இணைய உலகில் 2006 முதல் இயங்கி வந்தாலும், வலைப்பதிவராய் தீவிரமாய் ஆரம்பித்தது 2008லிருந்துதான். அப்போதிலிருந்து என் வாழ்கையில் நோ லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களாகிய நீங்கள். இதில் 2010 ஆண்டு என் வாழ்க்கையில் ஒர் முக்கியமான வருடம் அவ்வருடத்தில் தான் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் வெளியானது. அதன் பிறகு இந்த நான்கு வருடங்களில் சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள், கேபிளின் கதை, என அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியாயின. எல்லா புத்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அபாரம். முதல் புத்தகமே போட்ட ஆயிரம் காப்பி விற்பது என்பது கனவான விஷயம். அக்கனவும் பலித்தது. அடுத்த வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகம் என் வாழ்க்கையில் இன்னொரு கதவை திறந்துவிட்ட புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இரண்டாம் பதிப்பாய் மதி நிலையம் மூலம் வெளிவந்து இன்றும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்ற புத்தகம். இப்படி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற புத்தகங்களில் புதிய வெளியீடாக மதி நிலையம் “சாப்பாட்டுக்கடை” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த அதே ஆதரவை இப்புத்தகத்திற்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.. உங்கள் முன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@