சமீபத்தில் முகப்புத்தக குழுவான “சாப்பாட்டுக்கடை’ யில் ஒர் விளம்பரம். மீன் வருவலும், மீன் குழம்பு மட்டும் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வதாய். மீன் குழம்பின் ரசிகரான என் நண்பரிடம் இதைப் பற்றி சொன்னேன். அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. இப்படித்தான் சொல்லுவாங்க.. பின்னாடி வந்து சாப்ட்டா கவிச்சி வாடையடிக்கும், பழைய மீனை வச்சி வறுத்து கொடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரை சென்னையிலேயே மிக சிறிய ஓட்டல்களில் மட்டுமே நல்ல மீன் குழம்பும், வறுவலும் கிடைச்சிருக்கு என்றார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மையும் உண்டு. நாங்கள் இருவரும் நிறைய உணவகங்களில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். மீன் குழம்பு என்றால் குழம்பு மீன், மீன் வறுவல் என்று மீன் அயிட்டங்கள் அதையும் விட மாட்டார். நல்ல மீன் குழம்பு வைக்கத் தெரிந்த ஓட்டலில் மற்ற அயிட்டங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ரசத்தில்.
இவ்வளவு தூரம் சொல்லியவர் விளம்பரத்தில் பார்த்த மீன் குழம்பு படத்தை பார்த்ததும், “சரி..நாளைக்கு மதியம் லஞ்சுக்கு வீட்டுல சாப்பாடு மட்டும் செஞ்சிட்டு இங்க ஆர்டர் செய்திருவோம்’ என்றபடி போனை எடுத்து கூப்பிட்டார். முகத்தில் ஒர் ஏமாற்றம் இருந்தது. ‘என்ன தலைவரே என்றதும் அவங்க சனி, ஞாயிறுக்கு மட்டும்தான் டெலிவரி பண்ணுவாங்களாம். மிச்ச நாள்ல ஆர்டர் எடுத்துப்பாங்களாம் என்றார்.. அதற்குள் எதிர்முனைகாரர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பரவாயில்ல வீக் டேவானாலும் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறீர்கள் சப்ளை செய்கிறோம் என்றதும் ஆர்டர் கொடுத்தோம். ஒரு போர்ஷன் மீன் குழம்பு, ரெண்டு பிஷ் ப்ரை, ஒரு ஃபிஷ் பொடிமாஸ்.
அடுத்த நாள் மதியம் நண்பரின் வீட்டிற்கு போய் ரெடியாய் உட்கார்ந்துவிட்டேன். ஏனென்றால் எனக்கும் மீன் குழம்பு மிகவும் பிடிக்கும். ஆனால் குழம்பில் இருக்கும் மீன் அவ்வளவாக பிடிக்காது. ப்ரை மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட ஜெஜ்ஜில் நல்ல காரக்குழம்புக்கும், மீன் குழம்புக்கும் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் இருப்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன். நண்பர் எலக்ட்ரிக் குக்கரில் சாதம் வடித்து ரெடியாய் இருக்க, சரியாய் மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் கேட்டது போல வந்தது. ஒரு ஹாட் கேஸில் பேக் செய்யப்பட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். நல்ல அளவில் நான்கு பீஸ் வஞ்சிரம் மீன் துண்டுகளோடு, குழம்பு மணத்தது. வாடையில்லாமல். ப்ரை நன்றாக மசாலாவோடு ஊற வைக்கப்பட்டு அருமையாய் இருந்த்து. நல்ல சைஸ் வஞ்சிர மீன். மீன் குழம்பு பிரியரான நண்பர் முத வாயை எடுத்து சாப்பிட்டு கண்ணை மூடி ருசித்து “ம்’ என்றார். நன்றாக இருக்கிறதாம். அடுத்து நான் சாப்பிட்டேன். காரம் அவ்வளவாக இல்லை. ஆயில் குறைவாக, நல்ல சுவையோடு இருந்தது. வழக்கமாய் முட்டை அயிட்டங்களை சூட்டோடு சாப்பிட்டு பழகியவன் ஆதலால் பொடிமாஸ் கொஞ்சம் ஆறியிருந்து சுவை குறைவாகவே பட்டது. நண்பர் ஓகே என்றார்.
குறை என்று சொன்னால் குழம்பில் கொஞ்சம் உப்பு குறைவு என்பது, மீன் குழம்பில் இருக்கும் லேசான புளிப்பு இதில் குறைவு என்பது மட்டுமே. நன்றாக சாப்பிட்டு வயிற்றை ஏதும் பதம் பார்க்கவில்லை என்பதே நல்ல உணவிற்கு சான்று என்பதை அடுத்த நாள் காலை உணர்தோம். என் நண்பருக்கு பிடித்துவிட்டது. உடனடியாய் அந்நிறுவனத்தை கூப்பிட்டு இன்னும் என்ன என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார். வீட்டு சுவையில், சன்ஃப்ளவர் ஹார்ட் ஆயிலில்தான் மீன் பொறிப்பதாகவும், வஞ்சிரம் மீன் ப்ரெஷ்ஷாக அன்றன்றைக்கே வாங்கி சமைப்பதாகவும். புதிதாய் ஆரம்பித்திருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டும் தற்போது சர்வ் செய்வதாக சொன்னார். நிச்சயம் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.. ஊர் விட்டு வந்து நல்ல சாப்பாடு கிடைககாதா என்று சப்புக் கொட்டிக் கொண்டு கிடக்கும் பேச்சுலர்கள் ஒர் ட்ரை செய்து பார்க்கலாம். பிஷ் 65யும் தருகிறார்களாம்.
மீன் குழம்பு ஒரு போர்ஷன் நான்கு வஞ்சிர மீன் துண்டுகளுடன் -150
மீன் வறுவல் பெரிய பீஸ் வஞ்சிர துண்டு - 150
மீன் 65 -6 துண்டுகள் -180
மீன் பொடிமாஸ் -100 கிராம் -125
டோர் டெலிவரிக்கு சல்லிசான விலை என்றுதான் தோன்றுகிறது. பொடிமாஸின் விலையைத் தவிர.. ஹேவ் எ ட்ரை.. படத்தில் இருக்கும் போட்டோவில் இருக்கும் படம் எங்கோ கூகுளீல் சுட்டு போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இவர்களது குழம்பில் ஆயிலே தெரியவில்லை. இவர்களின் வெற்றி தொடர்ந்து இவர்கள் செய்யும் சர்வீஸிலும், சுவையிலும், விலையிலும்தான் இருக்கிறது.
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
Do they deliver @ Saligramam / Vadapalani
maxo any where in chennai
உங்களுக்கு நாக்கு நெம்ப நீளம்
அவ்வளவு நல்லாவா இருந்துச்சி
Post a Comment