Thottal Thodarum

Feb 13, 2013

Mirchi

 
 பிரபாஸ் இத்தாலி படித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ரிச்சாவை ஒர் தெலுங்கு தெரிந்த பணக்கார ஒரு சீன் வில்லன் துரத்த, பிரபாஸ் காப்பாற்றுகிறார். இருவரும் நெருங்க பழகுகிறார்கள். நெருக்கம் காதலாகி விடுமோ என்கிற நேரத்தில் ரிச்சா தன் குடும்பத்தை பற்றி சொல்கிறார். அதனால் காதல் கத்திரிக்காயெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில் பிரபாஸ் ஹைதைக்கு வந்துவிடுகிறார். ஹைதையில் ஒர் காலேஜில் சேருகிறார். அங்கே ரவுடித்தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சுப்புராஜை கொஞ்சம் கொஞ்சமாய் நல்லவனாய் மாற்றுகிறார். சுப்புராஜுடன் அவரது கிராமத்துக்கு செல்ல அங்கே வழக்கமான தெலுங்கு பட பீயூடல் குடும்பம் இருக்க, அவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் பிரபாஸ். சுப்புராஜுன் தங்கைதான் ரிச்சா. பிரபாஸ் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு தன் காதலை வெளிப்படுத்த நினைக்க, வீட்டில் உள்ளவர்களும் தங்கள் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். அப்போது பிரபாஸ் தான் ஏன் இங்கே வந்தேன், சொல்லி ப்ளாஷ்பேக்குகிறார். பின்பு என்ன ஆனது என்பதை வழக்கமாய் தெலுங்கு படம் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடக்கூடிய கதைதான்.


பிரபாஸ் ஸ்டைலாய் இருக்கிறார். இங்கிலீஷ் ஆக்செண்டில் தெலுங்கு பேசுகிறார். நடனம் ஆடுகிறார். பஞ்ச் டைலாக் பேசுகிறார். குத்துப் பாடலுக்கு ஆடும் நடிகைகளைவிட லோஹிப்பில் பேண்ட் போடுகிறார். ரிச்சா இத்தாலியில் தெலுங்கு பேசும் இத்தாலிய பெண்களுடன் வளைய வருகிறார். ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ஒரு காட்சியில் தன் இடுப்பு, மார்பு, தொப்புள், என்று ஒவ்வொரு அங்கமாய் காட்டி,  குறிப்பிடும் போது டபுள் மீனிங்கில் டயலாக் பேசுகிறார். ஒரு பக்கமாய் மாராப்பு விலகியிருக்க, பிரபாஸ் முன்பு ரிவர்ஸில் நடந்தபடி “எவ்வளவு பெரிய...” என்று நிலத்தை பற்றி சொல்வது போல சொல்லும் காட்சிகள் கொஞ்சம் ஓவர்தான். பிரபாஸின் ஒரிஜினல் பிகர் கிராமத்து அனுஷ்காதான். ம்ஹும். நன்றாக இளைத்திருக்கிறார். துறுதுறு கிராமத்துப் பெண்ணாய், சுட்டித்தனத்தோடு வளைய வருகிறார்.க்யூட். 

பிரபாஸின் அப்பாவாக சத்யராஜ். மனிதர் இளைத்திருக்கிறார். அம்மா நதியா. ஸேம் க்யூட்னஸோடு இருக்கிறார்.  வழக்கம் போல இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சிபி ராஜுக்கு போட்டி வீட்டிலேயே இருக்கிறது. சத்யராஜ் இளமைக் கால காட்சிகளில் படு ஸ்மார்டாக இருக்கிறார். மிக க்ளோசப் காட்சிகளில் தவிர, வழக்கமாய் இருக்கும் இயல்பான டயலாக் டெலிவரி மிஸ்ஸிங்.

ப்ரம்மானந்தம் வழக்கம் போல ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். காட்சிக்கு காட்சி பிரபாஸை பார்த்தால் பெண்கள் எல்லோரும் மடிந்து பின் அலைகிறார்கள்/ வார்கள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். வயசு பொண்ணை பசங்க கிட்டேயிருந்து காப்பாத்துறத விட உன்னை பொண்ணுங்க கிட்டேயிருந்து காப்பாத்துறது கஷ்டமாயிருக்கு என்று அம்மா நதியாவே சொல்கிறார். ரொம்பவே ஓவர்.
நம்ம மதிதான் ஒளிப்பதிவாளர். தெலுங்கு படத்தின் தரத்திற்கு ஏதும் குறையில்லாத ரிச்சான ஒளிப்பதிவு. ஹீரோ அறிமுகக் காட்சியில் வெங்கடேஷ்வரராவின் எடிட்டிங் செம கிரிஸ்ப். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வழக்கம் போல ஹாரிஸின் பழகிய ட்யூன்கள் போல பழகிய பாடல்கள். ஹிட் ரகம்.

எழுதி இயக்கியவர் கொரட்டால சிவா. எழுத்தாளராய் இருந்தவர் இயக்குனராகியிருக்கிறார். தெலுங்கில் வந்த எல்லா ஹிட் படங்களிலிருந்தும் ஓவ்வொரு காட்சிகளை எடுத்தாண்டிருக்கிறார். பல படங்களின் கலவையாக இருந்தாலும் ஆங்காங்கே சுவாரஸ்யம் குறையாமல் இருக்க வைத்திருக்கிறார். ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். க்ளைமாக்ஸில் ரிச்சாவின் பாரலைஸான அப்பா எழுந்து வசனம் பேசுவதெல்லாம் அரத பழசோ பழசு. ஒவ்வொரு காலகட்டத்திலும் வளரும் ஹீரோக்கள் இம்மாதிரியான ஆக்‌ஷன், அரத மசாலாவில் நடித்து ஹிட்டடிப்பார்கள். அந்த வகையில் மிர்சியும் ஹிட்டுதானாம்.
 கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

maithriim said...

நான் தெலுங்கு படம் பார்ப்பதில்லை. ஆனால் உங்க விமர்சனம் சூப்பராக உள்ளது :-)

amas32

Anonymous said...

I hope this is the right time to stop writing biased reviews for telugu movies. Hope you can also agree with me. I have been reading your blog for quite long time and I always followed your reviews to watch a film, but in recent times your reviews are very well biased based. As we know, there are very good blogs available to give unbiased and deeply analyzed reviews. But I am reading your blog its because I can get reviews for most of the tamil and telugu movies. Hope you can understand my concerns.
At the same time, please do not write reviews for english movies. Your reviews are very amature.
Please do not think negative, I'm not criticizing you. This is my honest review on your movie reviews.

Anonymous said...

மிர்ச்சி. . #முதல் பாதி செம காரம். . இரண்டாம் பாதி குடைமிளகாய். .