Thottal Thodarum

Dec 25, 2012

Sarocharu

 சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்தால் நன்றாக ரீச் ஆயிருக்குமே என்ற எண்ணம் தோன்றும் சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்ததால் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கும் சரோசாரு படம் ரெண்டாவது வகை


இத்தாலியில் கார்த்திக்கை சந்தியா சந்திக்கிறாள். பார்த்த மாத்திரத்தில் அவன் மேல் அவள் காதல் கொள்ள, தன் காதலைச் சொல்ல, இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு திரும்பும் பயணத்தை பயன்படுத்த நினைக்கிறாள். அவளின் நினைப்பு படியே அவள் தன் காதலையும் கார்த்திக்கிடம் சொல்லிவிடுகிறாள். ஆனால் அவளின் காதலை புரிந்து கொண்ட கார்த்திக் ஒரு விஷயத்தை சொல்கிறான். அது என்ன விஷயம்?. அதன் பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தான் கதை.

ரவிதேஜா போன்ற கேலிபர் உள்ள ஆர்டிச்டுகள் இம்மாதிரி கதைகளில் நடிப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் காதல், காதலுக்குள் இருக்கும் சுவாரஸ்யங்கள், இளமை, குழப்பங்கள், ஈகோக்கள் எல்லாம் அந்தந்த வயது நடிகர்கள் நடித்திருந்தால் கிடைக்கும் சுவாரஸ்யம் மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் போது கிடைப்பதில்லை. இயக்குனரும் மாஸ் ஹீரோவுக்காக ஆங்காங்கே குத்து பாடலும், ரெண்டு பைட் சீன்களும் வைத்துவிட, இது காதல் படமா? அல்லது மசாலா படமா என்ற குழப்பம் நீடிக்க வைத்துவிடுகிறது.

காஜல் அகர்வால் இளமைத் துள்ளலோடு ரவிதேஜாவை காதலிக்கிறார். பாட்டு பாடுகிறார். வீட்டில் போய் வழக்கம் போல பல தெலுங்கு பட ஹீரோயின் போல அம்மா மடியில் படுத்து அழுகிறார். இன்னொரு கேரக்டரில் ரிச்சா. ரெண்டு பாட்டு ஆட்டம் ஆடியதோடு பெரிதாய் ஏதும் சாதித்ததாய் தெரியவில்லை. ரவிதேஜா தன் இயல்பான நக்கல் கலந்த தடாலடி நகைச்சுவை டயலாக் டெலிவரியை வைத்துக் கொண்டு ஒப்பேத்த நினைத்து அது கேரக்டருக்கு சூட்டாகாமல் அவஸ்தைப்பட்டிருக்கிறார்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத். நத்திங் இம்பரசிவ். ஒளிப்பதிவு வழக்கம் போல பளிச். எழுதி இயக்கியவர் பரசுராம். கதையாய் பார்த்தால் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும்  அழுத்தமில்லாத கேரக்டர்கள், காட்சிகள், வயதுக்கு மீறின கேஸ்டிங்,  இரண்டாவது பாதியில் வரும் ட்விஸ்ட் திரைக்கதையை தூக்கி நிறுத்திவிடும் என்ற அவரது நம்ப்பிக்கை எல்லாமே ரிவர்ஸாகி விட்டபடியால்  சுவாரஸ்யமில்லாமல் போய்விட்டது.
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

rajamelaiyur said...

//வழக்கம் போல பல தெலுங்கு பட ஹீரோயின் போல அம்மா மடியில் படுத்து அழுகிறார்.///

தமிழ் பட உலகில் மட்டும் என்ன வாழுது அதே கதைதான் ..

rajamelaiyur said...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

இன்று

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25

vikky said...

Ravi teja film is always waste

Unknown said...

Padam suththa bore.
Visit my blog http://funnytamilvideos.blogspot.in/

'பரிவை' சே.குமார் said...

தமிழ்படமும் இப்படித்தானே இருக்கிறது....

cyrdoc said...

Nice comment

cyrdoc said...

Nice