Thottal Thodarum

Nov 16, 2012

போடா.. போடி.

 
சிம்புவின் படமென்றால், அதுவும் புது இயக்குனர் படமென்றால் அது சாதாரணமாய் வெளிவராது என்கிற ஐதீகத்தை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து தயாரிப்பாளர் நொந்து நூலாகிப் போய் படத்தை வெளியிட்டால் போதுமென கொண்டு வந்திருப்பது தெரிகிறது.


சிம்புவுக்கும்  வரலஷ்மிக்கும் பார்த்த மாத்திரத்தில் லவ் வந்து, தேவையில்லாம ஐந்து ரீலுக்கு பேசிப் பாடி மாய்ந்து, கல்யாணம் செய்து கொள்கிறார்கள். பின்பு குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையை ஒரு விபத்தில் இழக்க நேரிட்ட பின்பு அவர்கள் பிரிகிறார்கள். மீண்டும் சேர்கிறார்கள். அப்புறம் டான்ஸ், சல்சா, குத்துப் பாட்டு என்று எதை எதையோ சொல்லி படத்தை முடிக்கிறார்கள். 

லண்டனில் இருந்து கொண்டு பொம்பளைன்னா இப்படித்தான் இருக்கணும் என்று பப்பில் பார்க்கும் பெண்ணைப் பார்த்து லவ் பண்ண ஆரம்பிக்கும் சிம்பு சொல்கிறார். லாஜிக் என்ற அட்சரமே இல்லாமல் படு திராபையான சவசவ திரைக்கதையினால் ஒரு எழவும் வெளங்கவில்லை என்பதே உண்மை. எனக்கென்னவோ படத்தை எடுத்து முடித்த அளவில் எடிட் செய்து வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் ரிலீஸ் செய்தது போல இருக்கிறது. 
பாகவதர் படத்தைப் போல இடைவேளைக்கு முன்னமே ஐந்தோ ஆறு பாடல்கள் வருகிறது. ஒன்றும் மனதில் நிற்கக் காணோம். ஒளிப்பதிவு, டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், ஹீரோயின் காஸ்டிங்கில் சொதப்பியிருக்கிறார்கள். வரலஷ்மிக்கு டான்ஸ் ஆட வரும் என்பதால் அவரை செலக்ட் செய்திருந்தால், அதையும் அவர் ஒழுங்காக ஆடி படமாக்கவில்லை. பார்ப்பதற்கு ஆண்மைத்தன்மையுடன் இருப்பதால் மனதில் பதிய மாட்டேனென்கிறார். இம்மாதிரியான படங்களில் ஹீரோயின் க்யூட்டாக இருந்தால் தான் எடுபடும். சிம்பு வழக்கம் போல தேவையில்லாமல் ஆணாதிக்கத்தனமாய் பெண்ணுன்னா தமிழ் பண்பாடு, கலாச்சாரம், என்று பத்து நிமிஷத்துக்கொரு முறை லக்சர் அடிக்கிறார். அப்படியே ஓங்கி ஒண்ணு போடலாமா என்று எரிச்சல் வருகிறது.  நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை. காசுக்கு பிடித்த கேடு என்ற வசனம் ஒன்று இருக்கிறது அது இந்த படம் பார்க்கப் போன நமக்கும், இதை தயாரித்தவர்களுக்கும் பொருந்தும்.
கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

Sivakumar said...

//நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை.//

என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?

rahman said...

படுமொக்கை

ஓஜஸ் said...

அப்படியே ஓங்கி ஒண்ணு போடலாமா என்று எரிச்சல் வருகிறது. :):):)

Anonymous said...

சங்கர், சிலரைத் திருத்தவே முடியாது. புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தலையில் கனம் கூடியிருக்கிறது. அது இறங்கும் போது இளமை குறைந்திருக்கும். சுற்றியிருந்த கூட்டம் போயிருக்கும். அப்பவே செய்யாமப் போனோமே என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சியிருக்கும். சிம்பு அந்த வகை. விட்டுத்தள்ள வேண்டியதுதான். ஏதாச்சும் நல்ல படம் வந்தா அப்ப பாத்துக்கலாம்.

dr_senthil said...

ஒகே உங்களுக்கு தமிழ் திரை உலகில் ஒரு ரெட்கார்ட் காத்திருக்குது

Gopi said...

//நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை.//

அவ்வ்வ்வவ்........

அமர பாரதி said...

பெண்கள் ஓங்கு தாங்காக இருந்தால் கவர்ச்சி இன்னும் அதிகம் தான். என் பார்வையில் ஸ்ருதியும் அவ்வாறே தெரிகிறார். மேலும் கட்டைக் குரல் கவர்ச்சியைக் கூட்டுகிறது.

Anbazhagan Ramalingam said...

அடடா. ஜி கு மூஞ்சி ல சோடா அடிஙக‌பா

Philosophy Prabhakaran said...

படம் பார்த்த நிறைய பேர் ஆணாதிக்கம் அதிகமாய் இருப்பதாகவே சொல்கிறார்கள்... நல்லவேளை நான் பார்க்கவில்லை...

காசி குப்பம் விமர்சனம் போட்டாச்சா ?

shameer said...

உங்களுக்கு வயசாகிடுச்சு என்பது உங்க விமர்சனத்தில் நன்றாகவே தெரிகிறது

thays y I don't watch movies by reviews,only by trailer,cost ovvoru manushanukkum ovvoru feeling

aravi said...

Worth watching
You are old too old to watch this jolly movie,
Dont watch movie when you are in financial debt, only get this type of negative review.