Thottal Thodarum

Feb 28, 2013

கேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.

தனியார் பஸ்களின் அட்டூழியங்களைப் பற்றிய அனுபவங்கள் பல பேருக்கு பல விதங்களில் இருந்திருக்கிறது. ஆனால் ஒழுங்காக வண்டி ஓட்டவே தெரியாத ட்ரைவருடன் பயணிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும். ரெண்டு பஸ்ஸுக்கான பயணிகளுடன்.


ரெண்டு வாரத்துக்கு முன் நம் வாசகி ஒருவர் தன் கணவர் மற்றும் ஒன்னரை வயது  குழந்தையுடன் மயிலாடுதுறை போவதற்காக பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்கள். அப்போது  அங்கே ராமுவிலாஸ் என்கிற தனியார் ஆம்னி பேருந்து வந்திருக்கிறது. கும்பகோணம் செல்லும் வண்டி என்றும், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுரை என்று வழி சொல்லியிருக்கிறார்கள்.ஆட்களை ஏற்றிய பிறகு  ஏற்கனவே பஸ்சில் இருந்த பண்ரூட்டி, வடலூர் செல்ல ஏறியவர்களை தாங்கள் இப்போது ஈசிஆர் ருட் வழியாக போகப் போகிறோம் என்றும், அதனால் பின்னால் வரும் பஸ்ஸில் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏறிய பயணிகள் முன்னமே சொல்லியிருந்தால் வேறு வண்டியில் வந்திருப்போமே என்று சண்டையிட, கொஞ்சமும் அசராத ஆட்கள், உங்களுக்கான வண்டி பின்னால் வருகிறது என்று சொல்லி இறக்கிவிட்டிருக்கிறார்கள்.  பெருங்களத்தூரில் கட் செய்து ஈஸிஆர் வழியாக திருப்போரூர் வழியாக சென்றிருக்கிறார்கள். போகிற வழியில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய அந்த லாரியின் ரியர்வியூ மிரரை இடித்துவிட்டு ஓட்ட, பஸ் ட்ரைவரின் அருகில் இருந்தவர் ட்ரைவரிடம். ‘ டேய்.. எப்பத்தான் ஒழுங்கா ஓட்டக் கத்துக்குவ..” என்று கேட்க.. நானும் ட்ரை பண்ணேன்னேன் சரியா வர மாட்டேன்குது “ என்று சொல்வதை கேட்டதும், வண்டியில் பயணம் செய்த நம் வாசகிக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்திருக்கிறது.  இந்த லட்சணத்தில் இவர்களுடய கம்பெனி வண்டி ஒன்று ப்ரேக் டவுன் ஆகி அனுமந்தை அருகே நின்றிருக்க, அதில் இருந்த  பண்ரூட்டி, சேத்தியாதோப்பு, வடலூர் செல்ல வேண்டியவர்களை ஏற்றிக் கொண்டு, வண்டி புல்லோடோடு போயிருக்கிறது. 

வண்டி நிறைய ஆட்களுடன் உட்காருவதற்கு இடம் இல்லாமல் கைக்குழந்தைகளூடன் பெண்களும் முதியவர்களுடன் பயணித்திருக்கிறது அந்த வண்டி.  ஒரு கைக்குழந்தைப் பெண் தன் குழந்தைக்கு, நின்றமேனியில் தாய்பால்புகட்டிக் கொண்டு வந்திருக்கிற நிலையைப் பார்த்து நம் வாசகி மிகவும் விசனப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஈஸிஆர் வழியாய் போனதால்  ஊருக்குள் போகும் என்று நினைத்து ஏறிய வடலூர் ஆட்களை எல்லாம் ஹைவேயில் நடு ரோட்டிலேயே இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் இறங்கிய இடத்திற்கு பஸ் ஸ்டாண்டிற்கும் தூரம் ரொம்பவும் அதிகம்.  இதை கேட்டதற்கு ஊருக்குள்ள எல்லாம் வராது. அலோவ் பண்ணமாட்டாங்க என்று சொல்லியிருக்கிறார்கள். பொறுமையிழந்த நம் வாசகி, பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்திருக்கிறார். உங்களுக்கு எல்லாம் மனிதாபிமானமே இல்லையா? இப்படி நடு ரோட்டில் இறங்கிவிட்டால் எப்படி? மரியாதையாய் ஊருக்குள் கொண்டு போய் விடவில்லையென்றால் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட வேண்டியிருக்கும் என்று கத்த ஆரம்பித்ததும், உடனிருந்தவர்களும் சேர்ந்து கத்த ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் ஊரினுள் நுழைந்து பஸ் நிலையத்தில் இறக்கி விட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் முடிவில் சிதம்பரம் அருகே ஒர் வளைவில் ஒர் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து மயிரிழையில் தப்பியிருக்கிறது.   இதற்கும் அந்த டரைவர் அருகில் இருந்தவர் “டரைவிங் வராத உன்னையெல்லாம் வச்சிட்டு மாறாட வேண்டியிருக்கு” என்று திட்டியிருக்கிறார். ஒரு வழியாய் ஊர் போய் சேர்ந்தாலும் இதன் பாதிப்பு அவருக்கு ரெண்டு மூன்று நாட்களுக்கு இருந்திருக்கிறது.

மனித உயிரை எவ்வளவு துச்சமாய் மதித்திருந்தால் ஒர் திறமையில்லாத ட்ரைவரை அமர்த்தி வண்டியை விட்டிருப்பார்கள். கோயம்பேட்டிலிருந்து ஏறியவர்களுக்கு 300 ரூபாயும், பெருங்களத்தூரிலிருந்து ஏறியவர்களுக்கு 250 ரூபாயும் வாங்கியவர்கள் யாருக்கும் டிக்கெட்டோ, அலல்து ஏதாவது ரசீதோ கொடுக்க வில்லையாம். கேட்டால் அதெல்லாம் வழக்கமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.   எனக்கென்னவோ இந்த வண்டி ரூட் வண்டியாகவே இருந்திருக்காது என்று தோன்றுகிறது. ஏனென்றால் வண்டியின் மேலே ராமு விலாஸ் என்றும் கீழே வள்ளி விலாஸ் என்றும் எழுதியிருந்ததாகவும், வண்டி நம்பர்  TN 04 K 7423  ன்று எழுதியிருந்ததாய் சொன்னார். 

அட்லீஸ்ட் வாசகி கோபத்தில் எழுந்து கேட்க ஆரம்பித்ததால் வண்டியில் பயணித்தவர்களின் பலருக்கு சரியான நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு நிம்மதியாய் போய் சேர்ந்திருக்கிறார்கள். இவரது வருத்தம் என்னவென்றால் நான் கத்தும் வரை ஜாம் பாக்காக இருந்த வண்டியில் ஒருவர் கூட ஏன் என்று கேட்கவில்லை என்பதுதான் என்கிறார். யாராவது கேட்கட்டும், பார்த்துப்போம் என்கிற நிலை இருக்கும் வரை நாம் தனியாளாய் போராட்டித்தான் ஆக வேண்டும். போராடுவோம். நாம் கேட்க மற்றவர்களும் கேட்க ஆரம்பிப்பார்கள் அதற்காகவாவது நாம் நம் குரலை முதலில் உயர்த்துவோம். இந்த வண்டி உரிமையாளர் குறித்து ஒரு புகாரை கேட்டால் கிடைக்கும் மூலமாக பதிவு செய்ய ஆவண செய்ய இருக்கிறோம்.
கேபிள் சங்கர்


Post a Comment

19 comments:

Unknown said...

அவனுகள சொல்லி குற்றமில்லை
சகித்து` பொறுத்து
எனக்கென்னனு இருந்த அந்த
மந்தை கூட்டத்தை நினைத்தால் தான்
ரத்தம் சூடேருகிறது......

a said...

//
எனக்கென்னவோ இந்த வண்டி ரூட் வண்டியாகவே இருந்திருக்காது என்று தோன்றுகிறது
//

தல : இது ஒரு தொடர்கதை.....

வெள்ளி இரவுகளில் இது போல பல வண்டிகளை தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பகுதிகளில் பார்க்கலாம்.

இவ்வளவு ஏன்... ஆன்லைனில் பதிவு செய்து செல்லும் ரெகுலர் பேருந்துகள், பயணிகள் எண்ணிக்கை குறைவாய் இருக்கும் பச்சத்தில் இரு வேறு தடத்தில் செல்ல வேண்டிய பேருந்து பயணிகளை ஒரே பேருந்தில் ஏற்றி விட்டு, நடு இரவில் நட்டாற்றில் இறக்கி விட்டது போல் பைபாஸில் இறக்கி விடுவதுண்டு.. ஒரிரு முறை நான் ஒட்டுன(ர்)களிடம் சண்டை போட்டுத்தான் சரி செய்ய வேண்டியிருந்தது....

scenecreator said...

என் அனுபவத்தை சொல்கிறேன்.2000மாவது ஆண்டு.காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி சென்றேன் (தனியாய்).தரிசனம் முடிந்து இரவு 9.30 க்கு கீழ் திருப்பதி பஸ் நிலையத்தில் காஞ்சிபுரம் செல்லும் பாரதி பஸ் கிளம்பியது.காஞ்சிபுரம் டிக்கெட் வாங்கினேன்.ஆங்கங்கே நிறுத்தி வழி டிக்கெட் எல்லாம் ஏற்றிக்கொண்டு திருத்தணி வரவே 12 மணி ஆக்கிவிட்டார்கள்.மீதம் பஸ்சில் இருப்பது மொத்தம் ஒரு 7, 8 பேர் தான்.திடீரென்று கண்டக்டர் பஸ் அவ்வளவுதான் போகும் காஞ்சிபுரம் செல்பவர்கள் இறங்கி வேறு பஸ்சில் ஏறிகொள்ளவும் என்று சொல்லி பாக்கி டிக்கெட் காசை வாங்கிக்கொள்ள சொன்னார்.திருத்தணி பஸ் நிலையத்தின் உள் நான் இன்னும் சிலர் .அவ்வளவுதான் .ஒரே ஒரு டீ கடை .பஸ் நிலையம் வெறிச்சோடி காணபடுகிறது.நீண்ட நேரம் கழித்து ஒரு பஸ் பஸ் நிலையம் வெளியேவே நிறுத்தி அப்படியே பஸ் நிலையம் உள்ளே வராமல் சென்று விட்டான்.எங்களுக்கு தெரியாது இரவில் அப்படிதான் என்று.அதோடு 4 மணிக்கு தான் பஸ் என்று டீ கடைக்காரர் சொல்கிறார்.4 மணி நேரத்தை டீ கடை உள்ளேயே கழித்தேன்.பின் பஸ் ஏறி 6 மணிக்கு காஞ்சிபுரம் வந்தேன்.இவர்கள் வைத்ததுதான் சட்டம்.

Unknown said...

தமிழ்நாட்டில் spare பஸ்களை இந்த மாதிரித்தான் சென்னைக்கும் இயக்கி கொண்டுள்ளார்கள்

வவ்வால் said...

கேபிள் அய்யா,

ECR வழித்தடத்தில் செல்லும் பேருந்து பண்ருட்டி,வடலூர்,சேத்தியாத்தோப்புக்கு ஏன் போகணும்,அதுவும் வடலூரில் பைபாஸ் ,முடியலை அவ்வ்

ஒரு முறை அவ்வழித்தடத்தில் சென்று பாருங்க,அந்த ஊருலாம் எங்கே இருக்குனு தெரியும் :-))

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

இது போன்ற பிரச்சனை எனக்கு KPN பஸ்ஸிலும் நடந்திருக்கிறது. கூட்டம் குறைவாக இருக்கும் போது, ஒரு பஸ் பிரேக்டவுன் என சொல்லி, இரண்டு பஸ்ஸின் கூட்டத்தை ஒரே வண்டியில் அனுப்பிவிடுவார்கள். :(

அதுவும் விடுமுறை தினம் என்றால் இவர்கள் கொட்டம் தாங்காது. :(

r.v.saravanan said...

கண்டிப்பா செய்யுங்க சங்கர் சார் இவர்களை விட கூடாது

மக்கள் யாராவது எதிர்த்து கேட்டால் மட்டும் தான் குரல் கொடுக்கிறார்கள் அது வரை ஆட்டு மந்தை கூட்டம் போல் தான் நான் பல இடங்களில் அனுபவபட்டிருக்கிறேன்

”தளிர் சுரேஷ்” said...

இது தொடர்கதை ஆகி வருகிறது! எதிர்த்து குரல் கொடுக்க யாரும் முன் வருவதில்லை!

rajamelaiyur said...

அலட்சியமான செயல் .. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

rajamelaiyur said...

அரசு பேருந்துகளும் விதிவிலக்கல்ல ... பஞ்சர் என்றால் ஆட்கள் வந்துதான் ஓட்ட வேண்டும் என சொல்லிவிடுவார்கள் . தாமதமாகி விட்டால் எந்த நிறுத்தத்திலும் நிருத்தாமால் ( கூட்டம் இல்லை என்றாலும் ) சென்றுவிடுவார்கள் .

குரங்குபெடல் said...

"வவ்வால் said...

கேபிள் அய்யா,

ECR வழித்தடத்தில் செல்லும் பேருந்து பண்ருட்டி,வடலூர்,சேத்தியாத்தோப்புக்கு ஏன் போகணும்,அதுவும் வடலூரில் பைபாஸ் ,முடியலை அவ்வ்

ஒரு முறை அவ்வழித்தடத்தில் சென்று பாருங்க,அந்த ஊருலாம் எங்கே இருக்குனு தெரியும் :-))"


வந்துட்டாருய்யா வவ்வால் வந்துட்டாருய்யா



வவ்வால் அண்ணே கடலூர் சிதம்பரம் ங்குறது . .



மாறிடிச்சு போல . .



குரல் கொடுத்த பெண்மணி பாராட்டுக்கு உரியவர் . . .



கேபிள் சங்கர் அண்ணே



நீங்கள் நடித்து நாளை வெளிவரும் சந்தமாமா



வெற்றி பெற வாழ்த்துக்கள்


திவ்யாஹரி said...

Thank u very much sir. Pathiva padichathum than santhoshama iruku. Once again thank u sir..

R. Jagannathan said...

Sorry, the Google transliteration site is suddenly not functioning. Hence in English!
I am also one in the herd and generally keep mum thinking there is no meaning in quarrelling with the rowdy elements as they have some organised support from their colleagues and bosses. But once you are driven to a wall, you try to fight. My experience - once in Sharjah - Dubai road. It is crazy traffic there. Despite governmental rules that no taxi driver can refuse a passenger, most of the drivers will refuse to ply the route as they will make more money plying within Dubai in the same period. Once a driver agreed to take us (me and my wife) to Sharjah from Dubai and in between asked us to get down and look for another taxi. I knew there was no possibility at all to get one at that place. Taxi driver switched off the engine and got down. I refused to get down as he had specifically agreed to take us to Sharjah and if he can, he should hire a taxi for us. My wife was a bit anxious but I had no option as it was already nearing 10 PM. Finally, after 20 minutes of waiting, the driver got in and took us to our place. I had to warn him to keep his mouth shut or will complain to authorities.

I cannot do this to any auto driver here in Chennai! That is a fact. - R. J.

Unknown said...

ராமவிலாஸ் = மரணவிலாஸ்

சுரேகா said...

நிச்சயமாகச் செய்வோம்...நியாயம் பெறுவோம்.

'பரிவை' சே.குமார் said...

யாராவது கேட்கட்டும் என்ற மனநிலை நம்மில் மாறாத வரை இப்படித்தான் அண்ணா நடக்கும்.

குரல் கொடுத்த முகம் தெரியா அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

Sir,

I and my friend was getting this type of experience in KPN Travels. We are only 10 nos. in the bus. I think it is after Chengalpattu one place the bus was break down and tehy told to us go to another bus. We and one Family shouted they told us we will arrange spare bus.
We ask our right only we get it. Otherwise they exploited. Your article was nice.

Abdul Rahim A

Unknown said...

முஸ்லீம்களுக்கு எதிராகவும் இந்துத்துவா ஆர் எஸ் எஸ் போன்ற காவி தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் விஷத்தை கக்கும் தங்களை யார் கண்டிப்பது.

Unknown said...

இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

மக்கள் பலரும் அமைதியாய் இருப்பதற்குக் காரணம் அவை பெரிய புள்ளி யாருடையதாகவாவது இருந்து தொலைத்து விட்டால் என்ற அச்சம் தான்!