காதல் கதைகளுக்கு புகழ் பெற்ற யாஷ்சோப்ரா, மொழு மொழு அழகி காத்ரீனா, துள்ளும் இளமை அனுஷ்கா, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக், உலக சூப்பர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதைவிட எதிர்பார்ப்பை எகிற வைக்க வேற என்ன காம்பினேஷன் வேண்டும்? இவ்வளவு பேரும் சேர்ந்து கொடுத்திருந்த ஹைஃப் எப்படி என்றால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.
ஷாருக், காத்ரீனா, அனுஷ்கா இந்த மூன்று கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதை. ஷாருக் பாதுகாப்பு இல்லாமல் பாம்களை செயலிழக்க வைக்கும் மிலிட்டரி மேன். காத்ரீனா லண்டனில் பெரும் பணக்காரரான அனுபம்கேரின் மகள். அனுஷ்கா ஒரு டாம்பாயிஷ் பரபர, துறு துறு டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரியாளர் ஆக வேண்டும் என்கிற துடிப்போடு செயல்படும் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையே ஆன காதல் தான் கதை என்றாலும் அந்தக் காதல் ஒரே நேரத்தில் நடைபெறாமல் பத்து வருட இடைவெளியில் உருவாகி, சிக்கலாகிறது எப்படி என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
கதை நடைபெறும் காலகட்டங்கள் மூன்று பிரிவாகப் போகிறது. ராணுவ வீரனாய் இருக்கும் கட்டம், ப்ளாஷ்பேக்கில் பத்து வருடங்களுக்கு பின்னால், பின்பு மீண்டும் லண்டனில் தன்னிலை மறந்த நிலையில் இருக்கும் கட்டமென போகிறபடியால் ரொம்பவும் நீளமாய் போகிறது கதை. ஷாருக்கின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று சொல்வது கொஞ்சம் ஓவராகவே இருக்கும். ஆனால் காத்ரீனா, ஷாருக்கின் காதல் காட்சிகளில் காத்ரீனா வெண்ணெயாய் இருக்க, ஷாருக்கின் இளமை துள்ளல் நடிப்பெல்லாம் பார்த்து பார்த்து சலித்த அதே ரியாக்ஷன்களாய் இருக்கும் போது கொஞ்சம் அலுப்பூட்டத்தான் செய்கிறது. ஆனால் மிலிட்டரி ஆளாய் வரும் நேரங்களில் பாடி லேங்குவேஜ், அனுஷ்காவிடம் காட்டும் கடுமை, பின்பு சட்டென இளகி, உருகும் நடிப்பில் அட போட வைக்கிறார் ஷாருக்.
காத்ரீனா அழகு பதுமையாய் மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். எப்படித்தான் இவரையெல்லாம் அழ வைத்துப் பார்க்க மனசு வந்ததோ தெரியவில்லை. அதுவும் மினி ஸ்கர்டுகளோடு வலம் வர, வர, மனசெல்லாம் அதிர்கிறது. இவருக்கும் ஷாருக்குமான ஹாஸ்பிட்டல் காட்சியில் அவர்களுடய நெருக்கமும், அந்த முத்தமிடலும் வாவ்.. செம பர்பாமென்ஸ். ஆனால் இவரது கேரக்டரில் பெரும் குழப்பம் இருக்கிறது. பணக்காரப் பெண்ணாய், தம் அடிப்பவளாய், ஏற்கனவே காதல் செய்பவளாய், தெருவில் பாடி, கிடைக்கிற பார்ட் டைம் வேலையெல்லாம் பார்க்கும் ஷாருக்கை விரும்புவதும், மிக மிக சாதாரண காரணத்துக்காக தன் காதலை துறக்கும் முடிவுக்கு வருவது எல்லாம் படு சிம்பிளாகவும் நம்ப முடியாத வகையில் இருக்கிறது.
அனுஷ்கா.. துள்ளல் ராணி, படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் புயலாய் திரையில் நுழைந்தவர் சட்டென தன்னுடைகளை களைந்து ஒரு பிக்சர்க்யூ கடல் பின்னணியில் டூ பீஸில் வெளிபடுகிற இடத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்களே “வாவ்” என்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரது கேரக்டரிலும் குழப்பம். உலகத்தில் உள்ள எல்லா நாட்டின் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறவள், ஆண்களுடன் சரிக்கு சரியாய் ஆட்டம் போடுகிறவள் திடீர் திடீரென செண்டிஆகி, கலாச்சாரமாய் மாறுவதும், காதல் வயப்படுவது, பின்பு விட்டுக் கொடுப்பதும் கொஞ்சம் யோசனையை வர வழைத்தாலும் இவரது கேரக்டர் இண்ட்ரஸ்டிங்.
அசோக் மேத்தாவின் ஒளிப்பதிவில் பனிவிழும் லண்டனும், லண்டன் தெருக்களும், இந்திய கடல்களும் மனதை அள்ளுகிறது. இசை நம் ஏ.ஆர்.ரஹ்மான். ”சல்லா” “இஷ்கு சவா” “ஜியாரே” ஆகிய பாடல்கள் அருமையான மெலடிக்கள். அதிலும் “ஜியாரேவும் சல்லாவும்” ஹாண்டிங். பின்னணியிசையில் பாடல்களை அவரவர் சிட்ஷுவேஷனுக்கு ஏற்றார்ப் போல அமைத்திருந்தது ராஜாவின் ஞாபகத்தை கிளப்பினாலும், வாவ்.. க்யூட்
கதை ஆதித்யா சோப்ரா, இயக்கம் யாஷ் சோப்ரா. மாபெரும் காதல் கதைகளை கொடுத்த ஜித்தர். அவரது கடைசி படமாய் இந்தப் படம் அமைந்துவிட்டது இந்திய திரையுலகத்திற்கு ஒர் இழப்பு என்றே சொல்ல வேண்டும். ஒரு சில பேருக்கு மட்டுமே காதலை அதன் அழகு கெடாமல் திரையில் உணர்ச்சிப் பிழம்பாய் கொண்டு வரும் ஜித்து வேலை தெரியும். அதில் இவர் கரை கண்டவர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். ஆனால் கதை ஆரம்பிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் லண்டனில் ஷாருக், காத்ரீனா காதல் ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமிழக்கிறது. அதற்கு காரணம் காத்ரீனாவின் மிக ஃபிலிமியான நம்பிக்கை. அதை வைத்து காதலர்களிடையே பிரிவு என்பதும், அல்ட்ரா மார்டன் பெண் எல்லா எக்ஸ்ட்ரீமுக்கும் போகிறவள் கல்யாணத்திற்கு மட்டும் அப்பா சம்மதித்தால் தான் என்பதும், ஜம்ப் கட்டில் காதலையும் பிரிவையும் சொல்லும் காலத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு ஆரம்பம், நடு, முடிவு என்று கொஞ்சம் பழைய பட வாசனை வருவதால் படத்தில் லெந்த் இம்சைப் படுத்துகிறது. காதலை சொல்ல டைரி, ஒரே காதல் பாட்டு, ஆக்சிடெண்ட், ஞாபக மறதி, க்ளைமாக்ஸ் காதலிகள் குழப்பம் என்று நிறைய க்ளீஷேக்கள் இருந்தாலும், காத்ரீனாவின் அம்மா அவருடய 12வது வயதில் அனுபம்கர்ரை பிரிந்துப் போய் ரிஷிக்கபூருடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதும், எந்த காதலி தன் உயிருக்காக பிரிந்தாலோ அந்த உயிரை கடவுளை வம்பிழுக்க, பாதுகாப்பு உடையில்லாமல் பாம் செயலிழக்கும் மேட்டர், ஹாஸ்பிட்டல் காட்சிகள், மூன்று கேரக்டர்களிடையே ததும்பும் காதல் இவையெல்லாம் குறைகளை மறக்கவும் வைக்கிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். யாஷ் சோப்ரா மறைந்தாலும் தான் என்றைக்கும் தான் ஒரு காதல் கதை மன்னன் என்பதை கல்வெட்டில் செதுக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
5 comments:
குழப்பமான விமர்சனம் . . .
Diwali Hangover
is this review positive or negative?
என் நண்பன் பார்த்து விட்டு மிகவும் அருமை என புகழ்ந்தான் ...
நல்ல விமர்சனம் ...
கொஞ்சம் லேட் அனாலும் சொல்கிறேன் இனிய திபாளி வாழ்த்துக்கள் ..
இன்று
துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?
ஒன்னும் பிரியல பா ... கடவுள் வாழ்த்தா பாட சொல்லற ?
Post a Comment