Thottal Thodarum

Dec 12, 2012

அடுக்குகளிலிருந்து - செத்துப் பிழைச்சவண்டா

சீரியல்களில் சாவுக் காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகனுக்கும் மிக மோசமான ஒரு அனுபவம் ஆகும். செத்துப் போவது போல நடிப்பதால் அல்ல. அதன் பிறகு அந்த சீரியலில் போட்டோவாக மட்டுமே நாம் பயன்படப் போகிறோம் என்பதை நினைக்கும் போதும், தினமும் விழும் சம்பள மீட்டர் வராது என்பதாலும் தான். ஆனால் சில சமயங்களில் டி.ஆர்.பி விழும் நேரத்தில் செத்துப் போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து ப்ளாஷ்பேக்கில் எல்லாம் கதை போகக்கூடும், சீரியல் தயாரிப்பாளரும், திரைக்கதையாசிரியர் தயவினால். நான் இங்கே சொல்லப் போவது அவர்களைப் பற்றியல்ல. ஒரு சாவுக் காட்சியில் நடித்ததைப் பற்றி.


ஒரு பிரபல டிவி சேனலில் ஒளிப்பரப்பாகும் மதிய நேர சீரியலில் அப்போதுதான் கமிட்டாகி பத்து எபிசோட் போய்க் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் என்னிடம் வந்து சொன்னார் “சாரி தலைவரே.. டி.ஆர்.பி ரொம்ப விழுந்திருச்சாம். ஏதாவது பண்ணனும் அதனால உங்க கேரக்டரை சாவடிக்க சொல்லிட்டாங்க. இன்னையோட லாஸ்ட்” என்றார் நிஜ வருத்ததோடு. சரி நமக்கு கிடைப்பதுதான் கிடைக்கும் என்று முடிவோடு “பரவாயில்லை ஜி”  என்றேன். நட்ட நடு ஹாலில் ஒரு ரெட்டை பெஞ்ச் போட்டு எப்போதோ நான் கொடுத்திருந்த போட்டோவை பெருசு செய்து அதற்கு மாலை, பழம், ஊதுபத்தி எல்லாம் சரியாய் ஏற்றி வைத்திருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது. எல்லாம் தயாராக இருக்க யாருக்கோ காத்திருந்தார்கள். “யாருக்காக?” என்று கேட்ட போது “உங்க பொண்டாட்டிக்குத்தான்” என்றார்கள். “

“பொண்டாட்டியா?” 

“ஆமாங்க..இது வரைக்கும் அவங்களை நாம காட்டவேயில்லை. இப்போதிலேர்ந்து உங்கள் சாவுக்கு காரணமானவங்கள அவங்க பழி வாங்கப் போறாங்க. அதுக்காக ஒரு புது கேரக்டர் அறிமுகப்படுத்துறாங்க. எபிசோடுல ஒரு  கேரக்டர் போனாலும் முடிவுல ஒரு பெப் வரும் பாருங்க” என்றார் அன்றைக்கு வந்திருந்த திரைக்கதையாசிரியர். ஒன்றை காலி செய்து இன்னொன்று. கதையில் வாழ்ந்த காலத்தில் ஒற்றையாளாய் அலையவிட்டவர்கள் சாகிற சீனில் பொண்டாட்டி எல்லாம் கொடுக்கிறார்களே என்று நினைக்கும் போது லேசாய் வருத்தமாய்த்தானிருந்தது.

அரை மணி நேரத்தில் ஒரு மிடில் ஏஜ் பெண் வேக வேகமாய் காரோட்டி வந்தாள். எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது. நேரே வந்து எல்லோரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னிடமும் “ஹாய்.. நான்... என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளை ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பு நிகழ்ச்சியில் பார்த்தாக சொன்னேன். முகம் மலர சந்தோஷமடைந்தாள். கண்களில் சிநேகம் தாண்டவமாடியது. அதற்குள் இயக்குனர் வந்து அவளிடம் சீன் சொல்ல, மற்ற ஏற்பாடுகள் பரபரப்பாக ஆரம்பமானது. என்னைக் கூப்பிட்டு, முகத்திற்கு லேசாய் டச்சப் செய்தார்கள். “சாவுற நேரத்துல எதுக்குங்க ?” 

“மக்கள் மனசில பளிச்சுனு  இருக்க வேணாம்?” என்றார் மேக்கப்மேன் சிரித்தபடி.

முதல் முறையாய் நான் செத்து போகப் போகிறேன். அதனால் எனக்கு இந்த அனுபவம் புதியதாய் இருந்தது. மாலை,வேட்டி எல்லாம் கொடுத்து என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்லி, நானே மாலையை கழுத்தில் மாட்டிக் கொண்டு படுத்தேன்.

“சார்.. நீங்க தான் ஃபோர்க்ரவுண்டுல இருப்பீங்க.. உங்க மேல மேடம் வந்து பதறி அடிச்சு ஓடி வந்து விழுந்து கதறி அழறாங்க.. மேடம்..” அய்யோ என்னை இப்படி அநாதையா விட்டுட்டு போயிட்டீங்களே? அப்படின்னு அவர் மேல வந்து விழுந்து அழுறீங்க.. உங்க அழுகைய பாத்து லேடீசெல்லாம் கண்கலங்கிரணும். ஓகே” என்றார் இயக்குனர்.

“ரெடி... ஸ்டார்ட்,, ஆக்‌ஷன்..” என்றதும் அப்பெண் ப்ரேமில் இல்லாத வெளிப்பக்கத்திலிருந்தே அலறிக் கொண்டு ஓடி வந்த் சத்தம் எனக்குள் தூக்கி வாரிப் போட்டது. ஒரு வேளை நிஜமாகவே போய்ட்டோமா? என்று. ஓடி வந்தவள் அப்படியே என் மேல் விழுந்து பக்கத்தில் சரிந்து, விழுந்து கட் சொல்லியும் விடாமல் அழுதாள். நானே எழுந்து உலுக்கியவுடன் தான் அழுகையை நிறுத்தினாள். எப்படியும் 200 எபிசோடாவது வந்தே ஆக வேண்டும் என்ற வெறி அவளின் அழுகையிலிருந்தது.  நான் டைரக்டரைப் பார்த்தேன் அவர் உதட்டைப் பிதுக்கியபடி.. “மேடம்.. உங்க முகத்துக்கு தான் ஷாட்  வச்சிருக்கோம்.. நீங்க அழுத ஸ்பீடுல உங்க முடியே உங்க முகத்தை மறைச்சிருச்சு.. ஒன்மோர்.” என்றார்.

டேக்1. அதே போல் ப்ரேமில் இலலாத இடத்திலிருந்து அழுத படி ஓடி வந்து தடேலென என் மார்பின் மேல் குப்புற படுத்து தன் உடலை அழுத்தியபடி, அவளது மார்பை என் நெஞ்சில் அழுத்தோ அழுத்தென அழுத்தி, நெஞ்சில் எல்லாம் அறைந்து கதறி அழுதாள்.

“மேடம் நீஙக் இந்த வாட்டி ப்ரேம விட்டு போயிட்டீங்க.. ஒன்மோர்..”

டேக்2. வாசல் ஓட்டம் - பெரிய ஒப்பாரி- அதே போல என் மார்பில் குப்புற படுத்து அழுகை-  ரொம்ப நேரம் அழுது “போதுமா” என்பது போல டைரக்டரைப் பார்க்க, டைரக்டர் “அட .. நல்ல பீலா போய்ட்டிருந்தது.. ஏன் கேமராவை பாத்தீங்க? டயலாக் சொல்ல வேண்டியதுதானே?”

டேக் 3.. இம்முறை ஓடி வரும் போது தடுக்கி என் மேல் தடேலென  விழுந்தாள்.

டேக் 4  வாசல் அழுகையில்லை. ஆனால் அழுகையில் தீவிரமில்லை. எமோஷன் வேண்டும்.

டேக் 5 அழுகையேயில்லாமல் அதே மார்பில் விழுந்து, அவளுடலை அழுத்தி அழுகை, கண்களில் கண்ணீர் இல்லாமல்.

டேக்6 கிட்டத்தட்ட ஓகே..இன்னும் பர்பெக்‌ஷனுக்காக ஒன்மோர்

டேக் 7  நான் கண் மூடிக் காத்துக் கிடந்தேன். அவள் என் மீது புரண்டு விழுவதற்காகவும், அவளின் அழுகைக்காகவும்.அடுத்த அழுத்த்திற்காகவும். டேக் ஓகே. சிரித்தபடி எழச் சொல்லி ஒரு டம்மி ஷாட் எடுத்துவிட்டு “நன்றி சார்..” என்று சொல்லி கைகுலுக்க...

”சார்.. நட்டுக்கிட்டே செத்துப் போனவன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கு அது எப்படின்னு தெரிஞ்சிருச்சு” என்றேன். இயக்குனர்  சற்று நிதானித்து, புரிந்து “ஓவென’ சிரிக்க.. அவள் “என்ன சார்.. என்ன? விஷயம்? என் கிட்டயெல்லாம் சொல்ல மாட்டீங்களா?’ என்று அன்று ஷூட்டிங் முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்தாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

29 comments:

குரங்குபெடல் said...

"நட்டுக்கிட்டே செத்துப் போனவன "


Out " STANDING " End

sethu said...

superna

Ramya Mani said...

nijamaave ungaluku nadanthathaa illai summa sirukathaiyaanu theriyalai, but nalla viru virunnu nadai. rasiththen!

Ponchandar said...

மாலையெல்லாம் போட்டிருந்ததால நட்டுகிட்டது வெளியே தெரியாம இருந்துச்சு போல ! ! நட்டது மேலேயே விழாம இருந்தாங்களே ! !

திருவாரூர் சரவணா said...

தனி ஆளாய் அலையவிட்டு, ஜோடி சேர்ற நேரத்துல வாயையும், காலையும் கட்டிப்போட்டுட்டாங்கன்னா கஷ்டம்தான். கொத்து புரோட்டாவில் கடைசியாக வரும் கார்னர் இந்த பதிவிலுமா?

திருவாரூர் சரவணா said...

தனி ஆளாய் அலையவிட்டு, ஜோடி சேர்ற நேரத்துல வாயையும், காலையும் கட்டிப்போட்டுட்டாங்கன்னா கஷ்டம்தான். கொத்து புரோட்டாவில் கடைசியாக வரும் கார்னர் இந்த பதிவிலுமா?

Unknown said...

மச்சகாரன் ,மச்சகாரன் என்று சொல்வார்களே அது நீங்கள்தானா தலைவரே .

a said...

தல : இறந்து போற மாதிரி ஷீட் எடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது வீட்டு வாசலில் வைத்து சில சடங்குகள் செய்து உள்ளே அனுப்புவார்கள்...
அதுவும் நடந்ததா???

Julian Christo said...

Kodupana Boss :).

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

ஹ்ம்ம்ம் செம்ம... :)

Unknown said...

Sema nakkal

shiva said...

செத்து செத்து எஞ்சாய் பண்ணிருக்கீங்க...

Ganpat said...

Superb Humour!

S e l v a.. said...

ஒரு தொழில் சார்ந்த நிகழ்வை சொல்லி கேவலப் படுத்தி இருக்கவேண்டாம்...

ராம்ஜி_யாஹூ said...

is this the same incident shared by Paa raa or barathi mani or writer payon, who was the dialogue writer

Hari said...

Idhu cablesankar blog dhana?

R. Jagannathan said...

If you had hugged her once, you could have had another chance! - R. J.

rajasundararajan said...

நீ எழுத்தாளன்யா! (மரியாதைக் குறைவுக்கு மன்னிக்கணும்!).

சிரித்துச் சிரித்துக் கண்கலங்கிவிட்டது! க்ளாஸ்.

youtubeuser said...

cable Sankar Sir,
Serial name venume please.. Antha ponna pakanum

Unknown said...

viagra saaptu setthavan coffin a mooda mudiyalannu sonnaaanga.idhu andha joke a vida superb.
suresh bandhoo.

mahi said...

Blogger S e l v a.. said...

ஒரு தொழில் சார்ந்த நிகழ்வை சொல்லி கேவலப் படுத்தி இருக்கவேண்டாம்...

Well said Selva. Cable , please delete this post , it is very derogatory. It is of very poor taste.

Anonymous said...

Dear Cable,
I dont know whether it is a short story or real story. If it is a real story, you should feel shame for writing such a vulgar material. You could have write this story in some porn sites and not here.
She is an actress and she has just done whatever the acting required for the situation. But the way you described each and every take is not in a good taste. Respect others. Please delete this article and show a formal apology.
Thanks
Dinesh

gobinathan said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

Anand Movie Maker.. @Gobinathan @Mahi I dont feel bad for writing this. and there is no need to delete this also.. போர்ன் கதை மாதிரியிருக்குனு சொல்றவங்க நிச்சயம் இதுக்கு முன்னாடி போர்ன் கதை படிச்சிருக்க வாய்பில்லாதவங்கன்னு அர்த்தம் படுத்திக்க வேண்டியிருக்கு.:)

Anonymous said...

Thanks Cable.
Keep on writing like this. So that we can see you soon behind the bars.
What kind of man you are?.


Unknown said...

Nalla humerous story cable Anna.well done.dont delete this post.ippa irukkura busy Ana ulagathil ithu mathiri nagaisuvai than manithargalai manithargalaga irukka uthavum.nandri Anna.

Cable சங்கர் said...

Anand Movie Makers... haa..haa..haa.. semma comedy pesu boss neenga

மோகன்குமார் said...

நீங்க நாண்டுகிட்டும் சாக எனது வாழத்துக்கள்..

Unknown said...

This is really good writing.

Ppl should take these things in liter note.

Films like Panja Thanthiram, Thillu Mullu are made us to relax a lot than films like Kurudhi Punal. So take this also in humorous way & leave Cable to write comfortably

- Ramesh Iyer, Pune.