எமன் - மனிதன், இந்த காம்பினேஷனில் தெலுங்கில் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லிவிடலாம். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களும் எமனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை காமெடியாக செய்து ஹிட்டடித்திருக்கிறார்கள். இவர்கள் காமெடியாகவே முயற்சித்திருக்கிறார்கள்.
யமஜா எமனின் மகள். ஒரு நாடகக்காரனை மணக்க வேண்டும் என்று நாரதரினால் ஏற்றிவிடப்பட்டு பூலோகத்தில் நாடக நடிகனான அல்லரி நரேஷை சந்திக்கிறார். ஒரு நாடக நிகழ்வில் மணக்கிறார். அதன் பின் அவர் பின்னாலேயே சுற்றியலைகிறார். அவரோ யமஜா ஒரு லூசுப் பெண் என்று வீட்டில் வேலைக்காரியாக வைத்துக் கொண்டு அலைகிற நேரத்தில், எமன் தன் மகளைத் தேடி யமஜாவின் தம்பியையும், சித்ரகுப்தனையும் பூலோகத்திற்கு அனுப்புகிறார். ய்மஜா வர மறுக்க, எமன் தன் மகளை தூக்கிக் கொண்டு போகும் போது நரேஷ் யம வாகனமான எருமையின் வாலைப் பிடித்துக் கொண்டு எமலோகம் போய் விடுகிறார். பின்பு எப்படி அவரது மனைவியான யமஜாவை எமனிடமிருந்து மீட்டு சேருகிறார் என்பதுதான் கதை.
ஃபேண்டசியான கதைதான். ஆரம்ப காட்சிகளில் பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளத்தோடு நரேஷ் அடிக்கும் கூத்து நன்றாக இருந்தாலும் எமலோகத்திற்கு போன பிறகு கடுப்பேற ஆரம்பித்து பின்பு செண்டிமெண்டாகும் போது இன்னும் கடுப்பாகி விடுகிறது. அல்லரி நரேஷுக்கு லட்டு மாதிரியான கேரக்டர். வழக்கம் போல கிண்டலும் கேலியுமாய் ஓடுகிறார். கதாநாயகி கொலு பொம்மைப் போல அழகாய் இருக்கிறார். ‘ மொகுடா.. மொகுடா’ என்று நரேஷின் பின்னலையும் போது ஸ்ரீதேவி, சிரஞ்சீவியின் பின் “ஜகதேக வீருடு, அதிலோக சுந்தரியில்” வருவது போல இருப்பதை மறுக்க முடியாது. எமனின் மனைவி “அய்யோ”வாக ரம்யா கிருஷ்ணன். மாமியார், மகளுடன், நரேஷ் போடும் ஆட்டம் சிரஞ்சீவியில் அல்லுடா மஜாகாவை ஞாபகப்படுத்துகிறது. இப்படி பல படங்களிலிருந்து உட்டாலக்கடி அடித்து எப்படியாவது காமெடி செய்தே தீர வேண்டும் கங்கணம் கட்டிக் கொண்டு வசனம் எழுதியிருக்கிறார்கள். எமனாக வரும் ஷாயாஜி ஷிண்டேவை பார்க்கும் போதே காமெடியாகத்தான் இருக்கிறார்.
எமனின் மகனும், சித்ரகுப்தனும், பூமியில் இறங்கிய இடம் ஒரு பெண் குளிக்கும் குளியல் அறை, ஒரு பெரிய ரவுடியின் மனைவி. கணவனுக்கே காட்டாத உடலை இவர்கள் பார்த்துவிட்டதாக அவள் துரத்த, பின்பு ஒவ்வொரு முறையும் எமன் மகனை அவளின் கணவன் துறத்த அங்கே அதே பெண்ணை விதவிதமான இடங்களில் பார்த்து அலைவது செம காமெடி. சித்ரகுபதனாக வரும் கிஷ்ணபகவான் அடிக்கும் டபுள் மீனீங் காமெடி பல இடங்களில் அநியாயம். இப்படி ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டினாலும் கடைசி அரை மணி நேர செண்டிமெண்ட் நம்மை ஜவ்வாய் இழுத்து அழ வைக்கிறது. ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். இசை கோட்டி ரொம்பவும் பழைய வாடை.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
தலைவரே அப்ப ஒருதடவ பார்க்கலாம் ்
Saravanapandi. Padam ivlo kevalama iruku nu sonna aparamum appo 1 time parkalam nu epadi solringa?
Post a Comment