Kai Po Che
2000த்தில் அஹமதாபாத்தில் ஆரம்பிக்கிறது கதை. சப்மிசிவ், கணக்குப் புலியான கோவிந்த், நியூட்ரல், இந்துத்வா பின்னணியில் வளரும் ஓமி, எக்ஸெண்ட்ரிக், கிரிக்கெட் வெறியனான இஷான் இந்த மூன்று நண்பர்களைச் சுற்றித்தான் கதை. வழக்கம் போல படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று திக்குத் தெரியாமல் வழி தேடிக் கொண்டிருக்கும் போது ஒர் கோயில் வளாகத்தில் ஸ்போர்ட்ஸ் கடை ஆரம்பிக்க முடிவெடுத்து அதில் வெற்றியும் கொள்கிறார்கள். கோவிந்த அதே கடையின் பின்னால் கேக்ஸ் டியூஷன் எடுத்தும், இஷான் கடையின் பின்னால் இருக்கும் காலி இடத்தில் கிரிகெட் கோச்சிங்கும் நடத்துகிறார்கள். ஓமியின் இந்துத்வா கட்சி ஆளான மாமாவின் பண உதவியால் கடைக்கு பைனான்ஸ் செய்யப்பட, அவர் தங்கள் கட்சிக்கு ஆதரவாய் வரச் சொல்லும் போதெல்லாம் ஏதோ ஒர் காரணம் சொல்லி சத்யாக்கிறார்கள். இதன் நடுவில் இஷானின் தங்கைக்கு கோவிந்த் ட்யூஷன் சொல்லி தர, காதல் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. அடுத்த கட்ட வளர்ச்சியாய் ஒரு மாலில் தங்கள் கடையை விரிவு படுத்த நினைக்கும் போது, 2001 குஜராத் பூகம்பமும், கோத்ரா ரயில் எரிப்பும் இவர்களின் வாழ்க்கையை எப்படி திருப்பிப் போட்டது என்பதுதான் கதை.
இஷானாக வரும் சுஷாந்தின் நடிப்பு வெகு சிறப்பு. கிரிக்கெட்டின் மீது காட்டும் வெறியாகட்டும், தங்கையை கரெக்ட் செய்ய வீட்டு வாசலில் ஹார்ன் செய்யும் பணக்கார வாலிபனின் கார் கண்ணாடியை இம்பல்சிவ் கோபத்தோடு உடைக்குமிடமாகட்டும், பிறவியிலேயே சிறந்த ரிப்ளெக்ஸ் அனுபவம் உள்ள முஸ்லிம் சிறுவனை கண்டுபிடித்து, அவனை சிறந்த கிரிக்கெட் வீரனாக்க, முயற்சி செய்ய அவனது அப்பாவிடம் கெஞ்சுமிடமாகட்டும் க்ளாஸ். சட்டென மனதில் நிற்கிறார். தலாஷ், சைத்தான் போன்ற படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாய் வலம் வந்த ராஜ்குமாருக்கு இதில் ஹீரோ. எப்போதும், எதையும் கணக்குப் போட்டு, பரபரப்பில்லாமல் யோசித்து செயல்படும், ரிஸ்க் எடுக்க பத்து முறை யோசித்து இறங்கும், கேரக்டரில் அற்புதமாய் பொருந்திப் போகிறார். இஷானின் தங்கையாய் வரும் அம்ரிஷாபூரியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் திக்கு முக்காடிப் போகுமிடமெல்லாம் அட்டகாசம். அந்த பெண்ணிடம் தான் எவ்வளவு துறுதுறுப்பு. வெள்ளந்தியாய் திரியும் ஓமியின் வாழ்க்கையில் குஜராத் பூகம்பமும், கோத்ரா ரயில் எரிப்பும் ஏற்படுத்தும் மாற்றம், நண்பர்களிடையே எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தில் சாதாஹேவில் அர்பன் யூத்களிடையே இருக்கும் நட்பின் இறுக்கத்தை பார்த்திருப்போம். மிடில்க்ளாஸ் ஊரிலிருக்கும் மிடில் க்ளாஸ் இளைஞர்களின் நட்பை மிக அழகாய் ஒர் பாடலில் வரும் மாண்டேஜில் வெளிப்படுத்தியிருக்கும் காட்சிகள் நேர்த்தி. ஓமியின் மாமாவாக வரும் நடிகரின் நடிப்பும், அவரின் இந்துத்வா கொள்கைகளும், கோத்ரா சம்பவத்திற்கு பிறகு முஸ்லிம்களின் மீது நடக்கும் வெறியாட்ட காட்சிகளில் அவரின் நடிப்பு சிறப்பு. கிரிக்கெட் சிறுவனின் இஸ்லாமிய கட்சியில் பொறுப்பில் உள்ள அப்பா. தன் மகனை ஒர் இந்து கோயிலின் உள்ள இடத்தில் நடக்கும் ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் சேர்க்க காட்டும் தயக்கம், க்ளைமாக்சில் அதே இடத்தில் தஞ்சம் புகும் காட்சி,ஓமியின் மாமாவின் கொள்கையில் இருக்கும் உக்ரத்தை எதிர்கும் ஆனால் அவரிடம் பணம் வாங்கியதால் சொல்ல முடியாமல் இருக்கும் இஷான், என்று கேரக்டர்களில் பலவிதமான அம்சங்களை ஒர் நாவலில் ஈஸியாய் எழுதிவிட முடியும் அதை காட்சிப்படுத்துவதில் திரைகக்தையாசிரியர்களுடன் கை கோர்த்து, ஒளிப்பதிவாளர் அனில் கோஸ்வாமியும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியும் இயக்குனர் அபிஷேக் கபூருக்கு தூண்களாய் அமைந்திருக்கிறார்கள். நண்பர்கள் விடுமுறை நாளை கொண்டாடும் பாடல் காட்சியில் வரும் ஷாட்கள் ஒவ்வொன்றும் தரமோ தரம்.
நாவலாய் படிக்கும் போது கிடைத்த அனுபவத்தை விட சிறப்பாய் கொடுத்திருக்கிறார்கள் இந்த காய் போ சே டீம். பெரிய நடிகர்கள் இல்லை, நம் பக்கத்துவீட்டு பையன்களைப் போன்ற கதைக்கு சூட்டான காஸ்டிங். குஜராத் பூகம்ப காட்சிகள், கிரிகெட் காட்சிகளில் ஆங்காங்கே ஈ.எப்.எக்ஸ் பல் இளிக்கிறது. இவ்வளவு தூரம் செய்கிறவர்கள் கொஞ்சம் இதையும் கவனத்தில் கொண்டிருக்கலாம். கதை போகும் போக்கில் ஆங்காங்கே ட்ராக் மாறி பயணிப்பதை பாடல்களில் ட்ரான்சிசனாய் சொன்னாலும் சில இடங்களில் இன்னும் கொஞ்சம் கிரிஸ்பாக கொடுத்திருக்கலாமோ என்று தோன்றத்தான் செய்கிறது. ராக் ஆன் படத்திற்கு பிறகு அபிஷேக் கபூர் இயக்கியுள்ள இந்த காய் போ சே. நாவல்களை திரைவடிவங்களாய் கொண்டு வந்து வெற்றிப் பெற்றவர்கள் மிக குறைவே. நாவலாய் படிக்கும் போது அதில் சொல்லியிருக்கும் காட்சிகள் எல்லாவற்றையும் கதையாக்காமல், கோத்ரா ரயில் எரிப்பு, 2002 ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் சீசன் என்று மிக அழகாய் சரியான விகத்தில் திரைகக்தையில் இணைத்து ஒர் சுவாரஸ்யமான, சிறப்பான படத்தை, அனுபவத்தை அளித்துள்ளார். என்ஜாய்.. AND DON'T MISS
கேபிள் சங்கர்
Comments
கை போ சே - அது என்ன வடை போச்சே மாதிரி? ஒரு வேலை குஜராத்தில் கை (காங்கிரஸ்) போச்சே என்று அர்த்தமோ?
இரண்டு டைப்போ - /கேக்ஸ் டியூஷன்/ - மேத்ஸ் டியூஷன் ? /காரணம் சொல்லி சத்யாக்கிறார்கள்./ - சதாய்க்கிறார்கள் ?
-ஜெ .
தங்களது எழுத்துக்களை ஆரம்பத்தில் படிப்பதில்லை.தற்போது தங்களது எழுத்துக்களை தேடி தேடி படிக்க தொடங்கிவிட்டேன்.
ஒரு சிறிய ஆசை தங்களது எழுத்துக்களைப் போல தங்களையும் வாசிக்க ஆசை. இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
I am eagerly waiting to watch your movie. சொல்றது easy பட் செய்றது ரொம்ப கஷ்டம் கேபிள் sir.