குமுதம் ரிப்போர்டர் வந்திருக்கும் கலைஞர் - குஷ்பு விவகாரம் ஆபாசத்தின் உச்சம். குமுதம் குடும்பப் பிரச்சனையின் போது எதிர்தரப்பில் கலைஞர் நின்றார் என்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் பழி வாங்கும் நடவடிக்கையாய்த்தான் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது. எவ்வளவு கீழ்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்தரமாய் இறங்கி அடித்திருக்கிறார்கள். அதுவும் பெண் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் மிக மோசமான விஷயம். இவர்களை கொச்சைப் படுத்த பெரியாரையும், மணியம்மையையும் இழுத்திறுப்பது படு கொடுமை. இதே முறையில் எந்த ஒர் கட்சி தலைவரை பற்றி எழுதியிருந்தாலும் கண்டிக்கத்தக்க, எதிர்க்கப்பட வேண்டிய விஷயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கடந்த 15 ஆம் தேதியன்று சென்னை லயோலா கல்லூரியில் தமிழ் சினிமா வணிகம் குறித்து விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்கு உரையாற்ற அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைத்தவுடன் விரும்பி வருகிறேன் என்று சொன்னேன். திரைத்துறையில் நுழைய இருக்கும் மாணவர்களுக்கு வரும் காலங்களில் அவரவர் துறைகளில் நிபுணத்துவம் மட்டுமில்லாமல் வியாபார நுணுக்கங்கள் குறித்த அறிவு இருந்தால் வெற்றி பெற முடியும் என்பது என் எண்ணம். அதை அவர்களுக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்ற ஆர்வத்தில்தான் ஒத்துக் கொண்டேன். காலையில் மக்கள் தொடர்பாளர் கடையம் ராஜு, வாகை சூடவா தயாரிப்பாளர் முருகானந்தம் கடந்த வருடம் தோல்வியடைந்த படங்களை பற்றியும், தயாரிப்பாளர் டி.சிவா சினிமா பட்ஜெட் பற்றியும் உரையாற்றியிருந்தனர். மதியம் சாப்பாட்டுக்கு பிறகு என் உரை. நல்லா தூக்கம் வரும் நேரத்தில் வியாபாரம் குறித்து பேசி இன்னும் தூக்கத்தில் ஆழ்த்திவிடுவோனோ என்ற ஒர் பயம் இருந்தது. ஆனால் உரை மிக சுவாரஸ்யமாய் அமைந்தது என்றார்கள் மாணவர்களும், பேராசிரியர்களும். என்னைப் பற்றி பல மாணவர்களுக்கு தெரிந்திருந்ததும், நான்கைந்து மாணவர்கள் என்னுடன் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தார்கள். சந்தோஷமாய் இருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வீரப்பனின் கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான கருணை மனுவை ஜானதிபதி தள்ளுபடி செய்த காரணத்தால் அவர்களுக்கு உடனடியாய் தூக்கு போடப்படும் என்று பரபரபாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பாகவும், இன்னொரு பக்கம் வீரப்பனை வீரப்பர் என்று தலையில் தூக்கி வைத்து ஒர் மாவிரனைப் போல கொண்டாடுகிறார்கள். இதை எதிர்கும் பல பேரின் பயம் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்துள்ள சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கும் இதே வேகத்தில் நிறைவேற்றப்பட்ட்டுவிடுமோ என்பதுதான்.தண்டனை அடைந்திருக்கும் நான்கு பேரின் மனைவியும் அவரவர் கணவர்களுக்கும் வீரப்பனுக்கும் சம்பந்தமேயில்லை என்றிருக்கிறார்கள். மாத்தைய்யன் கூட தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். ஆமாம் அவங்களுக்கு வீரப்பனுக்கு சம்பந்தமில்லைன்னு வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி சொல்லியிருக்கிறார். போகிற போக்கில் பார்த்தால் தனக்கும் வீரப்பனுக்குமே சம்பந்தமில்லை என்று சொல்லுவார் போல. அரசின் ஆதரவில்லாமல் வீரப்பன் என்பவன் வளர்ந்திருக்க முடியாது என்பது உண்மையென்றாலும், வீரப்பன் செய்த விஷயங்களை தெரிந்தும் கூட ஹீரோ ஒர்ஷிப் செய்வது மோசமான கலாச்சாரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெண் ஒருவரிடம் போனில் ஆபாசமாய் பேசி டார்சர் செய்ததாய் நசீர் எனப்வரை கைது செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த பெண்ணின் வாக்குமூலத்தைப் பார்த்தால் ஏதோ ப்ளான் செய்து குற்றம் சாட்டிருப்பது போல தெரிகிறது. ஒரு நாள் மிஸ்ட்கால் வந்ததாம். அதை வைத்து நசீர் அவரிடம் அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பேச ஆர்மபித்ததாகவும், எவ்வளவோ சொல்லியும் நசீர் தொடர்ந்து தொல்லை படுத்தி வந்ததாக புகார் அளித்துள்ளார் அப்பெண். நமக்கு வேண்டாதவர் என்று முடிவான பிறகு எப்படி அவருடன் அப்பெண் பேசுவார்?. நசீர் தொடர்ந்து போன் செய்தால் எடுக்காமல் இருக்க வேண்டியதுதானே?. ஏதோ ஒரு வகையில் அவரின் ஆசையை தூண்டிவிட்டுவிட்டு, பின்னால் பிரச்சனை ஏதாச்சும் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தில் போட்டுக் கொடுத்ததாகவே தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Dont miss haridoss awesome sensible film
எங்கே போனாங்க.. தடை கேக்குறவங்க.. வனயுத்தத்தை தடை செய்ய போராட வேண்டியதுதானே..? படமாவது ஓடுமில்லை.
பெண்களை அடிக்கும் படியான காட்சிகள் வந்தால் சென்சாரில் கட்டாம். ஆணியே புடுங்கல போங்கடா..http://t.co/BN5xyNy9
ஆயிரம் தான் உருகி உருகி காதலிச்சு கிப்ட் கொடுத்தாலும் 97 பர்செண்ட் வேறொருத்தனுக்கு சீதனமா போகும்னு தெரிஞ்சே கொடுக்கும் தினம்.
ஏற்கனவே பலிக்கு ரெடியானவனை வாலண்டைன்ஸ் டேன்னு எல்லாம் சொல்லி ஏண்டா உசுப்பேத்துறீங்க?
உணர்வுகளோடு விளையாடுகிறவனை விட மதிப்பு கொடுப்பவனை காதலிப்பது சிறப்பு.
தவறை ஒத்துக் கொள்வதால் சில சமயங்களில் பிரிவு அதிகமாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நெடுந்தூர ரயில்களில் இருக்கும் பேண்ட்ரி கார்களுக்கு பதிலாய் அங்கே ஒரு ஸ்லீப்பர் கோச்சை போட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்தாய்ந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பேண்ட்ரி கார்களில் தரும் உணவின் தரம் மிக மோசமாக இருந்தாலும், துரந்தோ, சதாப்தி போன்ற ரயில்கள் இருக்கும் சுவாரஸ்யமே அரை மணிக்கொரு முறை வரும் உணவு வகைகள் தான். அடைத்த ஏசி கோச்சுகளிடையே மசால்வடையும், காபி, பிரியாணி, சமோசா என்று ஒவ்வொரு முறை நம்மை க்ராஸ் செய்யும் போதும் வரும் கலந்தடித்த வாசனை நம் நாக்கில் நீர் ஊற வைத்து, தீனி பண்டாரமாய் இல்லாதவனையும் வாங்க வைத்துவிடும். ஒரு காலத்தில் பேண்ட்ரி காரில் நேரே போய் நின்று சாப்பிட்டிருக்கிறேன். பாண்ட்ரி கார் என்பது என்னைப் போன்ற சாப்பாட்டுப் பிரியர்களுக்கு தேவையான ஒன்றுதான் என்பது என் எண்ணம். வேணும்னா இன்னொரு கோச்சை சேர்த்து விட்டுக்கங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்றிரவு சம்பந்தமேயில்லாத இடத்தில் போலீஸ் செக் செய்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் மூக்குக்கு அடியில். அதாவது என் வீட்டின் அருகில் என்று சொல்ல வந்தேன். நிறுத்திய சப்- இன்ஸ்பெக்டர் குனிந்து என் முகத்தைப் பார்த்து வழக்கமாய் கேட்கும் கேள்வியான “எங்கேர்ந்து வர்றீங்க?” என்ற கேள்வியை கேட்காமல் “எங்க வேலை செய்யுறீங்க?” என்றார். அவங்களும் எத்தனை நாள் தான் வழக்கமான் கேட்பாங்க? “இந்த ஏரியா கேபிள் ஆப்பரேட்டர்”. என்றதும் “பேரு?” எப்போதும் சங்கர் என்று சொல்வபவன் பழக்க தோஷத்தில் “கேபிள் சங்கர்” என்று சொன்னேன். ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, “ ஓ நீங்க தானா அது.. உங்களைத்தான் பாக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். சரி நீங்க போங்க” என்று அனுப்பினார். எதுக்குன்னு கேட்டிருக்கலாமோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கமலபாலன் நடத்தும் திரைப்பட இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் 16ஆம் தேதி மாலை பேசப் போயிருந்தேன். ஆரோகணம் பட இயக்குனர் சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார். நிகழ்ச்சியில் கேள்வி பதில் செஷன் வைத்திருந்தார்கள். அப்போது ஒர் உதவி இயக்குனர். உங்கள் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வெளியிட்டது போலவே எங்கள் படத்தை தயாரிக்க, வெளியிட உதவி செய்வீர்களா என்று?.எனக்கு இந்த கேள்வியே அபத்தமாய் பட்டது. ஒருவர் தான் இப்படி செய்தேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் என்று சொன்னால் அவருடன் தனியே கலந்து பேசி எப்படி அவரின் அனுபவங்களை நமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இப்படி பப்ளிக்கில் கேள்வி கேட்பது சரியானதாக படவில்லை. ஆனால் லஷ்மி ராமகிருஷ்ணன் கொடுத்த பதில் அருமையானதான் அமைந்தது. இன்றைக்கு ஒர் படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுக்க முடிந்ததற்கு காரணம். தான் பல வருடங்களாய் கிடைத்த வாய்ப்புகளை, பட்ஜெட்டை, திறமைகளை வைத்துக் கொண்டு நடத்திய ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் அனுபவம் தான் என்றும். நான் படம் இயக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே நடிக்க ஆரம்பித்து, தனக்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இன்று இந்த சின்ன பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறேன் என்றார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி பேசி கொண்டிருந்தோம். நிஜமாவே பொம்பளைங்களுக்கு எதிரி ஆண்கள் இல்லை பெண்கள்தான் சார். நிஜமாவே பெண் விடுதலைப் பற்றி வளர்ந்த சமுதாயத்தில் உள்ள பெண்களைப் பற்றி பேசுவதை விட அடிப்படை வசதி கூட இல்லாத பொருளாதாரத்தில், படிப்பில் குறைவாக இருக்கும் பெண்களிடத்தில்தான் அவர்களின் உரிமைகளை பற்றிப் புரிய வைக்க வேண்டும் என்றார். அந்நிகழ்ச்சியில் ஒரு உதவி இயக்குனர் ஒருவர் மேடையேறி வந்து யாரிடமும் ஸ்பான்ஸரோ, அலல்து பண உதவியோ பெறாமல் மிகுந்த பணக் கஷ்டங்களுக்கிடையே இந்நிகழ்வை நடத்தி வரும் கமலபாலாவின் மனதை நோக அடிக்கும் படியாய் ஒர் கேள்வியை கேட்டது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. “ உங்க விழா பேனர்ல ஸ்டிக்கர் போட்டு ஒட்டி அதும் மேல பத்தாவது விழானு ஒட்டியிருக்கீங்களே? ஏன்” என்ற கேள்வியை கேட்டார். அந்த உதவி இயக்குனர்.ம்ஹும்.. என்னத்தை சாதிச்சாரு அவரு.. இந்த கேள்வியாலே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்னதான் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்தியை போட்டர்கள் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு தடாலடியாய் புதிய தலைமுறை சேனலை தன் எஸ்.சி.வியிலிருந்து தூக்கினாலும் தன் முதலிடத்தை சன் நியூஸ் சேனலால் தக்க வைகக் முடியவில்லை. கடந்த நாலு வாரமாய் புதிய தலைமுறை தான் நம்பர் ஒன். ஸ்லாட்டில் நிற்கிறது. எத்தனை தூரம் காட்டப்படாமல் இருக்கிறதோ அத்தனை தூரம் தேடிப் போய் பார்ப்பார்கள் பார்வையாளர்கள். இதை என்றைக்கு புரிந்து கொள்வார்களோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
சஞ்சய்க்கும் சாந்திக்கும் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது. கொஞ்ச வருடங்களுக்கு அப்புறம் சாந்தியின் வயிறு உப்ப ஆரம்பிச்சு விட்டது.மருத்துவரிடம் இருவரும் சென்றார்கள், டாக்டர் செக்கப் செய்து விட்டு “ஒன்றுமில்ல வயிற்றில் இருப்பது வெறும் கேஸ் (gas) தான்” என்றார்.
சாந்தி கடுப்பாக சஞ்சயை பார்த்து கேட்டாள்: “உனக்கு இருக்கிறது லுல்லாவா? காத்தடிக்கிற பம்பா?”.
கேபிள் சங்கர்

Post a Comment
8 comments:
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்றார் பெரியார். அதை அன்றே செய்து விரட்டீயிருந்தால் இன்று குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற ஆரிய நாய்கள் இப்படி செய்திருக்க முடியுமா. திராவிடத்தின் பெயரில் கட்சியை வைத்து கொண்டு அதை பாப்பாத்தியின் காலடியில் போட்ட மானங்கெட்ட தமிழர்கள் இருக்கும் வரை ,எப்படி வேண்டுமென்றாலும் கருத்துபடம் போடுவார்கள்
அடல்ட் கார்னர் -Cool
திரைத்துறையில் என்னுடன் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தார்கள். சந்தோஷமாய் இருந்தது.
எனக்கும் தங்களுடன் திரைப்படத்திற்காக பணியாற்ற விருப்பம் இருக்கிறது
When SUN Direct removed PT from free channels , i have asked them the reason. They said it is going to be pay channel and i can add them any time . Now its not in their list at all , Can a DTH provider block a pay channel even when its customers are ready to pay ?
எப்போதும் சங்கர் என்று சொல்வபவன் பழக்க தோஷத்தில் “கேபிள் சங்கர்” என்று சொன்னேன்.
இதில் எதை எடுத்து கொள்வது(எப்போதும்,பழக்கமாக)
வழக்கம் போல சுறுசுறுப்பாக இருந்தது நிகழ்வு.
சிறப்பு
cable super
/*வீரப்பன் செய்த விஷயங்களை தெரிந்தும் கூட ஹீரோ ஒர்ஷிப் செய்வது மோசமான கலாச்சாரம்.*/
கொலைகாரன் நரேந்தர மோடி பண்ண படுகொலை தெரிந்தும் கூட மோடிய ஹீரோ ஒர்ஷிப் செயரான்களே அந்தமாதிரி மோசமான கலாச்சாரமா ?.
Post a Comment