சாப்பாட்டுக்கடை- பூர்ணா உணவகம்.
சமயங்களில் பெரிய ஓட்டல்களில் கிடைக்கும் உண்வுகளை விட சின்னச் சின்ன கடைகளில், மெஸ்களில் சாப்பாடு அட்டகாசமாய் இருக்கும். அப்படி ஒரு சின்னக் கடைத்தான் இந்த பூர்ணா உணவகம்.
சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிரில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில், கங்கையம்மன் கோவிலை தாண்டிய பிறகு, வலது பக்கம் பார்த்தல் ஒரு பேக்கரி, அதற்கடுத்து ஒரு உணவகம் இருக்கும் அதுதான் பூர்ணா உணவகம், மற்றும் பேக்கரி.
இந்த உணவகத்தைப் பற்றி முதலில் எனக்கு தெரியாது. நடிகை சிநேகாவின் மேனேஜர் மனோஜ் கிருஷ்ணா எனது நண்பர். அவர் வீட்டில் ஒரு நாள் சாப்பாடு செய்துவிட்டு குழம்புமட்டும் எங்காவது வாங்கி வாங்களேன் என்று சொல்லி வேலை செய்பவரை அழைத்துச் சொன்ன போது, சடுதியில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, தலைக்கறி என்று நான் வெஜ் மட்டுமில்லாமல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர் என்று அசத்தினார். மிகவும் சுவையாக இருக்கவே.. எங்கே வாங்கினீர்கள் என்று சொல்ல.. பூர்ணா உணவகத்தைப் பற்றிச் சொன்னார். மேற்ச் சொன்ன அயிட்டங்களில் தலைக்கறி தவிர, ஒரு சாப்பாட்டுக்கு கூட கட்டிக் கொடுத்தது. இது மட்டுமில்லாமல் குழம்பு வெறும் பத்து ரூபாய்தான் என்றதும் அசந்து போனேன். இவ்வளவு குறைந்த விலையில் சுவையான சாப்பாடா? என்றதும் அடுத்த சில நாட்கள் கழித்து அங்கேயே போய் சாப்பிடுவொம் என்று முடிவெடுத்து போய் சாப்பிட்டோம்
மிகச் சிறியக்கடை, மொத்தமாய் ஒரு எட்டுப் பேர் உட்கார்ந்தால் அதிகம். உட்கார்ந்து சாப்பிடுபவர்களை விட பார்சல் அதிகம். அதிலும் ஒவ்வொரு குழம்பையும் தனித்தனியாய் பார்சல் செய்து கொண்டு போகிறவர்கள் அதிகம். அருமையான, திருப்தியான ஒரு சாப்பாட்டை மிக சகாயமான விலையில் சாப்பிட ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். பூர்ணா உணவகம்.
Comments
15 ஆம் தேதி மதியம் அங்கே சாப்பிடலாமா?
நான் ஒரு முறை பரோட்டா பாயா சாப்பிட்டேன்
சுமார்தான் . . .
மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவில் அருகே பல நல்ல சைவ ஹோடேல்க்கள் உள்ளன. உதாரணம்,
மதுரை ரயில்வே ஜங்ஷன் க்கு எதிரே உள்ள காகா தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ ராம் மெஸ் (மதிய உணவு ), மற்றும்
மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவில் சுற்றியுள்ள வடக்கு சித்திரை விதியில் உள்ள கோபு ஐயங்கார் ஹோட்டல் (
வெள்ளை அப்பம் , பொடி ஊத்தப்பம் )
எப்போதாவது மதுரை செல்லும் வைப்பு கிடைத்தால் மிஸ் பண்ண வேண்டாம்.
Watch Tamil TV at: : http://www.watchtvs.co.cc/