அமீரின் ஆதி - பகவன்
தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்
மெளனம் பேசியதேவில் அட என்று ஆச்சர்யப்படுத்தியவர், அமீரின் ராம் என்று தைரியமாய் பெயர் போட்டுக் கொண்டு வித்யாசமான படத்தை அளித்தவர், தமிழ் திரையுலகமே தலைமேல் வைத்து கொண்டாடிய பருத்தி வீரனுக்கு பிறகு சுமார் ஆறு வருட இடைவெளியில் வெளிவந்திருக்கும் படம் அமீரின் ஆதி - பகவன். நல்ல வேளை பருத்திவீரனை மறந்த நாட்களுக்கு பிறகு வெளி வந்திருக்கிறது.
வழக்கமான் ஆள் மாறாட்ட, பில்லா காலத்துக் கதை தான். அதை ஸ்டைலிஷாக சொல்ல முயற்சித்து தோற்றிருக்கிறார் . ஓப்பனிங் சீனில் ஆதி ஜெயம் ரவி சிபிஐ ஆபீசராய் வந்து அந்திர அரசியல்வாதியின் வீட்டில் ரைய்டு நடத்தி பணத்தை கொள்ளையடித்துவிட்டு போவதில் ஆரம்பிக்கிற சுறுசுறுப்பு.. அதற்கு பிறகு வருவேனா என்கிறது. காரணம் சொத சொத சொதப்பலான திரைக்கதை. அம்மா, தங்கச்சி, என்று செண்டிமெண்ட் வேறு. அதுவும் பழைய தீவார், தீ காலத்து சீன்கள். நடுநடுவே உயர்ரக காரில் பாங்காக் வீதிகளில் உலா. அதி பெரிய டான் என்று காட்டுவதற்காக, முதல் கொள்ளை முடிந்தவுடனேயே அவருக்கும் அவர் பார்ட்னருக்கும் சண்டை வருகிறது.பர்சண்டேஜ் கணக்கு பேசி பெரிய தொகை வென்றெடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இது போன்ற காட்சிகள் நிறைய பார்த்தாகிவிட்டபடியாலும், தல அஜீத் கோட் போட்டு நடந்த நடையை ஏற்கனவே பார்த்துவிட்டதாலும் “சரி அப்புறம்” என தோன்ற ஆரம்பித்தது. இடைவேளையில் ட்விஸ்ட் என்று ஒன்று வைத்தார்களே அங்கே தான் நம்மை தூக்கி வாரிப் போட்டது. முடியலை. ஆதி ரவிக்கு பாங்காங்குலனா.. இந்தியாவில பாம்பேல அரவாணி பகவானு இன்னொரு ரவி.
ரவிக்கு படம் ஆரம்பிச்சி கொஞ்ச நாள்லேயே தெரிஞ்சிருக்கும் போல.. சரி இது வேலைக்காகாதுன்னு எதுக்கு ஸ்பெஷலா முயற்சி செய்யணும்னு பாங்காங் டான், மும்பை அரவாணி டான் ரெண்டுத்துக்கும் பாங்காங்குக்கு மீசையும், மும்பைக்கு லிப்ஸ்டிக்கும் போட்டு நடிச்சிருக்காரு. அட்லீஸ்ட் வாய்ஸ் மாடுலேஷனிலாவது கான்சண்ட்ரேஸ் செய்திருக்கலாம். ம்ஹும். இந்தி படங்களில் வரும் பெமினைன் பாத்திரங்களை நடிக்கும் நடிகர்களின் வீடியோக்களைப் பார்த்திருந்தால் தெரியும் அவர்களது பாடி லேங்குவேஜ். இதில் உச்சகட்ட குழப்பமாய் அரவாணி பகவான் ரவிக்கு சரக்கு ஊற்றும் சப்பை பிகர்கள் மேல் காஜெடுத்து, மேட்டர் செய்துவிட்டு, உடனிருக்கும் நீதுவிடம் சாரி என்கிறார். அரவாணி ஆனால் பெண்களுடன் மேட்டர் செய்பவன் என்ற புதிய அவதாரத்தை இயக்குனர் காட்டியிருப்பது தமிழ் திரையுலகத்திற்கு புதுசு. க்ளைமாக்சில் சண்டை முடிந்து பாங்காங் டான் ஆதி சோர்வாய் நடந்து வரும் காட்சியை பாருங்கள். மும்பைக்கு சற்றும் குறையாமல் அப்படியே ”வீரமாய்” நடப்பார்..
கதாநாயகி நீது சந்திரா. எப்படியும் நாலைஞ்சு வருசம் படமெடுக்க கால்ஷீட் ப்ரச்சனை இல்லாத ஹீரோயின் வேணும்ங்கிறதுனால சுமாரா இருந்தாலும் பரவாயில்லைன்னு போட்டிருக்காங்க போலருக்கு. முகத்தில் அநியாய முதிர்ச்சி. இவருக்கா பாங்காங் டான் ரவி வீழ்ந்தார்னு கேள்வி எழுந்திட்டேயிருக்கு.
ஆர்.பி.குருதேவ்/ தேவராஜின் ஒளிப்பதிவில் பாங்காங் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் யார் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்தார்களோ.. அய்யா சாமி.. ஒரே ஆட்டம். யார் யாரை அடிக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் காட்டினால் தான் ஆக்ஷன் படம் என்று யாரோ தப்பாய் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் போல எடிட்டர் எஸ்.பி. அஹமதுக்கு முடியலை. கண்ணு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இசை யுவன் சங்கர் ராஜாவாம். ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன பின்னணியிசை தொகுப்புகளில் மட்டும் தெரிகிறார்.
கதை, திரைக்கதை, வசனமெழுதி, இயக்கியவர் அமீர். நடிகராய் அறிமுகமான படத்தில் டோட்ஸியை சுட்டவர். இயக்க ப்ரெஞ்சு படத்தை சுட்டிருக்கிறார். பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. அதில் ஸ்கூல் வேன் ட்ரைவரான ஒர் இளைஞனை ஒருத்தி காதலித்து அவனை தன் ஊருக்கு அழைத்து வருவாள். அங்கே வந்தவுடன் தான் தெரியும் தன்னைப் போலவே உருவம் உள்ள டானுக்கு பதிலாய் ஆள் மாறாட்டம் செய்து கொலை செய்ய முயற்சிக்கிறார்கல் என்று அப்பாவி ஆள் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. யாருக்காவது படத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்க.. பாஸு. சுட்ட கதையாய் இருக்கக்கூடாது என்பதற்காக முதல் ஆளையும் டானாக்கிவிட்டால் டானுக்கும் டானுக்கும் டண்டடான் என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி ஹீரோ டேட் வாங்கியாகிவிட்டது. ஆனா அது தான் படத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தை சிதைத்து விட்டது. அப்பாவியான ஒருவன் இம்மாதிரியான ப்ரச்சனையில் மாட்டினால் அய்யோ அவன் எப்படி தப்பிக்கப் போறான் என்ற பதைபதைப்பு லேசாய் வரும். ரெண்டு பேரும் டண்டான் என்பதால் என்ன கருமத்தையாவது பண்ணித் தொலைங்கப்பா.. என்று புலம்பத்தான் வைக்கிறார்கள். அப்படி எடுத்தால் படத்தை அப்படியே சுட்டுட்டாங்கன்னு சொல்வாங்க..
திரைகக்தை என்ற வஸ்து கையில் இல்லாததால் நிறைய கேள்விகளுக்கு வாய்ஸ் ஓவர்லாப்பில் டயலாக்காய் சொல்கிறார்கள். படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்று சொல்வார்களானால் ஏன் இல்லை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் சிறந்த நகைச்சுவைகள் இருக்கிறது புலப்படும். உதாரண்மாய் ஆரம்பக் காட்சியில் பணக்கார ஆதி அவரது அம்மா சுதா சந்திரனை பார்க்கப் போவார். அப்போது ஒர் வசனம் வரும். எல்லாத்தையும் இழந்துட்டு சம்பாரிக்க தானே பாங்காங் வந்தோம்னு. அய்யா பஞ்சம் பொழைக்க பக்கத்து ஊருக்கு போறது ஓகே.. வேற நாட்டுக்கு எப்படி வர முடியும்?. அதுவும் அம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிட்டு பாங்காங்குக்கு?. இதுல நடுவுல ஒரு வசனத்துல உங்கப்பா கெட்ட வழியில போனாருன்னுதான் அவரை விட்டு பிரிஞ்சேன்னு சொல்றாங்க. இப்படி அம்மா பாசத்துக்கு ஏங்குற அதி மேல படம் பார்க்குற ஆடியன்ஸுக்கு பரிதாபம் வரும் நினைச்சிருந்தார்னா.. பாவம் அமீர்.
அப்புறம் நாலே சீன்ல ஆதி டான் ஆயிடராரு. ஆந்திராவுல அவர் பொய்யா சிபிஐ ரைடு நடத்திட்டு தப்பிச்சு பாங்காங் வந்திடராராம். ஆந்திராவிலேர்ந்து பார்டர் கிராஸ் பண்ணிட்டா போலீஸ் பிடிக்க முடியாதா என்ன?. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ஓட்டைகள் என்று சொல்வதை விட பொந்துகள் என்று சொல்லலாம். ஊரே தேடிக் கொண்டிருக்கும் இரண்டு டான்கள் சர்வ சாதாரணமாய் கட் செய்தால் மும்பையிலிருந்து கோவாவுக்கு எல்லாம் போகிறார்கள். அதுவும் பாங்காங் டான் ஆதி போலீஸ் ஜீப்பில். அடுத்த காட்சியில் இன்ஸ்பெக்டர் தப்பிச்சிட்டான்னு கையறு நிலையில் புலம்புறாரு.. அரவாணியாய் வரும் பகவான் டான் கேரக்டரை டெரராய் காட்டுவதாய் நினைத்து பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தவனை சுட்டு வேறு கொல்கிறார். கோடிக்கணக்கான பணத்தை சரக்கு ஊற்றி எரிக்கிறார். சப்பை பிகரையெல்லாம் உசார் செய்கிறார். கொலை செய்யப் போகும் போது கொலை செய்யப்படுகிறவன் தான் எதற்காக சாகிறோம் என்று தெரியாமல் சாகக்கூடாது எனப்தற்காக அவன் தூங்கி எழும் வரை காத்திருந்து சொல்லிவிட்டு கொல்வது எல்லாம் செம்ம காமெடி.
இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தற்கான காரணம் யாரையோ திருப்தி படுத்துவதற்காக என்று அமீர் அறிக்கை விட்டிருந்தார். ரத்தம் பீறிட்டு முகத்திலடிக்கிறது. அதீத வயலன்ஸ் காட்சிகள் எல்லாம் இருக்க, சாதாரணமாகவே ஏ கொடுப்பார்கள். இதில் தயாரிப்பாளர் அன்பழகன் வேறு கொடுக்காமல் என்ன செய்வார்கள். கதை தேவையில்லாமல் பாங்காங், மும்பை, கோவான்னு ஓடுது. என்ன கிரகத்துக்குன்னு தெரியலை. நடுவுல பாங்காங் டான் ஆதியின் தங்கை ஒரு மட்டமான ஆளை காதலிக்க, அவளை விடுவிக்க தங்கையின் முன்னாலேயே செக் கொடுக்க, அவன் அதையும் அசால்டாய் தூக்கிப் போட்டுவிட்டு தங்கள் காதல்தான் பெருசு என்று பேசிக் கொண்டிருக்கும் போது நெற்றிப் பொட்டில் சுடும் காட்சி அடி தூள் என்றிருந்தாலும், அடுத்த காட்சியில் ஆதியின் அம்மா உன் தங்கச்சியா ஒரு வாழ்க்கையை தேடிக்க முயற்சி செய்தா அதையும் நீ தடுக்குறே என்று ஊரை விட்டு போக முயற்சிக்கு காட்சி அதுவரை தப்பான தொழில் செய்வதால் மகனை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்த அம்மா தன் மகள் ஒர் பிம்ப்பை காதலிப்பதை எப்படி ஒத்துக் கொள்கிறார்? இப்படி ஏகப்பட்ட முரண். அரவாணியாய் இருப்பவனை, கண்ணுக்கு முன்னாலேயே துரோகம் செய்பவனை எதற்காக லவ் செய்கிறாய்? என்று நீதுவிடம் கேட்குமிடத்தில் மத்தவங்க எல்லாம் என்னை படுக்க வர்றியான்னுதான் கூப்பிட்டானுங்க.. இவன் மட்டும்தான் வீட்டுக்கு வர்றியான்னு கூப்பிட்டானு சொல்வாங்க.. இதே டயலாக் தான் மணிரத்னம் படத்தில் ஜெயமோகம் அர்ஜுனுக்கு ஹெல்ப் செய்ய வரும் லஷ்மி மஞ்சு சொல்வார். Mafioso Action Love Story ன்னு போட்டிருந்தாங்க? இந்த படத்துல காட்டுற அளவிற்கான அமெச்சூர் மாஃபியா.. வேற எந்த படத்திலேயும் காடினதில்லை. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாலத்துக்கு அடியில, ரயில்வே ஸ்டேஷன், ட்ராக்குல பொட்டி மாத்தி கடத்தல்காரன்னு காட்டுவாங்கன்னு தெரியலை. அவங்க எல்லாம் அப்டேட்டாகி வருஷம் பத்தாச்சுன்னு சொல்றாங்க..
படத்தைப் பற்றி நல்லா சொல்ல ஏதுமே இல்லையா? என்று கேட்டால் யோசித்துப் பார்த்துதான் சொல்ல வேண்டும். ஓரளவுக்கு ஒளிப்பதிவு, ஆங்காங்கே நச்சுனு வரும் சின்னச் சின்ன டயலாக்குகள், ஒரிரு ப்ளாஷ் கட் காட்சிகளில் ஆதி டான் ஆவதை விட, எப்படி ஆனான் என்பதை ஆதி க்ராஸ் செய்யும் போது பார்த்த ஆளுடன் அடுத்த காட்சியில் வண்டியில் வௌர்ம் போது புரிந்து கொள்ளும் படியாய் அமைத்து. ஒரே ஷாட்டில் தங்கை காதலிக்கும் ஆள் தப்பானவன் என்பதை புரிய வைத்த காட்சி, போன்றவற்றை தவிர, பெரிதாய் ஏதுமில்லை. அது மட்டுமில்லாமல் இப்படி நல்ல விஷயங்களைத் தேடி தேடிதான் கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கான படம் பண்ண அமீர் எதற்கு? அப்புறம் இன்னொரு சின்ன சந்தேகம். இதை எடுக்க எதுக்கு மூணு வருஷம்?
கேபிள் சங்கர்

Comments
Ameer sir, you make your own script get a success but you copied foreign film, the result was failure. so you should take a your own script. I am waiting for your next film with your own script.
படம் எடுத்த புண்ணியவான்களே
யோசிக்காத போது நீங்க ஏண்ணே ரிஸ்க் எடுத்துகிட்டு . . . ?
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது." (tamil.oneindia.in)
விஸ்வரூபத்தை நினைச்சு எவ்வளவு வயித்தெரிச்சல், நக்கல் பாருங்க! இதை எழுதுனவரு, இப்போ, ஆதி பகவன், 'காட் பாதர்' ரேஞ்சுக்கு இருக்குன்னு ரூம் போட்டு உக்காந்து எழுதிக்கிட்டு இருக்குறதா கேள்வி.
Indha vimarsanathula kuda ungaloda viswaroopam support theriyudhu (i catched ur mind voice)... Bcoz aadhi bhagavan has captured most of the theatres of viswaroopam...
Last but not least, ippo ellaam ungaloda vimarsanathula oru HONESTY illavae illa... sorry to say this... pls correct this in future...
புண்ணியமா போகும்.
தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்