று பாராட்டினார். வெளியிட்ட ஏக்நாத் அவர்கள் புத்த்கத்தைப் பாராட்டிவிட்டு, அவரைப் பற்றி விட்டுப் போன தகவல்களை பட்டியலிட்டார். நிஜமாகவே வருத்தமாக இருந்தது. எழுதிய காலத்தில் அவரை தொடர்பு கொள்ள விழைந்த போது எனக்கு அவருடய தொடர்பு கிடைக்கவில்லை. இருநதாலும் நேற்றைய நிகழ்வில் அவரைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். குட்டிப் புக் போடும் அளவிற்கு அவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார். கேபிளின் கதையில் அவரது எபிசோட் கேபிள் தொழிலில் அவர் நுழைய விழைந்ததிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். அவரின் சாதனைகளில் பல வீடியோ புரட்சி நாட்கள். அது கேபிளின் வரவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு. நிச்சயம் அடுத்தப் பதிப்பில் அவரைப் பற்றிய தகவல்களை எழுதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். சிறப்புரை ஆற்றிய ஈ.கோ தயாரிப்பாளர் பெரியசாமி ரவிச்சந்திரனின் வெள்ளந்தியான பேச்சு பல பேரை கவர்ந்தது. வ்ந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கேபிளின் கதை புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவுகளிலோ, அல்லது மின்னல் செய்தாலோ தன்யநாவேன்.
என் ட்வீட்டிலிருந்து
சமீபத்திய படம் ஒன்றை பல தியேட்டர்களில் எடுத்துவிட்டார்கள். ஆனால் ட்வீட்டரில் மட்டும் விடாமல் அஹா ஓஹே என்று சொல்லி வருகிறார்கள். #Marketing
படத்தை எடிட் பண்ணனும்னா முழு படத்தை தான் எடிட் பண்ணனும். செம காமெடி - துப்பாக்கி ஃப்ரீ பப்ளிசிட்டி
1.76 ஆயிரம் கோடி லாஸுன்னு சொன்னாங்க.. மிச்ச பணமெல்லாம் எங்க?
இன்றைய பொருளாதார நிலையில் யாரும் விரும்பி கடையடைப்பதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
படத்தை எடிட் பண்ணனும்னா முழு படத்தை தான் எடிட் பண்ணனும். செம காமெடி - துப்பாக்கி ஃப்ரீ பப்ளிசிட்டி
1.76 ஆயிரம் கோடி லாஸுன்னு சொன்னாங்க.. மிச்ச பணமெல்லாம் எங்க?
இன்றைய பொருளாதார நிலையில் யாரும் விரும்பி கடையடைப்பதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
மம்தா அக்கா பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அரசின் மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார். அதை முறியடிக்க காங்கிரஸ் தயாராகிக் கொண்டிருப்பதாய் செய்தி. இவர்கள் எப்படி தயார் ஆவார்கள் என்று தெரியாதா என்ன? ஏதோ த்ரில்லர் படக் கதைப் போல பில்டப் செய்வதில் தந்திக்கு நிகர் தந்திதான்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
எனக்கு இந்த பாடலில் வரும் விஷுவலும், வயலின், புல்லாங்குழல் இணைந்து வரும் பிஜிஎம்மும் மிகவும் பிடிக்கும். ராஜாவின் இளைமையான குரலும், ஒரு காட்சியில் வெண்ணிறை ஆடை நிர்மலாவுக்கு வெட்கப்பட பாரதிராஜா சொல்லித்தர, அதை பார்த்த அருணா தனியே வெட்கப்படும் இடம், பாரதிராஜாவுக்கு துணி துவைத்து எடுத்துக் கொண்டு வைக்கும் போது அதில் ஒரு பூவை வைத்து கொடுப்பது. பாரதிராஜா அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அருணாவின் அகண்ட கண் க்ளோசப் காட்சிகளூடே பாரதிராஜாவின் மேல் உள்ள ததும்பும் காதலை காட்டியிருப்பதும், ராஜாவின் பாடலுக்கு இவர் எடுத்த ஷாட்களா? இல்லை இவர் எடுத்த ஷாட்களுக்கு ராஜா அமைத்த ட்யூனா? என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
குறும்படம்
சற்றே பெரிய, பழைய குறும்படம் தான். ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. நெட்வொர்க் மார்கெட்டிங்கை செம கலாய் கலாய்த்திருக்கிறார்கள். கம்பெனி லோகோவிலேயே தங்கள் குசும்பைக் காட்ட அரம்பித்தவர்கள் படம் முழுக்க அக்குசும்பை கட்டவிழ்த்து விட்டிருப்பார்கள். கிண்டலாய் இருந்தாலும் சொல்லியிருக்கும் கருத்து தேவையான ஒன்றே. லேட்டான வாழ்த்துகள் கணேஷ் குமார்.
@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
நண்பர் இசையமைப்பாளர் பாலாஜி அவரின் வீட்டின் முன் பத்து நாள் குப்பை அப்படியே இருப்பதாகவும், குப்பையின் காரணமாய் இரவு நேரங்களில் மக்கள் சிறுநீர் கழித்துவிடுவதாகவும், வீட்டில் உட்கார முடியவில்லை. நீங்கள் உங்கள் கேட்டால் கிடைக்கும் மூலமாய் மேயருக்கு செய்தி அனுப்பி உங்கள் தெருவை மட்டும் க்ளீனாக வைத்து இருக்கிறீர்களே நான் எப்படி என் ஏரியாவை சுத்தமாய் வைத்திருப்பது. நீங்க உங்கள் குழு மூலமாய் கேளுங்களேன் என்றார். ஏன் குழு மூலமாய் கேட்க வேண்டும். உங்களுக்கே கேள்வி கேட்க உரிமை உள்ளது. நீங்களே கேட்கலாம் என்று சொல்லி மாநகராட்சியின் கமிஷனருக்கு ஒரு மின்னஞ்சலையும், ஃபேஸ்புக்கில் மேயரின் குழுவுக்கு ஒரு லிங்கையும் அப்பகுதி குப்பை எடுக்காமல் இருப்பதால் எப்படி பாழடைந்து சுகாதாரக் கேடு விளைவிக்கிறது என்பதை போட்டோ ஒன்றை எடுத்து இணைத்து அனுப்பச் சொன்னேன். “இதுக்கெல்லாம் அவங்க ஆக்ஷன் எடுப்பாங்களா சார்?” என்றவரிடம் “கேளுங்க சார்.. நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக்கையூட்டினேன். ரெண்டு தினங்களுக்கு பிறகு அவர் போன் செய்தார். அவர் வீட்டின் வாசலில் இருந்த குப்பை எடுக்கப்பட்டுவிட்டதாகவும், ஏரியா மாநகராட்சி அதிகாரி நேரடியாய் விட்டிற்கு வந்து இனி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தெருவில் உள்ள குப்பைகள் அகற்றப்படும் என்ற உறுதியையும் கொடுத்துவிட்டு சென்றதாக சொன்னார். “என்ன சார்.. யார் கேட்டாலும் நடக்குதே” என்று ஆச்சர்யப்பட்டார். கிடைக்கும் பாலாஜி.. ஆனா அதுக்கு முன்னாடி கேட்டால் கிடைக்குங்கிற நம்பிக்கை மட்டும் நமக்கு வேணும் அவ்வளவுதான் என்றேன். கேளுங்க நிச்சயம் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Post a Comment
8 comments:
U already discussed abt that Raja's song.. Repeat?!
Ok...ok.
Congratttsss. .
கேபிள் சங்கர் சார்,
நீங்க காட்டின you tube வீடியோ பார்த்தேன்; எப்படி பாரதிராஜாவுடன் திரிஷா? ஒன்னும் புரியலை? ஏன் திரிஷா மேக்கப் போடலை? அந்த காலத்தில் மேக்கப் போடுவதிர்க்க்கு நிறைய பணம் செல்வாக்குமா?
விழாவுக்கு வரமுடியலை கேபிள் தவறாய் எண்ணாதீர்கள். விழா அருமையாய் நடந்தது அறிந்து மகிழ்ச்சி. புத்தகம் வாசித்து விட்டு எழுதுகிறேன்
வாழ்த்துகள் தல!
congrats sir
சினிமா வியாபாரம் நான் அடிக்கடி புரட்டி பார்க்கும் புத்தகங்களில் ஒன்று.. இந்த புத்தகம் படித்து விட்டு சொல்கிறேன்.
"நிச்சயம் அடுத்தப் பதிப்பில் அவரைப் பற்றிய தகவல்களை எழுதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்"
அடுத்த பதிப்பில் சேர்க்காமல் தனி புத்தகமாகவோ, அல்லது அடுத்த புத்தகத்தில் சேர்த்தோ வெளியிடுவதே நல்லது
Post a Comment