விஸ்வரூபம் திரைபடத்திற்கு தடை என்று அறிந்ததுமே அஹா.. ஏற்கனவே புக் பண்ண டிக்கெட் போச்சே.. என்ற வருத்தத்தை விட, படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் அதிகமாய் இருந்தது. சரி என்னடா செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது, வழக்கப்படி மாநிலம் விட்டு மாநிலம் படம் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவோடு, மணிஜியை தொடர்பு கொள்ள நினைத்து போனை எடுக்க, அவர் அழைத்தார். “என்ன தலைவரே.. இப்படி பண்ணிட்டானுங்க?.” என்றதும் நான் ஆந்திரா போகும் ஐடியாவை சொன்னதும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு தெலுங்கு தெரியாது இருந்தாலும் போய் பார்த்துடுவோம்” என்றவர், “இரு பெங்களூர்ல பிரபு கிருஷ்ணா டிக்கெட் புக் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தாரு. அங்க கிடைச்சுதுன்னா தமிழ்லேயே பாக்கலாமே” என்றதும் எனக்கும் ஒர் நப்பாசை சரி என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் பிரபு கிருஷ்ணாவிடம் தொடர்பு கொண்டு , போன் நம்பர் வாங்கி, 25ஆம் தேதி ஆறு மணிஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியதை கன்பார்ம் செய்ய, நான், மணிஜி, கே.ஆர்.பி, பபாஷா சங்கர் ஆகியோர் காலை எட்டு மணிக்கு மணிஜி வீட்டில் ஆசெம்பிள் ஆவதாய் முடிவெடுத்தோம். ராத்திரி ...