Thottal Thodarum

Dec 24, 2012

கொத்து பரோட்டா -24/12/12

தலைநகர் டெல்லி கற்பழிப்பு  நகரமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரி மாணவி துர்நிகழ்வுக்கு பிறகும் இரண்டு கற்பழிப்புகள் நடந்தேறியிருக்கிறது. ஏற்கனவே இம்மாதிரியான கற்பழிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராய் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டெல்லி என்றில்லாமல் இந்தியாவெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் ஏழாம் வகுப்பு மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்திருக்கிறான் ஒரு 35 வயது வெறிபிடித்தவன். கடும் தண்டனை மட்டுமே இம்மாதிரியான கொடுமைகளை தடுக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 
பெண்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சாதகமாக இயற்றப்படும் சட்டங்கள் பல சமயங்களில் அவர்களின் நிஜ பாதுகாப்பிற்காக பயன்படுத்தாமல் கணவனையோ, அல்லது அவர்களால் விரும்பப்படாத ஆட்களை பழிவாங்குவதற்காக வரதட்சணை கேஸ், கற்பழிப்பு கேஸ் என்று புகார் கொடுத்து மிரட்டி பணம் கறக்கும் பெண்கள் தான் அச்சட்டங்களை முழு மூச்சாக பயன்படுத்துகிறார்கள். இச்சட்டங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆண் தான். எனக்கு தெரிந்து எத்தனையோ நண்பர்களின் வாழ்வில் இம்மாதிரியான பெண்கள் கேஸ் கொடுத்து அவர்களின் நிம்மதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே சட்டம் என்று ஒர் விஷயம் இயற்றப்படும் போது இரு பாலர்களுக்கும் பொதுவாய் நியாயமாய் அவர்கள் தரப்புகளை காது கொடுத்து கேட்டு பரிசீலுக்கும்படியான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
புதுசா கல்யாணம் ஆகி பொண்ணு தற்கொலை செய்திட்டா புருஷனை அரஸ்ட் பண்றவங்க புருஷன் பண்ணிக்கிட்டா மனைவியை அரஸ்ட் பண்ணுவாங்களா?# டவுட்டு

டெல்லி பெண்ணுக்காக மட்டும் மாங்குமாங்கென்று போராடுகிறவர்கள் கொஞ்சம் நம் ஊர் திருநெல்வேலி பெண்ணுக்காகவும் குரல் கொடுக்கலாம்.

நேற்றும் ஒரு கற்பழிப்பு டெல்லியில். டெல்லி என்ன தலை நகரமா? அல்லது கற்பழிப்பு நகரமா?

புத்தக கண்காட்சிக்கு சாருவின் புதிய புத்தகம் இல்லாமல் பப்ளிசிட்டியே இல்லை.:(

என்ன கொடுமைடா.. நேத்து 13 வயசுப் பொண்ணை கற்பழித்து கொன்றிருக்கிறார்கள். தூக்கு தண்டனையை ரத்து பண்ணக்கூடாது..

பிரபலமானவர்கள் மறைமுகமாய் மத பிரசாரத்தை செய்யும் போது வருத்தமாய் இருக்கிறது.

ரேப் பண்றவனை கண்டிக்காம, பொண்ணுங்களை ஒழுங்கா நடந்துக்க சொல்றது ஒரு பத்திரிக்கைக்கு அழகா? த்தூ..

ஆண் கொசுவை உற்பத்தி செய்து காமா ரேக்களை வைத்து பெண் கொசுக்களை மலட்டுத்தன்மை செய்து கொசுவை அழிக்கப் போறாங்களாமே? இதுக்கு எத்தனை கோடியோ?

அக்கா புருஷன் தன்னை கற்பழித்துவிட்டார் என்று பெற்றோரிடம் முறையிட்டதற்கு அவளின் அப்பா அவளை அடித்தே கொன்றிருக்கிறார். மிருகம் அவனா இவனா?

மதுக்கடைகளை மூடச் சொல்லி பெட்ரோல் குண்டு வீசினாராம் ஒரு ப.ம.க காரர். புல் மப்பாயிருச்சோ.

ரஜினி சொன்னதால் சிகரட் பழக்கத்தை ரசிகர்கள் விட்டார்களாம். எம்.ஜி.ஆர். சொல்லியே விடாதவங்க நாங்க # ரஜினி ரசிகர்கள்

தாம்பரத்துல இருக்கேன் வர அரை மணி நேரம் ஆகும் என்றார் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருந்து கொண்டு # மனைவியிடம் நண்பர்.

"அடியே” வில் ரஹ்மானின் இசை ஹாண்டிங். என்ன கேட்கும் போது ராஜாவின் “மேளத்தை மெல்ல தட்டை ஞாபகப்படுத்துகிறது

வருகிற வாரம் மட்டும் சுமார் பத்து படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி அவசரப்பட்டு ரிலீஸ் பண்ணி என்னத்த பண்ணப் போறாங்க # டவுட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கவியரங்கம்:))
இந்த தலைப்ப பார்த்துட்டு  கவிதைக்கு வந்த சோதனைன்னு நீங்க எல்லாம் புலம்புறது புரியுது. என்னா செய்யுறது கவியரங்கத்துல படிச்சா கவிதைதானே.. சோ.. அன்னைக்கு என் எண்டர் கவிதையை படிச்சப்ப எஸ்கேப் ஆனவங்க எல்லோரையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுற மாட்டேன் இதோ என் கவிதை அரங்கேறிய வீடியோ.. அது மட்டுமில்லாம நம்ம சென்னை பதிவர் சந்திப்புக்காக ஒரு தனி தளமே அமைத்து, அதில் எல்லா வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவர் சந்திப்பு குறித்த நிகழ்வுகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் மிகச் சிறப்பாக விழா குழுவினர் இத்தளத்தில் அமைத்திருக்கிறார்கள். அந்த தளத்தைப் பார்க்க..
@@@@@@@@@@@@@@@@@@@@
டிசம்பர் உற்சவம்
 WoW what a fusion

@@@@@@@@@@@@@@@@@@@@
ரஹ்மான் புதிய சிங்கிள் ஒன்றை வெளியிட இருக்கிறார்."Infinite Love" என்கிற பெயரில் வந்தே மாதரத்திற்கு பிறகு பதினைந்து வருட இடைவெளியில் இந்த சிங்கிள் வெளி வருவதால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. அல்லது உருவாக்கியிருக்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதை பலரும் இனிமே கிரிக்கெட்டே பார்க்க மாட்டோம் என்பதைப் போல எல்லா ஊடங்களிலும் ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் ஒரு நாள் ஒய்வு பெற்றுத்தானே ஆக வேண்டும். கவாஸ்கர் நல்ல ப்ளேயர் என்பதால் இன்றைய டிவெண்டி டிவெண்டியில் ஆட வைக்க முடியுமா என்ன?. டெண்டுல்கர் நல்ல நிலையில் பெருமையுடன் இருக்கும் போதே ஒய்வு பெறுவதுதான் அவருக்கும் அவரின் ஆட்டத்திற்கும் நல்லது என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
நீர்ப்பறவை இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவை விட்டு விலக்ப் போவதாய் ஃபேஸ்புக்கில் அறிவித்திருந்தார். அதற்கு சுமார் எழுபது பேர் லைக் போட்டிருந்தார்கள். அதை வைத்துப் பார்த்தால் ஏதோ அவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்ற அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வளவு பேர் அவரது கருத்துக்கு மதிப்பு அளிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு சென்னையில் நடந்த உலகப் பட விழாவில் அவரது படத்திற்கு விருது வழங்க எல்லா தகுதிகளிருந்தும், உதயநிதி தயாரிப்பு என்பதால் கொடுக்கவில்லை. பாலிடிக்ஸ் அதனால் தான் அப்படி ஸ்டேடஸ் போட்டேன் என்றார். ஆனால் எனக்கு என்னவோ அப்படி தெரியவில்லை. அருள்நிதியின் தயாரிப்பில் வெளிவந்த “மெளனகுரு” படம் விருதைப் பெற்றிருக்கும் பட்சத்தில் அத்தகைய பாலிடிக்ஸ் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. சரி விடுங்க யாருக்கு விருது கொடுத்தாலும் கிடைக்காதவங்க, பிடிக்காதவங்க எல்லோரும் சொல்ற அதே காரணம் தான் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். போன வாட்டி தேசியவிருதுல பாலு மகேந்திரா இருந்ததால தான் வெற்றிமாறன், சீனு ராமசாமி படத்துக்கெல்லாம் விருது கிடைச்சதுன்னு கூடத்தான் விருது கிடைக்காதவங்க சொன்னாங்க. அதுக்காக அது உண்மையாயிருமா என்ன?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
உலக திரைப்பட விழா நடத்தும் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து படங்களை திரையிடும் திரையரங்குகளை சரியாக தெரிவு செய்யுங்கள். அதுவும் போட்டிக்கு வரும் படங்களை திரையிடும் திரையரங்கு ஒரு ஒரிஜினல் திரையரங்காய் இருந்தால் நல்லது. ஏனென்றால் இம்முறை ராணி சீதை ஹாலில் தான் போட்டிக்கான படங்கள் ஏசி செய்யப்பட்ட டெண்ட் கொட்டகை நிலையில்  புதிதாய் திரைக்கட்டி, மோசமான அகஸ்டிக்குடன், சரியான டிஜிட்டல் பார்ட்னர் இல்லாமல் ப்ளீச்சுடன் படம் வெளியிட்டிருக்கிறார்கள். ஸோ.. இம்மாதிரியான திரையிடலில் படம் பார்க்கும் வெளிநாட்டினர், மற்ற மாநிலத்தவர்கள் படத்தின் குவாலிட்டியே இவ்வளவுதானோ என்று நினைத்துப் போக வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமில்லாமல் நிறைய காட்சிகள் கேன்சல் ஆகியிருக்கிறது. அதற்கு காரணம் அப்படங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு பர்மிஷன் வாங்காமல் விட்டதுதான். க்யூப் போன்ற நிறுவனங்கள் அப்படங்களுக்கு சப்டைட்டிலோடு, ஒளிபரப்பு பாஸ்வேர்ட் கொடுக்க ஒன்னரை லட்சம் வரை கேட்டதாகவும் அது கட்டுப்படியாகாததால் வேறு வழியில்லாமல் டிவிடியில் ஒளிபரப்பியதாகவும் செய்திகள் வந்தது. விழா நடத்துவது என்பதும் அதற்கு ஃபண்ட் கிரியேட் பண்ணுவது மட்டும் அமைப்பாளர்கள் வேலையில்லை. அந்த விழாவை நல்ல தரத்துடன் நடத்துவதும் அவசியம். அடுத்த வருடத்தில் இக்குறைகளை சரி செய்வார்கள் என்று நம்புவோமாக
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A boss has to interview 4 girls for a secretary position. He asked the same question to each one of them..
Boss: "A woman normally has lips on 2 different places. What's the difference between the two?"
First Girl: "one is hairy, the other isn't!"
Boss: "ok.. good!"
Second Girl: "one can talk but the other can't!"
Boss: "that's better!"
Third Girl: "one is vertical & the other is horizontal!"
Boss: "Hmm.. clever!"
Last Girl: "one is for my use & the other is for my Boss!"
Boss: "you are hired!!
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Unknown said...

சுவாரசியம் இல்லை

rajamelaiyur said...

தமிழ் பெண்களுக்கு பிரச்சனை என்றால் யாரும் போராடவருவதில்லையே ஏன்?

rajamelaiyur said...

வழக்கம் போல அருமையான தொகுப்பு.

அன்புடன்
ராஜா

இதையும் படிக்கலாமே.

அஜித் அடுத்த படம் , விஜய் 25

Siraju said...

அடல்ஸ் ஒன்லி ஜோக்குகளை போடுவதை தவிர்த்து, ஹன்சிகா மோத்வானியின் மார்ப்புகள் தேங்காய்களைப் இருப்பதாகவும் குறிப்பு காட்டுவதை நிறுத்திவிட்டு, டெல்லி பெண் கற்பழிப்பு பற்றி நாம் பேசுவது.......

sathish said...

படு சுவாரஸ்யமான பதிவு. இன்னிக்கு நைட் தூக்கமே வராது.

தமிழ் பையன் said...

இதுபோன்று செக்ரட்டரி வேலை செய்யும் பெண்களை மட்டம் தட்டும் ஜோக்குகள் மட்டும் ரொம்ப உசத்தியாக்கும்.

Unknown said...

கடும் தண்டனைகள் அவசியம்