போலீஸ் ஸ்டோரி
65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர்
பெரும்பாலும் நடு இரவில் வீடு திரும்புவது என் வழக்கம். பல சமயங்களில் நண்பர்களின் சந்திப்பே ஒன்பது மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கும். அதோடு ராத்திரியில் ஊர் சுற்றும் போது பல சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். அம்மாதிரியான சுவாரஸ்யங்களில் போலீஸ் செக்கிங்கும் ஒன்று. சமயங்களில் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு வரும் போது பெரும்பாலான நேரங்களில் பல நண்பர்களுக்கு எந்தெந்த இடங்களில் எல்லாம் போலீஸ் செக்கிங் இருக்குமென்று சரியாக லொக்கேட் செய்து கொடுப்பேன். போலீஸ் செக்கிங்கில் மாட்டுவது என்பது சாதாரண ஒன்று தான் என்றாலும் சரக்கடித்துவிட்டோ, அல்லது வண்டி பேப்பர் இல்லாமலோ நடு இரவில் நம்மை நிற்க வைத்து சத்தாய்ப்பது கடுப்படிக்கும். பன்னிரண்டு மணி வரை பாரை திறந்து வைக்க அனுமதித்து விட்டு, அந்த பாரின் மூக்குக்கடியில் செக்கிங் செய்வது என்பது அராஜகம். இவங்க கட்டிங் வாங்கிட்டு கடையும் நடத்த வுட்டுட்டு நம்ம கிட்டேயும் புடுங்குறாங்க என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இரவு பணியில் இருக்கும் அவர்களின் நிலையும் பெரும் பரிதாபம். டார்கெட் என்று இருக்கிறது.

இவர்களிடம் மாட்டுகிறவர்களுக்கென்றே ஒரு சில முகம் இருக்கிறது. கருப்பாய், இருக்கிறவர்கள். அமுல் பேபி போன்ற முகம் உடையவர்கள், போலீஸ் வண்டியோ, ஆட்களோ இருப்பதைப் பார்த்ததும், பேட்டரி அவுட்டான டாய் வண்டி போல கியர் ஸ்லிப்பாகி வண்டி ஆஃப் நிற்பவர்கள். மிகவும் பாலகனான முகம். பயமே இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு பேஸ்மெண்ட் வீக்கான முகங்கள். சில பேர் வண்டியை கையைக் காட்டி நிறுத்தியவுடன் தானாகவே வண்டியை ஓரம் ஒதுக்கி ஆஃப் செய்து விட்டு, கையைக் கட்டிக் கொண்டு நிற்பவர்கள் என சில டெம்ப்ளேட் முகங்கள் இருக்கிறது என்றிருக்கிறார் என் போலீஸ் நண்பர்.
ஒரு நாள் இரவு நானும் என் நண்பரும் ஒர் பிரபல இயக்குனரோடு டிஸ்கஷன் முடித்துவிட்டு கிளம்பும் போது ஒரு மணி ஆகிவிட்டது. கொஞ்சம் தீர்த்தவாரி வேறு. மேற்கு மாம்பலத்தில் ஒர் ஜங்ஷன் இருக்கிறது. அங்கே தான் வழக்கமாய் நம் நண்பர்கள் நிற்பார்கள். உடன் வந்த உதவி இயக்குனர் வீடு அங்கே இருந்ததால் அவரை இறக்கிவிட அந்த வழியாய் போனேன். நண்பர் வேணும்னா இங்கனயே இறக்கி விட்ருங்க.. என்றார். பரவாயில்லை வாங்கன்னு சொல்லி வண்டியை விட்டேன். அன்றைகென்று பார்த்து வழக்கமான இடம் காலியாய் இருக்க, நண்பர் ரிலாக்ஸ் ஆனார். ஆனால் அது நீடிக்கவில்லை. அடுத்த தெரு முக்கில் மடக்கினார்கள். வழக்கத்தை விட நிறைய பேர். ரெண்டு மூன்று பெண் போலீஸார் வேறு. கான்ஸ்டபிள் காட்டிய குச்சிக்கு முன்னால் சரியாய் நிறுத்தினேன். ஏற்கனவே ரெண்டு மூன்று வண்டிகளை மடக்கி விசாரித்துக் கொண்டிருக்க, என்னிடம் வந்தது ஒர் பெண் சப் - இன்ஸ்பெக்டர்
“எங்கேர்ந்து வர்றீங்க?” என்றபடி கிட்டே வர,
“டிரிங் பண்ணியிருக்கோம் மேடம். சாலிகிராமத்திலேர்ந்து வர்றோம்”
“ என்ன வேலை செய்யுறீங்க?”
“ ஆஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்”
மேடத்தின் முகத்தில் லேசான ரிலாக்ஸேஷன். “யாரு கிட்ட?” என்றதும் பெயரைச் சொன்னேன்.
“ஏங்க அவரு பேரையெல்லாம் சொல்றீங்க?” என்று காதில் நண்பர் கிசுகிசுத்தார்.
“இந்த மாதிரி தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாதுன்னு தெரியாதா?”
‘ தப்புத்தான் மேடம். ஆனா சொல்ல முடியலை.. டைரக்டர் கூட உக்காந்து தண்ணியடிக்கலைன்னா.. வேலைக்கு வேட்டாயிரும். அடிச்சா.. நீங்க புடிக்கிறீங்க. என்ன செய்யுறது எங்க தலையெழுத்து. பாருங்க.. எங்க வீடு தோ.. ரெண்டாவது லெப்டு. இவ்வளோ தூரம் வந்துட்டு வீட்டு வாசல்ல மாட்டுறதை என்னான்னு சொல்றது?”
“ஆவூன்னா போலீஸை திட்டி, படமெடுக்குறீங்களே.. அதுலேயும் உங்க டைரக்டரோட கடைசி படத்தில போலீஸ்காரங்களையெல்லாம் முட்டாள் போல காட்டியிருக்கீங்க.. "
"நாங்களும் எவ்வளோ சொல்வோம் மேடம் கேட்கமாட்டாரு..” என்றார் என் நண்பர். எனக்கு சிரிப்பு வந்தது.
“அப்ப ஸ்டேஷனுக்கு வாங்க உங்க டைரக்டர்கிட்ட நாக்கை புடுங்கிக்கிறா மாதிரி கேக்குறேன்”
“மேடம். எப்படியும் எங்களை வேலை விட்டு தூக்குறதுலேயே இருக்கீங்களே”
இப்போது நாங்கள் மூவரும் கிட்டத்தட்ட நண்பர்கள் போல இயல்பாய் நின்றபடி பேச ஆரம்பித்திருந்தோம். “நல்ல வேளை இன்னைக்கு நாங்க இங்க ரெகுலர் செக்கிங்குல இல்லை.. இந்த மாதிரி தண்ணியடிச்சு வந்தீங்கன்னா ரெண்டாயிரம் ஃபைன் தெரியுமில்லை... அதோட கிட்ட வந்தவுடனே ஒத்துக்கிட்டீங்களே அதுலேயே தெரியுது உங்களைப் பத்தி. அதுனால விடறேன். கிளம்புங்க..” என்று வழியனுப்ப, “மச்சான் கிளம்பு. கிளம்பு என்று நண்பன் முதுகை தட்டினான். வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்ப யத்தனிக்கையில் “ஆமா வழக்கமா அந்த முனையிலதானே இருப்பீங்க.. இங்க ஏன் செக் போஸ்ட் போட்டீங்க?” என்றேன்.
“என்னா தம்பி ஊர்ல நடக்குற விஷயம் ஏதும் தெரியாம இருக்கியே.. ரெண்டு நாளைக்கு முன்ன இந்த் ரோட்டுல இருக்கிற ப்ளாட்டுல ஒரு பொண்ணை கொன்னுட்டாங்க இல்லை அதான்.”
“எல்லாம் சரிங்க.. கொலைகாரனை வீட்டு பக்கத்திலேயே தேடுனா எப்படி கிடைப்பான்?” என்றேன்.
“உன்னை போக விட்டது தப்பு..தூக்கி உள்ள போடணும் “ என்றார் சிரித்தபடி.
கேபிள் சங்கர்
Comments
உங்களையே தம்பின்னு சொல்லுதுன்னா...அப்ப அந்த லேடி போலீஸ் பாட்டியா?
இவற்றில் நீங்கள் எந்த முகம்?! :)
//கான்ஸ்டபிள் காட்டிய குச்சிக்கு முன்னால் சரியாய் நிறுத்தினேன்//
ஒருவேளை கீழ்க்கண்ட டைப்போ?! ;)
//சில பேர் வண்டியை கையைக் காட்டி நிறுத்தியவுடன் தானாகவே வண்டியை ஓரம் ஒதுக்கி ஆஃப் செய்து விட்டு, கையைக் கட்டிக் கொண்டு நிற்பவர்கள்//
:) :) :)