இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க வைக்கும் பாக்யராஜின் “ இன்று போய் நாளை வா” படத்தின் மறு பதிப்பு. டைட்டில், சந்தானம், மற்றும் பவர் ஸ்டார் வேறு. கேட்க வேண்டுமா? எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்தது.
எதிர் வீட்டில் புதிதாய் குடிவரும் ஹீரோயினை யார் காதலிப்பது என்ற போட்டியில் நெருங்கிய நண்பர்களாய் வலம் வரும் சந்தானம், பவர் ஸ்டார், புது முகம் சேது ஆகியோரிடையே பிரிவு வருகிறது. யாருக்கு அந்தப் பெண்ணின் காதல் கிடைத்தது என்பது தான் க்ளைமாக்ஸ்.
ஹீரோ, சந்தானத்தின் அறிமுகக் காட்சிக்கு கிடைக்காத க்ளாப்ஸ்,விசில், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று சூப்பர் ஸ்டாருக்கு கிடைக்கும் அத்துனை வரவேற்பும் நம்ம பவர் ஸ்டாருக்கும் கிடைக்கிறது. மனுஷன் முகத்தில் இருக்கும் வெள்ளந்தித்தனம் தான் இவரை காப்பாற்றுகிறது. நடிக்கவே வராவிட்டாலும் இவர் செய்யும் தத்தக்கா பித்தக்கா தனங்களை படமெடுக்கும் போது இயக்குனரும், சக நடிகர்களும் என்ஜாய் செய்ததைப் போல, மக்களும் சந்தோஷமாய் இவர் எதைச் செய்தாலும் கொண்டாடுகிறார்கள்.
கலாய்ப்பதை ரசித்து செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தான் கலாய்க்கப்படுவதை ரசிப்பவர் பவர் ஸ்டார் ஒருவர்தான். அதனால் அவர் மேல் இருக்கும் சாப்ட் கார்னர் மக்களிடையே அதிகமாகி, அவர் எது செய்தாலும் ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். படம் நெடுக இவரை மட்டுமே வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
சந்தானம் படம் முழுக்க, ஒன்லைனர்களாய் அள்ளிவிட்டிருக்கிறார். பல இடங்களில் பளிச்.. பளிச்.. லாரிக்கு ப்ரேக்கும், அப்பனுக்கு ப்ரெண்சுங்களையும் எப்படா பிடிச்சிருக்கு? , பவர் ஸ்டாரின் அழும் முகத்தை போட்டோ எடுத்து அதை அவரிடமே காட்டி,, “எப்படியிருக்கு?’ என்று கேட்க, அவர் அழுது கொண்டே நல்லாயில்லை என்று சொல்ல, தெரியுது இல்லை எனும் இடத்திலும், க்ளைமாக்ஸில் “நான் ஹீரோ இல்லைடா காமடியன் என்று சந்தானம் சொல்ல, பவர் “ஆனா ஹீரோ” என்றதும், “நானாவது காமெடியன்னு தெரிஞ்சுட்டு சொல்றேன். ஆனா இங்க ஒண்ணு தான் காமெடியங்கிற புரியாம ஹீரோன்னு சுத்திட்டிருக்கு” என்று கிடைக்கிற கேப்பில் எல்லாம் பவரை வைத்து கலாய் மேளாவே நடத்தியிருக்கிறார். விசாகா பார்க்க அழகாய் இருக்கிறார். ஒரு பாடலில் கொஞ்சம் செக்ஸியாய் ஆட்டம் போடுகிறார்.
சேதுவுக்கு பெரிதாய் நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லை. சந்தானம், பவரின் இடையே இவர் ஸ்கோர் பண்ண ஏதுமில்லாததால் நத்திங் டூ சே.. கர்நாடக சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி.கணேஷ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஹிந்தி டீச்சர் கேரக்டருக்கு பதிலாய் பாட்டு வாத்தியார்., குஸ்தி வாத்தியாருக்கு பதிலாய் டான்ஸ் மாஸ்டர், வீட்டிற்கு வரும் ரிலேட்டிவ் பெண்ணுகுக் பதிலாய் பக்கத்துவீட்டு அய்யர் மாமி என்று இன்று போய் நாளை வாவிலிருந்து பெரும் முயற்சியோடு மாறுதல் செய்திருக்கிறார்கள்.
தமனின் இசையில் வரும் ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’ ரீ மிக்ஸ் தவிர பெரிதாய் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. பாலசுப்ரமணியமின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பளிச்.
இன்று போய் நாளை வாவில் முதல் காட்சியில் ஒவ்வொரு நண்பர்களுக்கும் ஒர் அறிமுகக் காட்சியிருக்கும், அதில் பாக்யராஜ் தன் வரிசை வரும் போது ஒரு பெண்ணை கட்டிப் பிடிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு போவார். கிட்டே போன மாத்திரத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் அலறியடித்துக் கொண்டு உள்ளே போய் வீட்டில் உள்ள பெருசுகளையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்துவிடுவார். எங்கே மொத்தமாய் அடி வாங்கப் போகிறாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது புத்திசாலித்தனமாய் ஒரு ட்விஸ்ட் வைத்து அந்த பெண்ணை மட்டுமில்லாது வீட்டில் உள்ள அத்துனை பேரையும் கட்டிப்பிடித்துவிட்டு வருவார். அந்த இடத்தில் தான் அவரின் டைட்டில் கார்டை போடுவார். இப்படி படம் முழுக்க பாக்யராஜின் பஞ்ச் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் இப்படத்தில் அப்படிப்பட்ட பஞ்ச் ஏதுமில்லாமல் இருப்பதும், கோலாகல கொண்டாட்டமாய் போனால் போதும் என்கிற வகையில் சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். கம்பேரிசன் என்று பார்க்கும் போது இன்று போய் நாளை வா தான் இதை விட பெட்டராக இருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா - பவர் ஸ்டார் பவரினால் மட்டும்.
கேபிள் சங்கர்

Post a Comment
11 comments:
pongal annikku kothu paratha kidaikkathaaa anna
power always rockkkks
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்.
படம் முழுக்க பாக்யராஜின் பஞ்ச் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் இப்படத்தில் அப்படிப்பட்ட பஞ்ச் ஏதுமில்லாமல் இருப்பது....
அசல் அசல் தான் சங்கர் சார்
அண்ணே என் கருத்தும் இதே தான்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Pongal Nal Valthukkal Anna....
Good Review...
தலைவரே பட விமர்சனம் படிக்கும் போதே சிரிப்பு தாங்கல்.கண்டிப்பாக படம் பாக்கனும் திருட்டு vcdல
I dont think current generation will enjoy those kind of ட்விஸ்ட். I remember waiting for T. Rajendar MA . But I dont think that will workout now.
Nice Review.
எங்களின் பவர்பாசறை மூலம் நன்றி சொல்ல கடைமை பட்டிருக்கிறேன்.
நன்றி அண்ணா..
Post a Comment