ஐநாக்ஸ் +கள்
சென்னையின் முக்கியமான மால்களில் ஒன்று ஐநாக்ஸ். மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள். டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளிபரப்பு என டெக்னிக்கலாய் எல்லா தரமும் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்தான். சமீபத்திய 48HFR டெக்னாலஜி உட்பட எல்லா தரத்தையும் அப்கிரேட் செய்திருக்கிறார்கள். 3டி கண்ணாடிகளுக்கு அட்வான்ஸாய் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்த்துவிட்டு கண்ணாடியை திரும்பக் கொடுத்தால் பணத்தை திரும்பக் கொடுக்கிறார்கள்.
ஐநாக்ஸ் -கள்
நகரின் முக்கியமான இடத்தில் இருந்தும் சத்யம் அளவிற்கு இங்கு மக்கள் படம் பார்க்க விரும்பாத காரணம். பார்க்கிங் கட்டணம். இவர்கள் தான் முதல் முதலாய் மணி நேரக் கணக்கில் பணம் வாங்க ஆரம்பித்தவர்கள். இதற்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஐநாக்ஸ் காரர்கள் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் இங்கே வருவதற்கு காரணம் இவர்களின் தியேட்டரினால் தான். அப்படியிருக்க, படம் பார்க்க வருகிறவர்கள் அவர்களின் டிக்கெட்டை காட்டினால் இலவச பார்க்கிங்கோ, அல்லது ப்ளாட்டாக ஒரு தொகையையோ வாங்கிக் கொள்ளலாம் இல்லையா? அடுத்து சீட்டுக்கள். வர வர தியேட்டரில் சீட்டுக்கள் ஆட ஆரமபித்து உட்காருவதற்கே கஷ்டமாய் இருக்கிறது. உட்காருமிடமெல்லாம் குஷன் போய் கட்டையாய் இருக்கிறது . நேற்று இரவு ஹாபிட் பார்க்க ஸ்கிரீன் 4க்கு போயிருந்தேன். ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. அது மட்டுமில்லாமல் புட் ஸ்டால்களில் சில்லறை இல்லை என்பதை சொல்லிய விதம் கொடுமை. இஷ்டமிருந்தா கொடு இல்லையா போய்கிட்டேயிரு என்பது போலத்தான் பேசுகிறார். அதே போல ஆன் லைனில் டிக்கெட் விற்பனை படு மொக்கையாய் இருக்கிறது முக்கியமாய் புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் பெரும்பாலும் சர்வர் ப்ரச்சனையாகவோ, அல்லது டிக்கெட் இல்லை என்பது போல தான் காட்டும். ஆனால் தியேட்டரில் போனால் டிக்கெட் கிடைக்கும். பெரும்பாலும் 10 ரூபாய் டிக்கெட் கொடுப்பதேயில்லை என்ற குற்றசாட்டும் இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான மால்களின் கொடுப்பதேயில்லை. சத்யம் தவிர. அதே போல தியேட்டருக்கு டிக்கெட் வாங்க போக வேண்டுமென்றால் உள்ளே பார்க்கிங்கிற்கு 20 ரூபாய் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும். ஒரு வேளை கரண்ட் புக்கிங்கில் டிக்கெட் இல்லை என்றால் சினிமா பார்ப்பதற்காக மட்டுமே நாம் சென்றிருந்தால் 20 ரூபாய் தண்டம் தான்.
இதை தவிர்க்க பெரும்பாலும் நிறைய ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே உள்ள சந்தில் வண்டியை வைத்துவிட்டு போக இதான் சாக்கு என்று ட்ராபிக் போலீஸ் அங்கே வந்து வண்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவதால் அதற்கு தண்டம் அழுதவர்கள் நிறைய பேர். சமயங்களில் மால் நிர்வாகமே போலீஸுக்கு தகவல் சொல்லி தூக்கச் சொல்வதாய் சொல்கிறவர்கள் உண்டு. போய் டிக்கெட் எடுக்கும் நேரம் தான் என்று உள்ளே போனால் மால் ஆரம்பித்த நாட்களில் கீழே தரைத்தளத்தில் ஐநாக்ஸ் பாக்ஸ் ஆபீஸ் கவுண்டர் ஒன்று இருந்தது. ஆனால் சில வருடங்களாய் அதை மூடிவிட்டு, இண்டர்நெட் புக்கிங் கிஸோக் ஆக்கிவிட்டு, மூன்றாவது மாடியில் தான் போய் டிக்கெட் வாங்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டதால் என்ன தான் எஸ்கலேட்டரிலோ, அல்லது லிப்டிலோ போனாலும், கீக்கிடமான மூன்றாவது தளத்தில் ஒரு லைனில் நின்று டிக்கெட் வாங்கிவிட்டு வர நேரம் எடுக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில் போலீஸ் வண்டியை தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள்.
கஸ்டமர் சர்வீஸ் என்பது மிகுந்த கஷ்டமான் விஷயம்தான் என்றாலும், தியேட்டரில் உள்ள டெக்னிக்கல் அப்கிரேடேஷன்களைப் பற்றி டிக்கெட் கொடுப்பவர்களுக்கு கொஞ்சமாவது சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியது அவசியம். உதாரணமாய் நேற்று பார்க்கப் போன ஹாபிட் படம் ஐநாக்ஸில் 48HFRல் தான் போடுகிறார்களா என்று கேட்டால் 3டிதான் சார் என்கிறார் டிக்கெட் கொடுப்பவர். நான் இந்த டெக்னாலஜியையின் அவுட்புட்டைப் பார்ப்பதற்காகவே தெரிந்தெடுத்து போயிருக்கும் போது அதே தியேட்டரில் 2டியும் ஓடுகிறது. தவறான டிக்கெட் எடுத்துப் போய் சொதப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான் இவ்வளவு கேள்வி கேட்கிறேன் என்று விளக்கிச் சொன்னவுடன், பக்கத்தில் இருந்த நண்பரிடம் சொல்லி, மேனேஜர் ஒருவருக்கு போன் செய்து கன்பர்ம் செய்தார். இதற்கு எனக்கு பின்னால் நான்கைந்து பேர் க்யுவில் உச் கொட்டினார்கள்.
சினிமா பார்க்க வருகிறவர்களிடம் அடித்துப் பிடுங்குவது போல பாக்கெட்டில் உள்ள எல்லாவற்றையும் கறந்து கொண்டுதான் விடுவது என்று முடிவோடு இந்த மால்களும், தியேட்டர்களும் செயல்பட்டார்கள் என்றால் நிச்சயம் திருட்டு டிவிடியும், கேபிள்டிவியும்,டி.டி.எச்சும்தான் மக்களின் பொழுதுபோக்கிற்கு என்றாகிவிடும் நிலை நிச்சயம் வந்துவிடும். ஜாக்கிரதை.
கஸ்டமர் சர்வீஸ் என்பது மிகுந்த கஷ்டமான் விஷயம்தான் என்றாலும், தியேட்டரில் உள்ள டெக்னிக்கல் அப்கிரேடேஷன்களைப் பற்றி டிக்கெட் கொடுப்பவர்களுக்கு கொஞ்சமாவது சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியது அவசியம். உதாரணமாய் நேற்று பார்க்கப் போன ஹாபிட் படம் ஐநாக்ஸில் 48HFRல் தான் போடுகிறார்களா என்று கேட்டால் 3டிதான் சார் என்கிறார் டிக்கெட் கொடுப்பவர். நான் இந்த டெக்னாலஜியையின் அவுட்புட்டைப் பார்ப்பதற்காகவே தெரிந்தெடுத்து போயிருக்கும் போது அதே தியேட்டரில் 2டியும் ஓடுகிறது. தவறான டிக்கெட் எடுத்துப் போய் சொதப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான் இவ்வளவு கேள்வி கேட்கிறேன் என்று விளக்கிச் சொன்னவுடன், பக்கத்தில் இருந்த நண்பரிடம் சொல்லி, மேனேஜர் ஒருவருக்கு போன் செய்து கன்பர்ம் செய்தார். இதற்கு எனக்கு பின்னால் நான்கைந்து பேர் க்யுவில் உச் கொட்டினார்கள்.
சினிமா பார்க்க வருகிறவர்களிடம் அடித்துப் பிடுங்குவது போல பாக்கெட்டில் உள்ள எல்லாவற்றையும் கறந்து கொண்டுதான் விடுவது என்று முடிவோடு இந்த மால்களும், தியேட்டர்களும் செயல்பட்டார்கள் என்றால் நிச்சயம் திருட்டு டிவிடியும், கேபிள்டிவியும்,டி.டி.எச்சும்தான் மக்களின் பொழுதுபோக்கிற்கு என்றாகிவிடும் நிலை நிச்சயம் வந்துவிடும். ஜாக்கிரதை.
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
very true - recently paid almost equivalent to theatre ticket for watching a movie at PVR .
தியேட்டர் காரங்க திருந்தர மாதிரி தெரிலயே கேபிள் சார்
cableji,
Hobbit has to be watched only in Sathyam theater i.e only Sathyam. Verra enga parthalum mokkai than.
Correct sir...intha theatre karanga panra attuzhiyam thaanga mudiyala...pona vaaram kadaloor krishnaalaya theatrela kumki paaka pona ticket vilai nuthi irubathu ruba aadi poiten...enaku oru mani nerathuku munnadi vanginavaruku enbathu ruba..ithai ketal mariyathayana pathil illai..istamna vaangu illana po apadinguran...vayirellam yerinjathu intha theatre karangalum cinema karangalum naasama poga...intha
cinemakarangala kondadarathunalathana intha thimiru...oru kaalam varum thamizh cinemavai cdya pottu veedu veeda nai mari vikiramathiri...entha oru viyabarathileyum oru customer ivalavu kevalapadarathu illainga...
What is 48 HFR? Can you enlighten me?
As you have mentioned they give a 3G viewing glass for Rs 50 (returnable) and I expect it is given at the counter itself. Then it cannot be a 2D version - right? Am I missing something?
-R.J.
மூன்று நாட்களாய் இந்த தொடர் பதிவை படிக்க நினைத்தேன்! திறக்க நேரம் எடுத்ததால் படிக்க முடியவில்லை! இன்றுதான் படித்து முடித்தேன்! நல்ல அலசல்! நன்றி!
"சினிமா பார்க்க வருகிறவர்களிடம் அடித்துப் பிடுங்குவது போல பாக்கெட்டில் உள்ள எல்லாவற்றையும் கறந்து கொண்டுதான் விடுவது என்று முடிவோடு இந்த மால்களும், தியேட்டர்களும் செயல்பட்டார்கள் என்றால் நிச்சயம் திருட்டு டிவிடியும், ,டி.டி.எச்சும்தான் மக்களின் பொழுதுபோக்கிற்கு என்றாகிவிடும்"
திருட்டு விசிடியையும் , டி டி எச்சையும் ஒரே நிலையில் வைத்து எழுதி இருக்கிறீர்களே..சூப்பர்... இதைத்தானே நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம்
சரியாய் சொல்லி இருக்கீங்க
The only way these thieves can understand is, everyone boycotting cinemas and watch through pirated DVD or through DTH which Kamalhasan intends to do. Or people can wait for two or three months for the movies to appear in Satellite Channels.
இப்டியே போன சத்யம் தவிர வேற எதுவும் உருப்படி இல்லையா...Fame பத்தி நீங்க ரொம்ப நாள் முன்னாடியே பல குறை சொல்லி இருந்தீங்க..மிச்சம் இருக்கறது PVR, AGS, KAMALA, maayajaal..அடுத்தடுத்த பதிவுகளில் எதிரபாக்கலாமா ?
To Valluvan once uppon a time I visit very often (once in a week)to cud kirishnalaya theater,but I had visited just 2 time in last 11 year.No respect why would I go there.just avoid.tks
Post a Comment