நியாயமாய் இன்று முதல் சென்னையின் எல்லா டீவிக்களிலும் அனலாக் சிக்னல் கட்டாகியிருக்க வேண்டும். ஆனால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஹைகோர்ட்டில் கேஸ் போட்டு வருகிற 5 ஆம் தேதி வரை தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அனலாக் சிக்னல்களை கட் செய்து முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் ட்ராயின் சட்ட அமலாக்கத்தை தடுப்பது ஏன்? என்று கேட்டால் அதற்கு முக்கிய காரணம் செட்டாப் பாக்ஸ்கள் ஆப்பரேட்டரிடமோ, எம்.எஸ்.ஓவிடமோ இல்லாமையும், இத்தொழிலில் சென்னையில் மட்டும் நிலவும் குழப்பமும்தான்.
சென்ற ஜூலை மாதம் முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் அமலாக்க பட இருந்த இந்தத் திட்டம் அப்போதைய நிலையில் செட்டாப் பாக்ஸுகளை மக்களின் வீடுகளில் இன்ஸ்டால் செய்ய செட்டாப்பாக்சுகளை இறக்குமதி செய்யவும் நேரம் வேண்டும் என்று எல்லோரும் டைம் கேட்க, மத்திய அரசு இந்த அக்டோபர் 31 இரவு வரை நேரம் கொடுத்தது. இத்திட்டத்தை ஏன் தீவிரமாய் அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டால் பாசிட்டிவாக நிறைய விஷயங்களை சொல்ல முடிந்தாலும், பின்னணியில் உள்ள ப்ராட்காஸ்டர்கள் எனும் சேனல்க்காரர்களின் லாபம் இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. ஒரு விதத்தில் சொல்லப் போனால் இத்திட்டத்தால் எம்.எஸ்.ஓக்களும் ப்ராட்காஸ்டர்களும்தான் லாபம் அடையப் போகிறார்கள். எனக்கு தெரிந்து இன்றைய நிலையிலிருந்து ஆப்பரேட்டர்களுக்கு நிச்சயம் ஒரு வருமான இழப்பு இருபப்தற்கான அத்துனை வாய்ப்புகளும் இருக்கிறது.
இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சாட்டிலைட் சேனல்கள் மட்டுமே அறுநூறுக்கு மேற்ப்பட்டு இருக்க, அத்துனை சேனல்களுக்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் அத்துனை சேனல்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவான டெக்னாலஜி அமலாக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் இருநூறு சேனல்களுக்கு மேல் டி.டி.எச் எனப்படும் டெக்னாலஜியில் கொடுக்க முடியாது. எம்பெக் எனப்படும் டெக்னாலஜியின் மூலம் சிக்னல்களை கம்ப்ரெஸ் செய்யப்பட்டு டிடிஎச்சில் ஒளிபரப்பானாலும், ஒவ்வொரு மாநிலத்திலும், அந்ததந்த ஏரியாக்களில் உள்ள பிராந்திய சேனல்களுக்கான முக்கியத்துவம் மற்ற சேனல்களுக்கு கொடுக்க முடியாது. அது மட்டுமில்லாமல் சாட்டிலைட்டின் மூலமாய் ஒளிபரப்பாகும் டிடிஎச் கம்பெனிகளுக்கு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றார்ப் போல ஒரு பேக்கேஜையே கொடுக்க வேண்டியிருப்பதால் எல்லா மாநில பிராந்திய சேனல்கள், இந்திய அளவிலான சேனலகள், மற்றும் ஸ்போர்ட்ஸ், ஆங்கில சினிமா மற்றும் எண்டர்டெயிண்ட்மெண்ட் சேனல்கள் என்று கொடுக்க வேண்டியிருப்பதால் எல்லா சேனல்களையும் கவர் செய்ய முடியாத நிலை. அது மட்டுமில்லாமல் டிடிஎச்சில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அவர்களுடய பிராந்திய சேனல்கள், ஸ்போர்ட்ஸ், மற்றும் சினிமா சேனல்களுக்கு குறைந்த பட்சம் முன்னூறிலிருந்து முன்னூற்றி ஐம்பது ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில், கேபிள் டிவி டிஜிட்டல் செட்டாப்பாக்ஸில் தற்போதைய நிலையிலேயே சுமார் நூற்றி ஐம்பது சேனல்களுக்கும் மேல் வர, அனலாக் சிக்னலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம் எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டால் சுமார் 500லிருந்து 700 சேனல்கள் வரை மிகச் சுலபமாய் கொடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் உதாரணமாய் சென்னையில் இருக்கும் நாற்பது லட்சம் இணைப்புகளில் ஒரு பத்து லட்சம் பேருக்கு சேனல் சென்றடையும் என்று வைத்து கொண்டால் சேனல்களும் தங்கள் விலையை குறைத்தாவது தங்கள் இருப்பை வைத்துக் கொள்ள முயற்சி செய்யும். எனவே சுமார் இருநூறு சேனல்களுடன் மாதம் 150க்கு பார்க்க முடியும்.
சரி... இதன் சாதக பாதகங்களை பற்றி அப்புறம் பேசலாம். ஆனால் இச்சட்டத்தை அமலாக்க கிடைத்த நான்கு மாதங்களில் டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் அதனதன் எம்.எஸ்.ஓக்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்க, நம்மூரில் மட்டும் ஏகப்பட்ட குழப்பங்களுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை அதற்கு காரணம் அரசு கேபிள் நிறுவனம். ஏனென்றால் சென்ற முறை தள்ளி வைக்கப்பட்ட போதுதான் அரசு கேபிள் சென்னையில் ஆரம்பிக்க இருப்பதாகவும் விரைவில் அது தன் செயல்பாட்டைத் துவங்கும் என்று அறிவித்திருக்க, சென்னையில் புதியதாய் ஆப்பரேட்டர்களாகவே சேர்ந்து புதியதாய் ஐந்து எம்.எஸ்.ஓக்களுக்கு மத்திய அரசின் டாஸ் லைசென்ஸ் வாங்கிவிட, ஆங்காங்கே குழு குழுவாய் ஆப்பரேட்டர்களே கட்டுப்பாட்டு அறை அமைக்க பணம் சேர்த்து வேலையை ஆரம்பித்தார்கள். இதனிடையில் எஸ்.சி.வியும் பணம் முதல் போட யோசித்துக் கொண்டிருக்க, அரசு கேபிளோ இதோ ஆரம்பித்துவிடும், அதோ ஆரம்பித்துவிடும் என்று அறிக்கை விட்டிக் கொண்டிருக்க, இன்று வரை அரசு கேபிளுக்கு டிஜிட்டல் ஆக்ஸஸ் சிஸ்டம் எனும் முறையில் சென்னையில் தொழில் செய்ய மத்திய அரசின் லைசென்ஸ் வரவில்லை என்பதுதான் நிஜம். மற்றவர்கள் எல்லோருக்கும் அந்த லைசென்ஸ் இருக்க, சென்ற வாரத்தில் பழைய கண்டீஷனல் ஆக்ஸஸ் சிஸ்டத்தின் மூலம் ஒளிபரப்பப்படும் லைசென்ஸை வைத்துக் கொண்டு, புதிய சிஸ்டத்துக்கான ஒளிப்பரப்பு ஆரம்பித்துவிடும் என்று ரெண்டு நாள் முன்னால் அறிக்கை விடுகிறார்கள். இதுவரை மற்ற ஊர்களில் எல்லாம் மற்ற ஆப்பரேட்டர்கள் பாக்ஸின் ரேட், அவர்கள் கொடுக்கப் போகும் பேக்கேஜுகளின் விலை. ஆப்பரேட்டர்கள், மற்றும் எம்.எஸ்.ஓக்களிடையே ஏற்பட்ட பரஸ்பர வருமான பகிர்வு ஒப்பந்தங்கள் என்று எல்லாமே சரியாய் செயல்பட்டு பிக்ஸ் ஆகியிருக்க, சென்னையில் மட்டும் இது எது ஒன்றுக்குமான அடிப்படை வேலைகள் கூட ஆரம்பிக்காமல் குழப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு வாரா வாரம் ஒவ்வொரு எம்.எஸ்.ஓவும் எத்தனை செட்டாப் பாக்சுகள் மக்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மொத்த பாக்சுகள் தேவை? இன்னும் எவ்வளவு மீதம்?என்று கணக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்த தகவல்களின் படி மத்திய அரசின் ட்ராய் நிறுவனத்திடம் சென்னையில் சுமார் 85 சதவிகிதம் வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் வைத்தாகிவிட்டது என்று கணக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இது பற்றி கடைசி நிலையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆப்பரேட்டருக்கு இதைப் பற்றி ஒன்றையும் தெரிவிக்காமல் இவர்களாகவே முடிவெடுத்து கொடுத்த தகவல்கள் தான் சென்னை ஆப்பரேட்டர்களை கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால் நேற்றைய இரவிலிருந்து எல்லார் வீட்டு டிவியும் ப்ளாகவுட் ஆகிவிடும் எனும் பட்சத்தில் சென்னையில் ஏற்கனவே இருக்கும் ஒன்னரை லட்சம் செட்டாப் பாக்ஸுகளில் மட்டுமே சென்னையின் கேபிள் டிவி தெரியும் எனும் பட்சத்தில், மக்கள் பணம் கொடுத்தாலும் உடனடியாய் செட்டாப் பாக்ஸுகளை எம்.எஸ்.ஓவிடமிருந்து வாங்கி கொடுக்க முடியாத காரணத்தினால் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் செய்யும் அவர்களுக்கும் ப்ரச்சனையாகும் எனும் படியால் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் நினைப்பது போல அப்படி உடனடியாய் எல்லார் விட்டிலும் செட்டாப்பாக்ஸை இம்ப்ளிமெண்ட் செய்துவிட முடியாது. அதற்கு காரணம் மக்கள் விரும்பிப் பார்க்கும் தமிழ் கட்டணச் சேனல்களான, சன், விஜய், ராஜ், ஜெயா, போன்ற சேனல்கள் எல்லாம் சென்னையில் மட்டும் காஸ் டெக்னாலஜியில் இலவச சேனல்களாய் தெரிய, சேனல்காரர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப் போல சேனலும் தெரிய வேண்டும் கட்டணச் சேனலாகி டிஜிட்டல் ஒளிபரப்பிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் மக்கள் அனலாகிலேயே சேனல் தெரியும் போது எதற்காக டிஜிட்டல் ஒளிபரப்புக்கு பாக்ஸ் வாங்க வேண்டும் கட்டாகட்டும் பாக்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்க, இவர்கள் கட் செய்வார்களா மாட்டார்களா? அப்படியே கட்டானாலும் பணம் கொடுத்தால் உடனடியாய் மக்களுக்கு எம்.எஸ்.ஓ பாக்சு கொடுக்கும் நிலையில் இல்லாத போது எதற்காக காசை கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று ஆப்பரேட்டர்கள் ஒரு புறமும், இன்னொரு பக்கம் ஒரு வேளை அரசு கேபிள் லைசென்ஸ் வந்து உடனடியாய் ஆரம்பித்து எங்களது செட்டாப்பாக்சுளைத்தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் ஏற்கனவே வாங்கி கொடுத்திருக்கும் பாக்ஸுகளுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பமும், இன்னொரு பக்கம் பாக்சுகளுடன் கொடுப்பட இருக்கும் சேனல் லிஸ்டுகள் என்னன்ன என்பது இது வரைக்கும் யாருக்குமே தெரியாமல் இருக்கும் பட்சத்தில் குழப்பத்தின் உச்சியில் மக்களும், ஆப்பரேட்டர்களும், எம்.எஸ்.ஓக்களும் இருக்கிற இந்த நேரத்தில் எப்படி ஒரு புதிய டெக்னாலஜியை மக்களிடையே அமலாக்க முடியும்?. இந்த தடையுத்தரவினால் மேலும் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து தெளிவான ஒரு முடிவை நோக்கி வருகிற மாதங்களின் இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்கள் டெக்னாலஜி முன்னேற்றத்தை அடையும் என்று நம்புவோமாக.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
என்னது... DTHல் 200க்கும் மேற்பட்ட சானல்கள் தெரியாதா... புதிய தகவல்.
பெங்களூரில் செட்டாப் பாக்ஸ் வைக்காமல் 80க்கும் மேற்பட்ட சானல்கள் மற்றும் தங்களின் மொழிச்சானல்கள் பார்க்க முடியாததால் பெரும்பாலான மற்ற மாநிலத்து மக்கள் தங்கள் வீடுகளில் செட்டாப் பாக்ஸ் வாங்கி விட்டனர்.
//மக்கள் விரும்பிப் பார்க்கும் தமிழ் கட்டணச் சேனல்களான, சன், விஜய், ராஜ், ஜெயா, போன்ற சேனல்கள் எல்லாம் சென்னையில் மட்டும் காஸ் டெக்னாலஜியில் இலவச சேனல்களாய் தெரிய, சேனல்காரர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப் போல சேனலும் தெரிய வேண்டும் கட்டணச் சேனலாகி டிஜிட்டல் ஒளிபரப்பிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால்//
கட்டண சானல்களை ஒழித்தால் இந்நிலை மாறும். ஒழிக்க முடியுமா? சானல்கள் தான் விளம்பரங்கள் என்ற பெயரில் பணத்தை விளம்பரதாரர்களிடம் பெற்றுக் கொள்ளும் போது டிவி பார்க்கும் நம்மிடம் ஏன் பணம் வாங்க வேண்டும்? மேலும் அவர்கள் நமக்குத் தேவையான சானல்களை மற்ற சானல்களோடு நம்மிடம் திணிக்கின்றனர்.
சரியான நேரத்தில் இந்த இடுகையை எழுதி தகவல் தந்தமைக்கு நன்றி கேபிள் சார்!
இவ்வளவு விஷயமா இந்த கேபிள் தொழிலில். என்னோட 12வது வயதில் என் பக்கத்துக்கு வீட்டு அண்ணன் முதன் முதலாக கேபிள் தொழில் ஆரம்பித்தார் 200 ருபாய் அட்வான்ஸ் 20 ருபாய் மாத சந்தா தினமும் மதியம் 2:00 மணி மற்றும் இரவு 9:00 மணிக்கு இரண்டு படங்கள் போடுவார். கேபிளின் பரிணாம வளர்ச்சி கண்டு வியக்கிறேன்.
-----------
PIB India @PIB_India
Manish Tewari: 96% digitization achieved in four metros. With DTH it goes up to 97%
--------------
Today @PIB_India tweets like this? Is this right, Did they leave chennai for this count?
Post a Comment