நாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .
டேவிட். ஒத்த பெயருடையவர்களின் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் அவர்களது வாழ்க்கை. ஓருவர் மீன்கார விக்ரம். கோவாவில் மீனவனாக, மொடாக்குடியனாய் வளைய வருபவர். கல்யாணம் கட்டிய மனைவி வேறொருவனை காதலித்ததால் ஓடிப் போய்விட, பெண்கள் என்றாலே எரிச்சல் கொண்டவனாய் குடிகாரனாய் வளைய வருபவன். அவருக்கு பிடித்த ஒரே பெண் மசாஜ் செண்டர் நடத்தும் தபுதான். தன் நெருங்கிய நண்பன் கல்யாணம் செய்ய இருக்கும் டெஃப் அண்ட் டம்ப் அழகியை தானும் விரும்ப ஆரம்பிக்க, அவளின் இன்னொசென்ஸை பயன்படுத்தி அடைய ஆசைப்படுகிறார். கிடைத்தாளா இல்லையா? என்றொரு கதையும். இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பாதரான நாசர், அவரின் இசையார்வம் கொண்ட மகன் ஜீவா. தங்கைகள். அரசியல் சூழ்ச்சியால் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாய் குற்றம்சாட்டப்பட்டு, இந்துத்துவா அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாய் அவரின் வாழ்க்கை மாறுகிறது. தந்தையை அவமானப் படுத்தியவரை பழிவாங்க முயல்கிறான். அது நடந்ததா இல்லையா? என்றொரு ட்ராக். இந்த இரு ட்ராக்குக்கும் எந்தவொரு சம்மதமும் இல்லையென்றாலும், க்ளைமாக்ஸில் ஒர் காட்சியில் சேர்க்கிறார்கள். எப்படி என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளவும்.
விக்ரமின் பகுதியை விட ஜீவாவின் பகுதி க்ரிப்பிங்காக இருக்கிறது. இலக்குக்காக போராடும் இளைஞன். அவன் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையால் மாறி போகும் பாதை, அரசியல், என்று சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் விக்ரம் கதையில் மிகவும் லெதார்ஜிக்காகத்தான் ஆரம்பிக்கிறது. கோவாவின் பின்னணி வேறு நம் தமிழ் பின்னணிக்கு ஒத்து வராமல் போக, எப்பப்பார் குடித்து கொண்டிருக்கும் விக்ரம், கவுன் போட்ட அம்மா, மசாஜ் பார்லர் வைத்து கொண்டிருக்கும் தபுவின் நட்பு, சிங்க் இலலாத வசனங்கள் என்று எல்லாமே அந்நியமாய் இருக்க, கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை. ஜீவாவின் நடிப்பு படு இயல்பு. ஜீவாவின் அப்பாவாக நாசர். அவமானப்பட்ட பாதிரியாய் அதை நினைத்து மருகி, ஷேவ் செய்யும் போது ப்ளேடால் தன்னைத்தானே கிழித்துக் கொள்ளும் காட்சியில் தான் ஒரு சீசண்டு நடிகர் என்பதை நிருபிக்கிறார். நண்பராய் வரும் சதீஷ் கவுசிக்கு பெரியதாய் ஏதுமில்லை.
ரத்னவேலு, பி.எஸ்.விநோத் ஆகியோரின் ஒளிப்பதிவு க்ளாஸ். கோவாவின் அழகையும், இன்னொரு பக்கம் மும்பையின் க்ளம்ஸினெஸையும் மிக அழகாய் கொண்டு வந்திருக்கிறார்கள். கேமரா கோணங்களில் பல இடங்களில் வாவ் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ரிமோவின் இசையில் கோவன் சாங்.. க்யூட். ஒரு காட்சியில் நடிக்கவும் செய்திருக்கிறார். நம்மூர் அனிருத்திலிருந்து ஆறு பேர் இசையமைத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியவர் பிஜோ நம்பியார். சைத்தானைப் பார்த்துவிட்டு மீண்டும் ஒர் விறுவிறு படத்தை தருவார் என்று நம்பினால் ஒர் வித்யாச முயற்சியை செய்திருக்கிறார். ஒர் இயக்குனராய், தயாரிப்பாளராய் இவர் செய்த முதல் தவறு இப்படத்தை தமிழில் டப் செய்தது. இதனால் ஜீவா, சியானுக்கு ஏற்கனவே சரிந்திருக்கும் மார்கெட் மீண்டும் அதள பாதாளத்துக்கு போய்விடும் அபாயம் உள்ளது. விக்ரம் எபிசோடில் கதைக்குள் வர மிகுந்த நேரம் ஆவதும் ஒர் மைனஸ். அதுவரை விக்ரம் குடிக்கிறார்.. குடிக்கிறா.. குடிக்கிற.. குடிக்கி.. கொண்டேயிருக்கிறார். இந்த எபிசோடில் வரும் தபு, விக்ரமிடையே இருக்கும் நட்பு. வசனமே பேசாமல் வரும் தபுவின் கணவர். ரீமோவின் பாடல்களுக்கிடையே சாராயக் கடையில் நடக்கும் சண்டைக்காட்சி, எல்லாம் அழகு. முக்கியமா சாண்டாக்ளாஸ் முகமூடி மாட்டிக் கொண்டு புதிதாய் திருமணம் ஆகும் பெண்ணின் முகத்தில் குத்து விடும் ஆள் தான் என்று சொல்லுமிடமும், அதை கன்வே செய்ய 2டியில் வரும் கார்டூன் காட்சியும் புத்திசாலித்தனம். அதே போல விக்ரமின் அப்பாவாக வரும் கல்லு மாமா சூரப் சுக்லா ஆவியாய் தன் மகனுடன் பேசும் காட்சிகள். மகனுடன் தனியாய் பேச வாய்ப்பில்லாத போது வேறொரு உடலில் புகுந்து மகனுடன் பேசும் காட்சிகள், தன் காதலுக்காக பெண்ணின் வீட்டிற்கு போகும் ஆட்கள் எல்லாம் தலையில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் விழும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம். என்ன.. எல்லாமே மிகவும் மெதுவாக நடக்கிறது.
ஜீவா எபிசோடில் அப்பா பிள்ளைக்கிடையே நடக்கும் வசனங்கள் க்ளாஸ். அண்ணனும் தங்கையும் மாடிப்படியில் உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டே தங்களின் எதிர்காலம் பற்றி பேசுமிடம் நம்மாட்களுக்கு கலாச்சார அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் அக்காட்சியில் அவர்களிடையே இருக்கும் பாசம். நச். அதே போல ஜீவாவின் மீது அன்பு காட்டும் விதவைப் பெண் கேரக்டர் சின்னதாய் வந்தாலும், ஜீவாவை ஆறுதல் செய்ய அணைத்துக் கொண்டிருக்கும் போது அப்பா வந்துவிட, அவரின் பார்வையை புரிந்து விலகலாமா வேண்டாமா? என்ற லேசான குழப்பத்துடன் ஒர் முடிவோடு, அவனை மேலும் அணைத்து ஆறுதுல கூறும் இடம் க்ளாஸோ க்ளாஸ். இப்படி பல இடங்களில் ஒர் தேர்ந்த இயக்குனர், திரைகக்தையாசிரியர் தெரிந்தாலும் சம்பந்தமேயில்லாத இரண்டு குறும்படங்களை ஒன்று சேர்த்தது போன்ற திரைக்கதை அமைப்பு நம்ம ஊரில் நோ.. சான்ஸ். இந்தியில் இன்னொரு கதை இருப்பதாய் சொன்னார்கள் அது ஒரு தாதாவின் பார்ட்டாம். முழுக்க, முழுக்க ப்ளாக் அண்ட் வொயிட்டில் இருக்கிறதாம். எக்ஸ்பிரிமெண்டல் படம் பார்க்க ஆர்வமிருப்பவர்கள், ஜீவா, விக்ரம் என்ற எந்த வித பிம்பத்தையும் மனதில் வைக்காமல் பார்த்தார்கள் என்றால் ஒர் வித்யாசமான படமாய் தெரிய வாய்ப்பிருக்கிறது. இந்தியில் பார்த்தால் இன்னும் பார்க்க பெட்டராய் தெரிய வாய்ப்புள்ளது.
கேபிள் சங்கர்

Post a Comment
7 comments:
:)
கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. /// appo ravanan hindi?
anna athu enna "experimental film". please explain. Hindu paperlayaum ithe word thaan.
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. /// appo ravanan hindi?///////
அதுல விக்ரம் ஹீரோ இல்லையே, இல்லையே இல்லையே......?
muthu.. எக்ஸ்பிரிமெண்ட் பிலிம்னா.. நம்மள வச்சி ஆராய்ச்சி பண்றது. :)
Experimental Film - Neither you jump into the sea to swim nor you show your fear and act as if you are about to jump - by just keeping a foot in the water and the other in the shore! - R. J.
தமிழ் வேர்சனில் பார்த்தேன் படம் பிடித்திருந்தது.
சூப்பர் சசித்துப் பார்க்கலாம்
Post a Comment