நேற்று ஃபேஸ்புக்கில் மும்பை கடையடைப்புக்கான காரணம் மரியாதையில்லை பயத்தினால் என்று விமர்சித்த பெண்ணையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது. இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இம்மாதிரியான கதவடைப்புகளினால் எரிச்சலானவர்கள். இந்தக் கடையடைப்பைப் பற்றி ஊரில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் இவர்கள் சொன்னதைத்தான் சொல்வார்கள். அது தான் உண்மையும் கூட.ஆனால் வெளியில் சொல்ல பயம். அந்த பயம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.
ஊரில் நடவடிக்கை எடுக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது இம்மாதிரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பது படு காமெடியாய் இருக்கிறது. இந்த விஷயத்தை எழுதியதற்காக அப்பெண்ணின் பெரியப்பாவின் ஹாஸ்பிட்டலை சிவ்சைனிக் ஆட்கள் துவம்சம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஏன் இவர்கள் மேல் மும்பை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை? பாவம் அந்த மனிதர் இதைப் பற்றி பேச விருப்பமில்லை என்று சொல்லி இனியொரு துவம்சத்தை தவிர்க்க நினைக்கிறார்.அரசு 66ஏ எனும் சட்டத்தை வைத்து பொதுமக்களின் கருத்துரிமையை நசுக்க நினைக்கிறார்கள்.
தமிழ் இணைய உலகில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் என்று எடுத்துக் கொண்டால் அது கலைஞராகவே இருக்கும். பிரபலங்களில் பவர் ஸ்டார் தான் டாப் லிஸ்ட். இவர்கள் மட்டும் தங்களை விமர்சித்தவர்களைப் பற்றி இந்த சட்டத்தை வைத்து புகார் கொடுத்தால் தமிழ்நாட்டில் இணையம் பயன்படுத்தும் பத்து சதவிகிதத்தினராவது ஜெயிலுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டும்.
கருத்து என்றொரு அமைப்பை இணையத்தில் ஆரம்பித்த கார்த்திக் சிதம்பரம், அவரைப் பற்றி ஒருவர் குற்றம் சொன்னார் என்பதற்காக அவர் மீது 66ஏ சட்டத்தை பயன்படுத்தி புகார் கொடுக்கப்பட்டு, பெயிலில் வந்திருக்கிறார். சினிமயி விவகாரம் பற்றி உங்களுக்கே தெரியும். யாரும் எவரைப் பற்றியும் கருத்து சொல்லக்கூடாது என்றால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி பத்திரிக்கை. ஆனால் பெரும்பாலான பத்திரிக்கைகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காமல் விளம்பர வருவாய்க்காகவும், அரசை எதிர்த்து எதற்கு பிரச்சனை என்று யோசித்துக் கொண்டு, ஏதையாவது எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் இணையத்தில் மக்கள் அவர்களுடய கருத்துக்களை சுதந்திரமாய் வெளியிட, பத்திரிக்கைகளை விட பெரிய அளவிற்கு ரீச் கிடைக்க ஆரம்பித்தது தான் இவர்களுடய பிரச்சனை. ஒரு பத்திரிக்கை, ஒரு தொலைக்காட்சி என்றால் தனியாய் வாயடைத்துவிடலாம். ஆனால் இணையத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தேடிக் கண்டுபிடித்து வாயடைக்க முடியும்? அதற்குத்தான் இந்த சட்டத்தை ஏவி ஊருக்கு நாலு பேரை கைது செய்தால் மற்றவர்களும் நமக்கெதுக்கு வம்பு என்று அடங்கிப் போவார்கள் என்ற பய விதையை தூவி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் இச்சட்டத்தின் மூலம்.
கருத்து சொல்கிறேன் என்று வரைமுறையற்ற, ஆபாச கருத்துக்களை எழுதுவதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் எதிர் கருத்துக்களை சொல்லவே கூடாது என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம். எதிர்கருத்துக்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் பொது வெளிக்கே வரக்கூடாது. வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும்.
உண்மையைச் சொல்லப் போனால் மக்களின் கருத்து வெளியீட்டைப் பார்த்து அரசு பயப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கிறது என்பதற்காக மக்களின் வாயடைக்க ஒரு சட்டத்தை இயற்றிய அரசு, இவர்கள் செய்யும் ஆட்சியால் மக்கள் அடையும் மன உளைச்சலுக்கு அரசின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு சட்டத்தை இயற்றியிருந்தால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். அய்யயோ.. இவ்வளவு சொல்லிட்டேனே.. சொல்லலாமா? வேண்டாமா? இந்திய ஐ.டி சட்டத்தை மீறாமல் எப்படி கட்டுரை எழுதுவது? இப்படி எழுதலாம்
Post a Comment
17 comments:
faking news மிக அருமை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் சேப் கமெண்ட் போட்டேன்
அச்சச்சோ..... நீங்கள் இவ்வளோ சொல்லிட்டீங்களே!!!!!!!!!!!!
என்ன ஆகுமோ? ரொம்பவே பயமா இருக்கு:(
சரியாக சொன்னீர்கள்
Hi, Good Post.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/11/blog-post_20.html
Can we do something like this?
thanks...
உதாரணமா கொடுத்திருக்கற போஸ்ட் அழகு. உங்க கருத்தை ஆமோதிச்சு லைக் போட எனக்கு பயமா இருக்குதுங்கோவ்...!
நல்ல பதிவு. 66A க்கு எதிராக இனி ஒரு யூனியன்தான் ஆரம்பிக்க வேண்டும்
http://tamildigitalcinema.com/?p=35791
check this, about you,..
http://tamildigitalcinema.com/?p=35791
Check this about you,..
http://tamildigitalcinema.com/?p=35791
Check this about you,..
sir,
Atfirst to overcome this aricle from the govt.,we bloggers must cum to overall acceptence overthe limits of expression and morals should be there ....
bloggers should be educated how to express their opinion about anything and everything...
It may be dificult but above all freedom of expressions day to day life should moveon...
சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்பவர்களை அதிகாரத்தை பயண்படுத்தி அடக்கியாள நினைப்பது குழந்தைத்தனம். தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது கண்டணத்துக்கு உரியது.
I was searching for just one tamil blogger who
had the guts to touch this subject/news. As for as
I know or based on the tamil blogs I read, it was only
you. Hats off! Shall we increase the 'likes' many fold?
What would happen if there were million likes?
Are there enough places?
Isn't it the right time for the sleeping giant to roar?
அப்படினா இனிமேல் அடல்ட் கார்னர் வருமா..?
நியாயமான கருத்துகளுக்கு கூட தடையா ?முடியலை ?
Faking News மாதிரி நானும் ஒண்ணு ஏற்கெனவே போட்டுட்டேன்! பாருங்க ...
Fully concur with what you have written. The link to 'Fakingnews' is also great.
-R. J.
Post a Comment