Thottal Thodarum

Jan 20, 2013

கொத்து பரோட்டா -21/01/13

ஆயிரம் பஞ்சாயத்துக்களைத் தாண்டி ஒரு வழியாய் விஸ்வரூபம் வெளிவருகிறது. என்னதான் ஒரு மாதிரி கன்வின்ஸ் ஆக்கி டி.டி.எச். ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு பிறகு என்று கமலை முடிவு செய்ய வைத்தாலும், ஒரு தயாரிப்பாளராய் தனக்கிருக்கும் வியாபார உரிமையை தடுக்க முடியாது என்ற நிலையை உறுதி செய்ய அவர் காம்படீஷன் கமிஷனில் கொடுத்த புகார் இன்னும் லைவ்வாகத்தான் இருக்கிறது. அந்தப் புகாரை வருகிற வாரம் காம்படீஷன் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றிருக்கிறது. இதே போல மூன்று மாதங்களுக்கு முன் அஜய் தேவ்கன், யாஷ்ராஜ் கம்பெனியினால் தன் படமான சன் ஆப் சர்தாரை வெளியிட தடை செய்கிறார்கள் என்று புகார் கொடுத்திருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சீன ரேடியோ தமிழ் சேவையில் ஆர்.ஜேவாக இருக்கும் பெண் தமிழில் சீனாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கெளதம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பத்ரி புத்தகத்தைப் பார்த்துவிட்டு தப்பில்லாமல் இருக்கு என்றிருக்கிறார். வாங்கணும். ஸ்டால் நம்பர்283
@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வருடம் முதல் பா.ராகவனின் புத்தகங்கள் பலவும், என்.சொக்கனின் புத்தகங்களும் மதி நிலையத்தில் வெளிவர ஆரம்பித்திலிருந்து அங்கே நல்ல கூட்டம். என்னுடய சினிமாவியாபாரம் புத்தகம் கூட புதிய பதிப்பு இவர்களின் மூலமாய்த்தான் வெளி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட கிழக்கின் ஜெராக்ஸாகவே இருந்தாலும், உளவுத்துறை பற்றிய சொக்கனின் புத்தக வரிசை இண்ட்ரஸ்டிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
விகடன் மட்டுமே இவ்வருடம் நிறைய புது டைட்டில்களை வெளியிட்டிருக்கிறது. வட்டியும் முதலும் பரபரப்பு விற்பனை என்றார்கள். சில்பியின் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தைப் பற்றி, அதன் சல்லீசான விலையைப் பற்றி பதிப்பாளர் பத்ரி அவரது பதிவில் “எப்படி கட்டுப்படியாகிறது என்றே தெரியவில்லை?” என்றிருந்தார். ஆகாமயா புக்கு போடுறாங்க.. நீங்க வேற இப்படி சொல்லி ஏத்திவிட்டுராதீங்க சார்.. புண்ணியமா போகும்.
@@@@@@@@@@@@@@@@@@@@ 
கண்ணன் என்கிற சத்ரியனின் புதிய கவிதை நூலை அப்துல்லா வெளியிட, நான் பெற்றுக் கொள்வதாய் நிகழ்ச்சி அமைத்திருந்தனர். அப்துல்லாவின் பெரியம்மா தவறிவிட்டதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. கவிதைக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லாதவன் வெளியிட்ட முதல் கவிதை நூல் இதுவாகத்தான் இருக்குமென்று சொன்னதால் புலவர் ராமானுஜன் வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன். கண்ணன் (எ) சத்ரியனின் கவிதைகளை கொஞ்சம் படிக்க வேண்டும். பதிவர்களில் தீவிர படிப்பாளி, இலக்கியவாதியான பத்மஜா வந்திருந்து சிறப்பித்த கவிதை நூல் என்பதால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. கண்ணன் மிகவும் நல்லவர். வந்திருந்த அனைவருக்கும் லீச்சி ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். நான் ரெண்டு முறை.
@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்றைய நீயா நானாவில் காதல் பற்றி கலந்துரையாடல். வழக்கமாய் நான் பார்ப்பதில்லை. ஒரு பெரியவர் தன் பெண் அமெரிக்க ஜனாதிபதியை காதலித்தாலும் கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டேன் என்று கூற, எதிரணியில் ஒர் இளைஞன் உணர்ச்சி மிகுதியில் பிழம்பாகி, அதற்கு எதிர் குரல் கொடுக்க, கிட்டத்தட்ட அவர்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலை வைத்து புரிந்து கொண்டது அந்த பெரியவரின் பெண்ணை அவர் காதலிக்கிறார் என்பதுதான். அதை புரிந்து கொண்ட நிகழ்ச்சியின் இயக்குனரும், கோபிநாத்தை தூண்டிவிட்டு, அவர் யார், என்ன, என்ன வேலை செய்கிறார்? அவரை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றுவாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டுவிட்டு, இருவருக்கும் நடக்கும் விவாதங்களில் ஏதோ ஒரு பூடகமான விஷயமிருக்கிறது பிறகு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு ப்ரேக் விட்டார். சரி.. ஏதோ ஒரு காதல் ப்ரச்சனை டிவியில் வரப் போகிறது என்ற ஆர்வத்தில் பார்த்தேன். கடைசியில் வழக்கம் போல் சொதப்பி, அந்த இருவரைப் பற்றி ஒன்றும் கூறாமல் முடித்துவிட்டது பெரும் ஏமாற்றமாய் போய்விட்டது. இனிமே பார்க்க மாட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
வாரக்கடைசியில்  ஏகப்பட்ட பதிவுலக நண்பர்கள் புத்தககண்காட்சிக்கு வந்திருந்தார்கள். பிரபாகரன் வேட்டியில் வந்திருந்தான். பாலகணேஷ் அவரது சரிதாயணத்தை கொடுத்துவிட்டு போனார். மதுமதி, சிவகுமார், செந்தில், சினி சிட்டி நண்பர்கள் ராஜ்மோகன், ஃபோர்ட் எம்.டி பரத், நடிகர் ஷான், என்று நேற்றைய நண்பர்கள் பட்டாளம் கூடி கும்மாளமிட்டோம். நண்பர் ரஜினி ராமச்சந்திரன் மதியமே வந்து போன் செய்தார். என் புத்தகத்தை வாங்கிவிட்டதாகவும் கிளம்ப வேண்டியிருப்பதால் அடுத்த முறை மீட் செய்வோம் என்றார். நண்பர் ரவி நீண்ட நாளைக்கு பின் என்னை சந்திப்பதற்காக கண்காட்சியில் இருப்பதாய் சொன்னார். இன்போசிஸிலிருந்து, விப்ரோவிலிருந்து, காக்னிசெண்டிலிருந்து வாசக நண்பர்கள் பலர் வ்ந்து சந்தித்தார்கள். அவ்வளவு பிசியான ஆபீஸ் வேலையிலும் என்னைப் படித்து வருகிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. இயக்குனர்கள் மாதேஷிடன் ஹோசிமின் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். உங்களைப் பற்றி சொல்லிட்டேருக்காரு ஹோசிமின் என்றார் மாதேஷ். நன்றி நண்பா. ரொம்ப நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்த அய்யனார் வந்திருந்தார். மிக சுவாரஸ்யமான மனிதர். நான் ராஜ சுந்தர்ராஜன், அய்யனார், அவருடய அண்ணன் ஆகியோருடன் நடந்த பேச்சுக் கச்சேரி படு சுவாரஸ்யம். தோழி மதார் திருநெல்வேலி அல்வா கொண்டு வந்திருந்தார். கோயில் பிரசாதமாய் எல்லோருக்கும் கொடுத்தேன். துபாயிலிருந்து ரமேஷ் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தானும் ஒர் ப்ளாக்கர் என்றும் எதுவும் எழுதுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அய்யனார் அவரை அடையாளம் கண்டு, கேபிள் இவர் மிகப்பெரிய ஓவியர். எவ்வளவு சாதாரணமா அறிமுகப்படுத்திக்கிறார் பார் என்றார். நம்பர் பரிமாறிக் கொண்டோம். அலிபாபா இயக்குனர் நீலன் குடும்பத்தோடு வந்திருந்தார். என் எல்லா புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நட்பு கெடாமல் இருக்க வேண்டுமென எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். மதி நிலையம் பார்த்தசாரதி சினிமா வியாபாரமும், கேபிளின் கதையும் மிக நன்றாய் போகிறது என்றும் கண்காட்சி முடிந்தவுடன் வாங்க அடுத்த புத்தகம் பற்றி பேசுவோம் என்றிருக்கிறார். டாக்டர் புருனோ வர, மீண்டும் ஒரு ரவுண்ட் கே.ஆர்.பியோடு சுற்றி வந்து வழக்கப்படி லீச்சியும், புதிதாய் ஜிஞ்சர் ஜூசையும் ஆளுக்கு ரெண்டு பெக் அடித்துவிட்டு கலைந்தோம். என்னை வந்து சந்தித்த பலரின் கடைசி கேள்வி ஒன்று தான் “நான்..ஷாமி..வைரம்” எப்ப முடிப்பீங்க? இல்லை புக்கா வருதா? என்பதுதான். பப்ளிஷர் வேற கேட்டுட்டே இருக்காரு. சீக்கிரம் முடிக்கணும். 
@@@@@@@@@@@@@@@@@@@
வாரத்துக்கு குறைந்த பட்சம் இருபது குறும்பட லிங்கையாவது அனுப்பி, பார்த்து கருத்து சொல்லச் சொல்லி மெயில் அனுப்புகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பார்த்து எனக்கு சந்தோஷமாய் இருந்தாலும் எல்லா படங்களையும் பார்க்க முடிவதில்லை. முக்கிய காரணம் இண்டெர்நெட் இணைப்பின் வேகமும் ஒர் காரணம். அது மட்டுமில்லாமல் தற்போதைய என் திரைப்பட மற்றும் லெளகீக வேலைகள் காரணமாய் நேரமின்மையும் ஒர் காரணமாய் அமைந்துவிடுகிறது. எனவே உடனடியாய் என்னால் என் கருத்தை சொல்ல முடிவதில்லை. கருத்து கிடைக்காதவர்கள் என்னை திட்டாமல் இருக்க கடவது.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உன் நண்பனை காட்டு உன்னைப் பற்றி சொல்கிறேன் என்ற சொல்வடை இன்றைய காலத்துக்கு உதவாது

சின்ன விஷயத்துக்காக சண்டையிட்டுக் கொள்ளும் நண்பர்களிடையே தான் ஆழ்ந்த நட்பிருக்கும்.

என் புத்தகங்களின் விற்பனை இன்று நன்றாக இருந்ததாய் 43-44 டிஸ்கவரி வேடியப்பன் சொன்னார். மகிழ்ச்சி.

நம்மளை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போலருக்கே # டீசல் விலையுர்வு

Bluesky cinemas planning to release #Viswaroopam in 110+ screens in USA.Includes both Tamil & Telugu.Theater listing early next week.

கணவனை மன்னிக்கும் பெருந்தன்மை பெரும்பாலும் மனைவிகளுக்கு அவர்கள் தவறு செய்யும் போதுதான் வருகிறது # Translation

காண்டமில்லாத செக்ஸ் ஒரு மேஜிக். குழுந்தை உருவாக, அப்பன் எஸ்ஸாகிறான். # Translation

எல்லோருக்கும் டிவி ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது. கெளரவம் ட்ரைலரின் மூலையில் ப்ரகாஷ்ராஜ் டிவி என்று லோகோ போட்டிருக்கிறார்கள்.

மாதொரு பாகனில் இருந்த சுவாரஸ்யம் கங்கணத்தில் இல்லை # பெருமாள் முருகன்



நேத்து ஒரு புதிய புக்கை திறந்த முகர்ந்த போது எறும்பு மருந்து வாசனை அடித்தது.

தலைக்கு மேல ரயில் ஓடுறதுக்குள்ள இன்னும் எத்தனை பேரை காலி பண்ணுமோ இந்த மெட்ரோ ப்ராஜெக்ட்?

ஏத்தும் போது மட்டும் ராத்திரியோட ராத்திரியா ஏத்துறானுங்க.. குறைக்கிறதுக்கு மட்டும் மீட்டிங் போட்டு டிஸ்கஸ் பண்ணித்தான் செய்வாங்களாம்.

பொறாமையடையும் பெண் நம்பிக்கையானவள் # Translation
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேனல் பக்கம்
ஸ்டார் விஜய்யும் தன் பங்குக்கிற்கு ஒரு மூவி சேனலை ஆரம்பித்திருக்கிறது. ஸ்டார் ஹிட்ஸ் விஜய் எனும் சேனலை தற்போது டி.டி.எச் ப்ளாட்பார்ம்களிலும், கேபிள் டிவி டிஜிட்டல் செட்டாப்பாக்ஸ்களில் மட்டுமே ஒளிபரப்ப இருக்கிறது. டி.டி.எச்சில் 21 ரூபாய் மாதத்திற்கு என்கிறார்கள். இவர்கள் வரிசைக்கு வாங்கி வைத்திருக்கும் படங்களைத்தான் மாசத்தில் நாலு வாட்டி மறுக்கா மறுக்கா போட்டிட்டு இருக்காங்களே இதுல தனியா வேறயான்னு கேக்குறது புரியுது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
எந்த சேனலுக்கு டி.ஆர்.பி. இல்லை. வருமானம் இல்லை. சம்பளம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்று பல இல்லைகளை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பல சேனல்கள் புதிதாக வந்து கொண்டுதானிருக்கிறது. எப்படி கட்டுபடியாகிறது என்ற கேள்வியோடு பல சேனல் நிறுவனங்களை அணுகி சேனல் ஆரம்பிப்பது எப்படி என்று ஆரம்பித்து மெல்ல அவர்களின் தொழில் நடத்தும் பின்னணியை பற்றி விசாரித்தால் வருகிற காலங்களில் கொஞ்சம் காஸ்ட்லி குடிசைத் தொழிலாய் டிவி சேனல் தொழில் வந்துவிடும் போல.. புதிய புத்தகம் எழுதும் அளவிற்கு கண்டெண்ட் தேறி கொண்டிருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@
 "Kai Po Che" இப்படத்தின் ட்ரைலரை பார்த்தவுடனே பிடித்துவிட்டது. காரணம் மேக்கிங். அடுத்து கதையாசிரியர் சேட்டன் பகத். அவரின் Three mistakes of my life" நாவலை அடிப்படையாய்க் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் என்பதால் மேலும் ஆர்வமாகிவிட்டது. இந்தியில் யுடிவி நல்ல முயற்சிகளைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
There's no such thing as premature ejaculation. The truth is that women arrive late everywhere. They never come early
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

Anonymous said...


//கவிதைக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லாதவன்//

ஸ்நானப்ராப்தி? சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!

Anonymous said...

நேற்று லிச்சி ஜூஸ் கலக்கும் முறை பார்த்து கதிகலங்கி போயினர் சில பதிவர்கள். உஷார்!!

ஆண்மை குறையேல்.... said...

ஹிஹிஹிஹி .... கமல் கு ஆரம்பத்துல சப்போர்ட் பண்ணிட்டோமே னு இப்டி போடுறீங்களா .....மனசாட்சின்னு ஒன்னு இருந்தா DTH collection சொதப்பிடுசுனு ஒத்துக்குங்க... இல்லனாலும் என்ன மாதிரி பாமர ரசிகனுக்கும் தெரியும்...

Unknown said...

Boss today 21/1/2012

DaddyAppa said...

Cable-Ji ! The date is 21-Jan and not 22-Jan.

Pl change the title.

"Lichee Juice" romba adikkra maathiri irukku :-) N-soy

Philosophy Prabhakaran said...

இப்பல்லாம் பதிவுக்கு நடுவுலயும் விளம்பரம் போட ஆரம்பிச்சிட்டீங்க போல...

Philosophy Prabhakaran said...

வாவ்... கொ.பவில் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருக்கிறது... அதுவும் பத்தியின் முதல் வரியிலேயே... ஐயம் ஹேப்பி...

Philosophy Prabhakaran said...

// லெளகீக வேலைகள் //

:))))

'பரிவை' சே.குமார் said...

வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் புத்தக கண்காட்சிகளையும் இது போன்ற சந்திப்புக்களையும் நிறைய மிஸ் பண்றோம்....

நல்ல பகிர்வு அண்ணா.

சீனு said...

// இன்போசிஸிலிருந்து, விப்ரோவிலிருந்து, காக்னிசெண்டிலிருந்து வாசக நண்பர்கள் பலர் வ்ந்து சந்தித்தார்கள்.// டி சி எஸ்ஸில் உங்களுக்கு வாசகர்கள் இல்லையா சார்... என்ன மெட்ராஸ் இதையெல்லாம் கேக்க மாட்டீரா

MGSP said...

Cable Ji,

Seems the adult corner content is repeated....

Balaganesan said...

22 r 23 jan i will be at book fair... coz busy....

திருவாரூர் சரவணா said...

டிவி மட்டுமல்ல, பேப்பர், வார இதழ் இது போன்றவையும் சிலர் புதிது புதிதாக ஆரம்பிக்க பல நூறு பின்னணிகள் இருக்கின்றன. புதிய இதழ்கள் மட்டுமல்ல....வேண்டாம் இதற்கு மேல் எதையாவது எழுதி யாருடைய மனதை புண்படுத்திய வழக்கில் உள்ளே செல்ல நான் தயாராக இல்லை. சில கேவலமான கொள்கைகளை புரிந்து கொண்டபோது இதையெல்லாம் நம்பி என்னுடைய வாழ்க்கையில் 10 வருடங்களை வீணடித்திருக்கிறோமே என்று வருத்தம்தான் மிஞ்சியது. (இந்த திடீர் ஞானோதயத்துக்கு முக்கிய காரணம் ஒரு மிகப்பிரபல தமிழ் நாளிதழில் சில மாதங்கள் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றியதுதான்.)

Cable சங்கர் said...

ஆண்மைகுறையேல்.. அப்படி சொதப்பிருச்சுன்னா.. தியேட்டர் காரங்க விட்டுக் கொடுத்திருக்க வேண்டியதுதானே.? இப்படித்தான் உங்கள மாதிரி விடியோ, கேபிள்காலத்துல கமலை கிண்டல் செய்திட்டு இருந்தவங்க எல்லாம் அதை வச்சே வியாபாரம் பேசிட்டிருக்காங்க.. ம்ஹும்.

r.v.saravanan said...

தங்களை புத்தக கண் காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சங்கர் சார்

Unknown said...

தமிழ் நாடு புல்லா எல்லா தியேட்டர்லம் அலெக்ஸ்பாண்டியன் படம் போட்டா

மக்கள் கொதிச்சு எழூந்து #விஸ்வரூபம் போட சொல்லீரூவாங்க