Thottal Thodarum

Jan 18, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu

பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். எதையும் பாசிட்டிவாக பார்ப்பவர். அவருக்கு ரெண்டு மகன்கள், ஒரு பெண். தன் மனைவி ஜெயசுதாவோடு ரேலங்கியில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவர். இரண்டு மகன்களில் மூத்தவரான வெங்கடேஷ் ஒர் வேலையில்லா பட்டதாரி, சுள்ளென கோபப்டுகிறவர். இளையவர் மகேஷ்பாபு. நன்கு படித்தவர். ஹைதையில் இருப்பவர். இளமைத் துள்ளலோடு வளைய வருபவர்.இவர்களின் உறவினரான பணக்கார ரமேஷ் ராவுக்கு ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜ் குடும்பத்தின் மீது காழ்ப்புணர்ச்சி.  இவரது மகள் சமந்தாவுக்கும் மகேஷ்பாபுவுக்கும் காதல். இன்னொரு பக்கம் வீட்டோடு இருக்கும் முறைப் பெண் அஞ்சலி . வெங்கடேஷ் தான் தன் கணவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருப்பவர். ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜின்  குடும்பத்தில் உறவினர் ரமேஷ் ராவினால் ஒர் பிரச்சனை உருவாகிறது. அது அண்ணன் தம்பிக்கிடையேயும் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை.


கதை என்று பார்த்தால் மிக சிம்பிளான கதைதான். ஆனால் தெலுங்கு பட உலகில் பெரிய ஹீரோவான வெங்கடேஷ், மகேஷ்பாபு காம்பினேஷன். அஞ்சலி, சமந்தா,  போன்ற அதிரடிக்கும் அழகு பதுமைகள். பிரகாஷ்ராஜ் போன்ற சிறந்த நடிகர்களின் நடிப்பு எல்லாம் சேர்ந்ததும் எகிறிய எதிர்பார்ப்பை சரியாய் திருப்திப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வெங்கடேஷுக்கு இம்மாதிரியான கேரக்டர் கேக் வாக் போல.. மிகச் சுலபமாய்   வீட்டிற்கு பெரியவன், வேலையில்லாததால் இருக்கும் எரிச்சல், சட்சட்டென வரும் முன்கோபம்,  முறைப்பெண் அஞ்சலிக்கும் இவருக்குமான வெளிப்படுத்தாதா காதல். தம்பிக்கும் இவருக்குமிடையே இருக்கும் பாசம், கோபம், குடும்பத்தின் மீது வன்மம் தொடுக்கும் உறவினர் மீது காட்டும் எரிச்சல் என்று எல்லா உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.  மகேஷ்பாபுவுக்கு துள்ளலான இளைஞர் கேரக்டர். இவருக்கும் சமந்தாவுக்குமிடையே நடக்கும் பார்வை பரிமாற்றங்களிலிருக்கும் இளமை துள்ளலாகட்டும், நாலு பேருக்கு முன் தன்னையும் தன் குடும்பத்தையும் அவமானப்படுத்திய மாமாவை பொதுவெளியில் எதிர்த்துவிட்டு காதலை விட குடும்பதான் பெரியது என்று வெளியேறி மருகுவதாகட்டும், எதிரி க்ரூப்பின் பெண்ணை காதலிப்பது அண்ணனுக்கு தெரிந்து இருவருக்குமிடையே ஏற்படும் பிளவினால் மருகி உருகும் இடமாகட்டும் பல காட்சிகளில் இவரும் கலங்கடிக்கிறார்.

அஞ்சலி ஒர் க்யூட் தேவதை. அப்படியே இறுகக் கட்டி ஒர் உம்மா கொடுக்கலாமா எனும் அளவிற்கு  இன்னொசென்சை முகத்தில் வைத்திருக்கிறார். எதிர்பார்ட்டியின் இம்சையால் அவரை பெண் பார்க்க வீட்டிற்கு ஆள் வந்துவிட, அந்நேரம் பார்த்து வெங்கடேஷ் வீட்டிற்கு வர, கிட்டத்தட்ட மனைவியாகவே தன்னை பாவித்து வரும் அஞ்சலி, வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் தன்னை கூப்பிடக்கூடாது என்று மனதிற்குள் பதட்டத்துடன் முணுமுணுக்க, உள்ளே தன் முறைப்பெண்ணை பெண் பார்க்க வந்ததை நினைத்து மனதிற்குள் குமுறியபடி வெங்கடேஷ் தவிர்க்க முடியாமல் “ஏய்” என்றழைக்க, பதறியபடி துண்டெடுத்துப் போகும் காட்சியில் அஞ்சலி ராக்ஸ்.. 

ரேலங்கி மாமா கேரக்டருக்கு யோசித்தால் ப்ரகாஷ்ராஜைத் தவிர வேறொரு நடிகரை நினைவில் கொண்டுவரவே முடியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. ம்னுஷன் சிரித்த முகத்துடன் நல்ல வார்த்தைகள் மட்டுமே சொல்லி அமைதியாய் பல விஷயங்களை டீல் செய்யும் இடம். வார்த்தைகளால் காயப்பட்டாலும் அதை சுவாதீனமாய் எடுத்துக் கொண்டு, விலகிப் போகும் இயல்பான நடிப்பு. வாவ் க்ளாஸ்.

மிக்கி ஜே.மேயரின் இசையில் ஒரிரு பாடல்கள் ஓகே. கே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுக்க வேண்டிய ஃபீல் குட் மூடை நல்ல கலர் காம்பினேஷனிலும், ஸ்மூத்தாக அழகாய் கொடுத்திருக்கிறார்.  கதை திரைக்கதை வசனம் இயக்கம். தெலுங்கில் ரொம்ப நாள் கழித்து ஒர் ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை அளித்திருக்கிறார். அதுவும் பெரிய நடிகர்களின் காம்பினேஷனில். அந்த காம்பினேஷ்ந்தான் இப்படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணமான தயாரிப்பாளர் தில்ராஜுவையும் பாராட்ட வேண்டும். ஒரு ஸ்லிம்மான கதையை திறமையான நடிகர் நடிகைகளை வைத்து உணர்ச்சி பூர்வமான திரைக்கதை அமைத்து சிறப்பாக ஒர் படத்தை அளிக்க முயன்றிருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ் என்ன வேலை செய்கிறார்? அவரை ஊரே மதிப்பதற்கு காரணம் அவரின் நல்லதனம் மட்டுமா? வெங்கடேஷுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை?  அவரின் கோபமான குணத்திற்கு காரணம் என்ன? உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன? மகேஷ்பாபுவுக்கு கூகுளில் வேலை வாய்ப்பு அவர் மனதின் ஆழத்திலிருந்து சிரிக்காததால் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். படு அபத்தமாக இருந்தது. பல இடங்களில் எக்ஸ்டெண்டட் சீரியல் பார்ப்பது போல் இருக்கிறது. இப்படி பல கேள்விகளும், அபத்தங்களும் இருந்தாலும் க்ளைமாக்ஸ் அரை மணி நேரம் நம் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியாத வகையில் அமைந்ததால் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. 
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

காத்தவராயன் said...

வெங்கடேஷின் தங்கை திருமணத்திற்கு ரமேஷ்ராவ் குடும்பத்தினர் வரும்போது, அஞ்சலியைப் பார்த்து நலம் விசாரிப்பார்கள். அந்நேரம் வெங்கடேஷின் முகபாவத்தை அறிந்து அவர்களிடம் இருந்து அஞ்சலி விலகுவதும் சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

அபிநயாவிற்கு ஒரு வசனம் கூட கொடுக்காமல் இயக்குனர் சமாளித்திருப்பார்.

Budget4U said...

புத்தக கண்காட்சி - கடை விரித்தேன் .கொள்வாரில்லை ! புலம்பும் பதிவர்கள் - ஒழுங்கா வேலைக்கு போங்க சார். சினிமா விமர்சனம் என்ற பெயரில் உங்களுக்கு வாய்ப்பு தராத படத்துக்கு எல்லாம் வசனம் சரி இல்லே, திரைகதை சரி இல்லேன்னு சொல்லிட்டா மட்டும் என்ன ஆயிடும்? போய் பொழப்பை பாருங்க அப்பு!

Unknown said...

எப்படி அண்ணா எல்லா மொழி படத்தையும் பாக்கறிங்க . யு ஆர் கிரேட் .

Anonymous said...


//அப்படியே இறுகக் கட்டி ஒர் உம்மா கொடுக்கலாமா எனும் அளவிற்கு இன்னொசென்சை முகத்தில் வைத்திருக்கிறார்.//

சுந்தர் சி.க்கும் அதே எண்ணம் போல. எம்.ஜி.ஆரில் அஞ்சலி!!