ARGO
கலகக்காரர்களுக்கு பயந்து தப்பி, வேறொரு நாட்டின் தூதரகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ஆறு பேரை அமெரிக்காவின் சி.ஐ.ஏவின் உதவியுடன் அங்கிருந்து தப்புவிப்பதுதான் கதை. மிகச் சாதாரணமான மசாலா படக்கதை என்று தோன்றும் ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்றவுடன் அட என்று எழுந்து உட்கார வைக்கிறது.
ஆம் உண்மை சம்பவம் தான்.1979 நவம்பரிலிருந்து 1981 ஜனவரி வரை மொத்தம் 444 நாட்கள் இரானில் அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்ட அலுவலர்களையும், அங்கிருந்து தப்பி கனடா தூதரகத்தில் தஞ்சம் அடைந்த ஆறு பேரையும் காக்க அமெரிக்க அரசு எடுத்த முயற்சி தான் இந்த படத்தின் கதை. அயதுல்லா கோமெனியின் தலைமை ஏற்ற பிறகு அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட, இதற்கு முன்னால் ஈராக்கை ஆண்ட ரேசாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவிற்கு எதிராய் மகக்ளிடம் எழுச்சி ஏற்பட, அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி அங்கிருக்கும் அலுவலர்களை தூதரகத்திலேயே சிறை வைத்தார்கள். அப்போது அங்கிருந்து தப்பிய ஆறு அலுவலர்கள் நேரே கனடா நாட்டு தூதரகத்தில் போய் ஒளிந்து கொள்ள, கனடா அரசும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இவர்களை காப்பாற்ற் சி.ஐ.ஏவின் டோனிமெண்டெஸ் தேந்தெடுக்கப்படுகிறார். சாதாரணமாய் போய் கூட்டிக் கொண்டு வர முடியாது என்று தொடர்ந்து ஆலோசித்து, ஒரு கதையை தயார் செய்கிறது அமெரிக்க அரசும், கனடா அரசும்.
ஆர்கோ என்ற பெயரில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் தயாரிப்பதாகவும், அப்படத்தின் லொக்கேஷன் பார்ப்பதற்காக டோனியும், கனடா தூதரகத்தில் இருக்கும் ஆறு பேரும் இரண்டு நாள் முன்னதாக ஈரான் வந்ததாகவும், லொக்கேஷன் பார்த்துவிட்டு, அங்கிருந்து சாதாரணமாய் திரும்புவது போல வந்துவிடுவது என்பதுதான் ப்ளான்.இதன் ஏற்பாடுகளின் பின்னணி சி.ஐ.ஏ. ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒவ்வொருவருக்கும் கனடிய பாஸ்போர்ட், புது டேட்டா, புது பெயர், அவர்களுடய ஜாதகம் என்று எல்லாமே புத்தம் புதியதாய் தயார் செய்யப்பட்டு, டோனியின் மூலம் வந்தடைகிறது. எல்லோரிடமும் பேசி அவர்களை தயார்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்தி எப்படி வெளியேறுகிறார்கள் என்பதை சீட்டின் நுனிக்கு வரவழைத்து சொல்லியிருக்கிறார்கள்.
டோனியாக பென அப்லெக். ரொம்ப காலமாய் நடித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சிலாகித்து சொல்லக் கூடிய நடிகராக எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படத்தில் இயக்கமும் இவரே என்பதால் சரியாய் பொருந்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ப்ரீயட் படம், க்ரிஸின் திரைக்கதை படத்திற்கு பெரிய பலம்.அதே போல வசனங்கள். மிக இயல்பான நகைச்சுவையோடு, இந்த த்ரில்லர் படத்தை நகர்த்தியிருப்பது பாராட்ட தகுந்த விஷயம். ஆர்பாட்டமான பின்னணியிசை கிடையாது, ஃபாஸ்ட் கட் எடிட்டிங் கிடையாது இப்படி எதுவும் இல்லாமல் ஆரம்பம் முதல் படம் முடியும் வரை நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். சிற்சில டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும் ஒரு அருமையான த்ரில்லர் நல்ல மேக்கிங்கோடு பார்த்த திருப்தியை தருகிறது இந்த ஆர்கோ
கேபிள் சங்கர்
Comments
இன்னைக்கு நீங்க போட்டாச்சு
பல நாட்கள் உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து கொண்டிருப்பினும், இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்.
இப்போதெல்லாம் நான் ஒரு படம் பார்க்கும் முன் உங்களது விமர்சனத்தை படித்துவிட்டுத்தான் முடிவு செய்கிறேன்.
இன்று எழுதியுள்ள ARGO படத்தில் ' ஈராக்கை ஆண்ட ரேசாவை' என்று எழுதியுள்ளீர்கள். அவர் இரானின் பழைய மன்னர் . இவரது ஆட்சியை அகற்றித்தான், க்ஹோமேனி அரசு வந்தது. அவர் ஈராக் மன்னர் அல்ல.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
நம்ம பக்கமும் வந்து உங்க கருத்தை சொல்லிட்டு வரலாமுல்ல....
மிக விறுவிறுப்பான படம்.
நன்றி