சென்னையில் எங்கு பார்த்தாலும் அசைவ உணவகம் என்றால் அது டிபால்டாய் செட்டி நாட்டு உணவகமாய்த்தான் இருக்கும். நிஜமாகவே அங்கே கொடுக்கப்படும் உணவு செட்டிநாட்டு வகை தானா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்பேர்பட்ட ஓட்டல்கள் இருக்குமிடத்தில் ஓரளவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் நல்ல உணவகம் ஒன்று இருக்கிறது அது தான் கணேஷ் செட்டிநாடு.
மியூசிக் அகாடமியிலிருந்து ராதாகிருஷ்ணன் ரோட்டில் வரும் போது பைலட் தியேட்டருக்கு இடது புறம் திரும்புவோம் அங்கே ப்ரிட்ஜுக்கு கீழே இருக்கிறது இந்த உணவகம். டிபிக்கல் ஊர்காரர் இந்த உணவக உரிமையாளர். மதிய சாப்பாட்டிற்கு எல்லா உணவகங்களிலும் சிக்கன் குழம்புதான் கொடுப்பார்கள் இவர்கள் மட்டன் குழம்போடு ஆரமபிப்பார்கள். பிறகு சிக்கன், மீன் குழம்பு வகைகளோடு, ரசம், மோர் என்று மெனு. மட்டன், மீன் குழம்பு நன்றாக இருக்கும் சிக்கன் கொஞ்சம் சுமார் தான். இவர்களுடய ஸ்பெஷாலிட்டி மட்டன் சாப்ஸ், மீன். இரண்டும் அருமையாய் இருக்கும். எலும்பில்லாத நன்றாக வெந்த சிறு சிறு மட்டன் பீஸ்களை மசாலாவில் ஊற வைத்து, அதை தோசைக்கல்லில் போட்டு, கறிவேப்பிலை வெங்காயம் சேர்ந்து வதக்கி தருவார்கள். வித்யாசமான டேஸ்டுடன் வாயில் வைத்தால் கரைகிறதே எனும் அளவிற்கு சாப்டாகவும், சுவையாகவும் இருக்கும்.
பிரியாணி கொஞ்சம் காரம்தான். டிபிக்கல் ஊர் சைட் பிரியாணி. இதனுடன் சிக்கன் 65. கொஞ்சம் சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம் என்று கலந்தடித்தால் காரம் கொஞ்சம் தெரியாது. பட் டேஸ்ட் நன்றாகவே இருக்கும், என்னுடய தேர்வு மதிய சாப்பாடும் இரவு நேர பரோட்டாவும்தான். ரெண்டுமே அதற்கென ஒர் ஸ்பெஷல் சுவையோடு இருக்கும். சட்டென கண்ணில் மாட்டாது இந்த உணவகம். கொஞ்சம் தேடிப் பார்த்தால் தான் கிடைக்கும் சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள்.
கேபிள் சங்கர்

Post a Comment
5 comments:
Very Taste near Ajantha Fly Over , Opp to Sitharaman & Co. Lunch for best time.
சார் டாக்டர் அட்வைஸ் படி டயட் கன்ட்ரோல்ல இருக்கேன் அந்த ஹோட்டல் ல போய் சாப்டுங்க இந்த ஹோட்டல் ல போயி சாப்டுங்கனு வெறுப்பேத்தாதீங்க . படிக்கிறப்பவே நாக்குல எச்சில் ஊருது .... வேணாம் சொல்லிட்டேன் அழுதுருவேன் ..
அசைவத்தில் செட்டிநாடு வகை என்பதே கிடையாது என்பதை எங்கோ படித்திருக்கிறேன்.
ஓரிரண்டு காரைக்குடி ஆச்சிகளையும் கேட்டதற்கு சைவம் மட்டுமே என்பது பதிலாக கிடைத்தது.
அறந்தாங்கியைச் சேர்ந்த கோபிநாத் ஒருமுறை நீயா-நானாவில் செட்டிநாடு உணவு முறை என்பது சைவம் மட்டுமே சார்ந்தது என சொன்னார்.
எப்படி சைவ உணவகங்கள் "உயர்தர சைவ" என தங்களை சொல்லிக் கொள்கின்றனவோ, அதுபோல அசைவ உணவகங்கள் "செட்டிநாடு" என்பதை brand ஆக உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.
அசைவத்தில் தென் தமிழகம், கேரளா, முகல், சைனீஸ், மெக்ஸிகன், etc என உண்டே ஒழிய செட்டிநாடு என்பது கிடையாது.
கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாட்டுக்காரர்கள் விளக்கம் கொடுக்கவும்..!!
Sir, Please provide us the contact details (phone number)of these hotels u taste..so we can be benefited
செட்டி நாட்டு சிக்கன் கறிகள் என்றாலே மிளகாய் அதிகம் சேர்த்து காரமாய் வைப்பதுதான்...
அதை சாப்பிட்டு ரசித்தால் மட்டுமே அதன் சுவை அறியமுடியும்.
Post a Comment