அரசே டி.டி.எச் தரப்போவதாய் ஒரு புரளி கிளம்பியிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. சல்லீசான விலையில் கேபிள் டிவி இணைப்பு தருவதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் ஒவ்வொரு ஆப்பரேட்டர்களிடமும் இருபது ரூபாய் இணைப்புக் கட்டணமாய் வசூலிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கணக்கின் படி சுமார் அறுபது லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் உணமையில் அதிகம் இருக்கும் என்ற பட்சத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுக்க முடியாது என்பதற்காக ரேஷன் கார்டுகளை வைத்து கணக்கெடுப்பதற்காக அங்கே ஒரு பாரமை கொடுத்து பில்லப் செய்யச் சொல்வதாய் தகவல்.விலையில்லாமல் எதுவும் கிடைக்காது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த அறிவிப்பு.
@@@@@@@@@@@@@@@
நண்பர் சந்தோஷின் திருமணத்திற்காக பெங்களூர் ஹைவேயில் ஓர்.ஆர்.பியின் ஹோண்டா ஜாஸில் பயணம். பல இடங்களில் டோலுக்கு பணம் கட்டி செல்லும் இடங்களில் எல்லாம் சாலைகளில் குண்டும் குழியுமாய் இருக்கிறது. பல இடங்களில் பள்ளங்களை மறைக்கிறேன் என்று அதன் மேலே பேட்ச் போல போடப்பட்டு நல்ல வேகத்தில் செல்லும் வண்டிகளை தூக்கித் தூக்கிப் போடுகிறது. டோல் வாங்குவது எதறகாக அந்த சாலைகளை அமைக்க ஆன செலவை எடுக்கவும், அதை பராமரிப்பதற்காகவும் தானே? இம்மாதிரி அரைகுறையாய் போடப்பட்ட சாலைகளுக்கு எதற்கு நாம் டோல் தர வேண்டும்?
@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு நாள் முன்பு எக்ஸ்பிரஸ் அவின்யூவில் தீவிபத்து நடந்தேறியிருக்கிறது. காலை 11 மணிக்கு எரிய ஆரம்பித்த கடையின் தீயை அணைப்பதற்கு மாலில் இருக்கும் தீயணைக்கும் டிவிஷனை வைத்தே சரி செய்ய பார்த்திருக்கிறார்கள். பிறகு புகை மூட்டம் காரணமாய் தீயணைக்கும் வண்டிக்கு சொல்லிவிட்டு புகை போவதற்கு கண்ணாடி ஜன்னல்களை உடைத்து நிலைமையை சீர் செய்திருக்கிறார்கள். முடிந்த வரை இந்த விபத்தை வெளியில் தெரியாத வண்ணம் அமுக்கவே காலையில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் வரை, இவர்களாகவே தீயணைக்க முயற்சித்திருக்கிறார்கள். தீப்பிடிக்காத எலக்ட்ரிக்கல் ஒயர்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. இவர்கள் பயன்படுத்தியிருப்பது லோக்கல் ஒயர்கள் என்று சொல்லப்படுகிறது. அநியாயக் கொள்ளையாய், பார்க்கிங்கிலும், புட்கோர்டிலும் அடிக்கும் காசையாவது இம்மாதிரியான தகுதியான உபகரணங்களை வாங்கி சரி செய்திருக்கலாம் அல்லவா. இது போல 2010ஆம் ஆண்டு இதே இடத்தில் ஒரு தீ விபத்து நடந்தேறியிருக்கிறதாம். போற நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இம்மாதிரி மால்களில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி ஒரு தனிக் கட்டுரை யே எழுத வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தேவி காம்ப்ளெக்ஸ் புதுபித்த போது 10, 85,95 என்று கட்டணங்கள் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். பின்பு 10,95 மட்டுமே என்றார்கள். இப்போது 10,120 என்று விலையேற்றிவிட்டார்கள். நான்கு தியேட்டர்களுக்கு மேல் உணவு விடுதியோடு இருக்கும் எல்லா திரையரங்குகளும் 120 ரூபாய் வாங்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் தேவியில் உணவு விடுதி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. சென்னையில் ஒரு காலத்தில் பெரிய கலெக்ஷன் செண்டர் எதுவென்றால் அது மவுண்ட்ரோட் தேவி வளாகமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய நிலையோ மற்ற தியேட்டர்களை விட குறைவான வசூலையே கொடுக்கிறது. அதற்கு காரணம் விலையேற்றமே. ஏனென்றால் தேவி திரையரங்கைப் பொறுத்த வரை, பாஸிங் க்ரவுட் எனப்படும் வெளியூர்களிலிருந்து வரும் ஆட்களும், தேவிக்கு பின்புறம் இருக்கும் திருவல்லிக்கேணி மேன்ஷன் வாசிகளும், மிடில் க்ளாஸ் ஆட்களும் தான். அவர்கள் இப்போது தேவிக்கு வருவதில்லை என்பதை தியேட்டர் வேலையாட்களே சொல்லி வருகிறார்கள். தற்போதைய விலையேற்றம் நிச்சயம் தேவி வளாகத்திற்கு ஒரு மைனஸ் என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@
இந்த வீடியோ நக்கீரன் வெப் டிவியினால் யூடியூபில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
இந்த வீடியோ நக்கீரன் வெப் டிவியினால் யூடியூபில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
அடல்ட் கார்னர்
ப்ளாஷ்பேக்
அவ்வளவாக ஹிட்டாகாத பாடலாய் இருந்தாலும் எனக்கு இந்தப்பாட்டு மிகவும் பிடித்த ஒன்று. பாடலின் வரிகளும், ஜானகியின் குரலில் இருக்கும் ஏக்கமும், பாடலின் பின்னணியில் வரும் வயலினும்.. வாவ்..
@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் வேகமாய் நுழைந்து தன்னை நான்கு பேர் கற்பழித்துவிட்டதாக புகார் செய்ய, விசாரித்த இன்ஸ்பெக்டர் “ஏம்மா நீ ஏதும் அவங்களை தடுக்கவேயில்லையா? உடம்புல எந்தவிதமான காயமும் இல்லையே?” என்று கேட்டார். “அப்போ நான் கையில மெகந்தி வச்சிருந்தேன்” என்றாள் அவள்.
Post a Comment
6 comments:
சென்னை பெங்களூர் ஹை வேயில் ( ஓசூர் வழி) திருபெரும்புதூர் - வாலஜா வரை ரோடு கேவல்மாக இருக்கிறது. வாங்கும் டோல் கட்டணம் 20 ரூபா.
வாலஜா முதல் பெங்களூர் வரை சாலை நன்றாக இருக்கிறது. வாலஜா சென்னை வழி காண்ட்ராக்டர் ரோட்டை 6 வழி சாலைக்கும் கொடுக்காமலும் காண்டாரக்டை புதிபிக்காமலும் ஏதோ தில்லாலங்கடி செய்கிறார் . இதை நான் டோல் பூத்தில் சாலை மோசம் என்று சொன்ன போது அங்கு இருந்த ஊழியர் சொன்னது
nallanpakirvu...
நக்கீரன் வெப் டிவி . மொபைல் கேமராவில்
எடுக்க பட்டது போல முயற்சி செய்து தோல்வி அடைந்து
இருக்கிறார்கள் என்பதே உண்மை. மற்றும் திரைகதை
வசனம் கோட்டை விட்டு இருக்கின்றனர்.
மறுபடி கேளுங்கள் புரியும்.
நக்கீரனின் மற்றும் ஒரு 'தமிழ் சேவை '
Mr.Cable Sankar,
Rape is not a joke. It is a violence against women. Please remove it from Adult Corner
நக்கீரன் வெப் டிவி . மொபைல் கேமராவில்
எடுக்க பட்டது போல முயற்சி செய்து தோல்வி அடைந்து
இருக்கிறார்கள் என்பதே உண்மை. மற்றும் திரைகதை
வசனம் கோட்டை விட்டு இருக்கின்றனர்.
மறுபடி கேளுங்கள் புரியும்.
நக்கீரனின் மற்றும் ஒரு 'தமிழ் சேவை ' ////this was shown in suntv news channel also.they have arrested somebody for this...
அந்த எஸ்.ஜானகி பாட்டு என்னன்னு சொல்லலையே :)
Post a Comment