சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.
முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆவதைப் போல, மெல்ல வலது, இடது திரும்பி, நேராகி, லேசாய் நகர ஆரம்பித்து பின்பு தடதடவென ஒர் ஓட்டத்துடன், விர்ரென மேலெறும் போது ஒர் பதட்டப் பந்து நமக்குள் உருவாகுமே அந்த அனுபவத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது இடையிடையே ஏறபடும் சலிப்புகளும், ஃப்ரெஷ்ஷான ஹோஸ்டஸை பார்த்ததும் கிளறி நிற்கும் சுறுசுறுப்புமாய் படம் க்ளைமாக்ஸ் வரை பயணிக்கிறது.
கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதம், அவர்களின் பின்னணி, அக்கேரக்டர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் நிலை என்ன என்பதை எத்தனை நாசுக்காக, சிறுசிறு வசனங்கள், காட்சிகளின் மூலமாய் வெளிப்படுத்தும் விதம், உலகத்தரம். சமகால தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பார்த்திருக்க முடியாது. அதன் பின் வரும் தலிபான் தீவிரவாத குழுக்களின் பின்னணிக் கதை, ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையில் பின்னி பினைந்திருக்கும் தீவிரவாதம் பற்றிய காட்சிகள், இதுவரை இந்திய திரையில் சொல்லப்படாதது.
நாட்டிய கலைஞனாய் வரும் நேரங்களில் கமலின் குரல் மற்றும் உடல் மொழியில் தெரியும் நளினம், ”உனைக் காணாத” பாடலில் அவர் காட்டும் முகபாவங்கள் வாவ்.. க்ளாஸ். முக்கியமாய் நியூயார்க் வீதிகளில் முழுக்க முழுக்க பெண்மைத்தனமில்லாமல் நளினம் கலந்த ஒர் நடை நடந்து போவார்.. வாவ்.. வாவ்.. கலைஞன். அதே போல ஒர் இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்து அல்ல ஒர் முஸ்லிம் என்று பிரகடன்ப்படுத்தி, தன் நிஜ நிலையை உணர்த்தும் காட்சி வாவ்..வாவ்..வாவ்... மக்களே தயவு செய்து அந்தக் காட்சியை உற்று கவனியுங்கள் நடிப்பிலாகட்டும், டெக்னிக்கல் ப்ரில்லியன்சிலாகட்டும் விஷூவல் ட்ரீட். என்னா ஒர் எக்சிக்யூஷன். என்னையும் அறியாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தேன். மொத்த தியேட்டரும் உற்சாக குரலெழுப்பியது.
ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் போன்றவர்களின் நடிப்பைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதில் ராகுல் போஸ் தனித்து தெரிகிறார். முல்லா உமர் தமிழ் பேசும் போது தான் கோவையிலும், மதுரையில் ஒரு சில வருடங்கள் இருந்ததாக சொல்லியதை பற்றி கொதித்தெழுந்தவர்கள், தெலுங்கு படத்தை பார்த்தால் புரியும் அதில் அதே கேரக்டர் ஹைதராபாத், காக்கிநாடா என்று சொல்லும். குண்டு வைப்பவன் தொழுகை செய்துவிட்டு வைக்க மாட்டான் என்கிறார்கள். அப்போது தீவிரவாதிகள் எல்லோரும் நாஸ்திகர்களா? படத்தில் காமெடி இல்லை, சண்டையில்ல, கணவன் தன் மனைவியை வேறொருவனுடன் பழக அனுப்புவது கலாச்சார சீரழிவு என்றெல்லாம் விவாதித்த ஒர் முஸ்லிம் தலைவரின் பரந்த அறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன். படம் நெடுக முதல் பாதி முழுவதும் வரும் புத்திசாலித்தனமான நகைச்சுவை கலந்த வசனங்களை புரிந்து கொள்ள கொஞ்சமாவது அறிவு வேண்டும். பூஜா குமாரை எப்.பி.ஐ விசாரணை செய்வார். அப்போது அவர் சொல்லும் ஆங்கில வசனத்திற்கு ஆந்திராவில் உள்ள சி செண்டர் தியேட்டரில் ஒரே அப்ளாஸ்.
ஆப்கானின் லேண்ட்ஸ்கேப்புகளை கவர் செய்ததிலிருந்து, ஆக்ஷன் காட்சிகளில் கேரக்டர்களுடனே பயணிக்கும் போதாகட்டும் நியூயார்க் நகர வீதிகளில் நடக்கும் சேஸாகட்டும் ஒளிப்பவதிவாளர் ஷானு வர்கீஸ் கலக்கியெடுத்திருக்கிறார். இவர் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையரஜா. வாவ்.. வாவ்.. ஆப்கானிய குகை போன்ற வீடுகளையும், சண்டைக்காட்சிகள் நடக்கும் தத்ரூப உடல்களை, கண் முன்னே நிஜமாய் உலவவிடுகிறார். கமல் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்து சண்டைக்காட்சி ஒன்றே போது எடிட்டர் மகேஷுன் திறமைக்கு. சுற்றிப் போட வேண்டும்.
நான் லீனியர் திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், ஸ்லீக்கான எக்ஸலெண்ட் மேக்கிங், புத்திசாலித்தனமான நக்கல் நைய்யாண்டி வசனங்கள், அருமையான நடிப்பு, குவாலிட்டியான தயாரிப்பு, எல்லாவற்றையும் விட நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் கமலை விட இயக்குனர் கமல் தான் டாமினேட் செய்திருக்கிறார். அவ்வளவு நேர்த்தி. ஒர் திரைக்கதையாசிரியராய் கதை சொல்ல வேண்டிய இடங்களில் ஆங்காங்கே சுவாரஸ்யம் குறைந்தாலும், திடும் திடுமென கிளம்பும் பதட்ட நிமிடங்களில் மீண்டும் சீட்டு நுனிக்கு கொண்டு வர தவறவில்லை இயக்குனர். தங்களுக்குள் உளவாளி என்று கண்டறியப்பட்ட ஒருவனை பத்து பேர் சேர்ந்து காலால் மிதித்து அடித்து, தூக்கிலிட முனையும் காட்சியில் மக்கள் கூடும் இடத்தில் அவன் அழ, அழ, கருப்புத்துணியால் முகம் மூடப்பட, அவனது தந்தை இங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல் தலைகுனிந்து அழுது கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அவனது தாய் கண்ணிர் பெருக்கோட, அழுதபடி இறைஞ்ச, மக்கள் குழுவினரின் துப்பாக்கி வெடிச்சத்தத்தோடு அவன் தூக்கிலிடப் பட்டு, அவன் இறந்துவிட்டனா என்று அவனின் கால் நாடித்துடிப்பைப் பார்த்து அறிவித்து முடிந்ததும், ஒர் மாஸ்டர் ஷாட்டில் அது வரை கூட்டத்தின் பின்னணியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சரி முடிந்துவிட்டது என்று விளையாடப் போகும் காட்சி.. அப்பப்பா..
முக்கியமாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆடியோ. சாதாரண டி.டி.எஸ்ஸிலேயே கலக்கி எடுத்திருக்கும் ஒலியை அனுபவத்தை சத்யம் போன்ற தியேட்டர்களில் ஆரோ 3டியுடன் பார்த்தால் ஆகச் சிறந்த அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
இப்படத்தை தடை செய்ய என்ன இருக்கிறது?. எந்த இடத்தில் இந்திய அல்லது தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் இடம் ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை. இப்படம் முழுக்க, முழுக்க, ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களுக்கிடையே நடக்கும் கதை. அவர்களூடே ஸ்பை வேலை செய்யும் ஒருவனின் பார்வையில் நடக்கும் கதை. சொல்லப்போனால் இப்படத்த்தில் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களுக்கான பதில் இரண்டாம் பாகமாய் வரப்போகும் படத்தில் தான் முடியும் என்று தெரிகிறது.
இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார். அது என்னவோ உண்மைதான் ஆர்கோ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரி படமெல்லாம் எப்போ வருமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விஸ்வரூபம் ஒர் பதில். அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களூடே ஊழன்று கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் ஒர் படமே. புத்திசாலித்தனமான சிறந்த சினிமா அனுபவத்தை பெற விரும்பும் தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு இப்படம் ஒர் பேரனுபவம். டோண்ட் மிஸ்.
கேபிள் சங்கர்
டிஸ்கி: இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு போராடவும்.
டிஸ்கி: இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு போராடவும்.
Post a Comment
67 comments:
gud review...am the first....dnt miss it...
ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல.
அதே சிந்தனை தான் எனக்குள்
படம் பார்க்க மிகுந்த ஆர்வமாய் இருக்கிறேன் சங்கர் சார்
இப்படத்தை தெலுங்கில் பார்க்க விரும்பினால் ஆந்திர ஊரான காளஹஸ்தியில் திரையிடுகிறார்கள். ஆனால் நெல்லூர் மாவட்டத்தில் படம் ஓடவில்லை. அநேகமாய் இன்று முதல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
உங்களுக்கு வந்த அதே சந்தேகம் தான் எனகும். . குன்டு வைக்கும் தீவிரவாதி குரான் படிப்பதில்லை என இவர்கள் நிருபிக்க முடியுமா???
ஒரு படம் பார்பதற்காக, முகநூலில் தொடர்ந்து, இந்த படத்தை பார்பதற்காக, சிலாகித்து, மாநிலம் விட்டு மாநிலம் சென்று, படத்தை பார்க்கும் , உங்களின் சினிமா தாகம் , என்றாவது ஒரு நாள் திரை உலகில் சிகரம் தொடுவீர்கள் கேபிள்..
உன்மையான, சுய சிந்தனை உள்ள முஸ்லிம் நண்பர்கள் இதை எதிர்க்கவில்லை. சில அரசியல்வியாதிகள் செய்யிம் வேலை இது. .
ஆந்திராவில் முஸ்லிம்களே இல்லையா???
எங்க போய் பார்த்தீர்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே ? ஆர்கோ போன்ற படங்களை கொண்டாடுபவர்கள் விஸ்வரூபம் படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் ? நிச்சயம் ஏதாவது படத்தின் காப்பி என்று சொல்லிகொண்டிருக்க போகிறார்கள்.இந்த படத்தின் கதை கருவை கமல் வெளியே சொன்னவுடனே இது TRUE LIES படத்தின் உருவல் என்று எழுதியவர்கள் தானே நம் மக்கள்.
புதிய தலைமுறை சேனலில் படம் தடை செய்ய பட்ட அன்று இரவு விவாதம் நடந்தது.அதில் பேசிய ஒரு முஸ்லிம் இயக்க தலைவரிடம் கேட்ட்க்கபட்ட கேள்வி ஆப்கானில் நடப்பதை காட்டும்போது வேறு எப்படி காட்டுவது என்று கேள்வி.அதற்க்கு அவர் சொன்ன பதில் "கமலை யார் ஆப்கானில் நடப்பதை எல்லாம் எடுக்க சொன்னது ? வேறு கதையே கிடைக்கவில்லையா ? இன்னும் எடுக்க படாமல் எவ்வளவோ கதைகள் இருக்க இவர் ஏன் ஆப்கன் விஷயம் எல்லாம் எடுக்கிறார்.?
இது எப்படி இருக்கு ?--
nandalala padathukkum ithe alavu pullarithu vimarsanam pottenga. Pathu adikadi pullaricha unglukkum thirai ulagukkum nallathu illai.
///என் ராஜபாட்டை : ராஜா said...
உங்களுக்கு வந்த அதே சந்தேகம் தான் எனகும். . குன்டு வைக்கும் தீவிரவாதி குரான் படிப்பதில்லை என இவர்கள் நிருபிக்க முடியுமா???
/////
ஆனால் குண்டுவைப்பவர்கள் குரானை ஒரு விளக்க கையேடு போல் பயன்படுத்துவதாக காட்டப்படுகிறது என்பதே குற்றச்சாட்டு. அதாவது குரானை படித்தால் அதில் குண்டுவைக்க சொல்லி இருக்கிறது அதனால் படித்தவுடன் குண்டுவைக்க செல்கிறார்கள் என்று எண்ணம் ஏற்படுத்துவது போன்ற காட்சியமைப்புகள் இருப்பதாகவே குற்றம் சாட்டுகிறார்கள்.
superb review....
//ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையில் பின்னி பினைந்திருக்கும் தீவிரவாதம் பற்றிய காட்சிகள், இதுவரை இந்திய திரையில் சொல்லப்படாதது. //
நான் ஏண்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போகணும்?
Nice review sir.. Naanga romba miss pandrom movie ya..
Ungha review padikka.. Padikka manasukkullae.. Paravasamum.. Perumidhamum.. Santhosham mum..... Mix panni oru madhiri feel aghudhu....
Kamal thoothuda koodadhu... Manasu aarparikkum...
Ungha review padichahum.. Kamalji.. Jeichiduvaar nu thonudhu.... Santhosham ma irukku..
Thank you sir...
//அப்போது அவர் சொல்லும் ஆங்கில வசனத்திற்கு ஆந்திராவில் உள்ள சி செண்டர் தியேட்டரில் ஒரே அப்ளாஸ்.//
அங்கிருக்கிற சி செண்டர் தியேட்டரில் படம் பார்த்தவங்க எல்லாரும் படித்த கிராஜுவேட்ன்னு சொல்லுங்க.
//சண்டைக்காட்சிகள் நடக்கும் தத்ரூப உடல்களை, கண் முன்னே நிஜமாய் உலவவிடுகிறார்.//
ஜோம்பி மாதிரியா?
//சீட்டு நுனிக்கு கொண்டு வர தவறவில்லை// கீழே விழ வைக்கவில்லையா? ஏன்னா சார், நுனிக்கு வர வைத்தவர் இன்னும் கொஞ்சம் ஆச்சர்யத்தின் ஆழத்திற்க்கே தள்ளி விட்டிருக்கலாம்ல.
//ஒர் மாஸ்டர் ஷாட்டில் அது வரை கூட்டத்தின் பின்னணியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சரி முடிந்துவிட்டது என்று விளையாடப் போகும் காட்சி.. அப்பப்பா..//
ப்ப்ப்ப்ப்பா பேய் மாதிரி இருக்காடா? இதை படிக்கும் போதே என்னோட முடி தூக்கிட்டு நிக்குது... ஐ மீன் கூஸ்பம்ஸ்
//ஆர்கோ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரி படமெல்லாம் எப்போ வருமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விஸ்வரூபம் ஒர் பதில். //
அப்போ அடுத்த வருஷம் ஆஸ்கார் தமிழ்நாட்டுக்கு கொரியர்ல வந்துரும்ன்னு நம்புவோம்.
//அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களூடே ஊழன்று கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் ஒர் படமே//
இன்னா சார் "கலகலப்பு"-ஐ மிஸ் பண்ணிட்ட!
//இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார். அது என்னவோ உண்மைதான். புத்திசாலித்தனமான சிறந்த சினிமா அனுபவத்தை பெற விரும்பும் தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு இப்படம் ஒர் பேரனுபவம் //
அப்போ இங்கிருக்கிற உள்ளூர் முட்டா பசங்களுக்கு இந்த படம் டோட்டல் வேஸ்ட் தானே! அதை தான் நீங்களும் சொல்லுகிறீர்கள்."இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம்"
இதுவரை வந்த பத்துக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் படித்ததில், படம் தடை செய்யதது தேவையில்லாதது என்பதைதான் காட்டுகிறது.
Cable Sankar Sir...
Over Support Udambuku Aagaadhu...
Kamal Is Brilliant Actor. No Doubt In That... But Adhukaaga Indha Padatha Ban Pannitaanganu Solli Indha Alavuku Vimarsanam Panna Kudadhu... Indha Padam MULTIPLEX & A Centre la Mattum Thaan Odum...
Otherwise Vishwaroopam is a milestone film in Tamil Cinema...
படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது விமர்சனம்! நன்றி!
உங்கள் விமர்சனம் அருமை . இலவசமாக படம் பார்த்த க்கூட்டம் காசு கொடுத்து படம் பார்க்கும் என்னை தடுப்பது கூட கலாச்சார தீவிர வாதம் தான்
thanks for the review sankar anna
பாசிடிவ் விமர்சனம் நீங்களும் எழுதியிருகிங்க....
ஆனா யாரோ ஒரு நெகட்டிவ் பெர்சன் தம-ல மைனஸ் போட்டிருக்கு....
மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம். இந்தப் படம் நிச்சயம் ஒரு அசாதாரணப் படம் அல்ல. ஒரு படம் எந்த வகை ரசிகன் பார்த்தாலும் புரிய வேண்டும். படம் பார்க்க ஒலக ஞானமெல்லாம் வேண்டாம். ஆனால் உலக விஷயங்களை பாமரனும் பார்த்ததும் புரிந்து கொள்ளும் அளவுக்கு சொல்லத் தெரிந்தவனே நல்ல கலைஞன்.
எனக்கு டவுட்டா இருக்கு இது உங்க விமர்சனம்தானன்னு ....என்ன கேபிள்ஜி ஒரு குறைகள் கூடவா படத்தில் இல்லை இல்லை கமலை ரசிச்சுகிட்டே குறைகளை கண்டுகாம விட்டுடிங்களா !! ஒத்துக்குறோம் நீங்க கமல் காத்தாடின்னு
எனக்கு சந்தேகமா இருக்கு இது உங்க விமர்சனம்தானான்னு!! என்ன கேபிள் ஜி கமல் சாரை ரசிச்சுகிட்டே குறைகளை கண்டுக்காம விட்டுடிங்களா ?? உங்களால் ஒரு மைனஸ் கூட சொல்ல முடியாத அளவுக்கு படம் சூப்பரா?? ஒத்துகிறோம் நீங்க கமல்சார் காத்தாடின்னு (((()))
ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதம் என்று சொல்கிறீர்களே, தாலிபன்களால் சிறை பிடிக்கப்பட்ட, பெண் பத்திரிக்கையாளர் யுவான் ரிட்லி கூறுவதை படித்துவிட்டு, இப்படத்தின் திரைக்கதையை பாராட்டுங்கள்.
http://prisonerofjoy.blogspot.in/2007/08/personality-yvonne-ridley.html
please read the book, In the Hands Of the Taliban by Yvonne Ridley
http://yvonneridley.org
ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதம் என்று சொல்கிறீர்களே, தாலிபன்களால் சிறை பிடிக்கப்பட்ட, பெண் பத்திரிக்கையாளர் யுவான் ரிட்லி கூறுவதை படித்துவிட்டு, இப்படத்தின் திரைக்கதையை பாராட்டுங்கள்.
http://prisonerofjoy.blogspot.in/2007/08/personality-yvonne-ridley.html
please read the book, In the Hands Of the Taliban by Yvonne Ridley
http://yvonneridley.org
தங்களது விமர்சனத்துக்கும், சினிமா மீதான தீராத காதலையும் பாராட்டுகிறேன். படத்தில் மொத்தமே நான்கு portion(கதக் டான்ஸ், warehouse, ஆப்கான் sequences அண்ட் கார் சேஸிங்) தான் நன்றாக உள்ளது.என்னை பொறுத்தவரைல் படைத்திருக்கு சரியான முடிவு அமைய வில்லை.இலை-ல் அணைத்து items யும் வைத்து விட்டு ஊறுகாய் வைக்காமல் இருந்தால் எப்டி இருக்குமோ அப்டித்தான் இருக்கிறது சரியாக கிளைமாக்ஸ் வைகாதது.
படத்தில் மொத்தமே நான்கு portion(கதக் டான்ஸ், warehouse, ஆப்கான் sequences அண்ட் கார் சேஸிங்) தான் நன்றாக உள்ளது.என்னை பொறுத்தவரைல் படத்திருக்கு சரியான முடிவு அமைய வில்லை.இலை-ல் அணைத்து items யும் வைத்து விட்டு ஊறுகாய் வைக்காமல் இருந்தால் எப்டி இருக்குமோ அப்டித்தான் இருக்கிறது சரியாக கிளைமாக்ஸ் வைகாதது.
"இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம்"
படத்தின் கதையை படிக்கையில்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
இந்த படம் வயது வந்த அண்களுக்கு மட்டுமே.
குழந்தைகள், பெண்கள், மற்றும்
குடிகாரர்கள் இப்படம்
பார்ப்பதை தவிர்க்கவும்.
"இப்படத்தை கமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்திருக்கலாம்"
படத்தின் கதையை படிக்கையில்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
இந்த படம் வயது வந்த அண்களுக்கு மட்டுமே.
குழந்தைகள், பெண்கள், மற்றும்
குடிகாரர்கள் இப்படம்
பார்ப்பதை தவிர்க்கவும்.
படம் அப்படி,இப்படின்னு செய்திகள் வரவே ஒரு குழப்பம் உங்க விமர்சனத்துக்குதான் காத்து இருந்தேன். .! தெம்பாய் இருக்கின்றது மிக்க நன்றி..!
படம் அப்படி,இப்படின்னு செய்திகள் வரவே ரொம்ப குழம்பிபோய் இருந்தேன்..! உங்க விமர்சனத்துக்குதான் காத்து இருந்தேன்
தெம்பாய் உள்ளது மிக்க நன்றி...!
கேபிள் ஜி ! ! பகுத் அச்சா ஹை ஆப்கி யே விமர்சன் ! ! ஜரூர் தியேட்டர் மே தேக்லூங்கா ! !
//இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு போராடவும். ////
sariyaa soneenga
படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது விமர்சனம்..!
நன்றி!
1)ஆப்கானிஸ்தான் எதுக்கு போறாரு ??
2)அமெரிக்க கைதிகள் விடுவிக்க இவரை ஏன் அனுப்பனும் ??
3)யு எஸ் மிலிட்டரி லோகாடோர் எப்படி இவரு கிட்ட குடுத்துச்சு?
4)முப்பது பேரு முன்னாடி இவரு பையில் லோகாடோர் மாத்தி வைக்குறாரு .. டேய் காமெடி பன்னுரிங்கள.
5)எப் பி ஐ .. படம் பார்த்தான் .. வாயால சிரிக்க மாட்டான் ...
6)அந்த பூஜா குமார் லாஸ்ட் சீன் .. அடாமிக் யூனிட் வேல்யு சொன்ன உடனே .. உங்களுக்கு நெறைய தெரியும்னு எப் பி ஐ ஆளு சொல்லுறது சம்ம காமெடி ...
what was his mission in Afghanistan..other than roaming ardn them?
no agent goes without a mission ??
why does a RAW agent goes? if he is infiltrating ?
how come things lead to new york ??
omar ..wisam..salim everyone is there in newyork..roaming arnd.. :)
fbi does not even know abt a terror cell...
what did he acheive by showing one hr of movie in afghanistan?
why is he rescuing american mission?
where is the link btwn american army and raw agency?
sir.. summa.. intha padam parka..puthisali irukanumnu kathai udathinga... 1000 gaps in the movie...
he has taken lot of effort... for a ordinary movie.. like u said.. i dont see any reason for the ban...
and one thing abt the ban what ppl are missing is.. Muslim orgnaisation requested the ban.. and GOVT banned it.. they did not break a theatre... disrupt a show running in the theatre.. like Ramadoss did or Shivsena did...
they tried to get mileage in this issue and govt did not have the bottles to stand against those ppl...
watch this if you have not
http://en.wikipedia.org/wiki/Traitor_(film)
similar story line.. well executed movie
THANKS SHANKAR JI.PLEASE RELEASE THE BAND AS SOON AS POOSIBLE.I PRAY TO MY HEART
இது ராஜாவுகாக...அவர் ஆப்கான் கு போறது ஒசாமா பின் லேடன் எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கன்னு நான் நினைக்கிறேன்.அவரு spy அ அனுப்படுகிறார் FBI மூலமாக.இப்போது இதுதான் என்னால் சொல்ல முடியும்.நான் மற்றும் ஒரு முறை படத்தை காண செல்கிறேன்.பிறகு உங்களது கேள்விக்கான பதில் தெரிந்தால் சொல்கிறேன்.எனக்கு உங்களுக்கு நன்றிகள் traitor படத்தை பற்றி எனக்கு அறிமுகம் படுத்தியதற்காக.
***இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார்.***
The fact is this movie is NOT critically reviewed bcos of sympathy wave for KH as he fucked up in releasing this movie peacefully.
Behindwoods, Sify, rediff and everybody sucks as they dont critically analyze this movie.
People are not pointing out the -ve points except few honest reviewers like TVR and Sathyapriyan.
Unfortunatley, your review sucks too! All you do is praising this movie like it is perfect execution. People say, it tests lots of people patience! It will not be a commercial hit for sure!
This movie is taken Tamil. How does it going to reach average Tamils?
If it is an international plot, why cant KH take this movie in English and release it world-wide?
I am a Tamil who does not have world knowledge. So are crores of Tamils. We cant appreciate the movie. How is KH going to win then??
அதேன் சிலர் ஒரே பின்னூட்டத்தை ரெண்டு வாட்டி போடுறாங்க?விஸ்வரூபத்தில எல்லோருக்கும் ரெண்டு ரெண்டு கேரக்டர்ன்னு சொன்ன பாதிப்பா:)
உங்களுக்கு பல் இருக்குது பக்கோடா சாப்பிடுறீங்க.என் நிலைமைக்கெல்லாம் மன்மோகன் அரபிக்காரனுக்கு கடுதாசி போட்டாலும் ஆவுறதில்ல:(
அந்நிய நாடுகளில் அமேரிக்கா அத்துமீறி நுழைந்திருப்பது தீவிரவாதமா? அல்லது சொந்த நாட்டுக்காக போராடுபவன் தீவிரவாதியா?
அமெரிக்காவிடம் பிச்சை எடுத்துவிட்டு, அவனது ஊடுருவலை நியாயப்படுத்தி சொந்த நாட்டுக்காக போராடுபவனை தீவிரவாதி என்கிற ஊடகங்களின் நச்சு செய்தியை நீங்களும் சொல்லியிருப்பது என்ன நியாயம் நண்பரே?
இந்தியாவில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் குண்டுவைத்த நிகழ்ச்சியை உலக நாயகன் படமாக எடுக்கட்டுமே? பகவத் கீதை படித்துவிட்டு சாமியை கும்பிட்டுவிட்டு ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் குண்டு வைத்ததாக படமெடுத்தால் எப்படி இருக்கும் ? ...
உங்களிடம் இருந்து இப்படி ஒரு தவறான வாதத்தை எதிர்பார்க்கவில்லை
"""" மதுரையில் ஒரு சிலவருடங்கள் இருந்ததாக சொல்லியதை பற்றி கொதித்தெழுந்தவர்கள், தெலுங்கு படத்தை பார்த்தால் புரியும் அதில்
அதே கேரக்டர் ஹைதராபாத், காக்கிநாடா என்று சொல்லும்."""
ரோஜா படத்திலும் வழக்கம் போல் தீவிரவாதி அப்சல் கான் சொல்லுவது இது.
"""மக்கள் குழுவினரின் துப்பாக்கி வெடிச்சத்தத்தோடு அவன் தூக்கிலிடப் பட்டு, அவன் இறந்துவிட்டனா என்றுஅவனின் கால் நாடித்துடிப்பைப் பார்த்து அறிவித்து
முடிந்ததும், ஒர் மாஸ்டர் ஷாட்டில் அது வரை கூட்டத்தின்பின்னணியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சரி முடிந்துவிட்டது என்று விளையாடப்
போகும் காட்சி.. அப்பப்பா.. """
இது ஏற்கனவே அயன் படத்தில் வந்து விட்டது.
""" எந்த இடத்தில் இந்திய அல்லது தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் இடம் ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை. இப்படம் முழுக்க, முழுக்க, ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களுக்கிடையே நடக்கும் கதை."""
முஸ்லீம்களை அப்படியெல்லாம் பிரிக்க முடியாது.அதனால்தான் உலகம் முழுவதும் தொழுகை அரபி மொழியில்.வேறு வழியில்லை முஸ்லீம்களின் வருத்தம் பிடிபட உங்களுக்கு முஸ்லீம்களின் பார்வை தேவை
//இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு போராடவும். //// SUPER JI. THANK U
WONDERFUL REVIEW JI
இந்து மத சகோதரர் ஒருவரின் பார்வையில் விஸ்வரூபம்...
நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.
தாலிபான்கள் உருவானதில் அமெரிக்காவில் அரசியல் லாபம் குறித்தோ , அமெரிக்காவின் தீவிரமான பெட்ரோல் திருட்டு குறித்தோ எவ்வித விமர்சனமும் இல்லாமல், இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலகம் முழுக்கவும் மக்கள் மனதில் ஏற்றி வைக்க அமெரிக்க இயக்குனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதில் ஒரு அரசியல் லாபம் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு இட்டிலி தோசை திண்ணும் உனக்கு ஏன் அத்தகைய ஒருதலை பட்ச பார்வை என்பதைத்தான் கமலை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.
அவர் ஊரில் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள்.
அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேலையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”
அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். தங்க கூடம் என்றால் மலம் என்ன மணக்கவா செய்யும்.
thanks cable
நல்ல ரிவியூ கேபிள், கமல் படத்தை இன்னும் விறுவிறுப்பாய் குடுத்து இருக்கலாம் என்று எனக்கு படுகிறது. கிளைமாக்ஸ் சப்பென்று முடிந்தது போல் இருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மைல்கல் படம் போல் தான் இது எனக்கு படுகிறது.
@ Kinky DON, இந்த படம் பார்த்த இந்து மத சகோதரரின் கேள்விக்கு எனது பதில்கள்.
படத்தில் கமல் ஆப்கன் தரப்பு நயத்தையும் நன்றாகவே சொல்லி இருப்பார், அதை நீங்க ஆங்கில படத்தில் பார்க்க முடியாது. அமெரிக்கா ஏன் ஆப்கன் மீது படை எடுத்தது என்று ஓமர் செம நக்கல் அடிப்பார்.
//“அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”///
அப்படி சொன்ன அடுத்த நிமிஷம் படத்துல என்ன நடக்கும் என்பதையும் உங்க நண்பர் எழுதி இருக்கலாம், அமெரிக்ககாரன் லாஞ்சரை வீட்டு மேல போட்டுடுவான்.
"இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார். அது என்னவோ உண்மைதான்"
என்ன ஜி இப்படி சொல்லீட்டிங்க படத்தோட ரிசல்ட் பத்தி பூடகமாக சொன்னதாகவே படிகிறது எனக்கு,ஏன் அப்படின்னா இதுவரைக்கும் நல்லா பாருங்க ஹிந்தி மற்றும் தெலுங்கு காரங்களுக்கு எல்லாம் நாம் படம் எடுத்து ஓடியதாக சரித்திரம் இல்லை. மற்றபடி உங்களின் விமர்சனத்தில் கமல் மீதான ஒரு பச்சாதாபமே மேலோங்கி உள்ளது .அதில் மாற்று கருத்தில்லை ஏனெனில் இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ள அனைவரின் மனநிலையும் இதுவே.
லெட்டர் பேடு இஸ்லாமிய கட்சிகளுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள இது ஒரு சிறந்த பிரச்சினை. மேலும் விஜயகாந்த் தன படங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளை பந்தாடிய போது மூடிக்கொண்டிருந்த இவர்கள்...இப்போது ஏன் ஜிம்புகிறார்கள் என்று தெரியவில்லை...மேலும் தலிபான்கள் முஸ்லிம் இல்லை என்று வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்..இந்திய முஸ்லிம் தான் உலக முஸ்லிம் நாடுகளில் கேவலமாக நடத்த படுகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளட்டும்... 2 வாரத்துக்கு முன், இந்திய ஜவான்கள் பாகிஸ்தானிய முஸ்லிம் ஜவ்வன்களால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட போது??
Thank u sankar. U done good job. Lot of waiting for this wondeqful film
Thank u sankar.
//தாலிபான் அவன் நாட்டுக்காக போராடுகிறான் அவன் எப்படி தீவிரவாதி?//
நல்ல கேள்வி! உண்மையில் அது தவறே இல்லை. ஆனால் தாலிபான் தன் சொந்த மக்களை ஈவு இரக்கமில்லாமல், கொல்கிறதை நாம் செய்திகளில் வீடியோக்களில் பார்க்கத்தான் செய்கிறோம்.அவர்களை பெண்களை நடத்தும் விதத்தை. இதை வெறும் அமெரிக்க மீடியா பரப்பல் என்று தப்பித்துக்கொண்டுவிட முடியாது.
சினிமா இதை படமாக்கவே செய்யும். முக்கால்வாசி தமிழ்,தெலுகு (இதில் தான் மிக அதிகம்)எல்லா வில்லன்களும் நெற்றியில் பெரிய குங்கமத்தோடுதான் வருவார்கள்.உடனே நான் கும்பிடுகிற கடவுளையே வில்லனும் ஏன் கும்பிடுகிறமாதிரி காட்சி என்று கேக்க முடியுமா? ராம்கோபால் வர்மா படத்துலேயே பெரிய வில்லன்கள் பகவத்கீதை சொல்லிட்டுத்தான் வில்லத்தனமே பண்ணுவார்கள்.
உண்மை மிக எளிமையானது.இது தாலிபான்களின் கதை.முஸ்லிம்களின் கதை அல்ல.கடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்களை தாலிபான்கள் கழுத்தை ஒரே சீவாக சீவும் முன் குரானில் வசனம் படிக்கவே செய்கிறார்கள். இது துரதிஷ்டவசமானது என்ன செய்ய?
அதற்காக அது இல்லை என்று ஆகிவிடுமா என்ன?
ஏற்கனவே நைந்துபோயிருக்கிற பாகிஸ்தானை கரையான்போல அரித்துக் கொண்டிருக்கிறார்கள் பாக் தாலிபான்கள்.நாட்டில் சில பகுதிகளே அவர்கள் கட்டுப்பாட்டில்.எப்படி அவர்களை முஸ்லிம்கள் என்கிறீர்கள்?
நேற்றுக்கூட பாக் தெருவில் ஒருவர் சகிக்கமுடியாதபடி கொலை செய்யப்பட்டு உடல் கிடக்கிறது.அந்த பிணத்தை அப்புறப்படுத்துபவனுக்கும் இந்த தண்டனை உண்டு.இது அல்லா கொடுத்த தண்டனை என்று பிணத்தின் உடம்பில் சீட்டு எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.பிணம் அப்படியே கிடக்கிறது.
மிக மிக தப்பான ஒரு அபிப்ராயத்தை இந்த 24 இயக்கங்கள் இப்போது உருவாக்கிவிட்டது.தாலிபானை குற்றம் சொன்னால் இவங்களுக்கு ஏன் வலிக்குது என்று மாற்று மத மிதவாதிகளையும் யோசிக்க வைக்க ஆரம்பித்தது வருத்தமான துரதிஷடமே.
கேள்வி சிம்பிள்...தாலிபான்கள் எப்படி முஸ்லிம்களாக முடியும்?
//லெட்டர் பேடு இஸ்லாமிய கட்சிகளுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள இது ஒரு சிறந்த பிரச்சினை.// this is true.
நல்ல விமர்சனத்திற்கு நன்றி
கமலுக்கு சிம்பதி வோட்டு போட்ட மாதிரி இருக்கு உங்க விமரிசனம். கமலுக்கு எதுக்கு ஹாலிவுட் ரேஞ்சு ஆசைன்னு தெரியல. அலையரார் . அவரும் அவர் பேசற டயலாக்கும் சிரிப்பு வர மாதிரி தான் இருக்கு.
gr8 review Shankar....really inspires me to see the movie in theatres.....can't wait anymore.
//இப்படத்தை தடை செய்ய என்ன இருக்கிறது?//
இந்த கேள்விய எப்படி கேட்டா அரசியல்வாதிகளுக்கு புரியும் ?
மிக அருமையான படம். அருமையான விமர்சனம்.
நான் சொல்ல விரும்புவது ஒன்றே ... படம் உனக்கு புடிக்கலனா நீ பாக்காத. அடுத்தவன தடுக்குற உரிமை உனக்கு இல்லை.
கேபிள்,
கமல் இந்து கடவுள்களை கிண்டல் செய்வதோ அல்லது தனது புத்திசாலித்தனத்தை காட்டுவதற்கோ இந்து கடவுள்களோடு நிறுத்திக்கொள்ளலாம். யாரும் சில லெட்டெர் பேட் கட்சிகளோடு முடிந்திருக்கும்.யாரோ கருத்து சொன்ன ஒருவர் இந்து தீவிரவாதிகள் பகவத் கீதை படித்து விட்டு செல்வது போல காண்பித்தால் ஒத்து கொள்வார்களா என்று கேட்டார். அது கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஏன் என்றால் எந்த இந்து அதை படிக்கிறான். எல்லாருக்கும் அந்த ஒரு வரியை தவிர அதில் வேறு எதுவும் தெரியாது. அப்படியானால் அது கண்டிப்பாக திணிக்கப்பட்டது போலத்தான் இருக்கும். எந்த சாதாரண ரசிகனும் இவளவு தூரம் கோப பட்டிருக்க மாட்டார்கள். அல்லது கருணாநிதி போல என் மதத்தை என்னை தவிர யார் விமர்சனம் செய்ய முடியும் என்று சல்லி அடித்திருக்கலாம். மேலும் எனக்கு உன்கள் பதிவு விமர்சனம் போல தெரியவில்லை. எவ்ளவு நல்ல படமாக இருந்ததாலும் அதிலும் குறை கண்டுபிடித்து சொல்பவராயிற்றே. இந்த படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் நீங்கள் தவறை சுட்டிக்காட்டுவதை தவிர்த்து இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது கமல் மற்றும் மணி ரத்னத்தின் விசிறி என்பதால் கூட எழுதி இருக்கலாம். மேலும் இந்த மொத்த பதிவுமே சாதாரண ரசிகனுக்காக எழுதப்படாமல் இந்த படத்தை எதிர்பவர்களை சமாதான படுத்தவோ அல்லது அவர்கள் எதிர்க்க எந்த காரணமும் இல்லை என்பதை முன்னிலை படுத்தி எழுத பட்டதோ என்று தோன்றுகிறது. இந்த மாதிரி பிரச்சினை ஆரம்பத்தில் வந்த வுடனே தவிர்த்து இருக்க வேண்டும். நான் இந்த படத்தை பற்றி சொல்லவில்லை. மருத்துவர் அய்யா இப்படி திரை படத்தை எதிர்பதால் வரும் ஓசி விளம்பரங்களை எல்லா லெட்டெர் பேட் கட்சிகளுக்கும் கற்று தந்து விட்டார். இப்போதாவது எல்லா திரைப்பட தொழிலாளர்களும் ஒன்று கூடி இதை எதிர்க்க வேண்டும். இப்போதும் நீங்கள் இந்த படத்தை என் எதிர்க்க கூடாது என்றுதான் சொல்லி வுல்லீரகளே தவிர இந்த படத்தில் நிஜமாக காட்டப்படும் எதை உண்மை இல்லை என்று சொல்கிறார்கள் என்று சொல்லி அதை தவிர்த்தால் படம் எப்படி இருக்கும் என்றும் சொல்லி இருக்கவேண்டும். மேலும் பொதுவாக நான் நினைப்பது இந்த படம் தமிழ் நாட்டில் இன்னும் வெளிவராத நிலையில் இந்த பட விமர்சனம் எழுதி இருக்க வேண்டுமா? கண்டிப்பாக இந்த படம் இந்த பிரச்சினைகளால் நன்றாக ஓடும் என்றே நினைக்கிறன். நன்றி.
This one is for Raja and others who have no idea on why kamal goes to Afghan. War on Terror: Although RAW's contribution to the War on Terror is highly classified, the organization gained some attention in the Western media after claims that it was assisting the United States by providing intelligence on Osama Bin Laden and the Taliban's whereabouts. Maps and photographs of terrorist training camps in Afghanistan and Pakistan along with other evidence implicating Osama bin Laden in terrorist attacks were given to US intelligence officials. RAW's role in the War on Terror may increase as US intelligence has indicated that it sees RAW as a more reliable ally than Pakistani intelligence. It has further come to light that a timely tip-off by RAW helped foil a third assassination plot against Pakistan's former President, General Pervez Musharraf.[4][91]
padam Malaysiavil parthen,super,a Tamil film in International standard
Vidaa muyarchi ''visvarooba"vetri...
பொதுவாக ஒரு விஷயத்திற்காக போராடுபவர்களை
இரண்டு வகையாக பிரிக்கலாம் .
1.மிதவாதி
2.தீவிரவாதி
மிதவாதத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது
மிதவாதியின் பெயர் ராம் ஆக இருந்தாலும் ராபர்ட் ஆக இருந்தாலும்
ரஹீம் ஆக இருந்தாலும் பாராட்டப் பட வேண்டியவர்கள்
தீவிரவாதத்தால் பெரும்பாலும் வெற்றி கிட்டாது .அபபடியே கிடைக்கும் வெற்றி நிரந்தமானது அல்ல
அது மேலும் பிரச்சனையை வளர்க்கும்.
தீவிரவாதியின் பெயர் அமர் ஆக இருந்தாலும் அக்பர் ஆக இருந்தாலும் அந்தோணி ஆக இருந்தாலும்
அவர்களுக்கு நல்லவர்களின் ஆதரவும் அவர்கள் கும்பிடும் கடவுளின் ஆதரவும் கண்டிப்பாக கிடைக்காது
விஸ்வரூபம் பிரச்சினையில் முஸ்லிம்கள் போராட விரும்பினால் ,மிதவாதம் மூலமாக போராடி ,அதாவது ஒரு முஸ்லிம் கூட
இந்த படத்தை பார்க்ககூடாது என முடிவு செய்திருந்தால் ,இந்த மாதிரி பிரச்னைக்கு நிரந்திர முடிவு கிடைத்திருக்கும்
அதை விட்டுவிட்டு இப்படி ஒரு பெரிய விளம்பரம் கிடைத்திருப்பதால்
இனி வரும் சிறு இயக்குனர்கள் கூட தமக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதற்காக வேண்டி சாதாரண படத்திற்கு கூட
வில்லன் பெயரை ஒரு முஸ்லிம் பெயராக
வைக்க ஆரம்பிக்கலாம்
இப்பொழுது கூட தடையை வாபஸ் பெற வெய்த்து படம் பார்ப்பவர்கள் வசம் கமல் செய்தது சரியா அல்லது தவறா என தீர்ப்பளிக்க
வாய்ப்பளித்து தங்களது மிதவாதத்தை காட்ட ஆரம்பிக்கலாம்
வேலு
ஒரு தமிழனால் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக எடுக்கப்பட படத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு . இந்த கஷ்டத்திலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதியுள்ள உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் . கூடிய விரைவில் தமிழ்நாட்டில் விசில் சத்தத்துடன் படத்தை மறுபடியும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் ...
//ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதம் என்று
சொல்கிறீர்களே, தாலிபன்களால் சிறை பிடிக்கப்பட்ட,
பெண் பத்திரிக்கையாளர் யுவான் ரிட்லி கூறுவதை
படித்துவிட்டு, இப்படத்தின் திரைக்கதையை பாராட்டுங்கள்.
http://prisonerofjoy.blogspot.in/2007/08/personality-yvonne-ridley.html
please read the book, In the Hands Of the Taliban by Yvonne Ridley
http://yvonneridley.org//
நண்பர் spider, Science of Influence படித்ததில்லை என்று
நன்றாக தெரிகிறது. மூளை சலவை செய்வதில்
நிறைய முறைகள் உண்டு. அதில் ஒன்று இது.
Chinese captors did the same to Americans (POW) by
offering cigarette for writing (copying) communist principles.
When you write, you actually read and think and Cig. makes
you to believe them.
இது விமர்சனம் என்று சொல்லாதீர்கள்... 'கமலின் ரசிகன்' என்ற அடையாளம் கண்கூடாகத் தெரிகிறது. படம் நன்றாக இருப்பதைக் குறிப்பிடவேண்டிய இடங்களில் கூட, உங்களின் 'ரசிகன்' எட்டிப் பார்கிறான். விமர்சனம் என்பது ப்ளஸ், மைனஸ் இரண்டையும் குறிப்பிடும்படியாக இருக்கவேண்டிய ஓன்று. ப்ளஸ் மட்டும் சொல்லிவிட்டால், அது விமர்சனமே அல்ல... // 'விஸ்வரூபம்' தமிழ்சினிமாவின் முக்கியமான ஒரு மைல் கல் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், இதை விமர்சனமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது விமர்சனம் என்று உங்களுக்கு பட்டால், இனி எல்லாப் படங்களுக்கும் 'ப்ளஸ்' காட்சிகளை மட்டும் அவிழ்த்து விடுங்கள். //
விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்
விஸ்வரூபம் கார் விபத்து
இப்படத்தை தடை செய்ய என்ன இருக்கிறது?. எந்த இடத்தில் இந்திய அல்லது தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் இடம் ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை. இப்படம் முழுக்க, முழுக்க, ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களுக்கிடையே நடக்கும் கதை. அவர்களூடே ஸ்பை வேலை செய்யும் ஒருவனின் பார்வையில் நடக்கும் கதை. சொல்லப்போனால் இப்படத்த்தில் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களுக்கான பதில் இரண்டாம் பாகமாய் வரப்போகும் படத்தில் தான் முடியும் என்று தெரிகிறது.
சொன்னா எவன் கேக்குறான்...
பட் படம் பல சாமானிய ரசிகர்களுக்கு புரியவில்லை....
என் அம்மா தீவிர கமல் எதிர்ப்பாளர் அவரிடம் வலுக்கட்டாயமாக கமலின் முதல் 40 நிமிட கமலின் முக பாவனைகளை எடுத்து கூறி பார்க்க செய்தேன்...
ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் கொடுத்து கொண்டே வந்தேன்.. கமல் அரவாணி இல்ல அவர் கதக் எனப்படும் ஒருவகையான நடனகலைஞர் என்று ஒவ்வொரு சீனையும் மிகவும் சிரமபட்டு விளக்கி கொண்டு வந்தேன்.. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து கொண்டே வந்தார்கள்... 3 நாட்கள் அந்த முதல் பைட் சீன் வரைக்குமே பார்க்குமாறு பிளாண் பண்ணி பார்த்துக்கொண்டேன்.. அவர்கள் நல்லா கமலை ரசிக்க ஆரம்பித்ததும் அடுத்த நாள் முழு படத்தையும் ஓடவிட்டேன்.. ஆப்கானிஸ்தான் .. துப்பாக்கி கத்தி என ஒவ்வொரு பகுதியாய் வர வர எங்கம்மா என்ன பார்த்து வுட்டாங்க பாரு ஒரு லு்க்கு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .. 30 டிவிடி இன்னும் முழுவதும் ஓடாமல் அப்படியே இருக்கு இதுக்கு என்ன சொல்ரிங்க...
கமல் நம்ம போன்ற ரசிகர்களை திருப்தி படுத்துகிறார் ஆனால் என் அம்மாவுக்கு தேவர்மகனைதான் பிடிக்கிறது... இதை ஏன் கமல் புரிந்து கொள்ளமாட்டேன்குறார்
Post a Comment